Wednesday, 4 July 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு 03

கடந்த பதிவில் குறித்த நண்பர் விதண்டாவாதமான கருத்துக்களை தெரிவித்திருந்தார் அவருக்கு இப்பதிவிலே சில கருத்துக்களைத் தருகின்றேன். முதலில் நீ்ங்கள் உண்மைகளையும், நிஜங்களையும் அறிந்து கொள்ளுங்கள் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி அடையவில்லை என்பது முட்டாள்தனமானது.

யாழ்ப்பாண மக்களிடம் பிரதேச வாதம் இல்லை என்று சொல்வது உங்கள் அறியாமை நான் பல யாழ்ப்பாண நண்பர்களுடன் பழகி இருக்கின்றேன் அவர்களே இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றர்.

கருணா எதற்காகப் பிரிந்தார் அவரது தற்போதைய நடவடிக்கைகள் என்ன என்பது வேறு விடயம். அவரின் நடடிக்கைகள் தொடர்பில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் கருணா பிரிந்து வந்தபோது அவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையே.
அடுத்து பிள்ளையான் சொத்து சேர்ப்பதாகச் சொல்லி இருக்கின்றீர்களே எங்கே சொத்துச் சேர்த்திருக்கின்றார் என்பதனை பட்டியலிடுங்கள் கண்ணை மூடிக்கொண்டு கதைப்பதை விட்டுவிட்டு. எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு அப்பட்டமான பொய்களைக் கதைக்கலாம். ஆனாலும் உண்மைகள் உறங்குவதில்லை. போராளியாக இருந்த பிள்ளையான் இன்று ஒரு ஜனநாயக அரசியல் பாதையில் வந்திருக்கின்றார். அவருக்கும் ஆசா பாசங்கள் இருக்கின்றன அவர் நகைகள் போடக்கூடாது என்பது உங்கள் முட்டாள்தனம். புலிகள் அமைப்பில் இருந்த போராளிகள் இன்று நகைகள் அணியவில்லையா? புலிகளின் நடவடிக்கைகள் தவறானவை என்று பிரிந்து வந்த பிள்ளையான் எதற்கு புலிகளின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். எதற்காக நகை அணியக்கூடாது.

அரசால் வழங்கப்படுகின்ற சலுகைகளை கூட்டமைப்பினர் பெறுகின்றனர் என்பதற்கு ஆதாரம் என்னிடம் கேட்பதற்கு முன்னர் உங்கள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுப் பாருங்கள். அரியநேந்திரன் அவர்கள் அரசிடம் இருந்து மூன்று வேலைவாய்ப்புக்களைப் பெற்று மனைவிக்கும், மச்சாளுக்கும், மகளுக்கும் கொடுத்திருக்கின்றார். இதை அரியநேந்திரனிடம் கேட்டுப் பாருங்கள்.

மிக அண்மையில் நடந்த சம்பவம் செல்வராஜா அவர்கள் ஒரு அமைச்சரைச் சந்திக்க முந்திரிப்பருப்பு தயிர் போன்றவற்றை கொண்டு சென்றிருக்கின்றார். எதற்காகத் தெரியுமா? குடிநீர் இல்லாமல் கஸ்ரப்படுகின்ற துறைநீலாவணை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக வந்த திட்டத்தினை தடுத்து தனது கிராமமான கல்லாற்றுக்கு அத் திட்டத்தினை மாற்றி கேட்டிருக்கின்றார் குறித்த அமைச்சரிடம். இது மாத்திரமல்ல தமது உறவினர்களுக்கு அரசிடமிருந்து அரசிடமிருந்து பல உதவிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார். அண்மையில்கூட அரசாங்கத்தின் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்களே கூட்டமைப்பினர்.

எல்லைப் புறங்களை பாதுகாக்கவும் எல்லைப்புற கோவில்களை புனரமைக்குவும் பிள்ளையான் அவர்கள் பெருந்தொகையை ஒதுக்கி இருக்கின்றார். கூட்டமைப்பினர் விகாரை கட்டுகிறார்கள், காணி பிடிக்கின்றார்கள் என்று அறிக்கைகள் மூலம் கொக்கரிப்பார்கள் அதை வைத்து அரசியல் நடத்துவார்கள் ஆனால் பிள்ளையான் எதையும் செயலில் காட்டிவிடுவார். முஸ்லிம்களால் பிடிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்கள் எத்தனை காப்பாற்றப் பட்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

விகாரைகள் கட்டப்படுகின்றன என்று சொல்லும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். சிங்களப் பிரதேசங்களிலே தமிழர்கள் கோவில்கள் கட்டவில்லையா? சிங்களவர்கள் செறிந்து வாழும் கொழும்பிலோ தமிழர்கள் எத்தனை பெரிய கோவில்களைக் கட்டியிருக்கின்றனர். உங்களை சங்கள மக்கள் தடுத்து நிறுத்தியிருக்கலாம்தானே?

பிள்ளையான் குழு கொள்ளையிட்டதாகச் சொல்கின்றீர்களோ நீங்கள் பத்திரிகைகள்கூட பார்ப்பதில்லைபோலும் வங்கிக் கொள்ளை உட்பட அனைத்துக் கொள்ளையுடனும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் எவரும் பிள்ளையான்குழு அல்ல. இதுகூட தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு பேசுகின்றீர்கள்.

அப்பட்டமான பொய்களை சொல்ல நினைக்காதீர்கள் கொலை கொள்ளைகள் தொடர்பாக UN REPORT இருப்பதாகச் சொல்லும் நீங்கள் அதனை வெளியிடுங்கள். பிள்ளையான்குழு எந்த ஒரு புலனாய்வு அமைப்புடனும் சேர்ந்து செயற்படவில்லை. ஆட்களை கடத்தவும் இல்லை கொள்ளை இடவும் இல்லை. அவர்கள் ஆயுதம் ஏந்திய காலமும் இருந்தது. வன்னிப்புலிகள் வந்து பிள்ளையானின் ஆட்களை சுட்டுவிட்டுப்போக பிள்ளையான் குழுவினர் கையைக்கட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்றா சொல்கின்றீர்கள்.

வெருகல் படுகொலை கிட்டத்தட்ட 150 போராளிகள் கொடுரமாக வன்னிப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் அதிகமான பெண் போராளிகளும் அடங்குவர். முந்திய பதிவிலே கொடுரமான சித்திரவதை என்று நான் சொன்னது பாலியல் ரீதியான சித்திரவதைகளைத்தான். அது மட்டுமல்ல அந்தக்கால கட்டத்தில் வன்னியிலே இருந்த மட்டக்களப்பு போராளிகளை கொடுரமாகச் சித்திரவதைப் படுத்திய விடயம் உங்களுக்குத் தெரியுமா?

நான் ஒரு ஊடகம் சார்ந்தவன் வாகரைப் பிரதேசத்திலே புலிகள் அமைப்பிலே இருந்த 200 க்கு மேற்பட்ட போராளிகளை பேட்டி கண்டிருக்கின்றேன் அவர்களில் அதிகமானவர்கள் பெண் போராளிகள். கருணா பிரிந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் கடுமையான சித்தரவதைகள் செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஒரு பெண் போராளியின் கால்களைக்கூட முறித்திருந்தார்கள்.

பிள்ளையான் அரசோடு சேர்ந்திருப்பதாக குற்றம்சாட்டுகிறீர்கள். எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக அரசுடன் சேர்ந்திருக்கும் அதேவேளை அரசுக்கு எதிராகவும் செயற்பட தயங்குவதுமில்லை. அண்மையில் நாடு, நகர சட்டமூலம் வந்தபோது அதனை எதிர்த்தவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணசபை என்பதனை எவராலும் மறுக்க முடியாது. இவ்வாறு பல விடயங்கள் பின்னர் அவைகளை விரிவாக தருகின்றேன்.

படுகொலைகளை பட்டியலிடும் நீங்கள் கிழக்கிலே கொல்லப்பட்ட புத்திஜீவிகளையும், கிழக்குப் போராளிகளையும் ஏன் பட்டியலிடவில்லை. அரியநேந்திரனிடம் கேளுங்கள் அவர் யாரை கொலை செய்துவிட்டு பாராளுமன்றம் வந்தார் என்பதனை.

தொடரும்.....
Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு 03"

vigi said...

நான் எழுதிய பல விடயங்களுக்கு பதில் எழுத தவறிய நீங்கள் என்னை விதண்டவாத கருது முன்வைப்பதாக சொல்லுவது நகைப்புக்கு உரியது. ஊடகவியலன் என சொல்லும் நீங்கள் நான் சொன்னவற்றை புறிந்து கொள்ளாமை வேடிக்கையானது ..நான் கருத்து எழுதியவுடன் நான் யாழ்ப்பாணத்தவன் என நீங்கள் பிரதேசவாதம் பேசியது எப்படி ..அது உங்கள் நலம் சார்ந்த அரசியல் இல்லையா ..நீங்கள் பழகியவர்களை வைத்து கொண்டு முடிவெடுப்பது ஆரோகியமானந்தா ...இன்று எதனை கிழக்கு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் வடக்கில் உயர் பதவிகளில் இருக்கிறார்கள் ..திருமண பந்தத்தில் இருக்கிறார்கள் ..அதே போல வடக்கை சேர்ந்த எத்தனை பேர் கிழக்கில் இருக்கிறார்கள் ..இவ்வாறு ஆரோகியமான உறவு நிலவும் சமுகத்தில் பிரிவினையை தோற்றுவிக்கும் வகையில் பிரதேசவசம் பேசும் நீங்கள் ஏன் சின்ஹல பேரினவாதம் பேசும் அரசை பற்றி விமர்சனம் செய்ய வில்லை ..இன்று வெளிபடையாக பேரினவாதம் பேசும் கோட்டபாய ,JHU வுடன் உறவு வைத்திருக்கும் நீங்கள் என்ன அடிப்படையல் தமிழர்களுக்கு இடையில் பிரதேசவாதம் பேசுகிரிகள்..TNA தலைவர் உப தலைவர் இருவரும் சரி பிழைகளுக்கு அப்பால் கிழக்கை சேர்ந்தவர்கள் ..வடக்கு கிழக்கு மக்கள் இவர்களை ஆதரிக்கவிளைய ...இரு பிரதேச மாணவர்களும் ஒரே பல்கலையில் ஒன்றாக படிக்க வில்லையா...கருணா பிரிந்த போது என்ன சொன்னார்...கிழக்கு போராளிகள் கிழக்கில் மட்டும் தான் போர் செய்வார்கள் என ஒரு தடவை சொன்னார் ..இன்னுமொரு தடவை தலைவரை கடவுள் என்று சொன்னார் ...தன் களவுகளை கண்டுபிடிதவர்களை நீங்க சொன்னார் ....சமஸ்டிக்கு புலிகள் எதிர்கிறார்கள் என சொன்னார் ...இப்படி தன்னை குழப்பி மக்களை குழப்ப பார்த்தார் ..இறுதியில் உண்மை வெளிவந்தது ...ஒரு ஊடகவியல்லன் என் சொல்லும் நீங்கள் கம்சன் எனும் போராளி என்ற விடயம் ,நடந்த கதை பற்றிய என் கருத்துகளுக்கு பதிலளிக்காமல் பொதுவில் அவர் சொன்னது உண்மை எனில் எது உண்மை ....ஒரு சம்பவம் கருணா பிரிந்தவுடன் ஒரு நிறுவனம் ஆரம்பித்த கதை மக்களுக்கு சேவை செய்யவா ..அதை என் தன் மனைவி பெயரில் தொடங்கினர் ....அந்த காசு எங்கிருந்து வந்தது ..இது ஒன்று போதும் அவர் பிரிந்த கதையை நிருபிப்பர்க்கு ....

vigi said...

நான் பிள்ளையானை புலிகளை பின் பற்ற சொல்லவில்லை ...ஆனால் புலிகள் பிழை என வந்த இவர்கள் செய்வது என்ன ....அதை தன் கேட்டேன் ..பிள்ளையான் சொத்து சேர்த்த விடயம் எல்லோருக்கும் தெரியும் ..உங்களுக்கு தெரியாது என நீங்கள் சொல்லுவது அப்பட்டமான பொய் ...புலிகள் இயக்கத்தில் இருந்த போது கொலை ஒன்றுக்காக இவர் தண்டிகபடவில்லையா...இன்று குடி குட்டி என இவரின் ஆட்கள் திரிய வில்லையா ..இவருடைய வங்கி கணக்கு ,பினாமி பெயரில் வெளி நாட்டுகளில் இருக்கும் சொத்துகள் (swiss,Denmark) இது எல்லாம் எப்படி வந்தது ...வெளிநாட்டு ஒன்றில் நகை கடை ஒன்றில் முதலீடு செய்த காசு எங்கிருந்து வந்தது ..ஏன் பொய் சொலுகிரிர்கள்...அவர் இன்று பயன்படுத்தும் வாகனங்கள் எல்லாம் பதவிகளுக்கு அப்பால் எப்படி வந்தது
ஒரு அடிப்படை இல்லாமல் கதைப்பது தான் இலங்கை போன்ற நாடுகளின் அரசியல் என்பதற்கு நீங்கள் ஒரு ஊதாரணம் ....TNA குடும்ப உறுப்பினர்கள் அரச வேலை பெறுவது அதற்க்கு இப்படி ஒரு விளக்கம் சொல்லுவது ஒரு மடைமைத்தனம் ...அரச வேலை பெற்றால் அது அவரின் சிபாரிசு என என்று நீங்கள் கற்பனை பண்ணுவது கீழ்த்தரமான அரசியல்
செல்வராசா தன் வீடுக்க தண்ணி கொண்டு வந்தாரா ..எந்த அமைச்சராவது இவர் அந்த பிரதேசத்துக்கு தண்ணி கொடுக்க வேணாம் என்று மறுத்திருக்கிறார் என சொன்னாரா...உங்கள் கருத்தின் அடிபடியில் இரண்டு பிரதேசமும் தண்ணி பிரச்சனை எதிர் கொள்கின்றன ...இரண்டுக்கும் தண்ணி தேவை ..என்ன அடிப்படையில் இப்படி கதைகிரிர்கள் ..எல்லைகளை பாதுகாக்க பிள்ளயான் தன் காசு கொடுத்தாரா...ஒரு ஊதரனம் சொல்லுங்கள் ..இன்று கிழக்கில் காணி அவகரிப்பு நடக்கவில்லய ..விகாரைகள் கட்டப்டவில்ல்ய ....அது பற்றி ஏன் இவர் பேச வில்லை என்று தன் கேட்டேன் ...அந்த சமூகங்கள் வாழும் இடங்களில் கோவில்கள் கட்டலாம் ..இன்று கிழக்கில் விகாரைகள் அமைக்கப்படும் இடங்களில் எததனை சின்ஹலவர்கள் வாழுகிறார்கள் ..குறிபட்ட மத பிரிவினரே இல்லதா இடத்தில ஏன் விகாரைகள் என்று தன் கேட்டேன் ..அப்படி செய்ய சின்ஹல சமுகம் அனுமதிக்குமா...இந்த கிழமை பொத்துவிலில் நடந்த சம்பவம் என்ன ....முஸ்லிம்கள் காணி பிடிகிறார்கள் என சொலுவது உண்மை ..ஆனால் அதை பிள்ளையான் கப்பாறினார் என சொல்லுவது பொய் ..அப்படியாயின் அரையம்பதியில் நடப்பது என்ன ..
புத்தூர் வங்கியில் கொள்ளையிட்டது யார் ..நீங்கள் பேப்பர் படிப்பது இல்லையா ..கொழும்பில் ,கிழக்கில் எதனை இடங்களில் இது நடந்தது ..கொல்லைக்ககாக கடத்திய சிறுமிகள் கொலை எல்லாம் பொய்யா...வெலிகந்தவில் கொல்லபட்ட வர்த்தகர்கள் என்னதிர்க்க கொல்லப்டடர்கள்....இன்று பிள்ளயையனுக்கு எதிராக நடக்கும் சாராய வழக்கு உங்களுக்கு தெரியாத ?????
ஒரு ஊடகவியலன் என சொல்லும் நீங்கள் எப்படி பேசுவது வெட்கமாக இருக்கிறது ...பேராசியரியர் ரவீந்திரநாத் எங்கே ..பேராசியரியர் தம்பயாஹ் எங்கே ..சிறுமி வர்ஷா எங்கே .....ஊடகவியாளர் நடேசன் எங்கே ....TRO ஊழியர்கள் எங்கே ....யார் பொய் பேசுவது ...LLRC க்கு வாக்குமுலம் கொடுத்த மக்கள் சொன்னது பொய்யா ?????????? ஆயிரக்கணக்கான கொலைகள் ...கொள்ளைகள் ..என்னை பத்திரகை படிக்க சொல்லும் நீங்கள் படிப்பது இல்லையா ????????? TNA குடும்பத்தை கடத்தியது யார் ..இது போலீஸ் பதிவில் இருகிரகுது ...ஜெயந்தமூர்த்தி வீடு மீது தாக்குதல் நடத்தியது யார் ..இதுவுன்ம போலீஸ் பதிவில் இருக்கிறது

vigi said...

அடிபடையில்ல்மல் பேசதிர்கள்...நான் சொன்னதை மறுக்க முடியாத நீங்கள் ஏன் தீலீபன் ,சிந்துயன் உட்படவர்கள் பற்றி பேச வில்லை ...அதுவும் பொய்யா
ராணுவ முகம்களில் இவர்கள் செயற்பட்விலைய...பொது மக்கள் பலர் நான் உட்பட எல்லோரும் நேரில் கண்டோம் ...புலிகளால் கற்பளிக்கப்ட்டர்கள் ,கொல்லபட்ட்ர்கள் என சொல்லும் நீங்கள் நான் சொன்ன பல விடயங்களுக்கு மறுப்பு சொல்லவில்லை ..இதுவரை மட்டகளப்பில் எவரும் புலிகள் கற்பளிதளர்கள் என்று சொல்லவில்லை ...ஒரு எண்ணிக்கை இல்லாமல் 150,2000 என உங்கள் வாய்க்கு வந்தது எல்லாம் சொல்லுவது ஏன் ...
ஒரு உடகவியலனாக ஏன் இவளவு பொய் ..நாடு, நகர சட்டமூலதின் பொது பிள்ளையன் அதை ஆதரிக்க முர்ற்பட்டர் ..என் பொய் சொளுகிரிர்கள் ..முதலில் மறுத்த அவர் பின்னர் பசிலின் வெருட்டலுக்கு பினர் அதை அதிரிக்க முற்பட்டார் ..முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட கட்சிகள் தன அதனை முழுமையாக நிராகரித்தன ..ஏன் பிள்ளையன் 18 திருத்தும் ஆதரிக்க வேண்டி வந்ததுக்கு காரணம் சொல்ல முடியுமா ..ஆசிரிய இடம்மாற்றம் ஏன் பதில் இல்லை ...ஆளுநர் இட்ம்மர்ரம் .....தேர்தல் ..இது தொடர்பிலான தீர்மானங்களுக்கு என்ன நட்டன்தது ...
UN REPORT,LLRC REPORT எல்லாம் நான் வெளியிட தேவை இல்லை ..நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள் ..அது எல்ல பத்திரிகைகளிலும் வந்தது ..எல்லாவற்றையும் நான் நேரில் மட்டகளப்பு மக்கள் பார்த்தவர்கள் ...
எல்லாவற்றுக்கும் மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்

சந்ரு said...

திரும்பத்திரும்ப அடிமட்ட முட்டாள்தனமாப் பேசவேண்டாம். வெறுமனே பொய்களை திரும்பத்திரும்ப சொல்ல நினைக்கவேண்டாம் நீங்கள் யார் என்பதும் எனக்குத் தெரியும் கல்லாற்றில் தண்ணீர்ப்பிரச்சினை இருக்கின்றது என்று சொல்லும்போதே புரிகிறது மட்டக்களப்பில் எங்கு தண்ணிர்ப்பிரச்சினை இருக்கின்றது என்று அறியாத நீயெல்லாம் ஒரு மட்டக்களப்பான் என்று.

வெறுமனே கொள்ளையடித்தான் கொலை செய்தான் என்று வெறுமனே குற்றம்சாட்ட நினைப்பதனை விடுத்து கிழக்கிலே என்ன நடக்கின்றது என்ற பரந்த உலகிற்கு வாருங்கள். பத்திரிகை படிப்பதனைப்பற்றி என்னிடம் கேட்கின்றீர்களா? வங்கிக் கொள்ளை உட்பட அனைத்து கொள்ளைகளுடனும் தொடர்பு பட்டவர்களை போலிஸ் பிடித்து அவர்களின் பெயர் விபரங்களை அவர்களின் முகவரிகளுடன் வெளியிட்டார்கள் இவர்களில் எவரும் பிள்ளையான் குழுவில் இல்லை. இந்த விடயம் பத்திரிகைகளில் வெளிவந்த விடயம் தெரியாமல் ஏன் பதற்றுகிறீர்கள்.

நாடு நகர சட்டமூலத்தை முதன்முதலில் எதிர்த்தவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்பதனை ஆறியாதவராக இருக்கும் உங்களிடம் பேசிப்பலன் இல்லை. மக்கள் பதில் சொல்வார்கள் காத்திருங்கள்.

Post a Comment