Thursday 17 September 2009

மட்டக்களப்பில் நடப்பதென்ன...

இன்று வலைப்பதிவு பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு நாளும் பிதிய பதிவர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. சில பதிவார்கள் தான் நினைக்கின்ற விடயங்களை எல்லாம் பதிவிட நினைக்கின்றனர். அவர்கள் பதிவிட நினைக்கின்ற விடயம் சரியானதா? அதன் உண்மைத்தன்மை என்ன என்ற விடயங்களை கருத்தில் எடுக்காமல் பதிவிடுகின்றனர்.

சிலரோ வேண்டுமென்றே சில வதந்திகளை வலைப்பதிவுகள் மூலமாகப் பரப்பிக்கொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் பல சமூகப்பிரச்சனைகளை கொண்டு வரக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டோம் என்பதற்காக எதனையும் எழுதிவிட முடியாது. எங்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கலாம். அக் கருத்துக்கள் உண்மையானதாக இருக்க வேண்டும்.

நான் இந்த இடுகையினை இடுவதற்குக் காரணம் நண்பர் வந்தியினால் இடுகயிடப்பட்ட மதம் பிடித்த பாடசாலைகள். எனும் இடுகைக்கு ஒருவரால்

//Azhar சொல்வது:
can u tell in which muslim school "Non muslim girls" forced to wear Muslim Dress?And reason why those girls change dress close to school is, school is only for girls and by wearing muslim dress all the way from home to school is to safe guard themself and they are practicing islam at their best. And they go to that school for education and it may be the school they could get admission too.
And you didnt write a single word about Batticalo College of Education and its racism. Any Reason?//
என்று பின்னூட்டமிட்டிருந்தார்.

அதேபோன்று ஒரு பதிவர் தனது வலைப்பதிவிலே

//மட்டக்களப்பு தாழங்குடா கல்வியியல் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்துவரக்கூடாது என்று சக தமிழ் மாணவர்கள் உத்தரவிட்டுள்ளனர். நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைந்துள்ள 16 கல்லூரிகளில் எவ்வித தடையும் இன்றி அவரவர் மத கலாச்சார மரபுகட்கு ஏற்ப நடப்பதற்கான அனுமதி இருக்கும் நிலையிலேயே இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.

//
என்றும்
//பகிடிவதை (ரெகிங்) என்ற பெயரில் பண்பாடற்ற இனத்துவேச நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.//


//மாணவர்கள் 3 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று சட்டம் இருக்கும் நிலையில் சைவ மறு மலர்ச்சி இயக்கம், பொங்கும் தமிழர் படையணி என இயங்க அனுமதி அளித்துள்ள நிர்வாகம் முஸ்லிம் மாணவர் விடையத்தில் இறுக்கமான போக்கை கையாளுகிறது. அத்துடன் ஏனைய மத மாணவர்கள் தமது மத நிகழ்வுகளை அனுஷ்டிக்க வசதி செய்திருக்கும் நிர்வாகம் முஸ்லிம் மாணவர்களை நோன்பு கால விஷேட தொழுகையில் ஈடுபட அனுமதிப்பதில்லை.//

என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த விடயங்கள் தொடர்பாக நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதனால் என்னிடம் சரியானதொரு விளக்கமளிக்கும்படி பதிவுலக நண்பர்கள் சிலர் கேட்டிருக்கின்றனர். நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதனால் இதற்கு சில விளக்கங்களை தரவேண்டியவனாக இருக்கின்றேன்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழ், முஸ்லிம் உறவை சீர் குலைப்பதற்கு பலர் முயன்று வருகின்றனர். நானறிந்தவரையில் இங்கே குறிப்பிட்டதைப்போல் பாரிய சம்பவங்கள் இடம் பெற்றதாக அறிய முடியவில்லை. விரைவிலே இது தொடர்பில் கல்வியல்கல்லூரியின் உயர் அதிகாரிகளோடு கலந்துரையாடி உண்மை நிலவரம் என்ன என்று ஒரு பதிவிடுகின்றேன்.

இன்று பகிடிவதை என்பது பரவலாக இடம் பெற்று வருகின்றது. இதிலே தமிழ் மாணவர்களால் முஸ்லிம் மாணவர்கள் பாதிக்கப்படுவதும். முஸ்லிம் மாணவர்களால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்படுவதும் உண்மைதான். இது இன ரீதியான பாதிப்புக்கள் அல்ல பகிடிவதை மட்டுமே. இதனை சில விசமிகள் வேறு விதமாக கதை கட்டி தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த நினைப்பதே உண்மை.


எனது நண்பர்கள் பலர் பல்கலைக்கழகத்திலே முஸ்லிம் மாணவர்களால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் பகிடி வதை எனும் போர்வையில். இதனை நாம் பிரச்சனையாக எடுக்கவில்லையே. சில மாணவர்களால் இப்படியான வேலைகள் செய்யப்படும் போது ஓட்டு மொத்தத்தில் கல்லூரியின் நிர்வாகத்தையும் அனைத்து மாணவர்களையும் குறை சொல்வது நியாயமானதல்ல.

இங்கே குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் உண்மையாக இருந்தால். சிறு சிறு விடயங்களுக்கெல்லாம் ஒன்று திரண்டு கடையடைப்பு, வீதி மறியல் என்று இறங்கும் முஸ்லிம் மக்களும். முஸ்லிம் அரசியல் வாதிகளும் இந்த விடயத்தில் மெளனிகளாய் இருப்பதேன்.

மற்றுமொரு விடயம் இங்கே விடுதலைப் புலிகள் சார்ந்த சில அமைப்புக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இன்றைய கால கட்டத்தில் எப்படி நேரடியாக இங்கே இந்த அமைப்பு இயங்க முடியும் என்பதே என் கேள்வி? இது வேண்டுமென்றே எமது இளம் கல்விச் சமுதாயத்தைச் சீரளிப்பதட்காக பரப்பப்படுகின்ற ஒரு போய்ப் பிரச்சாரமாகவே நான் பார்க்கின்றேன்.

இவ்வாறான பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் எமது இளம் கல்விச் சமுதாயத்தைச் புலிச் சாயம் பூசி கொன்றழிக்க நினைக்கும் பதிவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடும் போது அதன் உண்மைத் தன்மையினை அறிந்து பதிவிடும்படி வேண்டிக்கொள்கின்றேன்

இது தொடர்பில் விரைவில் கல்வியல் கல்லூரி உயர் உயர் அதிகாரிகளைச் சந்தித்து உண்மை நிலவரம் தொடர்பாக இடுகையிடுகிறேன்

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

15 comments: on "மட்டக்களப்பில் நடப்பதென்ன..."

யோ வொய்ஸ் (யோகா) said...

சூடாகி எழுதியிருக்கீங்க சந்ரு..

என்ன கொடும சார் said...

இது தொடர்பாக நானும் பதிவிட்டிருக்கிறேன்.
http://eksaar.blogspot.com/2009/07/blog-post_21.html
சம்பவம் 100% உண்மை.. தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறேன். எவ்வளவு தூரம் தீர்க்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் ஒரு பதிவு வரும்.

அதேபோல் முஸ்லிம் பாடசாலையில் தமிழ் மாணவியர்க்கு அநீதி இழைக்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால் அதையும் கண்டித்து பதிவிடுவேன்.

இவ்வாறான நிகழ்வுகள் வெளிக்கொணரப்படுவது சமூக நல்லுறவை சீர்குலப்பதற்கல்ல. புண்ணுக்கு புனுகு பூசாமல் சிகிச்சை அளிப்பத்ற்கே..

//இது தொடர்பில் கல்வியல்கல்லூரியின் உயர் அதிகாரிகளோடு கலந்துரையாடி உண்மை நிலவரம் என்ன என்று ஒரு பதிவிடுகின்றேன்.//

சரியாயின் இரு பக்கத்தாரிடமும் விசாரிக்க வேண்டும்.

//இங்கே குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் உண்மையாக இருந்தால். சிறு சிறு விடயங்களுக்கெல்லாம் ஒன்று திரண்டு கடையடைப்பு, வீதி மறியல் என்று இறங்கும் முஸ்லிம் மக்களும். முஸ்லிம் அரசியல் வாதிகளும் இந்த விடயத்தில் மெளனிகளாய் இருப்பதேன்.//

சிறு சிறு விடயங்களுக்கெல்லாம் என்று குறிப்பிடுவது எது என்று குறிப்பிட்டு சொல்லமுடியுமா?

மெளனிகளாய் இருப்பதேன் என்பது பிழையாகும். உங்கள் காதுகளுக்க எட்டாமல் போயிருக்கலாம்.

ஆராயாமல் சில குற்றச்சாட்டுக்களை மேம்போக்காக விமர்சித்திருப்பது சரியில்லை.

நான் ரெடி.. நீங்க ரெடியா..

photos said...
This comment has been removed by the author.
Admin said...

//@ என்ன கொடும சார் //


சில பதிவர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக என்னிடம் விளக்கம் கேட்டிருந்தனர். அவர்களுக்கு நான் இந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மையினை அறிந்து பதிவிடுகின்றேன் என்றுதான் குறிப்பிட்டிருக்கின்றேன்.




அதேபோல் கல்வியல் கல்லூரியிலே விடுதலைப்புலிகள் சார்பான அமைப்புக்கள் இருந்து செயற்படுகின்றன என்பதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது தமிழ் மாணவர்களை புலிச் சாயம் பூசி கொன்றழிக்க நினைக்கும் ஒரு செயலல்லவா? இந்தச் சுஉல்நிலையில் கல்லூரியிலே எப்படி புலிகள் சார்ந்த மாணவர் அமைப்புக்கள் இயங்க முடியும்?



//சரியாயின் இரு பக்கத்தாரிடமும் விசாரிக்க வேண்டும்.//


இங்கே இரு சாராரையும் விசாரிப்பதென்பது யார் அந்த இரு சாரார் என்பது எனக்குத் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது எனக்குத் தெரிய வில்லை. பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களைத் தாருங்கள்.



//சிறு சிறு விடயங்களுக்கெல்லாம் என்று குறிப்பிடுவது எது என்று குறிப்பிட்டு சொல்லமுடியுமா?//


இங்கே நான் முஸ்லிம்களைத் தாக்கி எழுதவில்லை. முஸ்லிம்களின் ஒற்றுமையினைக் குறிப்பிடுகின்றேன். ஒரு முஸ்லிமுக்கு சிறு பிரச்சனை ஏட்பட்டாலே எல்லோரும் ஒன்று சேர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு போராடுவதையே குறிப்பிட்டேன்.


ஆனால் ஏனைய சிறு விடயங்கள் பாரிய விடயங்களாகப் பேசப்பட்டிருக்கின்றன ஆனால் இந்த பாரிய விடயம் ஏன் பெரிதாகப் பேசப்படவில்லை என்பதுதான் என் கேள்வி.



//ஆராயாமல் சில குற்றச்சாட்டுக்களை மேம்போக்காக விமர்சித்திருப்பது சரியில்லை. //

இங்கே நான் மீம்போக்காக விமர்சிக்கவில்லை. பகிடிவதை தொடர்பான சில பிரச்சனைகளையும், கல்லூரியிலே புலிகள் சார்ந்த அமைப்புக்கள் இருக்கின்றன. என்ற குற்றச் சாட்டையுமே விமர்சித்து இருக்கின்றேன். இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்தோடு தொடர்புகொண்டு உண்மைத்தன்மையினை பதிவிடுகின்றேன் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.



//நான் ரெடி.. நீங்க ரெடியா..//


இது நகைப்புக்குரிய கேள்வியாக இருக்கின்றது. இது ஒரு பதிவருக்கு அழகல்ல...

என்ன கொடும சார் said...

//ஆனால் ஏனைய சிறு விடயங்கள் பாரிய விடயங்களாகப் பேசப்பட்டிருக்கின்றன ஆனால் இந்த பாரிய விடயம் ஏன் பெரிதாகப் பேசப்படவில்லை என்பதுதான் என் கேள்வி.//

இது தொடர்பாக முதலமைச்சர் முதல் சகல மத்திய மற்றும் பிரதேச அமைச்சர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் சிவில் அமைப்புகளால் எழுதப்பட்டுள்ளது. (உ-ம் பள்ளிவாசல்கள் சம்மேளனம்). ஊடகங்களில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் நான்கு தமிழ் பத்திரிகைகளில் இச்செய்தி இருட்டடிக்கப்பட மற்றவற்றில் வெளியிடப்பட்டுள்ளது. நடுநிலையான தமிழ் மாணவர்களை விசாரித்தாலே உண்மை புலனாகும். மற்றைய தரப்பை இனங்காண இந்த சிவில் அமைப்புகளுடனும் அமைச்சர்களுடனும் பேசிப்பார்க்கலாம்.

உங்கள் பதிவை மீண்டும் வாசியுங்கள். அது என்ன தொனியில் இருக்கிறது?

//பகிடிவதை தொடர்பான சில பிரச்சனைகளையும//
இது பகிடி வதை அல்ல.. நிச்சயமான சீண்டல். பகிடி வதைக்கும் பர்தாக்கும் என்ன சம்பந்தம்? மற்றும் இந்த பகிடிவதையைக்கூட கண்டிப்பதும் பதிவர்கள் கடமைதானே..

//இது நகைப்புக்குரிய கேள்வியாக இருக்கின்றது. இது ஒரு பதிவருக்கு அழகல்ல...//

தான் எழுதிய கருத்தை விவாதித்து உண்மையைத்தான் எழுதியிருப்பதாக நிரூபிப்பது பதிவருக்கு அழகே..

குறிப்பு:
பதிவுகளை / பின்னூட்டங்களை ஒருவாரத்துக்கு வெளிநாட்டு பயணம் காரணமாக பின்தொடர முடியாமல் போகலாம்.. சந்தர்ப்பம் கிடைக்கும் போது மறுமொழிகள் இடப்படும்

Admin said...

//@ என்ன கொடும சார் //



பகிடிவதை என்பது பரவலாக இடம் பெற்றுக்கொண்டு இருக்கின்றது அவற்றை சுட்டிக்காட்ட வேண்டியது பதிவர்களின் கடமைதான். அங்கே பல பகிடி வதைகள் நடக்கின்றன வார்த்தைகளால் விபரிக்க முடியாத பகிடிவதை நடக்கின்றன. அவற்றை ஒரு இனம் சார்ந்ததாக மாற்ற நினைப்பதுதான் தவறு என்றும். உங்களால் குறிப்பிடப்படுகின்ற ஏனைய பிரட்சனைகளை உரியவர்களோடு பேசி உண்மை நிலையினை தருகின்றேன் என்று குறிப்பிட்டு இருக்கின்றேன். என்னுடைய ஒரு நண்பருக்கு சிங்களப்பிரதேசத்திலே பல்கலைக்கழக அனுமதி கிடைத்திருக்கின்றது அங்கே இவர் மட்டும்தானாம் தமிழ் மாணவராம் அவர் வரும்போது பல காயங்களோடு வந்தார் இதனை என்ன என்று சொல்வது.


நான் இந்த இடுகையிலே முக்கியத்துவப்படுத்தி இருக்கின்ற விடயம் உங்களால் பதிவிலே கல்வியல் கல்லூரியிலே புலிகள் அமைப்பைச் சார்ந்த மாணவர் அமைப்பு செயப்படுவதாக குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். இது தமிழ் மாணவர்களை புலிகள் எனும் போர்வையில் பலிக்கடாவாக்க நினைக்கின்ற உங்கள் முயற்சி இல்லையா? இது நாடு நிலையாக எழுதி இருக்கின்றீர்களா? இது உண்மையான விடயமா? இதுதான் என் கேள்வி ?



//தான் எழுதிய கருத்தை விவாதித்து உண்மையைத்தான் எழுதியிருப்பதாக நிரூபிப்பது பதிவருக்கு அழகே..//


தங்கள் கருத்துக்குச் சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் உங்களால் கேட்கப்பட்ட கேள்வி என்ன //நான் ரெடி.. நீங்க ரெடியா..// இதனைத்தான் அழகில்லை என்று சொன்னேன்.


நீங்கள் குறிப்பிடுகின்ற பர்தா விடயம் உண்மையாக இருந்தால் கண்டிக்கப்பட வேண்டியதே. அதற்காக அப்பாவி தமிழ் மாணவர்களை புலிச் சாயம் பூசி நீங்கள் பலிக்கடாவாக்க நினைப்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும்.

என்ன கொடும சார் said...

//அங்கே பல பகிடி வதைகள் நடக்கின்றன வார்த்தைகளால் விபரிக்க முடியாத பகிடிவதை நடக்கின்றன.//
பகிடிவதையின் போர்வையில் இன சௌஜன்யத்தை கெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு பகிடிவதை என்ற போர்வையில் பூசி மொழுக அனுமதிக்கலாமா?

அத்தோடு எங்களுக்கு யாரும் இல்லை என்று நினைத்துவிட்டீர்களா என்று கேட்பதும், பர்தாவை கழற்ற சொல்லுவதும், கெஹலிய ரம்புக்வெலவின் ஊரா என்று கேட்டு தாக்குவதும் கோடிட்டு காட்டுவதென்ன?

//கல்வியல் கல்லூரியிலே புலிகள் அமைப்பைச் சார்ந்த மாணவர் அமைப்பு செயப்படுவதாக குறிப்பிட்டு இருக்கின்றீர்கள//

//அதற்காக அப்பாவி தமிழ் மாணவர்களை புலிச் சாயம் பூசி நீங்கள் பலிக்கடாவாக்க நினைப்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும//

பதிவில் சொல்லப்பட்டிருப்பது மே 27க்குப்பிறகு நிலமையை மோசமாக்கியிருக்கிறார்கள் என்றுதான். சைவ மறு மலர்ச்சி இயக்கம், பொங்கும் தமிழர் படையணி என இயங்குவது உண்மைதான். ஆராய்ந்து பார்க்கவும். புலி அமைப்புகளாக இல்லாமல் இருக்கலாம். புலி அமைப்புகள் என்று ஏதாவது ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருக்கிறேனா? என்னுடைய பதிவில் எங்காவது அப்படியான சொல் இருக்கிறதா? இல்லாததை எதற்கு திணித்து என்னிடம் விளக்க்கம் கேட்கிறீர்கள்?

பதிவில் சொல்லப்பட்டிருப்பது உண்மையான விடயமே..

முதலில் ஆராய்ந்து பாருங்கள். பிறகு விவாதியுங்கள். உங்களுக்கு தெரியாத விடையத்தில் எப்படி உங்களால் பொறுமையாக இருக்க முடியும்?

Admin said...

// கெஹலிய ரம்புக்வெலவின் ஊரா என்று கேட்டு தாக்குவதும் கோடிட்டு காட்டுவதென்ன?//


இந்த விடயம் இடம்பெற்றது. மட்டக்களப்பு கல்வியல் கல்லூரியிலா?


பொங்கு தமிழர் அமைப்பு என்றால் என்ன? பொங்கு தமிழர் படையணி என்றால் என்ன? இதனை அரசாங்கமோ புலி எதிர்ப்பாளர்களோ என்ன கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். இந்த அமைப்புக்கள் இன்றைய சூல்நிலையில் நேரடியாகவோ மறை முகமாகவோ இயங்க முடியுமா? (தமிழ் மக்களுக்கு ஆதரவான அமைப்பாகவும், புலிகளோடு தொடர்பில்லை என்றாலும் புலிகளுக்கு ஆதரவான இயக்கமாகவே பார்ப்பார்கள். )


இந்த செய்திகள் மூலம் தமிழ் மாணவர்கள் எதிர் நோக்கக்குடிய பிரச்சனைகள் பற்றி சிந்தியுங்கள்.

Nathanjagk said...

முற்றேயில்லாத, ஊடக, ஜன பாகுபாடில்லாமல் பாவித் திரியும் வதந்திகளை எப்போதும் தடுக்கமுடியாது. ஆனால் நம்மைத் தயார் படுத்திக்​கொள்ளலாம். இப்படியொரு தயார் நடவடிக்கையாக உங்களின் இந்த பதிவு நிச்சயம் அமையும் என்று உளமார நம்புகிறேன். மட்டகளப்பினர்க்கு என் அன்பு! உங்களுக்கும் என் வாழ்த்து!!

என்ன கொடும சார் said...

முதலில் விசாரித்து முடியுங்கள். அப்புறம் பதில் எழுதுங்கள். அத்துடன் இவற்றை வதந்தி என்று கூறுவோரையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

அத்துடன் என்னுடைய பதிவையும் ஆற அமர வாசித்து விளங்கி கேள்வி கேளுங்கள். நான் சொல்லாதை பற்றியெல்லாம் பேசி சாயம் பூச முயல வேண்டாம்.

Admin said...

இன்று பகிடிவதை என்னும் போர்வையில் இன ரீதியாக பல துன்புறுத்தல்களுக்கு ஆளாவது முஸ்லிம் மாணவர்கள் மட்டுமல்ல தமிழ் மாணவர்களுமே. பகிடிவதையில் ஈடுபடுவோரை கண்டிக்க வேண்டும். அதனை விடுத்து ஒரு இனத்தின் மீது விடுக்கப்படும் அச் சுருத்தலாகவோ கல்லூரியின் அல்லது பல்கலை கழகத்தின் நிர்வாகத்துக்கும் இதற்கும் சம்மந்தம் இருப்பதென்று குற்றம் சுமத்துவதும். சில அமைப்புக்கள் இருப்பதாக கூறி மாணவர்களை சில விடயங்களில் மாட்டிவிட நினைப்பதும் நல்ல விடயமல்ல.


சில மாணவர் அமைப்புக்கள் இருப்பதாக பரப்பப்பட்ட பொய் பிரச்சாரங்களாலும். குற்றச் சாட்டுக்களாலும் எத்தனை மாணவர்கள் காணாமல் போயிருக்கின்றனர். பல இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். இனிமேலும் இந்த நிலை தொடரக்கூடாது என்பதே என் கருத்து.


இந்த விடயங்கள் உண்மைக்குப்புறம்பான சில வதந்திகள் பரப்பப்படுகின்றனே என்பதே உண்மை. ஒரு சமுகத்தின், இனத்தின் கலாசாரங்களுக்கு இடையூறாக பல்கலைக்கழகமோ, கல்லூரியோ, தனிபபட்டவர்களோ அமையக்கூடாது. அவ்வாறு இடையூறாக இருந்தால் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

அதனை விடுத்து மாணவர்களுக்கும் சில அமைப்புக்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி மாணவர்களை பலியிட நினைப்பதுதான் வேதனைக்குரிய விடயம்.

gayathri said...

hi சந்ரு ungaluku en pathivula thevatahi kattutu irukanga

earkanaveunga thedi thevathai vanthutanganu nenaikiren

ஹேமா said...

சந்ரு நல்ல சூடான பதிவு.இறுதியில் நீங்கள் சொல்லியிருப்பதுபோல கல்லூரி உயர் உயர் அதிகாரிகளைச் சந்தித்து உண்மை நிலவரம் அறியுங்கள்.

Unknown said...

நல்ல பதிவு அண்ணா...
ஒரு முஸ்லிமிற்கு ஒரு ததமிழன் அடித்தால் அது இனப்பிரச்சினை அல்ல. அதே போல் ஒரு தமிழனுக்க ஒரு முஸ்லிம் அடித்தால் அதஇனப்பிரச்சினை அல்ல. அது தனிப்பட்ட பிரச்சினை.

ஒரு பாரிய குழு இன்னொரு இனத்தினருக்க அடித்தால் தான் அது இனப்பிரச்சினை.

சிறிய விடயங்களை இனப்பிரச்சினை ஆக்காமல் பேசித் தீர்த்துக் கொள்வதே அனைவருக்கும் நலம்.

உங்கள் புலனாய்வு பதிவிற்காக காத்திருக்கிறோம்...

என்ன கொடும சார் said...

//அதனை விடுத்து ஒரு இனத்தின் மீது விடுக்கப்படும் அச் சுருத்தலாகவோ கல்லூரியின் அல்லது பல்கலை கழகத்தின் நிர்வாகத்துக்கும் இதற்கும் சம்மந்தம் இருப்பதென்று குற்றம் சுமத்துவதும்//

விசாரித்து பார்க்கவும். இது பகிடி வதையை தாண்டியது என்பது புலனாகும்.


//சில அமைப்புக்கள் இருப்பதாக கூறி//
விசாரித்து பார்க்கவும். இருப்பதை கூறினால் மாட்டிவிடுவது அல்ல..

//அதனை விடுத்து மாணவர்களுக்கும் சில அமைப்புக்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி//

மீண்டும் சொல்கிறேன். விசாரிங்க.. அப்புறமா வாதிடுங்க.. ஆராயாமல் எழுதி என் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம்..

மற்றும் இங்கு யாரையும் மாட்டி விட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏன் இந்த வித்தியாசமான கவனிப்புகள் என்று கேட்டிருக்கிறேன்.. சும்மா சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதுதான் பெயர் சொல்லி கேட்கிறேன்.. மற்றபடி எனக்கு இனவாத சாயம் பூசி உங்களை பாதுகாக்க வேண்டாம். அப்பாவி உயிர்களை எப்பவும் இன மத பேதம் இன்றி மதிக்கிறேன். எனவே மாட்டை மரத்தில் கட்டி மரத்தை பற்றி எழுதாமல் மாட்டை பற்றியே எழுதுங்கள். வாதிடுங்கக்ல். ஆனால் ஆராய்ந்த பின்..


//சிறிய விடயங்களை இனப்பிரச்சினை ஆக்காமல் பேசித் தீர்த்துக் கொள்வதே அனைவருக்கும் நலம்.//

சம்பந்தப்பட்ட அமைப்பு ஆரம்பத்தில் பேசித்தீர்க்க அக்கறை காட்டவில்லை. நிர்வாகம் நிச்சயமாக சிறிய பிரச்சினையை பெரிதாக ஆக்கியுள்ளது. என்னுடைய பதிவில் அதுபற்றியும் எழுதியிருக்கிறேன்..

மற்றும் நான் எழுதியதன் நோக்கமும் பிரச்சினை பெசித்தீர்க்கப்படவேண்டும் என்பதுதான்..

Post a Comment