இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்துக்கு முன்னால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட களுதாவளைக் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. வெள்ளத்தின் காரணமாக தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேறிய களுதாவளைக் கிராம மக்கள் பலர் இரண்டு நாட்களுக்கு முன்னர் பாடசாலை ஒன்றில் தங்குவதற்கு சென்றபோது பிரதேச செயலாளரினால் உறவினர் வீடுகளுக்கு செல்லும்படி பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலதிக தகவல்கள் இங்கு சென்று பார்க்கவும்.
என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த மக்கள் இன்று பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த மக்களுக்கு மூன்று நாட்களின் பின்பு இன்று பாடசாலையில் தங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கின்றது.
மூன்று நாட்களாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்படாமைக்கான காரணம் தான் பல தடவை அரச அதிபருக்கு அறிவித்தும் அரச அதிபர் முகாம் அமைப்பதற்கு தனக்கு அரச அதிபர் அனுமதி தரவில்லை என்றும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

8 comments: on "தமிழன் படும்பாடு"
யாரை நோவது.
கொடுமையாயிருக்கு சந்ரு !
தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html
AAHA .. HOW Y GET THESE FOTS,,? GOOD
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை பற்றி எழுதும்போதும் "தமிழன்" என்ற சொல் உங்களுக்கு அவசியமாகியிருக்கிறது. என்னே மனப்பான்மை...
// ஹேமா கூறியது...
யாரை நோவது.
கொடுமையாயிருக்கு சந்ரு !//
என்ன செய்வது இப்படியும் அதிகாரிகள் இருக்கின்றனர். மக்கள் தொடர்ந்து போராடுகின்றனர்.
வருகைக்கு நன்றிகள்.
//அன்புடன் மலிக்கா கூறியது...
தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html//
வந்து பார்த்துவிட்டேன் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.
//சி.பி.செந்தில்குமார் கூறியது...
AAHA .. HOW Y GET THESE FOTS,,? GOOD//
வருகைக்கு நன்றிகள்.
//EKSAAR கூறியது...
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை பற்றி எழுதும்போதும் "தமிழன்" என்ற சொல் உங்களுக்கு அவசியமாகியிருக்கிறது. என்னே மனப்பான்மை.//
இந்தப் பதிவிலே என்ன தவறிருக்கின்றது என்று தெரியவில்லை என்னைப் பொறுத்தவரை நான் இங்கே தமிழன் என்று குறிப்பிட்டிருப்பதில் என்ன தவறிருக்கின்றது.
மழை வெள்ளம் தொடர்பாக தொடர்ந்து நான் எழுதி வருகின்றேன். இப்பதிவிலே ஒரு குறிப்பிட்ட இடத்திலே ஒரு தமிழ் கிராமத்திலே இடம் பெற்ற இடம் பெற்ற பிரச்சினை தொடர்பாகவே எழுதி இருக்கின்றேன்.
இந்தப் பதிவிலே ஒரு தமிழ் கிராமம் பாதிக்கப்பட்டதை சொல்லும்போது சிங்களவன் படும்பாடு என்றா தலைப்பு போடுவது. வேறு சமூகம் சார்ந்த பிரச்சினையை நான் குறிப்பிடவில்லையே. ஓரு தமிழ் கிராமத்தின் பிரச்சினை பற்றியே குறிப்பிட்டிருக்கின்றேன்.
Post a Comment