Tuesday 10 November 2009

இப்படியும் பேசலாம்

ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு வகையான பேச்சு வழக்குச் சொற்கள் இருக்கின்றன. அந்தச் சொற்கள் அந்தந்தப் பிரதேசங்களுக்கு பெருமை சேர்ப்பதாகவும் இனிமையான சொற்களாகவும் இருப்பதோடு, ஒருவர் பேசுகின்ற விதத்தினை வைத்து அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.



இந்தப் பேச்சுவழக்குச் சொற்கள் இன்றைய நாகரீக மாற்றத்தின் காரணமாக மறைந்து வருகின்றன. இச் சொற்கள் எமது பிரதேசத்துக்குப் பெருமை சேர்ப்பதனால் நாம் பாதுகாக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். இன்றைய சமுகம் வட்டார வழக்குச் சொற்களை புறக்கணித்து வருகின்றனர். இச் சொற்கள் கொச்சைத் தமிழ் சொற்கள் என்று சொல்வோருமுண்டு. ஆனால் நல்ல பல தமிழ் சொற்கள் வட்டார வழக்குச் சொற்களிலே இருக்கின்றன இச் சொற்களை அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்.


யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் என்று ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒவ்வொரு வகையான வட்டார வழக்குச் சொற்கள் இருக்கின்றன. இப்பதிவிலே மட்டக்களப்பிலே பயன்படுத்தப்படுகின்ற சில சொற்களைத் தருகின்றேன்.


பிறகு - பிறகு என்பது பின்னர் என்பதனைக் குறிக்கின்றது. பின்னர் எனும் சொல்லுக்கு பதிலாக யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலே வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.


மறுகா - மறுகா என்பது பின்னர் பிறகு எனும் சொற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


ஒண்ணா - ஒண்ணா எனும் சொல்லானது பல இடங்களிலே வெவ்வேறு சந்தர்ப்பங்களிலே பயன்படுத்தப்படுகின்றன. ஒண்ணா எனும் சொல்லானது முடியாது, இயலாது என்ற சொற்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகின்றன. ஒண்ணா எனும் சொல்லானது பயன்படுத்தப்படும் சந்தர்ப்பத்தைப் பொறுத்து பொருள் வேருபடுத்தமுடியும்.


கால அல்லது காலை - என் வீட்டில் ஒருவர் வந்து சந்ரு இருக்கிறாரா என்று ஒருவர் கேட்டால் காலைக்குள் போயிற்றார் என்று பதில் கிடைக்கும். வேறு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தலை சுற்றும். இங்கு காலை என்பது விவசாயம் செய்கின்ற தோட்டத்தைக் குறிப்பதாகும். மட்டக்களப்பு மாவட்டத்திலே விவசாயம் செய்கின்ற பிரதேசங்களிலே பரவலாக இச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.


அங்கிட்டு, இங்கிட்டு, அங்கால, இங்கால - அங்கிட்டு இங்கிட்டு, அங்கால, இங்கால எனும் சொற்கள் அந்தப்பக்கம் இந்தப் பக்கம் எனும் சொற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


சுறுக்கா - விரைவாக எனும் சொல்லுக்குப் பதிலாக சுறுக்கா எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது.


இன்னும் பல சொற்கள் இருக்கின்றன அவ்வப்போது அச் சொற்களும் உங்களை வந்து சேரும்
உங்கள் பிரதேசங்களிலே பயன்படுத்தப்படும் சொற்களையும் பின்னூட்டமிடுங்கள் எல்லோரும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்


இதனையும் பாருங்கள்



சிந்திக்க




மனிதனை மனிதன் இல்லாதொழிக்க இந்த கண்டு பிடிப்புத் தேவையா?



படங்களுக்கு நன்றி சசி

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

47 comments: on "இப்படியும் பேசலாம்"

தமிழ் அமுதன் said...

நல்லா இருக்கு பதிவு ..! இன்னும் சில சொற்களை சேர்த்து எழுதி இருக்கலாம்..!

Unknown said...

சந்ரு அண்ணா...
இந்தப் பதிவை நான் பாராட்டுவதோடு உங்களுக்கு நன்றியும் கூறுகிறேன்...

ஏனேன்றால் தங்கள் தங்கள் சொந்த வழக்கைப் பயன்படுத்துவதை இப்போதெல்லாம் அவ்மானமாக அல்லது நாகரிகமற்ற ஒன்றாகக் கருதத் தொடங்கிவிட்டார்கள்...

பிறகு என்பது யாழ்ப்பாண்ததிலும் பயன்படுத்தப்படும்... (பேந்து என்றும் உண்டு.)

சுறுக்கா என்பதும் யாழ்ப்பாண வழக்கில் உண்டு...

எனன் வழக்கென்றாலும் நாமெல்லாம் தமிழர்களே... என்னதான் நாம் தமிழர்களென்றாலும் நாமெல்லாம் மனிதர்களே....

வேற்றுமைகளுக்குள் ஒற்றுமை காண்பது தான் மனிதம்...

பதிவுக்கு வாழ்த்துக்கள்....

Unknown said...

அந்தப் படங்கள் பயத்தை வரவழைக்கின்றன....

மனிதம் எங்கே செல்கிறது?

Subankan said...

இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுதியிருக்கலாம் அண்ணா. கால - எனக்குப் புதிது.

Admin said...

//ஜீவன் கூறியது...
நல்லா இருக்கு பதிவு ..! இன்னும் சில சொற்களை சேர்த்து எழுதி இருக்கலாம்..!//



இன்னும் பல சொற்கள் இருக்கின்றன.... அவைகளை இன்னும் ஒரு பதிவாக இடுகின்றேன்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

மீன்துள்ளியான் said...

//அங்கிட்டு, இங்கிட்டு, அங்கால, இங்கால - அங்கிட்டு இங்கிட்டு, அங்கால, இங்கால எனும் சொற்கள் அந்தப்பக்கம் இந்தப் பக்கம் எனும் சொற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகின்றன. //

இது எங்க திருநெல்வேலி புகழ் நெல்லை வழக்கிலும் உண்டு .. தொடருங்கள் ..

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Admin said...

//கனககோபி கூறியது...
சந்ரு அண்ணா...
இந்தப் பதிவை நான் பாராட்டுவதோடு உங்களுக்கு நன்றியும் கூறுகிறேன்...

ஏனேன்றால் தங்கள் தங்கள் சொந்த வழக்கைப் பயன்படுத்துவதை இப்போதெல்லாம் அவ்மானமாக அல்லது நாகரிகமற்ற ஒன்றாகக் கருதத் தொடங்கிவிட்டார்கள்...

பிறகு என்பது யாழ்ப்பாண்ததிலும் பயன்படுத்தப்படும்... (பேந்து என்றும் உண்டு.)

சுறுக்கா என்பதும் யாழ்ப்பாண வழக்கில் உண்டு...

எனன் வழக்கென்றாலும் நாமெல்லாம் தமிழர்களே... என்னதான் நாம் தமிழர்களென்றாலும் நாமெல்லாம் மனிதர்களே....

வேற்றுமைகளுக்குள் ஒற்றுமை காண்பது தான் மனிதம்...

பதிவுக்கு வாழ்த்துக்கள்....//


எங்கள் பிரதேசச் சொற்களை நாம் பயன்படுத்த வேண்டும் எங்கள் பிரதேசச் சொற்கள் எங்களுக்கு பெருமை சேர்க்கின்றன.


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

சுசி said...

பிறகு தவிர அத்தனையும் புதிய சொற்கள்.

தேவையே இல்ல. சொன்னா யாரு கேக்கறாங்க???

Admin said...

//கனககோபி கூறியது...
அந்தப் படங்கள் பயத்தை வரவழைக்கின்றன....

மனிதம் எங்கே செல்கிறது?//



இப்போ மனிதன் மனிதனாக இல்லை

Admin said...

சந்ரு கூறியது...
//அன்புடன் அருணா கூறியது...
அட!//



அட... அப்படின்னு எங்க பிரதேசங்களிலே ஆடு, மாடுகளை துரத்துவார்கள்...

அட... வாங்க அருணா

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//Subankan கூறியது...
இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுதியிருக்கலாம் அண்ணா. கால - எனக்குப் புதிது.//



கால என்பது விவசாயிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு சொல்

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//Meenthulliyaan சொன்னது…
//அங்கிட்டு, இங்கிட்டு, அங்கால, இங்கால - அங்கிட்டு இங்கிட்டு, அங்கால, இங்கால எனும் சொற்கள் அந்தப்பக்கம் இந்தப் பக்கம் எனும் சொற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகின்றன. //

இது எங்க திருநெல்வேலி புகழ் நெல்லை வழக்கிலும் உண்டு .. தொடருங்கள் ..

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்//


அப்படியா...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

thiyaa said...

பதிவுக்கு வாழ்த்துக்கள்....

Admin said...

//சுசி கூறியது...
பிறகு தவிர அத்தனையும் புதிய சொற்கள்.

தேவையே இல்ல. சொன்னா யாரு கேக்கறாங்க???//



சொல்லாம விடுவதால்தான் எவரும் கேட்கிராங்க இல்லை.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//தியாவின் பேனா கூறியது...
பதிவுக்கு வாழ்த்துக்கள்....//



வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Anonymous said...

சுறுக்கா வாருங்கோவன் என்பது வடமராட்சி வழக்கு.

"இஞ்சயப்பு" என்றும் "மெய்யே" என்றும் "இஞ்சாருங்கோ" என்றும் கதைக்கத் தொடங்குவார்கள். இஞ்சாருங்கோ என்பது கணவனை மட்டும் விளிக்கப் பயன்படுத்துவதில்லை. மற்ற ஆட்களுடன் கதைக்கும் போதும் பாவிப்பார்கள்.

"மோன (மகனே)" என்றும் கூப்பிடுவார்கள்.

"அலாப்பி" என்பதும் வடமராட்சியில் விளையாடில் ஏமாற்றுபவர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்.

யாழ்ப்பாணத்தில் அலாப்பி வழக்கத்தில் இருந்ததா என்று தெரியவில்லை. யாருடனும் அவ்வளவு கதைப்பதில்லை நான் யாழில் இருந்த போது. ஒரே புத்தகமும் கையுமாகத் தான் திரிந்தேன். அம்மா கூட சொல்லுவா நான் ஒரு வார்த்தை கூட கதைக்காமல் ஒரு கிழமைக்கு கூட இருந்தனான் என்று.

ஐயா என்று தான் வடமராட்சி ஆட்கள் அப்பாவைக் கூப்பிடுவார்கள்.

சிலர் கிராமங்களில் நேய் அம்மா என்று தாயைக் கூப்பிடுவார்கள்.

"அப்ப நான் வரட்டே" என்பதும் வடமராட்சியில் அதிகம் பிழங்கிய நடை.

கொப்பர் (அப்பர் / அப்பா) என்னவாம், கொண்ணை (அண்ணை) என்னவாம் கொக்கா (அக்கா) என்னவாம் கொம்மா (அம்மா) என்னவாம் என்று வயதானவர்கள் கேட்பார்கள்.

"என்ன துலைக்கே போறியள்" வெளியே போபவர்களிடம் கேட்பார்கள்.

தூஷணத்துக்கும் பெயர் போனது வடமராட்சி. "வேசமோனுக்கு வெடி வைக்கோணும்" என்று யாரையாவது அடிக்க வேண்டும் என்றால் கூறுவார்கள்.

பம்மலுக்கு கூட வேசமோன் என்று ஆட்களை விழிப்பார்கள்.

எங்களுக்கு அது தூஷணம் என்டு தெரியாமல், ஒருக்கா அப்பாவின் முன் சொல்ல அப்பாவுக்கு பயங்கர சொக். அன்டைக்கு அம்மம்மா வீட்ட இருந்து எங்களை வெளிக்கிடுத்தினவர் நேரே யாழ் கொண்டு போய் இருத்தினார்.

இந்தியாவல வந்து ஒரு 3 மாசம் அம்மமாவின் வீட்ட இருந்தனாங்கள். ஹி ஹி... அது ஒரு காலம்.

புல்லட் அண்ணா அப்படியே எங்களின்ட இடத்தில கதைக்கிற மாதிரித் தான் எழுதிறவன். அப்பப்ப இந்திய திரைப்படங்களைப் பாத்துப் போட்டு ஏதோ எழுதுவான் அவர்களின் நடையில்.

மறுவாகிறுக்கி / மறுவாகிறுவா கோஷ்டி என்று தான் மட்டக்களப்பு அண்ணாக்களை யாழ்ப்பாண அண்ணாக்கள் நக்கல் அடிக்கிறவை.

வன்னிக்கு இடம் பெயர்ந்து போன போது நாங்கள் பட்ட பாடு இருக்கே... எங்காவது போகும் போது எவ்வளவு தூரம் என்றால் "கூப்பிடு தூரம் தான்" என்பார்கள். அவர்கள் கணக்கில் கூப்பிடு தூரம் என்பது 5 கிலோ மீற்றரையாவது குறிக்கும்...

அதன் பிறகு அவர்கள் கூப்பிடு தூரம் என்றால், என்ன 5 கிலோ மீற்றரே என்று மறக்காமல் கேட்போம்... அம்மாடி, எப்படி தான் அவ்வளவு தூரத்தையும் நடந்தார்களோ தெரியாது.

நிறைய சொற்கள் வழக்கொழிந்து போகின்றன. என்ன செய்வது.

Anonymous said...

கால என்பது எனக்கும் புதிதாக இருக்கிறது. மட்டக்களப்பு மொழி நடையே?

பொன்னம்மாச்சி said...

//Mukilini கூறியது...
சுறுக்கா வாருங்கோவன் என்பது வடமராட்சி வழக்கு. //

எணேய் முகிலினி,
யாழ்ப்பாணமும் வடமராட்சியும் வேறு வேறையோ .. தெரியாமப் போச்சே.

சிநேகிதன் அக்பர் said...

அங்கிட்டு இங்கிட்டு ‍ இன்னும் எங்க ஊரில் பயன்படுத்துறோம்.

Anonymous said...

அநே ஆச்சி, வடமராட்சி, யாழ்ப்பாணம் (வலிகாமம்?) தென்மராட்சி வழக்குகள் இருக்குத்தானே... அதுவும் யாழ்ப்பாண டவுனில இருக்கிற ஆக்கள் ரோயல் தமிழ் எல்லே கதைக்கிறவை. சுண்டிக்குளி, அரியாலை, கொக்குவில் எல்லாம் யாழ்ப்பாணம் என்டு தான சொல்லுறவை. வல்வெட்டி, பொலிகண்டி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை என்டு சில ஊருகளை வடமராட்சி என்டு தான சொல்லுறவை. அவயளின்ட சாப்பாட்டு முறை முற்றிலும் வேற தான.. அதே மாதிரி தானே தென்மராட்சிக்கும் என்டு சில வழக்கங்கள் இருக்கு.. சந்தோசப்படன... பிரிவினவாதம் என்டு நினையாத. சரியே..

Admin said...

//@. Mukilini கூறியது... //



அப்ப போயிற்று வரட்டா என்று மட்டக்களப்பிலும் பயன்படுத்துவார்கள் அதுபோல் அப்பாவை கொப்பர் என்றும் , அம்மாவை கொம்மை என்றும் பயன்படுத்துவார்கள்

Admin said...

//Mukilini கூறியது...
கால என்பது எனக்கும் புதிதாக இருக்கிறது. மட்டக்களப்பு மொழி நடையே?//

இச் சொல் விவசாயக் கிராமங்களிலே அதிகமாகப் பயன்படுத்தப்படும்.

பல யாழ்ப்பாணச் சொற்களை அறியத்தந்தமைக்கு நன்றிகள்

Admin said...

//பொன்னம்மாச்சி கூறியது...
//Mukilini கூறியது...
சுறுக்கா வாருங்கோவன் என்பது வடமராட்சி வழக்கு. //

எணேய் முகிலினி,
யாழ்ப்பாணமும் வடமராட்சியும் வேறு வேறையோ .. தெரியாமப் போச்சே.//


Mukilini பதில் தந்துவிட்டார்

Admin said...

//அக்பர் கூறியது...
அங்கிட்டு இங்கிட்டு ‍ இன்னும் எங்க ஊரில் பயன்படுத்துறோம்.//



வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//Mukilini கூறியது...
அநே ஆச்சி, வடமராட்சி, யாழ்ப்பாணம் (வலிகாமம்?) தென்மராட்சி வழக்குகள் இருக்குத்தானே... அதுவும் யாழ்ப்பாண டவுனில இருக்கிற ஆக்கள் ரோயல் தமிழ் எல்லே கதைக்கிறவை. சுண்டிக்குளி, அரியாலை, கொக்குவில் எல்லாம் யாழ்ப்பாணம் என்டு தான சொல்லுறவை. வல்வெட்டி, பொலிகண்டி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை என்டு சில ஊருகளை வடமராட்சி என்டு தான சொல்லுறவை. அவயளின்ட சாப்பாட்டு முறை முற்றிலும் வேற தான.. அதே மாதிரி தானே தென்மராட்சிக்கும் என்டு சில வழக்கங்கள் இருக்கு.. சந்தோசப்படன... பிரிவினவாதம் என்டு நினையாத. சரியே..//


அது எல்லாம் வேண்டுமென்றே எம்மைச் சீண்டுபவர்கள் அவர்களை நாம் கண்டுகொள்ளக்கூடாது...

ஆ.ஞானசேகரன் said...

நல்ல அலசல் நண்பா,... இன்னும் தொடருங்கள்

ஹேமா said...

என்ன சந்ரு,திரும்பவும் வருதா அருகிவரும் தமிழ்ச் சொற்கள்.சில சொற்கள் மறந்தே போச்சு சந்ரு.சுறுக்கா = கெதியா,கடுக யாழ்ப்பாணத்தமிழ்.

Anonymous said...

எல்லாருக்கும் விளங்கக்கூடியதாக
சுத்தத்தமிழில் கதைப்பது பிழையா?
Royal Tamil என்பது அதிக மாகப்பட
வில்லையா? மொழிஎன்பது பரிவர்த்
தகுரியது என்பதுதான் உண்மை.
T.இராஜ்குமார்.

ஸ்ரீராம். said...

கீழே உள்ள படத்தைப் பார்த்த மறுக்கா யாராவது அலை பேசியைக் கையில் எடுத்தா 'அட, காலைக்குள் வேளை இருக்கு அங்கால போயிட்டு சுறுக்கா வாறன்' னுட்டு இந்த வம்பே ஒண்ணா ன்னு வந்துட வேண்டியதுதான்....!

புலவன் புலிகேசி said...

சோக்கா சொன்னத் தல........

யோ வொய்ஸ் (யோகா) said...

அருமையாயிருக்ககு சந்ரு.

மலையகத்தில் சீக்கரமாக அல்லது நேரத்துடன் என்பதை “வெள்ளனயே” என சொல்லும் பழக்கம் உண்டு.

உதாரணமாக “நேரத்துடன் தூங்க போகிறேன்” என்பதை ”வெள்ளனயே தூங்க போகிறேன்” என்போம்.

ஆனால் தற்போது நான் வசிக்கும் முஸ்லிம் பகுதியில் அச்சகோதரர்கள் அச்சொல்லை ”அதிகாலை” என்பதை குறிக்க பாவிப்பார்கள். அதாவது இங்கு நான் ”வெள்ளனயே தூங்க போகிறேன்” என்றால் “அதிகாலையிலேயே தூங்க போகிறேன் என அர்த்தமாகும்.

இங்கு வந்து சில காலங்கள் பல வார்த்தைகளை விளங்கி கொள்ள கடினப்பட்டேன். எமது மொழியின் அழகு அதனை ஒவ்வொரு பிரதேசத்திலும் பாவிப்பதிலிருக்கிறது என்பதை பின்புதான் அறிந்து கொண்டேன்

Admin said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்ல அலசல் நண்பா,... இன்னும் தொடருங்கள்//



தொடரும் நண்பா
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா..

Admin said...

//ஹேமா கூறியது...
என்ன சந்ரு,திரும்பவும் வருதா அருகிவரும் தமிழ்ச் சொற்கள்.சில சொற்கள் மறந்தே போச்சு சந்ரு.சுறுக்கா = கெதியா,கடுக யாழ்ப்பாணத்தமிழ்.//


தமிழ் எப்பவும் என்னோடு இருக்கும் அவ்வப்போது எல்லோரையும் நாடிவரும்....


சுறுக்கா, கெதியா எனும் சொற்கள் மட்டக்களப்பிலும் பயன்படுத்தப்படும்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//பெயரில்லா கூறியது...
எல்லாருக்கும் விளங்கக்கூடியதாக
சுத்தத்தமிழில் கதைப்பது பிழையா?
Royal Tamil என்பது அதிக மாகப்பட
வில்லையா? மொழிஎன்பது பரிவர்த்
தகுரியது என்பதுதான் உண்மை.
T.இராஜ்குமார்.//


நமது பிரதேசங்களிலே பயன்படுத்தும் சொற்களை பயன்படுத்துவதில் தவறில்லை.

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...
கீழே உள்ள படத்தைப் பார்த்த மறுக்கா யாராவது அலை பேசியைக் கையில் எடுத்தா 'அட, காலைக்குள் வேளை இருக்கு அங்கால போயிட்டு சுறுக்கா வாறன்' னுட்டு இந்த வம்பே ஒண்ணா ன்னு வந்துட வேண்டியதுதான்....!//

எவ்வளவு சுறுக்கா நம்மட தமிழப் புடிச்சிட்டயள் போல

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//புலவன் புலிகேசி கூறியது...
சோக்கா சொன்னத் தல........//



சோக்காத்தான் நீங்களும் சொல்றியள்

சோக்கா, சொல்றியள் எனும் சொற்களும் மட்டக்களப்பில் பயன்படுத்தப்படும்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
அருமையாயிருக்ககு சந்ரு.

மலையகத்தில் சீக்கரமாக அல்லது நேரத்துடன் என்பதை “வெள்ளனயே” என சொல்லும் பழக்கம் உண்டு.

உதாரணமாக “நேரத்துடன் தூங்க போகிறேன்” என்பதை ”வெள்ளனயே தூங்க போகிறேன்” என்போம்.

ஆனால் தற்போது நான் வசிக்கும் முஸ்லிம் பகுதியில் அச்சகோதரர்கள் அச்சொல்லை ”அதிகாலை” என்பதை குறிக்க பாவிப்பார்கள். அதாவது இங்கு நான் ”வெள்ளனயே தூங்க போகிறேன்” என்றால் “அதிகாலையிலேயே தூங்க போகிறேன் என அர்த்தமாகும்.

இங்கு வந்து சில காலங்கள் பல வார்த்தைகளை விளங்கி கொள்ள கடினப்பட்டேன். எமது மொழியின் அழகு அதனை ஒவ்வொரு பிரதேசத்திலும் பாவிப்பதிலிருக்கிறது என்பதை பின்புதான் அறிந்து கொண்டேன்//

மட்டக்களப்பிலும் சீக்கிரம், வெள்ளென எனும் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

டக்கெண்டு வா எண்டு நாங்கள் பயன்படுத்திறனாங்கள்.. :))

Kala said...

ஆமா இலங்கை பேச்சை மறந்து
ரொம்ப நாளாச்சு நினைத்துப் பார்த்தேன்
சில---முறை –அப்பு,அப்புச்சி =தந்தைக்கு
சீனீயம்மா-சீனீயப்பா-
ஆசப்பு—ஆசம்மா இவைகள் சித்தப்பா சின்னம்மா
வைக் குறிக்கும்.
அவங்கட வீட்ட----அவர்களின் வீட்டில்
ஒள்ளுப்பம் குடு-------கொஞ்சமாகக் கொடு
கறி ஆக்கிறன் ---கறி சமைக்கிறேன்
முழுகிறன்------தலைக்குளியல்
இறுமாப்பு___பிடிவாதம் {இவ்வளவு சொல்லியும்
இறுமாப்பா இருக்கிறா..}
இளக்காரம்----விகடத்தனம்{நான் பேசிறது உனக்கு
இளக்காரமாய் இருக்கா?}
இமிண்டன்---எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல்...
பாரு..இவ்வளவு சொல்லியும் இமிண்டத்தனமாய்
நிக்கிறத}
மனே---அன்பாய் பேசும் போது இச் சொல் வரும்
{என்ன மனே செய்றா?குளிக்கிறயா மனே....}
விளங்குதா? புரியுதா?
{அப்பா....இதுக்கு எல்லையில்லை இது போதும்
சந்ருக்கு நன்றி நினைக்க வைத்ததற்கு

முனைவர் இரா.குணசீலன் said...

அங்கிட்டு, இங்கிட்டு என்னும் சொற்களை எங்கள் ஊர்களிலும் பயன்படுத்துகிறோம்..

Menaga Sathia said...

நல்லா இருக்கு பதிவு ..!

Admin said...

//மதுவதனன் மௌ. / cowboymathu சொன்னது…
டக்கெண்டு வா எண்டு நாங்கள் பயன்படுத்திறனாங்கள்.. :))//



மட்டக்களப்பிலும் இச் சொற்கள் பாவனையில் இருக்கிறது

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

@. Kala சொன்னது…

பல சொற்களை அறியத்தந்தமைக்கு நன்றிகள்..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…
அங்கிட்டு, இங்கிட்டு என்னும் சொற்களை எங்கள் ஊர்களிலும் பயன்படுத்துகிறோம்..//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//Mrs.Menagasathia சொன்னது…
நல்லா இருக்கு பதிவு ..!//




வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

தங்க முகுந்தன் said...

உம்மோட வெள்ளண கதைச்சனான்தான்! எண்டாலும் அருகிவரும் பேச்சு வழக்குச் சொல்லுகளை திரும்ப ஒருக்கா நினைச்சுப் பாக்கிறதா - இது இருக்கல்லே! அதாலதான் திரும்ப எழுத்தாலையும் ஒரு கிறுக்கு கிறுக்குவம்எண்டு வந்தனான். கோவம் இல்லைத்தானே!

நான் தின்னவேலி வெண்புறாவில வேல செய்யேக்கை கொழும்புத்துறைப் பெடியனொருத்தன் பாவிக்கிற சொல்லு - அப்பேக்கை! இது நான் ஒருக்காலும் கேள்விப்படலை!
நீர் சொன்ன கால அதுவும் புதுசு!
இங்க காலைக்குள்ள நிக்கிறார் எண்டால் - மரக்காலை வைச்சிரிக்கிறவை -
மனுசி சொல்லும் புருசன் அங்க இருக்கிறதை! இப்படித்தான்!

அங்கால - இஞ்சால - நாசமாப்போவான்! பெரிய கொம்பே இப்படி நிறைய இருக்கு!

நான் கொஞ்சம் ஊரைவிட்டுத் தூர இருக்கிறதால எங்கட தவறணைப் பெடி டிலானிட்ட(டிலான் இப்படிச் சொல்லுறதை நீர் தப்பா எடுத்துக்க மாட்டீர்தானே!) சொல்லியிருக்கிறன் அவன் எழுதுவான் எண்டு நெனைக்கிறன்! அப்ப நான் வரட்டே?

Post a Comment