Sunday 13 September 2009

காதலால் வந்த வலி...


உன்னிடம் இருந்த -என்
இதயத்தைத் தூக்கி
எறிந்துவிட்டாய் இன்னும்
என்னிடம் வந்து சேரவில்லை
அலைமோதி திரிகின்றது
என் இதயம்.....


என்னிடம் இருந்த
உன் இதயத்தை - நான்
தரமறுத்தபோது
தட்டிப்பறித்துவிட்டாய்......

சொர்க்கம், நரகம்
இரண்டும் இருப்பதாக
அறிந்தேன் - பின்
உணர்ந்தேன் உன்னை
காதலித்ததனால்.....


அன்று உன்னைக்
காதலித்தபோது - நாம்
சொர்க்கத்தில் வாழ்கின்றோம்
என்று நீயே சொன்னாய்
நானும் சொர்க்கத்தில்
வாழ்வதாய் உணர்ந்தேன்....


இன்று என்னை - நீ
தூக்கி எறிந்தபோது
நரகத்தின் வேதனையில்
தவிக்கின்றேன்.....


இன்று என்னிடம்
மீதமிருப்பது - உன்
நினைவுகளைத்தவிர
வேறெதுவுமில்லை....


அன்று நீ என்னோடு
பேசிய இரவுகள்
குறுகியதென்று - அந்த
இரவுகளோடு நான்
கோபப்பட்டதுண்டு...


இன்று இரவுகளோ - உன்
நினைவுகளால் என்னை
வதைக்கின்றன - என்
துன்ப துயரங்களில்
சரி பாதி நீ என்றாய்
இன்று ??????????????


இன்றைய இரவுகளில்
என் கண்ணிரைத்
துடைத்து என்னைத்
தாலாட்டும் -என்
தலையணைக்கு தெரியும்
உன்னால் நான் படும்
நரக வேதனை....


இன்று உணர்ந்து
கொள்கின்றேன் - இது
உன் தவறல்ல
நான் ஏழையாய்
பிறந்ததுதான்
தவறென்று...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

26 comments: on "காதலால் வந்த வலி..."

Anonymous said...

அருமையான கவிதை. கடைசி வரி நச்.

வந்தியத்தேவன் said...

சந்ரு நீங்களுமா? எல்லோரும் காதல் கவிதை எழுதுகிறார்கள்(ஆதங்கம் தான் பொறாமை இல்லை), வாழ்த்துக்கள்.

Subankan said...

அப்பாடா, நீங்களும் எஸ்கேப்பா?, தப்பிச்சிட்டீங்க போங்க.

கவிதை அருமை.

யோ வொய்ஸ் (யோகா) said...

சந்ரு நீங்களுமா கடைசியில் இப்படி ஆகிட்டீங்க....

முடியல...

கவிதை அருமை..

வாழ்த்துக்கள்..

S.A. நவாஸுதீன் said...

கவிதை நன்றாக இருக்கிறது. தலைப்பில் தவறு இருக்கிறது. காதால் - காதலால்

Menaga Sathia said...

சந்ரு நீங்க எழுதிய கவிதையா.சூப்பர்.எல்லோரும் கவிதையா எழுதி அசத்துறீங்க.கடைசி வரிகள் நச்னு இருக்கு.

Anonymous said...

இன்றைய இரவுகளில்
என் கண்ணிரைத்
துடைத்து என்னைத்
தாலாட்டும் -என்
தலையணைக்கு தெரியும்
உன்னால் நான் படும்
நரக வேதனை....


aam nam vethanai arintha utra nanban inba thunbathilum udan erukum orey thunai...

kadaisi varigal yetharthampa,,,,, kathal endraley vali thano ithu aamothithalum valikiradhu aatchepithalum valikirathu,,,,,

ஸ்ரீராம். said...

ஸாரி.... கவிதைக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம்...!

ப்ரியமுடன் வசந்த் said...

//இன்றைய இரவுகளில்
என் கண்ணிரைத்
துடைத்து என்னைத்
தாலாட்டும் -என்
தலையணைக்கு தெரியும்
உன்னால் நான் படும்
நரக வேதனை....//

வரிகளில் வேதனை தெரிகிறது.....

புல்லட் said...

என்ன சகோ.. ட்ரெண்டு மாறுது? ஹிஹிஹ
பரவால்ல நல்லாத்தான் இருக்கு? காதல் ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அருமையான வரிகள்

ரொம்ப பிடித்தது

ஹேமா said...

சந்ரு நல்லாத்தானே இருந்தீங்க.என்ன நடந்தது.இந்தக் காதல் வந்தாலே பெடியளெல்லாம் புலம்பத் தொடங்கிடுவாங்கள்.ஏதாவது கனவு கண்டிருப்பீங்கள்.பேசாம இருங்கோ.எல்லாம் சரியாப் போயிடும்.

சந்ரு கவிதை கவலையா நல்லா இருக்கு.இன்னும் எழுதலாம்.

Admin said...

//கடையம் ஆனந்த் கூறியது...
அருமையான கவிதை. கடைசி வரி நச்.//



வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//வந்தியத்தேவன் கூறியது...
சந்ரு நீங்களுமா? எல்லோரும் காதல் கவிதை எழுதுகிறார்கள்(ஆதங்கம் தான் பொறாமை இல்லை), வாழ்த்துக்கள்.//



அவ்வப்போது கவிதை என்ற பெயரில் சில கிறுக்கல்களை இடுகையிடுவேன். நீண்ட நாட்களின்பின் ஒரு கிறுக்கல். அவ்வளவுதான்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//Subankan கூறியது...
அப்பாடா, நீங்களும் எஸ்கேப்பா?, தப்பிச்சிட்டீங்க போங்க.

கவிதை அருமை.//



அப்போ நீங்களுமா?

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
சந்ரு நீங்களுமா கடைசியில் இப்படி ஆகிட்டீங்க....

முடியல...

கவிதை அருமை..

வாழ்த்துக்கள்..//

நான் எப்படியும் ஆகவில்லை நண்பா கிறுக்கல் மட்டுமே.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//S.A. நவாஸுதீன் கூறியது...
கவிதை நன்றாக இருக்கிறது. தலைப்பில் தவறு இருக்கிறது. காதால் - காதலால்//


இப்போ திருத்திவிட்டேன் நண்பா சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
சந்ரு நீங்க எழுதிய கவிதையா.சூப்பர்.எல்லோரும் கவிதையா எழுதி அசத்துறீங்க.கடைசி வரிகள் நச்னு இருக்கு.//

நான் எழுதியதுதான். அவ்வப்போது சில கிறுக்கல்கள்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//தமிழரசி கூறியது...
இன்றைய இரவுகளில்
என் கண்ணிரைத்
துடைத்து என்னைத்
தாலாட்டும் -என்
தலையணைக்கு தெரியும்
உன்னால் நான் படும்
நரக வேதனை....


aam nam vethanai arintha utra nanban inba thunbathilum udan erukum orey thunai...

kadaisi varigal yetharthampa,,,,, kathal endraley vali thano ithu aamothithalum valikiradhu aatchepithalum valikirathu,,,,,//

இன்று எல்லோரது கண்ணீரையும் துடைக்கும் உற்ற நண்பன் தக்ளையனையே.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...
ஸாரி.... கவிதைக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம்...!//


கொஞ்ச தூரம்தானே அதிக தூரமில்லை விரைவில் நெருங்கி விடலாம்.


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//பிரியமுடன்...வசந்த் கூறியது...
//இன்றைய இரவுகளில்
என் கண்ணிரைத்
துடைத்து என்னைத்
தாலாட்டும் -என்
தலையணைக்கு தெரியும்
உன்னால் நான் படும்
நரக வேதனை....//

வரிகளில் வேதனை தெரிகிறது.....//


வேதனைகள்தான் வசந்த் கவிதையாய் வந்திருக்கின்றது.


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//புல்லட் கூறியது...
என்ன சகோ.. ட்ரெண்டு மாறுது? ஹிஹிஹ
பரவால்ல நல்லாத்தான் இருக்கு? காதல் ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்//


கொஞ்சம் மாற்றிப்பார்த்தேன்.



//காதல் ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்//



காதலில்லாமல் வாழ்வது வாழ்வா?

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
நல்ல அருமையான வரிகள்

ரொம்ப பிடித்தது//



வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//ஹேமா கூறியது...
சந்ரு நல்லாத்தானே இருந்தீங்க.என்ன நடந்தது.இந்தக் காதல் வந்தாலே பெடியளெல்லாம் புலம்பத் தொடங்கிடுவாங்கள்.ஏதாவது கனவு கண்டிருப்பீங்கள்.பேசாம இருங்கோ.எல்லாம் சரியாப் போயிடும்.



எதுவும் நடக்கவில்லை கவிதை எழுதலாம் என்று கனவு கண்டேன் எழுதிவிட்டேன்.

//சந்ரு கவிதை கவலையா நல்லா இருக்கு.இன்னும் எழுதலாம்.//


உங்கள் உச்சாகப்படுத்தல்களே என்னை எழுதத் தூண்டுகின்றன நிச்சயமாக எழுதுகின்றேன். கவிதை எனும் பெயரில் என் கிறுக்கல்களை

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சுபானு said...

காதல் கவிதை.. நீங்களுமா.. வாழ்த்துக்கள்..

//இன்றைய இரவுகளில்
என் கண்ணிரைத்
துடைத்து என்னைத்
தாலாட்டும் -என்
தலையணைக்கு தெரியும்
உன்னால் நான் படும்
நரக வேதனை....

அழகான வரிகள்..

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க

Post a Comment