Monday, 29 June 2009

இன்றைய நம் சிறுவர்களின் எதிர்காலம்??????



இன்று இலங்கையிலே மிஞ்சி இருப்பது என்ன கிராமத்துக்கொரு சிறுவர் இல்லங்களேதான். (அநாதை இல்லம் என்று சொல்லவேண்டாம் அவர்கள் அனாதைகள் இல்லை அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள்) நாட்டில் நடந்து வந்த உத்த சூழ்நிலையின் காரணமாக இன்று சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.



இவர்கள் தாய் தந்தையரை இழந்த நிலையில் சிறுவர் இல்லங்களிலே ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் தனது தாய் தந்தையரோடு, உறவினர்களோடு சந்தோசமாக வாழ வேண்டியவர்கள் இன்று பல இன்னல்களுக்கு மத்தியிலும் தமது வாழ் நாளைகளித்துக்கொண்டு இருக்கின்றார்கள். எத்தனை சிறுவர்கள் தாய் பாசத்துக்காக ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். ஏனைய சிறுவர்கள்போல் தாங்களும் வாழ வேண்டுமே என்று ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்தச் சிறுவர்களால் தங்களது ஆசா பாசங்களை கட்டுப்படுத்தி எப்படித்தான் வாழ முடயும். சந்தோசமாக வாழ வேண்டிய சிறுவர்கள் இன்று விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்


சந்தோசமாக தமது வாழ்நாளைகளிக்க வேண்டிய நாளைய நம் தலைவர்கள் சந்தோசமாக சிறுவர் இல்லங்கல்ளிலே வாழ்வார்களா? அவர்களால் படிப்போ அது சார்ந்த செயற்பாடுகளிலோ எப்படி ஈடுபட முடயும். எப்போதும் அவர்களை தாங்கள் அனாதைகள் என்றும் தங்களுக்கு யாரும் இல்லையே என்ற ஏக்கமுமே இருக்கும். சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற சிறுவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை ஏனைய சிறுவர்கள்போல் பெற்றுக்கொள்ளத்தான் முடயுமா


இந்த சிறுவர் இல்லங்களிலே ஆண் பிள்ளைகள் மட்டுமல்ல பெண் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இந்த பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி யோசித்துப்பாருங்களேன். ஆண் பிள்ளைகளோ ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் எல்லாம் சரியாகிவிடும் ஆனால் பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரை பல பிரட்சனைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. தங்களது வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு கவலையும் விரக்தியும் அதிகரிக்கின்றது. தங்களுக்கு யாரும் இல்லையே என்ற ஏக்கம் வருகின்றது. தங்கள் எதிர் காலத்தை பற்றி சிந்திக்க தொடங்கி மனதை குழப்பிக்கொண்டே இருப்பார்கள்




அவர்களது எதிர்காலத்தை பற்றி அவர்களை விட நாமே சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இன்றைய கால கட்டத்தில் பணக்கார வீட்டு பெண்களுக்கே சீதனம் என்ற ஒன்றினால் திருமணம் தள்ளப்பட்டுக்கொண்டு போகும் இந்த காலத்தில் இவர்களின் நிலை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்

இந்த பெண் பிள்ளைகள் தங்களது பருவ வயதை அடைந்ததும் பல பிரட்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இன்று நாகரிக மோகத்தில் இளம் பெண்கள் நாகரிகமான உடை, (நடை), அலங்காரங்களோடு திரிவதை கண்டால் இவர்களது மனதிலே எப்படி கவலை வராமல் இருக்கும்.
இந்த சிறுவர்கள், பெண் பிள்ளைகள் பற்றி யாரும் கவலைப்படுவதாகத்தெரியவில்லை அவர்களின் எதிர் காலம் பற்றி எவரும் சிந்திப்பாரும் இல்லை.

இந்த இடத்திலே நான் ஒன்றை குறிப்பிட வேண்டும் நான் இந்த பதிவினை மேற்கொள்ள துண்டியது எனக்கு தெரிந்த ஒரு அக்காவின் தாராள மனசுதான். அவரோ ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் தேயிலை தோட்டங்கள் எல்லால் இருக்கின்றன அந்தளவிற்கு பணம் படைத்தவர். ஆனால் ஏழைகளுக்கு உதவி செய்பவர். அவர் அடிக்கடி என்னிடம் கூறுவார் இந்த சிறுவர் இல்லங்களில் இருக்கின்ற பெண் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி தான் சிந்திப்பதாகவும் கவலை அடைவதாகவும்.


அவர் அண்மையில் என்னிடம் கூறிய ஒருசில விடயங்களை என்னால் நம்ப முடியவில்லை அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்கள் இருவரையும் சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற பெண் பிள்ளைகளுக்கே திருமணம் செய்து வைக்க நினைத்து இருப்பதாகவும். இதனால் அந்த பிள்ளையின் உறவுகளை இளந்த கவலை இல்லாமல் போவதோடு அந்த பிள்ளையின் எதிர் காலம் வளம் பெரும் என்றும். தாய் பாசத்துக்காக ஏங்கிய அந்த பிள்ளைக்கு தான் ஒரு தாயக இருக்க போவதாகவும் கூறினார். தனது மகன் கூட சம்மதம் தெரிவித்து விட்டார் என்பது சந்தோசமான விடயம்.


இப்படி எல்லோரு இருப்பார்களானால் இவர்களின் வாழ்க்கை வளப்படுமல்லவா.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

9 comments: on "இன்றைய நம் சிறுவர்களின் எதிர்காலம்??????"

Sinthu said...

நீங்க சொல்வது நல்லது தான், நீங்க சொன்னவங்க மாதிரி நிறையப் பேர் இருந்தால் எவ்வளவு நல்லது...

Admin said...

உங்கள் வருகைக்கு நன்றி சிந்து... தொடருங்கள்.....


Sinthu கூறியது...
//நீங்க சொல்வது நல்லது தான், நீங்க சொன்னவங்க மாதிரி நிறையப் பேர் இருந்தால் எவ்வளவு நல்லது...//


இந்தக்காலத்தில் அப்படிப்பட்டவங்க ஒருசிலர் இருக்கத்தான் செய்றாங்க... எல்லோரும் அப்படி இருந்தால் சந்தோசப்படலாம்...

சப்ராஸ் அபூ பக்கர் said...

வாழ்த்துக்கள்..... தொடருங்கள்.....

சந்ரு, உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்... வந்து தொடருங்கள்.

Admin said...

LOOSHAN அண்ணா எனது இந்த பதிவுக்கு பின்நூட்டம்வழங்கி இருக்கின்றார்....

அவர் அவசர அவசரமாக பின்நூட்டம் வழங்கயதால் எனது முந்திய பதிவிலே
அவரது பின்நூட்டம் இடம் பெற்றுவிட்டது அதனை இங்கே தருகிறேன்...

LOOSHAN கூறியது...
//உங்கள் பார்வைக் கோணம் அருமை சகோதரா..
இந்த பிஞ்சுகளின் எதிர்காலம் பற்றிப் பெரிதாக கவலைப்பட பெரியவர்கள் முன்வரவேண்டும்.....//

உங்கள் வருகைக்கு நன்றி அண்ணா...

நிட்சயமாக இந்தப்பிஞ்சுகளின் எதிர்காலம் பற்றி எல்லோரும் கவலைப்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்...

Admin said...

சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...

//வாழ்த்துக்கள்..... தொடருங்கள்.....

சந்ரு, உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்... வந்து தொடருங்கள்.//

நன்றி

சப்ராஸ் உங்கள் வருகைக்கு நன்றி.....
நீங்கள் என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றிகள்.... உங்கள் அழைப்பை சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்கிறேன்

மயாதி said...

என்னத்தச் சொல்லி என்ன செய்ய ...
எல்லாம் தலை எழுத்து.

Admin said...

மயாதி கூறியது...
//என்னத்தச் சொல்லி என்ன செய்ய ...
எல்லாம் தலை எழுத்து.//

சரியா சொன்னிங்க இன்று நம் (தமிழன்) தலை எழுத்தையே மாற்றுபவர்கள் இருக்கும் காலம்.....

உங்கள் வருகைக்கு நன்றி....
தொடருங்கள்...

சுசி said...

இந்த வலி எல்லா தமிழர்களுக்கும் இருக்கும், இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் சந்த்ரு. என் இரண்டு கண்மணிகளையும் அந்த நிலையில் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இங்கே டீவில அவங்களுக்கும் சில விடயங்கள காட்டி இருக்கேன். அவங்களுக்கும் நம் உறவுகளோட நிலை தெரியணும் இல்ல. நீங்க குறிப்பிட்டவங்க மாதிரியான நல்ல இதயங்கள் இருக்கிற படியால்தான் இன்னும் தமிழினம் அழியாம இருக்கு. கடவுள் இருக்கார். யாரா இருந்தாலும் அவருக்கு பதில் சொல்லியே ஆகணும். அங்கே துடிச்சிட்டிருக்கிற என் உறவுகளுக்கு நலத்தை கொடு இறைவான்னு நித்தமும் பிரார்த்தனை பண்ணிட்டு இருக்கேன்.

Admin said...

// சுசி கூறியது...
இந்த வலி எல்லா தமிழர்களுக்கும் இருக்கும், இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் சந்த்ரு. என் இரண்டு கண்மணிகளையும் அந்த நிலையில் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இங்கே டீவில அவங்களுக்கும் சில விடயங்கள காட்டி இருக்கேன். அவங்களுக்கும் நம் உறவுகளோட நிலை தெரியணும் இல்ல. நீங்க குறிப்பிட்டவங்க மாதிரியான நல்ல இதயங்கள் இருக்கிற படியால்தான் இன்னும் தமிழினம் அழியாம இருக்கு. கடவுள் இருக்கார். யாரா இருந்தாலும் அவருக்கு பதில் சொல்லியே ஆகணும். அங்கே துடிச்சிட்டிருக்கிற என் உறவுகளுக்கு நலத்தை கொடு இறைவான்னு நித்தமும் பிரார்த்தனை பண்ணிட்டு இருக்கேன்.//


உங்கள் வருகைக்கு நன்றி சுசி தொடருங்கள்...

எந்த வலி எல்லா தமிழர்களுக்கும் இருக்க வேண்டியதுதான். இருந்தும் இவற்றில் அக்கறை எடுக்கவேண்டியவர்கள் மௌனமாக இருக்கிறனரே.

என்று சிலர் சிறுவர் இல்லங்கள் நடத்துவதாக சொல்லி பல உதவிகள் பெற்று தங்களது சுகபோக வாழ்க்கையை அதிலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். எது எப்படி இருப்பினும் இறைவன் ஒருவன் இருக்கின்றான் அவனுக்கு என்றோ ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

உங்கள் பிராத்தனை நிட்சயம் நிறைவேறும். எல்லோரது பிராத்தனையும் இதுவே.

Post a Comment