Tuesday, 3 July 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு 02

முந்திய என்னுடைய பதிவிற்கு ஒரு நண்பர் நீண்ட ஒரு கருத்துரையினை விட்டுச் சென்றார் அவருக்கு பதிலாகவே இந்த பகுதி இடம்பெறுகின்றது.

உங்கள் கருத்துக்கள் அடிமட்ட முட்டாள்தனமாக இருக்கின்றது. வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு பிள்ளையான் கொலை செய்தான் கடத்தினான் கப்பம் பெற்றான் என்றெல்லாம் சொல்வது உங்களைப்போன்ற யாழ்ப்பாண மேலாதிக்கவாதிகளின் கொள்ளை. கொலைகளை தடுத்து நிறுத்தி கிழக்கில் உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்திய பெருமை பிள்ளையானையே சாரும்.

வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு கொலை செய்தான் கொள்ளையடித்தான் என்று குற்றம்சாட்டாதீர்கள் ஆதாரங்களோடு உண்மைகளைச் சொல்லுங்கள்.

கிழக்கு மாகாண புத்திஜீவிகளைக் கொன்றொழழித்தது யார் என்பதனை மறந்துவிட்டீர்களா? இராஜன் சத்தியமூர்த்தி உட்பட எத்தனையோ புத்தியீவிகளை கொன்றொழித்தவர்கள் யார்? கிழக்கிலே புத்திஜீவிகள் கொன்றொழிக்கப்படுகின்றபோது இந்தக் கூட்டமைப்பினர் மெளனம் சாதித்தது ஏன்? சாவது கிழக்குத் தமிழன் என்பதனாலா?

புலிகளிலிருந்து கருணா பிரிந்து வந்தபோது. பல வெற்றிச் சமர்களைப் படைத்து உங்களையும் வடக்கையும் காப்பாற்றிய காவல் காத்த கிழக்குப் போராளிகளை கொன்றொழித்தவர்கள்யார்? கிழக்குப் பொராளிகள் பிரிந்து வந்தபோது வெருகலிலே சகோதரப் படுகொலைகளை மேற்கொண்டு 150க்கு மேற்பட்ட போராளிகளை கொன்றொழித்தவர்கள் யார்? இதிலே வெட்கித் தலை குனியவேண்டிய விடயம் உங்களோடு சேர்ந்து போராடிய பெண் போராளிகளை வெருகலில் கதறக்கதற சித்திரவதை செய்து கொன்று குவித்தீர்கள். உங்களுக்காக பல வெற்றிச் சமர்களை புரிந்தவர்களுக்கு நீங்கள் செய்த கைமாறு இதுதானா?

ஒன்று இரண்டல்ல பல நூற்றுக்கணக்கான புத்திஜீவிகளும் நூற்றுக்கணக்கான போராளிகளும் கிழக்கிலே கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அப்போது எங்கே போனார்கள் இந்தக் கூட்டமைப்பினர்?

இதுவரை கிழக்கு மக்களுக்காக இந்தக் கூட்டமைப்பினர் என்ன செய்திருக்கின்றனர்? தாம் சொத்துச் சேர்த்தனர், அரசாங்கத்திடம் சலுகைகளைப் பெற்று அனுபவித்து வருகின்றனர். கூட்டமைப்பு அரசியல்வாதிகள் சொத்துச் சேர்க்கவில்லையா? அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெறவில்லையா? அமைச்சர்களோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவுவது பிள்ளைகள் உறவினர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெறுவது இவை எல்லாம் கூட்டமைப்பினர் செய்யலாம்.

ஆனால் 30 வருடங்களாக யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கினை அபிவிருத்தி செய்ய பிள்ளையான் அரசுடன் பேரம்பேசினால் துரோகம் என்கின்றீர்கள் எங்கே இருக்கின்றது உங்கள் நீதி நியாயம்?

எங்கேயோ இருந்துகொண்டு பிள்ளையான் கொள்ளையடிக்கின்றான் சொத்துச் சேர்க்கின்றான் என்று சொல்வது உங்கள் முட்டாள்தனம். முதலில் கிழக்கின் தற்போதைய நிலைமைகளையும் உண்மைகளையும் யதார்த்தங்களையும் உணர்ந்துகொள்ளுங்கள்.

கிழக்கிலே தற்போது என்ன நடடக்கின்றது யார் மக்களுக்காக சேவை சேய்கின்றார் என்பதனை மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். இனிமேலும் கிழக்கு மக்களை எவராலும் ஏமாற்ற முடியாது. இன்று கிழக்கு மாகாணம் துரித கதியில் அபிவிருத்தி நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இவை யாரால் சாத்தியமானது என்பது கிழக்கு மக்களுக்கு தெரியும். கிழக்கு மக்களை இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள். கிழக்கை கிழக்காகவே இருக்க விடுங்கள்.


தொடரும்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 comments: on "கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு 02"

roshan said...

மிக அழகாக பொய் சொல்லுகிரிகள்...பதில் வந்தவுடனயே யாழ்ப்பாணம் என பிரதேசவசம் பேசுகிரிகள்..உண்மைகளை மறைக்க முனைகிர்ர்கள்..பதில் எழுதுபவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என நீங்கள் பிரதேசவாதம் பேசும் போதே உங்கள் நோக்கம் ,அறிவு,கபடத்தனம் தெரிகிறது ..நான் எழுதிய பல விடையங்களுக்கு நீங்கள் மறுப்பு சொல்லவில்லை ..ஏற்று கொண்டிர்கள் என நினைக்கிறன் ....முட்டாள்தனமாக இருபதாக நீங்கள் சொல்வதன் அர்த்தம் என்ன .நான் பிள்ளயையனின் கொள்கை பற்றி எழுதிய என்ன விடயத்திற்கும் நீங்கள் மறுப்பு சொல்லவில்லை ??? TNA யின் நோக்கம் பற்றி பேசும் நீங்கள் ஏன் இதற்க்கு மௌனம் ???? ..உண்மையில் நான் மத்திய மலை நாட்டை பூர்விகமாக கொண்ட கிழக்கு பிரதேசத்தை சேர்ந்தவன் ..சின்ஹல அரசால் உடைக்கபட்ட அவர்கலோடு நின்று போராடி சாவடைந்த கல்லறைகுக்கு இவர்கள் பதில் என்ன ...இன்று கிழக்கில் நடக்கும் காணி கொள்ளை ,விகாரை கட்டுதல் (இந்த கிழமை பொத்துவிலில் நடக்கிறது )..இவரின் மாகாணசபை ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை ...யாழ் கிழக்கு மக்கள் உறவுகள் தொடர்பில் நான் சொன்ன கேள்விக்களுக்கு ஏன் பதில் எழுத முடிய வில்லை ....தமிழர்களுக்கு இடையில் அடிப்படை இல்லாமல் பிரிவினையை தூண்டும் நீங்கள் தமிழர்களுக்கு அநியாயம் செய்யும் சின்ஹல அரசை ஆதரிப்பது ஏன் ....கிழக்கு தமிழர்களை காப்பாற்ற புறப்பட்ட நீங்கள் தன் இன்று சின்ஹல பெண்களை இரண்டதரமாக வைத்து இருகிரிகள் ....எது எந்த ஜனநாயகம் .....குடி குட்டி இல்லாமல் நீங்கள் செய்யும் ஒரு நிகழ்வை சொல்லுங்கள் ....

roshan said...

யாழ் வாசிகளிடமிருந்து கிழக்கை மீட்ட்டதாக சொல்வதன் அர்த்தம் என்ன ..என்ன அடிபடையில் பிள்ளையான் அதை நடத்தினர் ..பொய் சொல்லாதிர்கள் ...கருணா இயக்கத்தில் களவெடுத்து ,பெண் பிரச்சனைகளில் சிக்கிய பொது தன்னை காப்பர்ரிகொள்ள செய்த நாடகமே இந்த விடயம் ..உங்களுக்கு கம்சன் எனும் போராளியை தெரியுமா ..இல்லாவிட்டால் பிள்ளையானிடம் கேளுங்கள் ..சொல்லுவர் .....அந்த சந்தர்பத்தில் நான் கொக்கடிச்ச்கோளையில் இருந்தேன் ...இலங்கை புலனாய்வு அமைப்போடு சேர்ந்து 41 நாட்கள் கருணா நடத்திய விளையாட்டு .என்ன கிழக்கு தமிழர்களை நீங்கள் அவளவு முட்டாள்கள் என நினைத்தீர்களா ..அந்த நேரத்தில் பிள்ளையானும் திருமால் என்பவரும் சேர்ந்து என்ன செய்தார்கள் என உங்களுக்கு தெரியுமா ...உணமையான ஜனநாயகத்தை ஏற்படுத்தியதாக வார்த்தைகளில் விளையடுகிரிகள் .எப்படி ஏற்படுத்தினர் என சொல்ல முடியுமா ....ஒரு சம்பவம் ..கருணா பிரிந்த போது தலைவருக்கு கடிதம் வரைந்தார் ..பத்திரிகை அறிக்கை ..இவரில் ஒன்றுக்குமே சம்மந்தம் இல்லை ..இரண்டும் வேறுபட்ட தன்மைகளை கொண்டது ...இதிலிருந்து இவர்களின் கவபடதனம் தெரியவில்லையா ...
யார் கொள்ளை அடித்தது .... ...பிள்ளையான் தான் வங்கி உட்பட பல இடங்களில் கொள்ளை கொலை நடத்தியது ..உங்களுக்கு தெரியுமா ...LLRC,UN REPORT,UNESCO, எல்லா சம்பவங்களிலும் இது தெளிவாக இருக்கிறது ..சிறுமிகள் கடத்தி கொலை இலங்கை நீதிமன்ற பதிவுகளில் தெளிவாக இருக்கிறது ..இலங்கை அரசிடம் கொடுக்கபட்ட வக்குமுலங்களில் பொதுமக்கள் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் ...எந்த ராணுவ முகாம்களில் இவர்கள் செயற்பட்டார்கள் ..எந்த கொலை ,கொள்ளைகளில் சம்பந்த பட்டர்கள் என்று போர் நிறுத்த கண்காணிப்பு குழு அறிக்கைகளிலும் இருக்கிறது ...பாராளமன்ற உறுப்பினர் கொலைகள் ,VC கொலை ,பேராசிரியர்கள் கொலை எல்லமே UN REPORT இல் சொல்லபடிருகிறது....TRO உறுபினர்களை கொலை செய்தது ,ஊடகவியள்ளர்களை கொலை செய்தது எல்லாம் தெளிவாக மக்கள் வாக்குமூலமாக கொடுத்து இருக்கிறார்கள்

roshan said...

இலங்கை பூராகவும் கோத்தபாயவுடன் சேர்ந்து நடத்திய கொள்ளைகள் எந்த கணக்கில் இருக்கிறது என்பதும் இந்த அறிக்கைகளில் இருக்கிறது ..படித்து பாருங்கள் ....
ஏனைய விடயங்களை விடுங்கள் ...உங்கள் கருதுப்டியே இவர்கள் கிழக்கு மக்களுக்கா தான் வேலை செய்கிறார்கள் என்றல் ஏன் இலங்கை இந்திய புலனாய்வு அமைப்புகளோடு இணைந்து வேலை செய்கிறார்கள் ..மாதந்தோறும் அதற்க்கு பணம் பெறுகிறார்கள் ..உங்களால் நியாய படுத்த முடியுமா ...ரகு கொலை ,அண்மையில் கருணா உதவியாளர்க இருந்த புலனாய்வு அங்கத்தவர் கொலை ...இவர்க்கு என்ன பதில் .தீலீபன்,சிந்துயன் கொலைகளை மறந்து விட வேணாம் ...
எந்த இடத்திலும் நான் TNA பற்றி பேசவில்லை ..உங்கள் அரசியலுக்கு நீங்கள் பேசுகிறிர்கள் ...வெருகல் கொலைகள் என அடுத்த பொய் ....அங்கு என்ன நடந்தது என உன்களுக்கு தெரியுமா ...புலிகள் 41 நாட்கள் சந்தர்பம் கொடுத்த பின்னர் வெருகல் கரையில் கருணாவிடம் வேலை செய்த,ஆனால் கருணாவை எதிர்த்த தளபதிகள் தலைவரின் ஆலோசனை படி நிலை எடுத்து தப்ப முடியாமல் கருணாவிடம் சிக்கிய போராளிகளை சரணடைய கோரினார்கள் ..இந்த நிலையில் ஆயிர்கனன்கான போராளிகள் சர்ணடைந்தர்கள்...ஆனால் கருணா தான் சுய நன்மைக்கு அவர்கள் சிலரை தாக்குதல் நடத்த தன் அண்ணா தலைமையில் நெருக்கடி கொடுத்ததால் ,புலிகள் பதில் தாக்குதல் நடத்த வேண்டிது ஆகிற்று ...இதில் மிக குறைந்த போராளிகளே இறந்தார்கள் ...அமபறையில் எந்த இழப்பும் ஏற்படவில்லை ..இதை பேச வெட்கம் இல்லையா ..சுய நன்மைக்காக தன் போராளிகளை பறி கொடுக்கும் நீங்கள் பேச என்ன தகுதி ....புலிகள் காலத்திலேயே கொலை ஒன்றுக்காக தண்டிக்கபட்ட பிள்ளையானை பற்றி பேச வெட்ட்கமில்லைய???????

roshan said...

பசில் ராஜபக்சே 2000 பேர் இறந்ததாக சொன்னார்..நீங்கள் 150 என சொல்லுகிறிர்கள் ..பிள்ளையான் வேற எண்ணிக்கை சொன்னதாக நினைவு ..எது உண்மை ..பெண் போராளிகளை கற்பழித்ததாக பிள்ளையான் சொன்னார்....நீங்கள் சித்திரவதை என்கிறிர்கள் ..எங்கே உண்மை ...பொய் பேச அளவு இல்லையா ...
அது சரி உங்களுக்கு கௌசல்யன் ,சேனாதி உட்பட பிள்ளையானால்,கருணா வால் கொல்லபட்ட (இராணுவ அமைப்போடு சேர்ந்து) கொல்லபட்ட இவர்களை நினைவு இருகிறதா ...அந்த நேரத்தில் இவர்கள் இராணுவத்தோடு சேர்ந்து இயங்குவதற்கு இன்னுமொரு சம்பவம் ...வாகரையில் ராணுவ ,புலிகள் மோதலில் புலிகளால் மீட்கப்பட்ட உடல்களில் கருணா குழு உருபினர்களும் இருந்தார்கள் என்பதை போர் நிறுத்த குழு உறுதி படுத்தியது நினைவு இருகிறதா ...
ராஜன் சத்தியமூர்த்தியை புத்தியீவியக நிங்கள் சொல்வது உங்கள் சந்தர்பவாதம் .ராஜன் சத்தியமூர்த்தி UNP,TNA என பல கட்சிகளில் தன் வியாபார சந்தற்பவததிட்கு ஆக செயபட்டவர் ..பிள்ளையன் யாழ் வர்த்தகர்களை துரத்திய போது அதற்க்கு தூண்டியவர்
ஆனால் அவரின் கொலை தொடர்பில் கருணாவிடம் கேளுங்கள் ..கருணாவிடம் நின்ற போராளிகள் தன் அவரை கொலை செய்ததாக சொளுகிரர்கள் ..அதன் பிறகு தன் கருணா தப்பியோட யோசித்தார் ..உங்களுக்கு செந்தோலனை தெர்யுமா..கருணாவால் சுடபட்ட அவரின் தனிப்பட்ட பாதுகாவலன் ...
தமிழ் புத்தியீவிகள் மட்டும் அல்ல ...TNA MP ஜோசப் ஐ கொலை செய்து ஜெயானந்த மூர்த்தி வீடில் தாக்குதல் நடத்தியது யார் ....TNA உறுபினர்களின் உறவினர்களை கடத்தி அவர்கள் பாராளுமன்றத்தில் வாக்களிக்காமல் செய்தது யார் .....இது இலங்கை போலீஸ் உறுதிபடுத்தி இருக்கிறது ..இதுவா பிள்ளையான் செய்த ஜனநாயகம் ?????..இந்த நேரத்தில் கோதாபய பிள்ளையான் ,டௌக்லஸ்,கருணா எல்லோரும் சேர்ந்து தமிழர்களை அழிக்க திரிந்தார்கள் ..காசுக்காக கடத்தபட்ட சிறுவர்கள் ,வர்த்தகர்கள் எத்தனை ????திருமலை வர்ஷா நினைவு இருகிறதா ....

roshan said...

இலங்கை அரசியல் வாதிகள் சொத்து சேர்ப்பது புதிது அல்ல ..ஆனால் போராடிய கொளகைகளை விட்டு மக்களை கொலை செய்து கொள்ளை அடித்து சுய நன்மைக்காக இன்று நகைகள் சகிதம் பெரும் பணக்காரர் ஆனது எப்படி என தன் கேட்கிறேன் ...மட்டகளப்பில் சாராய கடைகளில் வசூலிக்கும் விடையத்தில் நீதிமன்றத்தில் பிள்ளையானுக்கு எதிராக வழக்கு நடக்கிறது ....புலிகள் போராளிகள் நகை அணிய மாட்டார்கள் ..இன்று பிள்ளையான் ??????????????
TNA அரசோடு சேர்ந்து செயற்படாமல் இருப்பது தன் அரசுக்கு இர்ருக்கும் ஓர ஒரு பிரச்சனை ...பாராளமன்ற உறுப்பினர் சலுகையை விட அரசு எந்த சலுகையும் இவர்களுக்கு வழங்குவதில்லை ...அப்படி இந்த அரசிடம் கேட்க்கவும் முடியாது ..உங்களால் இதை நிருபிக்க முடியுமா ..ஏன் பொய் சொலுகிரிர்கள்..என்னிடம் ஆதாரம் கேட்கும் நீங்கள் கொடுத்த ஆதாரம் என்ன ....நீங்கள் எழுதியதில் ஒரு உண்மை இருகிறதா ..உங்கள் மனதை தொட்டு கதையுங்கள்
கிழக்கு அபிவிருத்திக்கு பிள்ளையான் பேரம் பேசினான் என்கிறிர்கள் ....என்ன பொய்.....தன்னால் ஒரு சிறு ஊழியரை நியமிக்க முடியவில்லை என்று பிள்ளையான் தான் சொன்னார் ..ஆசிரிய இடம் மாற்றத்தில் என்ன நடந்தது .....ஆளுனரை விலக்க சொன்ன தீர்மனதிர்க்கு என்ன நடந்தது ......தேர்தல் தொடர்பான தீர்மனதிர்க்கு என்ன நடந்தது ....கிரீஸ் மனிதன் பிரச்னை ...சண்டைக்கு பின்னர் பிள்ளையான் குழு உட்பட இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்ட 200 மேற்பட்ட பொது மக்களுக்கு என்ன நட்டன்தது ?????? கிழக்கு பல்கலை கழகத்தில் என்ன நடக்கிறது .....18 வது திருத்தத்தை ஏன் மாகாணசபையை ஏற்றுகொண்ட பிள்ளையன் ஆதரிக்க வேண்டி வந்தது ...
எது அபிவிருத்தி .....அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவன நிகழ்வுகளில் கலந்து கொள்வதா ?????...இன்று எங்கள் மக்கள் யுத்த காலத்தை விட நெருக்கடிகளை எதிர் கொளுகிரர்கள் ....தொழில் இல்லை ..காணிகளில் விவசாயம் செய்ய முடியாது .....சாமி சிலை திருட்டு ...மணல் கொள்ளை ....பசிகுடாவில் பசிலுக்கு காணி கொடுத்தது யார் ....சின்ஹல ஆக்கிரமிப்பு .....உங்களுக்கு அபிவிருத்தி என்றால் என்னவென்று தெரியுமா ...மட்டகளப்பில் பின் தங்கிய ஆயிர கணக்கன கிராமங்கள் இன்னும் அப்படித்தானே இருக்கிறது ....இன்னும் மக்கள் தங்கி வாழ்பவர் களாக தான் இருகிறாக்கள்
தேர்தல் மிக பெரிய செய்தியை சொல்லும் ..அப்போதும் இதை வசித்து பாருங்கள் ..உண்மை புரியும்

சந்ரு said...

Roshan உங்களுக்குரிய பதில்கள் http://www.shanthru.com/2012/07/03.html இங்கே இருக்கின்றது

Post a Comment