Friday, 29 June 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள்கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டிருக்கின்றது. வேட்புமணுத்தாக்கல் செய்வதற்கான திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் எட்டாம் திகதி தேர்தல் இடம்பெறலாம் என பரவலாக பேசப்படுகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

தாங்கள் ஆடசியை அமைப்போம், தங்களுக்குத்தான் முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்றெல்லாம் ஒவ்வொரு கட்சியும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். யார் முதலமைச்சர் என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள். யார் கிழக்கு மக்களுக்காக சேவை செய்யக்கூடியவர்கள், சந்தர்ப்பவாத அரசியலை நடாத்துபவர்கள் யார் என்பதனை கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல்வாதிகளோ பொய்ப்பிரச்சாரங்கள் மூலமாக மீண்டும் கிழக்கு மக்களை ஏமாற்றலாம் என்று நினைப்பார்களானால் அது அவர்களின் முட்டாள்தனமாகும். இன்று கிழக்கு மக்கள் உண்மைகளையும் , யதார்த்தங்களையும் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு கிழக்கிலே ஜனநாயகக் கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலையில். நடைபெற இருக்கின்ற மாகாணசபைத் தேர்தலிலே போட்டியிடுவதற்கு பலரும் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் நடைபெற இருக்கின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே களமிறங்க இருக்கின்றனர். இவர்கள் இத் தேர்தலில் களமிறங்குவதன் மூலமாக சாதிக்கப் போவது என்ன? இவர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் கொள்கைகள் என்ன என்பதனையே நான் அடிக்கடி கேட்டுக்கொண்டு வருகின்றேன். இதுவரை யாரும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை. அடிக்கடி கொள்கைகள் மாற்றப்படுவதாகவே நான் உணர்கின்றேன். தமிழீழமே இறுதி மூச்சு, புலிகளே எமது ஏக பிரதிநிதிகள், வடக்கு, கிழக்கு இணைந்ததே எமது தாயகம் என்ற கொள்கைகளும் கோசங்களும் எங்கே போனது?

இன்று கிழக்கு மாகாணத்தில் தனித்த கிழக்கு மாகாணசபையில் போட்டியிட தீர்மானித்திருக்கும் கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு பிரிந்திருப்பதனை விரும்புகின்றனரா? தமது கொள்கைகளை கைவிட்டனரா? அப்படியானால் நீங்கள் அரசியல் சுயலாபம் தேடுவதற்காகவா வீரவசனங்களைப் பேசி எமது மக்களை சூடேற்றி போராட்டத்திற்கு அனுப்பி பலிக்கடாவாக்கினீர்கள். இன்று நீங்கள் எடுத்திருக்கும் முடிவுகளை அன்று எடுத்திருந்தால் இத்தனை இலட்சக்கணக்கான தமிழ் உறவுகளின் உயிர்களை பலி கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே.

தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று கூறும் கூட்டமைப்பினர் இதுவரை தமிழர்களுக்காக என்ன செய்தனர்? தாயக மீட்பு போராட்டம் எனும் போர்வையில் நீங்கள் அரங்கேற்றிய நாடகங்களில் எந்த ஒரு கூட்டமைப்பு அரசியல்வாதியின் குடும்பம் பங்கெடுத்திருக்கின்றதா? எந்த கூட்டமைப்பு அரசியல்வாதியாவது தலை நிமிர்ந்து சொல்லட்டும் பார்க்கலாம்.

அது போகட்டும் முள்ளிவாய்க்கால் படுகொலை என்று இன்று கொக்கரிக்கின்ற கூட்டமைப்பின் ஒரு பாராளுமன்ற ஒறுப்பினராவது முள்ளிவாய்க்காலில் உக்கிர மோதல் நடைபெற்றபோது வாய் திறந்தார்களா? யாராவது ஒருவர் குரல் கொடுத்தாரா? சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம் அறிக்கைவிடும் அறிக்கை மன்னர்கள் அன்று மெளனம் சாதித்தது ஏன்?

தொடரும்.....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள்"

makkal palam said...

வாருங்கள் சகோதரம் நமது மக்களின் எதிர்கால அரசியல் பலம் கருதி இன்றுமுதல் நானும் எழுதுகிறேன்.
உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்

roshan said...

இன்றைய சூழலில் TNA போட்டியிட்டுவது அவசியமானது ...TNA என்பதற்கு அப்பால் தமிழர்கள் எல்லோரும் வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்துகின்றனர் .சின்ஹல அரசுக்கு சொந்த நலன் கருதி வால் பிடிக்கும் ஒரு சில துணை ஆயுத குழுக்கள் தான் வாடா கிழக்கு இணைப்பை விரும்பவில்லை ..TNA போட்டியிடுவதால் அது தன் கொள்கைக்கு விரோதமாக நடக்கிறது என சொல்வது அரசியல் அடிமட்ட தனம் ..அப்படி விரோதமாக நடக்க தமிழர்கள் விடவும் மாட்டார்கள் ..அதை TNA உறுதி செய்திருக்கிறது..இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் இரு மாகாண மக்களும் இணைந்து வாழ விரும்புகிறார்கள் என நிருப்பிபதொடு தவறானவர்களின் கைகளுக்கு நிர்வாகம் செல்வதை தடுக்க முடியும்
நீங்கள் சின்ஹல அரசுக்கு சார்பாக அதன் நலனுக்காக பிரதேசவாதம் பேசுகிறிர்கள் ..ஆனால் யாழ்ப்பாண மற்றும் மட்டகளப்பு தமிழர்களுக்கு இடையில் எந்த வேறுபாடும் இல்லை ..உங்களால் இதை நிருபிக்க முடியுமா ..இன்று TNA யின் தலைவர் உப தலைவர் எல்லோருமே கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் தான்..யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிறைய பேராசிரியர்கள் ,வங்கியாளர்கள் ,ஆசிரியர்கள் ,வர்த்தகர்கள் கிழக்கிலே இருக்கிறார்கள் .அதே போல கிழக்கை சேர்ந்த நிறைய பேர் வடக்கில் திருமண பந்தத்தில் இருக்கிறார்கள் ..இரு மாகாண மக்களுகிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது ...
கொள்கை பற்றி நீங்கள் பேச வெட்கமில்லையா ....அரசோடு சேர்ந்து நிறைய பொதுமக்களை கொன்றவர் பிள்ளையான் ....சிறுமிகளை கடத்தி கொலை செய்தது யார் ..துணை வேந்தர் உட்பட பல்கலைகழக பேராசிரியர்களை கொன்றது யார் ...ஊடகவியலர்களை கொன்றது யார் ...TRO ஊழியர்களை கற்பழித்து கொன்றது யார் ...சின்ஹல .இந்திய புலனாய்வு குழுக்களின் தயவில் அரசியல் செய்வதை மறுக்க முடியுமா
இவர்கள் செய்த தப்பு என்ன ....பிள்ளையானின் கொள்கை என்ன ..அரசு என்ன பேசுவதோ அதுவா இவரின் கொள்கை ..இதை மறுக்க முடியுமா .. ஒரு சம்பவம் ஒரு கிழமைக்கு முதல் மாகாண சபை கலைக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றிய இவர் ..மகிந்தர் சொன்னவுடன் கலைத்த மர்மம் என்ன ....ஆளுனரை மாற்ற தீர்மானம் செய்த இவரால் செய்ய முடிந்தது என்ன ...நகைகள் அணிந்து கொண்டு அரசியல் வாதி வேடம் பூண்டு நிற்கும் இவர் புலிகளில் இருந்த போதே கொலை ஒன்றுக்காக புலிகளிடமிருந்து விலக்கபட்டவர்..இவர்களோடு இருந்து போராடி காலமாகியவர்களின் கல்லறைகள் யார் உடைத்து ...அப்போ எங்கே போனது இவரின் கொள்கை ..அந்த மாவீரர்கள் என்ன தப்பு செய்தார்கள் .அதை விடுவோம் ..சுய நலனுக்காக கருணாவும் பிள்ளையானும் சண்டை போட்டு கொன்ற தீலீபன் ,சிந்துயன் ,அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ...இதற்க்கு யார் பொறுப்பு ....இந்த 4 ஆண்டுகளில் இவர் சேர்த்த சொத்து என்ன ..புலிகளில் இருந்த பொது போராளியாக இருந்த இவர் இன்று மட்டகளப்பில் பெரும் பணக்காரர் ஆனது எப்படி ...மட்டகளப்பு எங்கும் சின்ஹல குடியேற்றம் நடக்கிறபோது இவர் என்ன செய்ய முடிந்தது ...இன்று காணமல் மேச்சல் வெளிகள் எல்லாம் யார் வசம் இருக்கிறது ..புத்த கோவில்கள் கட்டபடுகிற போது இவரின் கொள்கைகள் எங்கே போனது ..நேற்றும் பொத்துவிலில் காணிகள் பறிக்கப்பட்டு இருகின்றன ...இந்த 4 ஆண்டுகளில் எவர்கள் தங்களுக்கு சொத்து சேர்த்ததை தவீர என்ன செய்தார்கள் என சொல்ல முடியுமா ...
இன்று குடி குட்டி என திரியும் நீங்கள் கொள்கை பற்றி பேச வெட்கமிலைய..புலிகளிடமிருந்து பிரியும் போது புலிகள் சமஸ்டி தீர்வுக்கு சம்மதிக்க வில்லை என சொன்ன நீங்கள் இன்று ???????????? ..இன்று ஒற்றை ஆட்ச்சிக்கு இணங்கியது ஏன்..எங்கே கொள்கை ...வடக்கு கிழக்கு மக்களிடம் பிரதேச வாதம் பேசும் இவர்கள் மௌனமாக சின்ஹல தேச கொடுமைகளை அங்கீகரிப்பது ஏன் ....இன்று கிழக்கு பல்கலை கலக நிலைமை என்ன ...கல்வித்துறை என்ன நிலைமையில் இர்ருகிறது ...விவசாயிகளின் நிலைமை எப்படி ...
கருணா அடுத்த சின்ஹல பெண்ணை திருமனனம் செய்தது எப்படி .ADB WORLD BANK திட்டங்களில் கலந்து கொள்வதா அபிவிருத்தி ..கீரிஸ் மனிதன் ஏவப்பட்ட போது எங்கே போனார்கள் ...வங்கி கொலை இட்டது யார் ...முள்ளிவைக்கள் பற்றி பேசும் நீங்கள் ராணுவத்திற்கு பெண்களை கட்டாயபடுத்தி விநோயோகம் செய்தது யார் ....எங்கும் மோசடி ....
பொய் பேச ஒரு அளவு இல்லையா ...TNA நிறைய தவறு செய்கிறது ..ஆனால் இன்று வேறு தெரிவு இல்லை ..கொள்கை ரீதியில் அவர்கள் ஏற்றுகொள்ளத்தக்க வர்கள் ..அதை கிழக்கு மக்கள் நீருப்பிப்பர்கள் ...

சந்ரு said...

roshan... உங்களுக்குரிய பதில் http://www.shanthru.com/2012/07/02.html இங்கே இருக்கு

makkal palam said...

roshan சொன்னது…//

வாங்கையா வாங்க இதே கருத்தைத்தான் எனக்கும் பின்னூட்டமாக இட்டுருந்தீர்கள். அதற்க்கான சிறந்த பதிலையும் நண்பர் சந்துரு உங்களுக்கு தந்து இருக்கின்றார், படித்து பக்குவம் அடையவும்.

நீங்கள் எந்த குழுவில் ஒருவன் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் கூளிரூட்டபட்ட காட்சியறையில் உள்ளர்வர்வளுக்கு ஒரு ஏழை சிந்தும் வியர்வையின் மதிப்பு தெரியாது. இதே நிலைமைதான் புலம்பெயர் போர் விரும்ப்கிளின் இன்றைய நிலைமை.

எங்கள் முதல்வன் ஏழைகளின் நண்பன் அதனால்த்தான் என்னவோ அவரது சேவையால் நானும் ஈர்க்கபட்டேன் மாறாக இதுவரைக்கும் அவரையோ அவரது கட்சி உறுப்பினரையோ நான் நேராகக் கண்டதுமில்லை, தொடர்புகொண்டதும் இல்லை.

Post a Comment