Friday 11 September 2009

ஏன் இந்தப் புறக்கணிப்பு?

இலங்கையின் பொருளாதாரத்திலே பெரும் பங்கு வகிக்கின்ற தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறுபட்ட இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் படும் அவலங்களை உரியவர்கள் பார்க்காமல் இருப்பது போன்று தெரிகின்றது.

இன்று தொட்டத்தொளிலாளர்கள் தொடர்பில் பேசப்படுகின்ற விடயம்தான் சம்பள உயர்வுப் பிரச்சனை. இன்று அவர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த சம்பளம் 290 ரூபா. இன்று இலங்கையின் பொருட்களின் விலை என்ன? ஒரு டீ குடிக்க 25 ரூபா வேண்டும். இந்த 290 ரூபா ஒரு நாள் சாப்பாட்டுக்கே போதுமானதாக இல்லை. இந்த 290 ரூபாவை வைத்துக்கொண்டு இவர்களால் என்ன செய்ய முடியும்.

ஒரு குடும்பத்தலைவன் இந்த 290 ரூபாவை வைத்து என்ன செய்ய முடியும். தான் மட்டும் சாப்பிட்டு காலத்தை கடத்துவதா? தன குடும்பத்தில் உள்ளவர்களின் அத்தனை தேவைகளையும் எப்படி சமாளித்துக் கொள்ள முடியும்.

இன்று இலங்கையிலே ஏனைய பிரதேசங்களிலே ஒரு கூலித்தொலிலாலிக்கு வழங்கப்படும் குறித்த பட்ச கூலி 500 ஆகவும் இருக்கின்றது. சில இடங்களில் 1000 ஐயும் தாண்டுகின்றன. இது இவ்வாறிருக்க ஏன் இவர்கள் மட்டும் புறக்கணிக்கப்படுகின்றனர்.

அன்று தொட்டு இன்று வரை தொட்டத்தொளிளார்கள் தமது கூலி தொடர்பிலே பல போராட்டங்களை நடாத்தியும் நல்ல தீர்வு கிடைத்ததாக இல்லை. இது தொடர்பில் சில அரசியல்வாதிகள் சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க பின்னிப்பதேன். தோட்டத் துரைமார்களை பகைக்கும்போது தமது அரசியல் எதிர் காலம் பாதிக்கப்பட்டு விடும் என்பதாலா?

இன்று எல்லோரும் ஒரு நாட்டு மக்கள் என்று பேசிக்கொண்டிருப்பவர்களிடம் கேட்கின்றேன் மலையகம் என்பது தனி ஒரு நாடா? நாம் எல்லோரும் இலங்கையர்கள் எனும் போது ஏன் இந்த மக்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். ஏனைய பிரதேசங்களைப் போல் இந்த மக்களுக்கும் வசதிகள், சலுகைகள் வழங்கப்படலாம் தானே.

பிரதேச அபிவிருத்தி பிரதேச அபிவிருத்தி என்று பேசிக்கொண்டு இருக்கின்றோம். இன்று எத்தனை தொழிலாளர்கள் பல கஸ்ரங்களை அனுபவித்து வருகின்றார்கள். இவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு குறைந்த பட்சம் கூலியையாவது அதிகரித்து வழங்க முடியாமல் இருப்பது ஏன்?

சரியான முறையிலே வாழ்க்கைச் செலவுக்கேற்ற கூலி வழங்கப்படாதவிடத்து அவர்கள் மட்டுமல்ல அவர்களது எதிர்கால சந்ததியே பாதிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவுக்கேற்ற கூலி வழங்கப்படாதபோது சிறுவர்களின் கல்வி, போசாக்கு உட்பட அனைத்துமே பாதிக்கப்படுகின்றன.

நண்பர் யோ (கா) குறிப்பிட்டது போன்று தோட்டத் தொழிலாளர்களை பலரும் ஏளனமாகப் பார்க்கின்ற ஒரு நிலை இருக்கின்றது. இந்த நிலை மாற வேண்டும். பிரதேச வாதம் என்பது எம் மனங்களில் இருந்து முற்றாகக் களையப்பட வேண்டிய ஒன்று. தமிழரின் இன்றைய நிலைக்கு பிரதேச வாதமே முக்கிய காரணமாகும். தோட்டத் தொழிலாளர்கள் என்று ஏளனமாகப் பார்ப்பதை விடுத்து அனைவரும் தமிழர்கள் என்ற சிந்தனை வர வேண்டும்.

இன்று வலையுலகத்திலும் தொட்டத்தொளிலாளர்களின் பிரட்சனைகள் பற்றி பேசப்படுவது மிக மிகக் குறைவு. மலையகத்திலே பதிவர்கள் குறைவு என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் ஏனைய பதிவர்கள் மலையகம் பற்றி தங்களுக்கு தெரிந்த விடயங்களை ஏனைய பதிவர்களோடு பகிர்ந்து கொள்ளலாமல்லவா?

நண்பர் யோ (கா) அவர்களின் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் போராட்டம் எனும் இடுகைக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்க்கும் போது கவலைப்பட வேண்டிய விடயமாக இருந்தது. அவரது பதிவுகளுக்கு வழமையாகக் கிடைக்கின்ற பின்னுட்டங்களைவிட மிக மிகக் குறைவாக இருந்தது. இதற்கு என்ன காரணம் பதிவர்களாகிய நாங்களும் தோட்டத் தொழிலாளர்களை ஏளனமாகத்தான் பார்க்கின்றோமா?

தோட்டத்தொளிலாளர்களும் எம்மைப் போன்ற தமிழர்களேதான். எமது உறவுகள்தான் நாம் அவர்களுக்காக எம்மாமால் முடிந்தவற்றை செய்வோம்

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

11 comments: on "ஏன் இந்தப் புறக்கணிப்பு?"

யோ வொய்ஸ் (யோகா) said...

//இன்று இலங்கையிலே ஏனைய பிரதேசங்களிலே ஒரு கூலித்தொலிலாலிக்கு வழங்கப்படும் குறித்த பட்ச கூலி 500 ஆகவும் இருக்கின்றது.//

இதே தொழிலாளிகள் வேலை செய்யும் நுவரெலியா போன்ற இடங்களில் மரக்கறி தோட்டங்களில் வேலை செய்யும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு (பெருந்தோட்ட தொழிலாளர்களலல்லர்) ரூபாய் 550 தினசம்பளமாக கொடுக்கப்படுகிறது. அது தவிர காலை மற்றும் உணவும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

//இன்று எல்லோரும் ஒரு நாட்டு மக்கள் என்று பேசிக்கொண்டிருப்பவர்களிடம் கேட்கின்றேன் மலையகம் என்பது தனி ஒரு நாடா? நாம் எல்லோரும் இலங்கையர்கள் எனும் போது ஏன் இந்த மக்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். ஏனைய பிரதேசங்களைப் போல் இந்த மக்களுக்கும் வசதிகள், சலுகைகள் வழங்கப்படலாம் தானே.//

இங்கு பலருக்கு தெரியாத ஒரு விடயம் இப்பெருந்தோட்டத்துறை என்பது மலையகம் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் உள்ள தோட்டங்களையும் சேர்த்து என்பது தான். மேலும் இந்த தொழிலாளிகள் அனைவரும் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழர்கள் ஏராளமாக இருந்தாலும் சகோதர மொழி சிங்களவர்களும் ஏராளமாக இத்தாழிலாளர்களுல் அடங்குவர். அவர்களுக்கும் இதே நிலைதான்..

//சரியான முறையிலே வாழ்க்கைச் செலவுக்கேற்ற கூலி வழங்கப்படாதவிடத்து அவர்கள் மட்டுமல்ல அவர்களது எதிர்கால சந்ததியே பாதிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவுக்கேற்ற கூலி வழங்கப்படாதபோது சிறுவர்களின் கல்வி, போசாக்கு உட்பட அனைத்துமே பாதிக்கப்படுகின்றன.//

இதை நான் யுனிசெப் நிறுவனத்தோடு இணைந்து ஆராய்வொன்றில் ஈடுபட்ட போது நேரில் பார்த்துனர்ந்தேன். தான் சாப்பிடாமல் தனது குழந்தைகளுக்கு உணவுகளை வழங்கும் ஏராளமான பெற்றோர்கள் இங்குள்ளனர்.

//இன்று வலையுலகத்திலும் தொட்டத்தொளிலாளர்களின் பிரட்சனைகள் பற்றி பேசப்படுவது மிக மிகக் குறைவு. மலையகத்திலே பதிவர்கள் குறைவு என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் ஏனைய பதிவர்கள் மலையகம் பற்றி தங்களுக்கு தெரிந்த விடயங்களை ஏனைய பதிவர்களோடு பகிர்ந்து கொள்ளலாமல்லவா?//

எனக்கும் இது ஏனென விளங்கவில்லை. எங்கேயோ உள்ள அஜித், விஜய், ஆப்கானிஸ்தானுக்கு சண்டை போடுபவர்கள் இந்த அடிமட்ட தொழிலாளர்களுக்கு ஏன் குரல் கொடுக்க மாட்டேன்கிறார்கள் என தெரியவில்லை. உங்களது பதிவு வரை இந்த பிரச்சினையை பற்றி எழுதப்பட்டது 4 அல்லது 5 பதிவுகள் மட்டுமே என நினைக்கிறேன்.

//நண்பர் யோ (கா) அவர்களின் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் போராட்டம் எனும் இடுகைக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்க்கும் போது கவலைப்பட வேண்டிய விடயமாக இருந்தது. அவரது பதிவுகளுக்கு வழமையாகக் கிடைக்கின்ற பின்னுட்டங்களைவிட மிக மிகக் குறைவாக இருந்தது. இதற்கு என்ன காரணம் பதிவர்களாகிய நாங்களும் தோட்டத் தொழிலாளர்களை ஏளனமாகத்தான் பார்க்கின்றோமா?//

இங்கு சீரியஸ் பதிவை விட நகைச்சுவை பதிவுகளுக்கு தான் முக்கியத்துவம் கிடைக்கிறது என நினைக்கிறேன். பதிவர் வந்தியோடு இது பற்றி நான் டிவிட்டிய போது அவரும் இதே கருத்தையே கூறினார். ஆனாலும் பதிவர்களுக்கு இந்த மக்கள் பற்றிய மென் பார்வை இருப்பதை ஏற்று கொள்ளதான் வேணடும். பின்னூட்டம் குறைந்ததற்கு என்னுடைய இந்த பதிவு சீரியஸ் பதிவாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்.


//தோட்டத்தொளிலாளர்களும் எம்மைப் போன்ற தமிழர்களேதான். எமது உறவுகள்தான் நாம் அவர்களுக்காக எம்மாமால் முடிந்தவற்றை செய்வோம்//

எல்லாரும் இதே கண்ணோட்டத்தில் பார்த்தால் அந்த மக்களின் எதிர்காலம் சுபீட்ச மடையும்.

மேலும் நான் எழுதாமல் விடுபட்டு போன விடயங்களை எழுதியதற்காக உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களை போல் இன்னும் சில பதிவர்களும் அவர்களது பதிவுகளிலும் இது பற்றி ஒரு பதிவாவது இட்டால் அது அந்த மக்களின் பிரச்சினையை இன்னும் கொஞ்சம் வெளி கொண்டு வரும் என நினைக்கிறேன்.

பார்ப்போம் எங்களால் செய்ய முடிந்தது இப்படி அவர்களது பிரச்சினையை மற்றைய சமூகத்திற்கும் கொண்டு செல்வது மாத்திரமே. மேலும் அவர்களுக்காக பிரார்த்திப்போம்.

சத்ரியன் said...

//சரியான முறையிலே வாழ்க்கைச் செலவுக்கேற்ற கூலி வழங்கப்படாதவிடத்து அவர்கள் மட்டுமல்ல அவர்களது எதிர்கால சந்ததியே பாதிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவுக்கேற்ற கூலி வழங்கப்படாதபோது சிறுவர்களின் கல்வி, போசாக்கு உட்பட அனைத்துமே பாதிக்கப்படுகின்றன.//

சந்த்ரு,

நீங்கள் அறிந்தோ , அறியாமலோ உலக ஏழைகளுக்கான இடர்ப்பாடுகளை அலசி வலைப் பூ வாசிக்கும் அனைவரிடமும் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறீகள்!

சமூகம் விழிப்படையவும், அரசியலின் சாயம் வெளுப்படையவும் இந்த விடயங்கள் அந்த ஏழைகளச் சென்று சேர வழிவகைச் செய்யவேண்டும்.

இப்போது சொல்லுங்கள்.பூனைக்கு இந்த மணியைக் கட்ட முன் வருவது யார்?

காமராஜ் said...

உங்கள் பதிவு, மலையக மக்கள் பற்றி மட்டுமல்ல,
வலையக மக்களைப் பற்றியும் பேசுகிறது.
யோ வாய்ஸ் சொன்னவையும் சரி.

வால்பையன் said...

எரியும் பனிக்காடு நாவல் படித்து பாருங்கள் நண்பரே!

யாழினி said...

ஆமாம் இவ்வாறான குறைந்த சம்பள முறைமையினால் சிறுவர்களின் அடிப்படைக் கல்வி போஷாக்கு என்பன சேர்ந்து பாதிப்புக்குள்ளாவது தான் மிக மிக வேதனையான விடயம்!

Sinthu said...

பதிவினூடு நிறைய விடயங்களைத் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள், ஆனாலும் ஒரு வரி என்னை அதிகமாகப் பதித்துவிட்டது,
காரணங்கள் பலருக்குத் தெரியாததும், உண்மையான நிலைமை தெரியாதமையும் மலையக மக்களைப் பற்றிப் பலர் எழுதாமைக்குக் காரணம்..

Subankan said...

//இங்கு சீரியஸ் பதிவை விட நகைச்சுவை பதிவுகளுக்கு தான் முக்கியத்துவம் கிடைக்கிறது என நினைக்கிறேன். பதிவர் வந்தியோடு இது பற்றி நான் டிவிட்டிய போது அவரும் இதே கருத்தையே கூறினார். ஆனாலும் பதிவர்களுக்கு இந்த மக்கள் பற்றிய மென் பார்வை இருப்பதை ஏற்று கொள்ளதான் வேணடும். பின்னூட்டம் குறைந்ததற்கு என்னுடைய இந்த பதிவு சீரியஸ் பதிவாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்.
//

உண்மைதான். சீரியஸ் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் மிகமிக்க் குறைவு. ஏன், பலர் முழுவதுமாகப் படிப்பதுகூட இல்லை. சீரியஸ் பதிவு போட்டுவிட்டு, அந்தப் பதிவு URL இல் தங்கி நின்றவர்களின் நேரத்தைப் பாருங்கள், பத்து செக்கன்களுக்குள் ஓடியவர்கள்தான் அதிகம்.

பணம் என்பதே பிரதானமாகிவிட்ட நிலையில் கூலி குறையும்போது, அனைத்துமே பாதிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை. இது பாரிய சமூகச் சிக்கல்களையும் உருவாக்கும் அபாயம் உள்ளது.

ஹேமா said...

ஆமாம் சந்ரு.நானும் தொடர்ந்து செய்திகள் கேட்டுக்கொண்டுதான் வருகிறேன்.பாருங்கள் எவ்வளவு காரணங்கள் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் 500 ரூபா சம்பளம் கூட்ட.அவர்களால்தான் இலங்கைக்கு வருமானமே.ஆனால் இலங்கையில் கடைநிலை ஊதியம் பெறுபவர்கள் இந்தத் தோட்டத் தொழிலாளர்கள்தான்.
பார்க்கலாம் இந்தமுறை கொஞ்சம் இறுக்கமாகவே இருக்கிறார்கள்.
என்றாலும் அவர்கள்தான் பாவம்.அவர்கள் வேலைக்குப் போகாவிட்டால் அடுப்புப் படுத்துவிடும் வீட்டில்.

ஸ்ரீராம். said...

எனக்கு இதில் உள்ள விஷயங்கள் ஆழமாகப் புரியவில்லை என்றாலும், (மலையக மக்கள் போன்றவை எது, தோட்டத் தொழிலாளர்கள் என்பது தனியா, போன்றவை) உங்கள் கவலை புரிகிறது. இப்படிப் பட்ட இடுகைகளை பொறுமையாகப் படிப்பவர்களும் குறைவுதான். நல்ல முயற்சி.

கண்டியான் said...

சந்ரு ஏன் இந்த தோட்டத்தொழிலாளர்கள் பற்றி மக்கள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை தெரியுமா? சில காலங்களுக்கு முன்னர் இதனைப் பற்றி எழுதிய பதிவர் ஒருவர் அரசியல் கட்சி ஒன்றினால் மிரட்டப்பட்டார். இன்னொரு எழுத்தாளர் நையப்புடைக்கப்பட்டார். அத்துடன் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ சில கட்சிகளின் பிடியில் அகப்பட்டுக்கொண்டார்கள். தேர்தல் நேரம் அவர்களின் வாக்குகாக பிச்சை கேட்கும் அரசியல் தலைவர்கள் பின்னர் கொழும்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இவர்களை மறந்துவிடுகின்றார்கள். மலையக மக்களின் நண்பன் எனக் கூறிக்கொள்ளும் ஒரு தலைவர் அரசியலுக்கு வரமுன்னர் மிகவும் கஸ்டப்பட்டார், இன்றோ அவரின்பிள்ளைகள் ஆடம்பரக் கார்களிலும், சர்வதேச பாடசாலைகளிலும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக்கொண்டு திரிகின்றார்கள். இது எப்படிச் சாத்தியம்? எல்லாம் முதலாளிமார்கள் போடுகின்ற பிச்சைதான்.

Unknown said...

எனக்கு உண்மையில் ஒரு சந்தேகம்...
500 ரூபாவை நாள்நம்பளமாகக் கேட்கிறார்கள். அது உண்மையில் போதுமா?
இப்போதிருப்பதை விட 500 ரூபா எவ்வளவு பெரிது என்பது வேறு விடயம்.
ஆனால் 500 ரூபாவை கொடுத்தாலும் இலங்கையில் குறைந்த சம்பளம் வாங்கும் பிரிவாக அந்த மக்களே நீடிக்கப் போகிறார்கள். அப்படி இல்லையா?

Post a Comment