Wednesday, 9 September 2009

தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றனவா?

தொலைக்காட்சிகள் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு சாதனமாக அமைவது மட்டுமல்லாமல் நல்ல தகவல்களை வழங்கும் ஒரு சாதனமாகவும் இருக்கின்றது ஆனால் இன்று இந்த தொலைக்காட்சிகளே மக்களுக்கு தொல்லைக்காட்சிகளாக மாறிவிட்டன.

இலங்கையைப் பொறுத்தவரை தொலைக்காட்சியானது வானொலியைப்போல் போட்டி நிறைந்த ஒன்றல்ல. இதனால் மக்கள்மீது (பார்வையாளர்கள்) எதனையும் திணித்து விடலாம் என்பதுபோல் இந்த தொலைக்காட்சிகள் மாறிவிட்டன.

தரமான நிகழ்ச்சிகள் வழங்கப் படுகின்றதா. அவர்களால் வழங்கப்படும் நிகழ்ச்சிகளை எத்தனை பேர் பார்க்கின்றனர். நம் நாட்டுக் கலைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுவதாக சொல்கின்றார்கள் இது எந்த அளவில் இருக்கின்றது என்று தெரியவில்லை. சில நிகழ்ச்சிகள் நம் நாட்டு இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காகச் செய்யப்படுகின்றன. இங்கே இக் கலைஞர்கள் தெரிவு செய்யப்படும் விதம்தான் சரியானதா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

இன்று போட்டிகளிலே பங்குபற்றும் போட்டியாளர்கள் நேயர்களின் தொலைபேசி குறுந்தகவல் (sms) தெரிவு செய்யப்படுகின்றனர். நேயர்களின் தொலைபேசி குறுந்தகவல் (sms) மூலமான தெரிவு சரியானதா? இன்று தொலைபேசிப்பாவனை அதிகரித்துவிட்ட நிலையிலும் கையடக்கத்தொலைபேசிக்கான சிம் இலவசமாக கிடைப்பதாலும் ஒவ்வொருவரும் பல சிம் பாவிக்கின்றனர். ஒருவர் ஒரு போட்டியாளருக்கு பல sms அனுப்ப முடியும். அத்தோடு தொலைபேசிப்பாவனை சற்றுக்குறைவாக இருக்கின்ற பிரதேசங்களிலே இருந்து கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இந்த sms மூலமான தெரிவுகளால் அதிகம் பாதிக்கப்படுவர் அல்லவா.

இன்று sms அனுப்புவதற்கான கட்டணங்கள் மிகமிகக் குறைவு ஆனால் போட்டியாளர்களை தெரிவு செய்வதற்காக sms அனுப்பும்போது sms க்கான கட்டணம் அதிகம் sms மூலம் உழைப்பதட்காகவா கலைஞர்களை ஊக்கப்படுத்துகின்றோம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சிகள்.

தொலைக்காட்சித்தொடர்கள், நிகழ்ச்சிகள் இந்திய தொலைக்காட்சிகளில் இருந்து பெறப்பட்டவயாக இருக்கின்றன. ஏன் நம் நாட்டில் சிறந்த கலைஞர்கள் இல்லையா. இன்று இலங்கையிலே எத்தனையோ கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களை வைத்து சில நிகழ்ச்சிகளை செய்யலாமல்லவா.

இன்று சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (நாடகங்கள்) இங்கேயே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. ஆனால் அதனை எத்தனை பேர் பார்க்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. இன் நாடகங்களில் நடிப்பவர்கள் எப்படி நடிக்கின்றார்கள் என்று பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும். இலங்கையில் எத்தனை நாடகக் கலைஞர்கள் இருக்கின்றனர்கள் அவர்கள் இவர்களின் கண்ணுக்குத்தெரிவதில்லையா?. நல்ல கலைஞர்களை பயன்படுத்தலாமல்லவா?

அடுத்து சில அறிவிப்பாளர்களின் தமிழ் உச்சரிப்பு பற்றி நான் சொல்லவேண்டியதில்லை. இவர்கள் பேசுவது என்ன மொழி என்று யோசிக்கவேண்டி இருக்கின்றது.

பல அறிவிப்பாளர்கள் இருந்தபோதும் ஒரு சில அறிவிப்பாளர்களை மட்டும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை. மற்ற அறிவிப்பாளர்கள் தரம் குறைந்தவர்களா. அப்படி தரம் இல்லாத அறிவிப்பாளர்களாக இருந்தால் புதிய அறிவிப்பாளர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு அறிவிப்பாளர் தலைவிரி கோலமாக வந்து தனது பேச்சை ஒன்றில் ஆரம்பித்து இன்னொன்றில் முடிப்பதும். அளவுக்கதிகமான நளினமும் தொடர்ந்து பார்ப்பவர்களை சலிப்படைய செய்யுமல்லவா.

சில திரைப்படங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப் படுவதோடு பாடல்கள் கூட சில பாடல்களே திரும்ப திரும்ப ஒளிபரப்பப் படுகின்றன. நிகழ்ச்சிகளிலே நேயர்களின் கருத்துக்களுக்காக வழங்கப்படும் தலைப்புக்கள் சில வேளைகளில் பொருத்தமில்லாத தலைப்புக்களாக வழங்கப்படுகின்றன.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் நம் நாட்டுக்கலைஞர்களை ஊக்கப்படுத்துவதொடு நல்ல நிகழ்ச்சிகளை தந்து தமிழ் மொழியினை கொலை செய்யாமலும் இருக்க வேண்டும் என்பதே எனது அவா.

Post Comment

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

30 comments: on "தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றனவா?"

ப்ரியமுடன் வசந்த் said...

//நல்ல நிகழ்ச்சிகளை தந்து தமிழ் மொழியினை கொலை செய்யாமலும் இருக்க வேண்டும் //

தமிழ் already murdered சந்ரு....

வந்தியத்தேவன் said...

பூனைக்கு மணி கட்ட முயற்சி செய்கிறீர்கள், ஆனால் இது செவிடன் காதில் ஊதும் சங்கு. எத்தனை தடவை தினக்குரல் பத்திரிகையில் இவர்களின் நிகழ்ச்சிகளின் குறைகளைச் சுட்டிக்காட்டினார்கள் ஆனால் இன்னும் திருந்தவில்லை.

உந்த எஸ் எம் எஸ்சில் விருதுகள் கொடுக்கின்றோம் என இரண்டு வருடங்கள் மக்களை ஏமாற்றோ ஏமாற்றோ என ஏமாற்றினார்கள், அத்துடன் இன்னொரு நிகழ்ச்சியில் மக்களை மாக்கள் ஆக்குகின்றார்கள்(கிராண் மாஸ்டர்), எங்கடை ஆட்கள் பிரபலம் இல்லையாம்,

அண்மையில் இன்னொரு இசைப்போட்டியில் பெரும்பான்மை இனப் போட்டியாளரை திரும்ப அழைத்து தெரிவுச்செய்தார்கள் தமிழர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள், இருவரும் பாடாமல் சொதப்பியது தனிக் கதை.

அத்துடன் தமிழ்மொழியைத் தாங்கள் தான் வளர்க்கினம் என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்து கூவுகின்றார்கள்.

இவர்களை விட்டுவிட்டு நல்ல விளையாட்டு தொலைக்காட்சிகள் பாருங்கள் பதட்டம், உயர் அழுத்தம் போன்ற நோய்கள் நிற்கும்.

நல்லதொரு இடுகை பாராட்டுகள். ஆனால் விழலுக்கு இறைத்த நீர் இது.

Admin said...

//பிரியமுடன்...வசந்த் கூறியது...
//நல்ல நிகழ்ச்சிகளை தந்து தமிழ் மொழியினை கொலை செய்யாமலும் இருக்க வேண்டும் //

தமிழ் already murdered சந்ரு....//

ஏற்கனவே சிலரால் கொலை செய்யப்பட்டாலும் இனிமேலாவது திருந்துவார்களா.

வருகைக்கு நன்றிகள் வசந்த்

Admin said...

//வந்தியத்தேவன் சொன்னது…
பூனைக்கு மணி கட்ட முயற்சி செய்கிறீர்கள், ஆனால் இது செவிடன் காதில் ஊதும் சங்கு. எத்தனை தடவை தினக்குரல் பத்திரிகையில் இவர்களின் நிகழ்ச்சிகளின் குறைகளைச் சுட்டிக்காட்டினார்கள் ஆனால் இன்னும் திருந்தவில்லை. //

திருந்தமாட்டார்கள் என்பது அறிந்ததே இருந்தும் நம் மன ஆதங்கங்களையும். நம் நாட்டு தொலைக்காட்சிகளின் போக்கையும் வெளி உலகோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் எனும் நோக்கமுமே.

//உந்த எஸ் எம் எஸ்சில் விருதுகள் கொடுக்கின்றோம் என இரண்டு வருடங்கள் மக்களை ஏமாற்றோ ஏமாற்றோ என ஏமாற்றினார்கள், அத்துடன் இன்னொரு நிகழ்ச்சியில் மக்களை மாக்கள் ஆக்குகின்றார்கள்(கிராண் மாஸ்டர்), எங்கடை ஆட்கள் பிரபலம் இல்லையாம், //

இன்று பல நிகழ்சிகள் எஸ். எம். எஸ் மூலம் உழைப்பதற்காகவே நடாத்தப்படுகின்றன. இன்று எல்லா நிகழ்ச்சிகளுக்குமே எஸ். எம். எஸ் பயன் படுத்தப்படுகின்றன. நம் நாட்டுக் கலைஞர்களை வெளி நாடுகளில் அழைத்து கெளரவப் படுத்துகின்றனர். ஆனால் இவர்களோ திறமையானவர்கள், பிரபலமானவர்கள் இல்லை என்கின்றனர். ஒரு திறமை படைத்தவருக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்ப்படும்போதுதானே அவர் பிரபலமாகமுடியும்.

//அத்துடன் தமிழ்மொழியைத் தாங்கள் தான் வளர்க்கினம் என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்து கூவுகின்றார்கள். //

எதனை வளர்க்கின்றனர் என்பது புரியவில்லை தமிழை வளர்க்கும் இவர்கள் நிகழ்ச்சிகளுக்கு ஏன் ஆங்கிலத்தில் பெயர்களை வைக்கின்றனர்.

siruthaai said...

தமிழக தமிழருடைய இன உணர்வினை தடுப்பது.. புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு ..அவர்கள் வீசும் எலும்பு துண்டுகளுக்கு..தமது சூடு சொரணை.. மனைவி..மக்கள் மற்றும் தமிழக தமிழர்களாகிய நம்மையும் விற்கும் திராவிட கட்சி கும்பல்களும் அவர்தம் தொல்லைகாட்சிகளும்தான்..தமிழனை சிந்திக்க விடாமல் மானாட மார்பாட,குத்தாட்டம்.பார்ப்பவர்களாகவும்..ரசிகர்களாகவும், பெண்களை சீரியல் பார்க்கும் அழு மூஞ்சிகளாகவும் வைத்திருக்கிறார்கள்..மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டால் இவர்கள் வாழ்வு அவ்வளவுதான் என இவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது..நன்றாக திட்டமிட்டே செய்கிறார்கள்..தமிழர் அவலங்களை காட்ட மறுக்கிறார்கள்..எவன் செத்தால் எனக்கென்ன என்ற மனப்பான்மையை வளர்க்கிறார்கள்..இங்கு கன்னடர்களிடம் நாம் கற்க வேண்டிய பாடம் ஒன்று உண்டு கன்னட பிரச்சனை எதுவாக இருந்தாலும் அவர்கள் முதலில் தடை செய்வது இவ்வாறான நிகழ்ச்சிகளையும் பிற மொழி குறிப்பாக தமிழ் சேனல்களையும்தான்.. தமிழ்தேசிய உணர்வாளர்கள் முதலில் இவ்வாறான மாயையில் இருந்து தமிழர்களை மீட்டு எடுப்பதே ஆகும். மீட்டு எடுத்தால் நீங்கள் தனியாக இன உணர்வினை ஊட்ட வேண்டிய அவசியம் கூட இருக்காது.அது தானாகவே வந்து சேரும்.. தமிழுணர்வை தக்க வைப்பதும்..எதிர்கால சந்ததியினாரான நம் குழந்தைகளுக்கு ஊட்டுவதும் நமது கடமையே ஆகும்

தமிழக மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பி விட மாட்டார்கள். அப்படித் திரும்பாத வேலையைத் ஒருவருக்கு ஒருவர் கழுதறுத்து தமிழகத் திராவிடக் கட்சிகளே அவற்றின் ‘தொல்லை’காட்சிகளே பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கையிலும் தெம்பிலும்தான், இவர்கள் தமிழர் பிரச்சினைகளை பற்றி கவலைப் படாமலும், அதில் அக்கறை காட்டாமலம் இருப்பது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிராகவும் இந்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

குறைந்த பட்சம் நம்முடைய தாய்மார்களுக்கு குடிசை தொழில் அல்லது நடுத்தர வர்க்கமானல் இணையத்தின் வழி எத்தனையோ முறைகளில் சம்பாதிக்க வழி உள்ளது. அவற்றினை கற்று கொடுங்கள்.இந்த சீரியல்கள் மற்றும் பிற ஈழவுகளில் இருந்து விடுபட செய்யுங்கள்.மராத்திய வீரன் சிவாஜியை அவனுடைய தாயார் உருவாக்கியது போன்று நம்முடைய தமிழ்நாட்டிலும் ஒரு இனத்திற்காக போராடும் ஒப்பற்ற வீரனை நம்முடைய தாய்மார்களாலும் உருவாக்க முடியும்

ஹேமா said...

சந்ரு,நல்ல சமூக அக்கறைதான்.நீங்க என்னதான் கத்துங்க.யார் காதில விழப்போகுது.எல்லாம் வியாபாரமாப்போச்சுது.

யோ வொய்ஸ் (யோகா) said...

ஆனால் போட்டியாளர்களை தெரிவு செய்வதற்காக sms அனுப்பும்போது sms க்கான கட்டணம் அதிகம் sms மூலம் உழைப்பதட்காகவா கலைஞர்களை ஊக்கப்படுத்துகின்றோம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சிகள்.//

இது ரொம்ப பேருக்கு தெரியாத விடயம், இது பற்றிய விரிவான ஒரு பதிவு யாராவது இட்டால் நன்றாக இருக்கும். நல்ல பதிவு சந்ரு

Unknown said...

இன்றைய தொலைக்காட்சிகளை முழுமையாக விமர்சிக்கத் தொடங்கினால் அவர்களின் முழு நிகழ்ச்சிகளையும் விமர்சிக்கலாம்.
மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதே சரியான சொல்.
வானொலிகள் முழுமையாக சரியாக செயற்படுகின்றன என்று சொல்ல முடியாவிட்டாலும் (சில வானொலிகளின் பல நிகழ்ச்சிகள் இப்போதும் ஆங்கிலப் பெயர்களிலேயே இருப்பது உட்பட...) வானொலிகள் ஒப்பீட்டளவில் ஒழுங்காக செயற்படுகின்றன.
நீங்கள் சொன்னது போல் தொலைக்காட்சிகளில் பெரிதாக போட்டி இல்லாததால் தான் இந்த நிலைமை என நம்புகிறேன்.
தேவையான பதிவு.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

//அடுத்து சில அறிவிப்பாளர்களின் தமிழ் உச்சரிப்பு பற்றி நான் சொல்லவேண்டியதில்லை. இவர்கள் பேசுவது என்ன மொழி என்று யோசிக்கவேண்டி இருக்கின்றது.//

உண்மை தான் நீங்கள் சொல்வது ஆனால் என்னை மாதிரி அடுத்த மானிலத்தில் இருந்தும் தமிழ் பேசுபவர்களை குறை கூறுவதிலும் பலர் முனைப்பாக இருப்பார்கள்..

கிருஷ்ண மூர்த்தி S said...

சந்ரு, இதுல சந்தேகம் வேறயா:-))

பார்ப்பவர்களை முட்டாளாக ஆக்குவதிலும், எமாற்றுவதிலுமே பெரும்பாலான நிகழ்ச்சிகள் தயாரிக்கப் படுகின்றன!

நேற்றைக்குத் தற்செயலாக விஜய் டீவியில் கமலஹாசனுடைய திரையுலகில் ஐம்பதாண்டுகள் ஆனதைக் கொண்டாடும் நிகழ்ச்சி..ரெண்டே செகண்ட் தான் தொல்லைக் காட்சியை அணைத்து விட்டேன். காரணம் இந்த சானலில், இன்றைக்கு ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியை, மறுநாள் மதியம் ரீ டெலிகாஸ்ட், வாரக் கடைசியில் சம்மரி டெலிகாஸ்ட் அப்புறம் சீசன் ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு அவங்களுக்கு எதுவரைக்கும் எண்ணத் தெரியுமோ அத்தனை வருஷம் இதை வச்சே ஒப்பேத்திவிடுகிறார்கள் என்பது நன்றாகத் தெரிந்ததால் தான்!

என்ன செய்ய, ஏமாளிகள் இருக்கும் வரை........!

வால்பையன் said...

அதிலொன்றும் சந்தேகமில்லை, ஆனால் சின்ன திருத்தம்!

ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் ஏமாற்றி கொண்டு தான் இருப்பான்!

siruthaai said...

தொலைக்காட்சி வாய்ப்பு கிடைக்கலையா.. சீ சீ இந்த பழம் புளிக்கும் .....

குடந்தை அன்புமணி said...

ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை திராவிடர் கழகத்தினர் எரித்து தங்கள் எதிர்ப்பை காட்டிவந்தார்கள். எல்லா ஊர்களிலும் இப்படி செய்ய வேண்டும் என்று விரும்பினர். ஆனால் பாரதிதாசன் இப்படி செய்வதால் பலன் ஒன்றும் இல்லை. நாம் அவற்றை புறக்கணித்துவிட்டால் போதும் என்றாராம். இதுவே தொலைக்காட்சிக்கும் பொருந்தும்.

புல்லட் said...

உண்மையான கருத்துக்ள் சந்ரு.. ஆனால் அவர்களும் என்ன செய்வது பாவம்? மக்களின் ரசனை அப்படி.. :(

விருதுக்கு நன்றி சந்ரு..

Menaga Sathia said...

//அடுத்து சில அறிவிப்பாளர்களின் தமிழ் உச்சரிப்பு பற்றி நான் சொல்லவேண்டியதில்லை. இவர்கள் பேசுவது என்ன மொழி என்று யோசிக்கவேண்டி இருக்கின்றது.// ஆமாம் சந்ரு நல்லா சொன்னிங்க.எனக்கு சில நேரம் அவங்கலாம் என்ன பேசறாங்கன்னே புரியாது.நமக்குதான் புரியலையோன்னு நினைப்பேன்.
//நல்ல நிகழ்ச்சிகளை தந்து தமிழ் மொழியினை கொலை செய்யாமலும் இருக்க வேண்டும்//

தமிழ்மொழியை எப்பவோ கொன்னுட்டாங்க.நல்லவேளை இதெல்லாம் கேட்பதற்க்கும்,பார்ப்பதறக்கும் பாரதியார்,பாரதிதாசன் உயிரோடு இல்லை..

ஸ்ரீராம். said...

இது எல்லா ஊரிலும் வழக்கம்தானே....

ஸ்ரீராம். said...

இன்றையத் தொலைக் காட்சியை விடுங்கள்...நான் பார்த்ததில்லை. 70 களில் இலங்கை வானொலியின் தீவிர ரசிகர்கள் நாங்கள். "வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில் ஆவலுடன் குழுமி இருக்கும் அன்பு ரசிகப் பெருமக்களுக்கு என் அன்பு வணக்கம்" (டைப் அடிக்கும் போதே அவர் குரல் அதே ராகத்தில் என் மனதில் ஒலிக்கிறது!) என்று நிகழ்ச்சியை ஆரம்பித்து நடத்தும் அன்பு நண்பர் K. S. ராஜா அவர்கள், மேலும் இப்போது இந்தியாவில் நிகழ்ச்சிகள் நடத்தும் நண்பர் அப்துல் ஹமீது குரல்கள் எங்களுக்கு வெகு பரிச்சயம். "தயவு செய்து இந்தப் படத்தின் முடிவை யாருக்கும் சொல்லிவிடாதீர்கள்" என்று 'எங்கள் தங்க ராஜா' பற்றியும், வசந்த மாளிகை படம் பற்றியும், பின்னாளில் 'நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு "நீங்க யாரு?" என்பார் ராஜா... கமலின் குரல் "சிங்கர் சந்துரு" என்று சொல்லும், "பார்த்து மகிழுங்கள்" என்பார் ராஜா...'நினைத்தாலே இனிக்கும்' என்று ராகத்துடன் ஒலிக்கும்! அந்தத் திரைவிருந்து நிகழ்ச்சி கேட்க எங்கள் வீட்டில் ஒரு கூட்டமே குழுமி இருக்கும்....

Admin said...

//siruthaai கூறியது...
தமிழக தமிழருடைய இன உணர்வினை தடுப்பது.. புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு ..அவர்கள் வீசும் எலும்பு துண்டுகளுக்கு..தமது சூடு சொரணை.. மனைவி..மக்கள் மற்றும் தமிழக தமிழர்களாகிய நம்மையும் விற்கும் திராவிட கட்சி கும்பல்களும் அவர்தம் தொல்லைகாட்சிகளும்தான்..தமிழனை சிந்திக்க விடாமல் மானாட மார்பாட,குத்தாட்டம்.பார்ப்பவர்களாகவும்..ரசிகர்களாகவும், பெண்களை சீரியல் பார்க்கும் அழு மூஞ்சிகளாகவும் வைத்திருக்கிறார்கள்..மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டால் இவர்கள் வாழ்வு அவ்வளவுதான் என இவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது..நன்றாக திட்டமிட்டே செய்கிறார்கள்..தமிழர் அவலங்களை காட்ட மறுக்கிறார்கள்..எவன் செத்தால் எனக்கென்ன என்ற மனப்பான்மையை வளர்க்கிறார்கள்..இங்கு கன்னடர்களிடம் நாம் கற்க வேண்டிய பாடம் ஒன்று உண்டு கன்னட பிரச்சனை எதுவாக இருந்தாலும் அவர்கள் முதலில் தடை செய்வது இவ்வாறான நிகழ்ச்சிகளையும் பிற மொழி குறிப்பாக தமிழ் சேனல்களையும்தான்.. தமிழ்தேசிய உணர்வாளர்கள் முதலில் இவ்வாறான மாயையில் இருந்து தமிழர்களை மீட்டு எடுப்பதே ஆகும். மீட்டு எடுத்தால் நீங்கள் தனியாக இன உணர்வினை ஊட்ட வேண்டிய அவசியம் கூட இருக்காது.அது தானாகவே வந்து சேரும்.. தமிழுணர்வை தக்க வைப்பதும்..எதிர்கால சந்ததியினாரான நம் குழந்தைகளுக்கு ஊட்டுவதும் நமது கடமையே ஆகும்

தமிழக மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பி விட மாட்டார்கள். அப்படித் திரும்பாத வேலையைத் ஒருவருக்கு ஒருவர் கழுதறுத்து தமிழகத் திராவிடக் கட்சிகளே அவற்றின் ‘தொல்லை’காட்சிகளே பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கையிலும் தெம்பிலும்தான், இவர்கள் தமிழர் பிரச்சினைகளை பற்றி கவலைப் படாமலும், அதில் அக்கறை காட்டாமலம் இருப்பது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிராகவும் இந்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

குறைந்த பட்சம் நம்முடைய தாய்மார்களுக்கு குடிசை தொழில் அல்லது நடுத்தர வர்க்கமானல் இணையத்தின் வழி எத்தனையோ முறைகளில் சம்பாதிக்க வழி உள்ளது. அவற்றினை கற்று கொடுங்கள்.இந்த சீரியல்கள் மற்றும் பிற ஈழவுகளில் இருந்து விடுபட செய்யுங்கள்.மராத்திய வீரன் சிவாஜியை அவனுடைய தாயார் உருவாக்கியது போன்று நம்முடைய தமிழ்நாட்டிலும் ஒரு இனத்திற்காக போராடும் ஒப்பற்ற வீரனை நம்முடைய தாய்மார்களாலும் உருவாக்க முடியும்//

உங்கள் எதிர்பார்ப்புக்கள் நியாயமானதே.

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//ஹேமா கூறியது...
சந்ரு,நல்ல சமூக அக்கறைதான்.நீங்க என்னதான் கத்துங்க.யார் காதில விழப்போகுது.எல்லாம் வியாபாரமாப்போச்சுது.//

வியாபாரம் என்பதற்காக எதனையும் செய்யலாமா...

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
ஆனால் போட்டியாளர்களை தெரிவு செய்வதற்காக sms அனுப்பும்போது sms க்கான கட்டணம் அதிகம் sms மூலம் உழைப்பதட்காகவா கலைஞர்களை ஊக்கப்படுத்துகின்றோம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சிகள்.//

இது ரொம்ப பேருக்கு தெரியாத விடயம், இது பற்றிய விரிவான ஒரு பதிவு யாராவது இட்டால் நன்றாக இருக்கும். நல்ல பதிவு சந்ரு//

இன்று எஸ்.எம்.எஸ் மூலமாக அதிக கட்டணங்களை பெற்று தொலைக்காட்சிகள் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கின்றன என்பதே உண்மை.

Admin said...

//கனககோபி கூறியது...
இன்றைய தொலைக்காட்சிகளை முழுமையாக விமர்சிக்கத் தொடங்கினால் அவர்களின் முழு நிகழ்ச்சிகளையும் விமர்சிக்கலாம்.
மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதே சரியான சொல்.
வானொலிகள் முழுமையாக சரியாக செயற்படுகின்றன என்று சொல்ல முடியாவிட்டாலும் (சில வானொலிகளின் பல நிகழ்ச்சிகள் இப்போதும் ஆங்கிலப் பெயர்களிலேயே இருப்பது உட்பட...) வானொலிகள் ஒப்பீட்டளவில் ஒழுங்காக செயற்படுகின்றன.
நீங்கள் சொன்னது போல் தொலைக்காட்சிகளில் பெரிதாக போட்டி இல்லாததால் தான் இந்த நிலைமை என நம்புகிறேன்.
தேவையான பதிவு.
வாழ்த்துக்கள்.//

வானொலிகளின் தமிழ்மொழிக் கொலை தொடர்பில் பல இடுகைகள் முஉலம் சொல்லி இருக்கின்றேன்.

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//தமிழரசி கூறியது...
//அடுத்து சில அறிவிப்பாளர்களின் தமிழ் உச்சரிப்பு பற்றி நான் சொல்லவேண்டியதில்லை. இவர்கள் பேசுவது என்ன மொழி என்று யோசிக்கவேண்டி இருக்கின்றது.//

உண்மை தான் நீங்கள் சொல்வது ஆனால் என்னை மாதிரி அடுத்த மானிலத்தில் இருந்தும் தமிழ் பேசுபவர்களை குறை கூறுவதிலும் பலர் முனைப்பாக இருப்பார்கள்..//

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//கிருஷ்ணமூர்த்தி கூறியது...
சந்ரு, இதுல சந்தேகம் வேறயா:-))

பார்ப்பவர்களை முட்டாளாக ஆக்குவதிலும், எமாற்றுவதிலுமே பெரும்பாலான நிகழ்ச்சிகள் தயாரிக்கப் படுகின்றன!

நேற்றைக்குத் தற்செயலாக விஜய் டீவியில் கமலஹாசனுடைய திரையுலகில் ஐம்பதாண்டுகள் ஆனதைக் கொண்டாடும் நிகழ்ச்சி..ரெண்டே செகண்ட் தான் தொல்லைக் காட்சியை அணைத்து விட்டேன். காரணம் இந்த சானலில், இன்றைக்கு ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியை, மறுநாள் மதியம் ரீ டெலிகாஸ்ட், வாரக் கடைசியில் சம்மரி டெலிகாஸ்ட் அப்புறம் சீசன் ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு அவங்களுக்கு எதுவரைக்கும் எண்ணத் தெரியுமோ அத்தனை வருஷம் இதை வச்சே ஒப்பேத்திவிடுகிறார்கள் என்பது நன்றாகத் தெரிந்ததால் தான்!

என்ன செய்ய, ஏமாளிகள் இருக்கும் வரை........!//

எப்பொழுதும் ஏமாற்றிக்கொண்டு இருக்க முடியாதுதானே.

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//வால்பையன் கூறியது...
அதிலொன்றும் சந்தேகமில்லை, ஆனால் சின்ன திருத்தம்!

ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் ஏமாற்றி கொண்டு தான் இருப்பான்!//

அதுவும் சரிதான்.

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//siruthaai கூறியது...
தொலைக்காட்சி வாய்ப்பு கிடைக்கலையா.. சீ சீ இந்த பழம் புளிக்கும் .....//

தொலைக்காட்சி வாய்ப்புக்காக நான் அலையவில்லை. இப்படிப்பட்ட தொலைக் காட்சிகளில் சேர்ந்து நானும் தொல்லை கொடுக்க விரும்பவுமில்லை.

உங்கள் சொந்தப் பெயரில் வரலாமே. இன்னொருத்தரின் பெயரில் வருவதுதான் உங்கள் தொழிலா?

Admin said...

//

குடந்தை அன்புமணி கூறியது...
ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை திராவிடர் கழகத்தினர் எரித்து தங்கள் எதிர்ப்பை காட்டிவந்தார்கள். எல்லா ஊர்களிலும் இப்படி செய்ய வேண்டும் என்று விரும்பினர். ஆனால் பாரதிதாசன் இப்படி செய்வதால் பலன் ஒன்றும் இல்லை. நாம் அவற்றை புறக்கணித்துவிட்டால் போதும் என்றாராம். இதுவே தொலைக்காட்சிக்கும் பொருந்தும்.//

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//புல்லட் கூறியது...
உண்மையான கருத்துக்ள் சந்ரு.. ஆனால் அவர்களும் என்ன செய்வது பாவம்? மக்களின் ரசனை அப்படி.. :(

விருதுக்கு நன்றி சந்ரு..//

மக்களும் வேறு வழி இல்லாமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
//அடுத்து சில அறிவிப்பாளர்களின் தமிழ் உச்சரிப்பு பற்றி நான் சொல்லவேண்டியதில்லை. இவர்கள் பேசுவது என்ன மொழி என்று யோசிக்கவேண்டி இருக்கின்றது.// ஆமாம் சந்ரு நல்லா சொன்னிங்க.எனக்கு சில நேரம் அவங்கலாம் என்ன பேசறாங்கன்னே புரியாது.நமக்குதான் புரியலையோன்னு நினைப்பேன்.
//நல்ல நிகழ்ச்சிகளை தந்து தமிழ் மொழியினை கொலை செய்யாமலும் இருக்க வேண்டும்//

தமிழ்மொழியை எப்பவோ கொன்னுட்டாங்க.நல்லவேளை இதெல்லாம் கேட்பதற்க்கும்,பார்ப்பதறக்கும் பாரதியார்,பாரதிதாசன் உயிரோடு இல்லை..//

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...
இன்றையத் தொலைக் காட்சியை விடுங்கள்...நான் பார்த்ததில்லை. 70 களில் இலங்கை வானொலியின் தீவிர ரசிகர்கள் நாங்கள். "வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில் ஆவலுடன் குழுமி இருக்கும் அன்பு ரசிகப் பெருமக்களுக்கு என் அன்பு வணக்கம்" (டைப் அடிக்கும் போதே அவர் குரல் அதே ராகத்தில் என் மனதில் ஒலிக்கிறது!) என்று நிகழ்ச்சியை ஆரம்பித்து நடத்தும் அன்பு நண்பர் K. S. ராஜா அவர்கள், மேலும் இப்போது இந்தியாவில் நிகழ்ச்சிகள் நடத்தும் நண்பர் அப்துல் ஹமீது குரல்கள் எங்களுக்கு வெகு பரிச்சயம். "தயவு செய்து இந்தப் படத்தின் முடிவை யாருக்கும் சொல்லிவிடாதீர்கள்" என்று 'எங்கள் தங்க ராஜா' பற்றியும், வசந்த மாளிகை படம் பற்றியும், பின்னாளில் 'நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு "நீங்க யாரு?" என்பார் ராஜா... கமலின் குரல் "சிங்கர் சந்துரு" என்று சொல்லும், "பார்த்து மகிழுங்கள்" என்பார் ராஜா...'நினைத்தாலே இனிக்கும்' என்று ராகத்துடன் ஒலிக்கும்! அந்தத் திரைவிருந்து நிகழ்ச்சி கேட்க எங்கள் வீட்டில் ஒரு கூட்டமே குழுமி இருக்கும்....//

என்னை வானொலியோடு கட்டிப்போட்டு, ஒலிபரப்புத்துறைக்குள் நுழைய வேண்டும் என்ற ஆவலைத்தூண்டிய என் அபிமானத்துக்குரிய அறிவிப்பாளர் K. S. ராஜா அவர்களைப் பற்றி ஞாபகங்களை அசைபோட வைத்தமைக்கு நன்றிகள்

வருகைக்கு நன்றிகள்.

சுபானு said...

இந்த sms நிகழ்ச்சியால் இவர்கள் உழைப்பது ஒருபுறமிருக்க திரும்பத் திரும்ப sms அனுப்பும் மூளைற்ற மக்களை நினைக்கும் போதுதான் கோபம் கோபமாக வருகின்றது..

மற்றது வந்தியண்ணா சொன்னது போன்றுதான் நானும் செய்கின்றேன்.
:)
//இவர்களை விட்டுவிட்டு நல்ல விளையாட்டு தொலைக்காட்சிகள் பாருங்கள் பதட்டம், உயர் அழுத்தம் போன்ற நோய்கள் நிற்கும்.

Post a Comment