Monday 16 July 2012

லூசுத்தனமும் முட்டாள்தனமும்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெல்லப்போவது யார்? ஒவ்வொரு கட்சியும் தாங்கள்தான் வெற்றி பெறுவோம், தமக்குத்தான் முதலமைச்சர் பதவி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். தாங்கள்தான் வெற்றியை தீர்மானிப்பவர்கள் போன்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர். கிழக்கு மக்கள்தான் யார் முதலமைச்சர் என்பதனை தீர்மானிக்க இருக்கின்றனர்.

மக்கள் மனங்களில் நிறையவே மாற்றங்கள் வந்திருக்கின்றன. தமிழீழம், தமிழன் என்ற உணர்வு அதிகம் கொண்டவர்கள் கிழக்கு மக்கள். அதன் பிரதிபலிப்பே கிழக்குப் போராளிகள் பல வெற்றிச் சமர்களை புரிந்து வீர வரலாறுகளைப் படைத்தனர். அன்று அவர்கள் அறிந்திருக்கவில்லை தமிழீழமென்பது அடைய முடியாத இலக்கு என்பதனை. இலங்கயைில் தமிழீழம் சாத்தியமில்லை என்பதனை.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு கிழக்கு மாகாணம் பாரிய அபிவிருத்தியைக் கண்டு மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வரும் இந்த நிலையை நினைத்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். கடந்த காலங்களில் தமிழீழம் எனும் அடைய முடியாத மாயையைக் காட்டி நாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். என்பதனை கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். 


 தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் கிழக்கு மக்களை ஏமாற்றி வருவதனையும் மக்கள் நன்கு உணர்ந்துவிட்டனர். அதன் பிரதிபலிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினை கிழக்கு மக்கள் புறக்கணித்து வருகின்றனர். இதனை உணர்ந்த கூட்டமைப்பினர்  மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அப்பட்டமான பல பொய்களை மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர்.

உண்மையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பினர் போட்டியிடுவதற்குக் காரணம் கிழக்கின்மீதோ, கிழக்கு மக்கள்மீதோ  இருக்கின்ற அக்கறை இல்லை. யுத்த்த்தின் கோரப்பிடியில் சிக்குண்டு சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் துரித வளர்ச்சியை கண்டு சகித்துக்கொள்ள முடியாமல் இத் துரித அபிவிருத்தியை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கமாகும்.

அண்மையில் சம்பந்தன் அவர்கள் சொல்லியிருந்தார் அரசாங்கத்தோடு சேர்ந்திருக்கின்ற எவரையும் வெல்ல விடமாட்டோம் என்று. இதிலிருந்து தெளிவாகின்றது கிழக்கின் துரித அபிவிருத்தியை இல்லாமல் செய்ய வேண்டும் எனும் கூட்டமைப்பின் நோக்கம். அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இருந்து கிழக்கு முதலமைச்சர் பதவியைப் பெற்று அரசாங்கத்துடன் பல பேரம்பேசல்களுடன் யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பாரிய அபிவிருத்தியை செய்து மக்கள் மத்தியில் துரிதமாக இடம் பிடித்தவர் பிள்ளையான் அவர்கள்.

அரசாங்கத்தோடு அங்கம் வகித்தால் மட்டுமே கொடிய யுத்த்த்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்பது  எல்லோருக்கும் தெரியும். வெறுமனே வீர வசனங்களைப்பேசி மக்களை உசுப்பேற்றிவிட்டு அரசியல் இலாபம் தேடிக்கொண்டு அரசால் வழங்கப்படும் சுகபொகங்களை பெற்றுக்கொண்டு கூட்டமைப்பினரைப்பொல் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் எமது பிரதேசத்தை யார் கட்டியெழுப்புவது என்பதை சிந்திக்காதவர்களாக கூட்டமைப்பினர் இருக்கின்றனர்.

கிழக்கு மக்களுக்காக குரல் கொடுக்க தேர்தலிலே களமிறங்கும் கூட்டமைப்பினருக்குள்ளேயே ஒற்றுமை இல்லை அதற்குள் கிழக்கு மக்களுக்கு விடிவினைப் பெற்றுக் கொடுக்கப்போகின்றனராம். வேட்பாளர்களை தெரிவு செய்வதிலே அவர்களுக்குள் குழப்பம். இவ்வளவு காலமும் எதிர்க்கட்சி அரசியல் நடாத்தி மக்களை அடமானம் வைத்து சுகபொக வாழ்க்கை வாழ்ந்த்து போதாது என்று கிழக்கு மாகாணசபை தேர்தலிலும் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். மக்கள் இவர்களின் மறு முகங்களை நன்கு உணர்ந்துவிட்டனர் கிழக்கு மக்கள் எப்போதோ அவர்களை தூக்கி எறிந்துவிட்டனர். மக்களின் ஆதரவு தமக்கு இல்லை என்பதனை  நன்கு உணர்ந்துவிட்டனர். கூட்டமைப்பினருக்கு பிரச்சாரம் செய்வதற்குக்கூட கிழக்கு மக்கள் தயாராக இல்லை. வடக்கிலிருந்து வருகின்ற ஒரு குழுவினர் முகாமிட்டு பிரச்சாரம் செய்யப்போகின்றனராம். நாய்க்கு ஏன் போர்த்தேங்காய் கிழக்கை கிழக்காக இருக்க விடுங்கள் நீங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள் எங்கள் மக்கள் யாரை முதலமைச்சராக்குவது என்பதனைத் தீர்மானிக்கட்டும்.

தொடரும்....


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "லூசுத்தனமும் முட்டாள்தனமும்"

Post a Comment