Wednesday, 2 February 2011

மீண்டும் அழிவுகளை நோக்கி கிழக்கு மாகாண தமிழர்கள்

கிழக்கு மாகாணத்திலே மீண்டும் தொடர்ந்தும் கடும்மழை பெய்துகொண்டு வருகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே நேற்றும் இன்றும் இடைவிடாது மழை பெய்துகொண்டிருக்கின்றது.

பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளையும் பொது கட்டிடங்களையும் நோக்கி வர ஆரம்பித்திருக்கின்றனர்.

முன்னரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களிலே இருந்த மக்கள் இன்னும் தமது பழைய நிலைக்கு திரும்பாத நிலையில் மீண்டும் இடைத்தங்கல் முகாம்களுக்குள் முடங்கவேண்டிய நிலை.

இது ஒரு புறமிருக்க முன்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் நிவாரணங்கள் வழங்கப் படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த குற்றச்சாட்டு முற்று முழுதான உண்மை. வெள்ளத்தினால் நானும் முற்று முழுதாகப் பாதிக்கப்பட்ட ஒருவன் எங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட நிவாரணம்

1 கிலோகிராம் அரிசி
500 கிராம் சீனி
400 கிராம் பருப்பு
200 கிராம் தேங்காய் எண்ணை

ஆனால் விவசாயம் கால்நடை என்று பாரிய இழப்புக்களை சந்தித்தோம். ஒரு குடும்பம் மேலே கொடுக்கப்பட்ட பொருட்களை வைத்து என்ன செய்வது.

ஆனால் அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட பொருட்களை கொள்ளையடித்த அதிகாரிகள் பலர்.
(யார் யார் எவ்வாறு கொள்ளையடித்தனர் விபரங்கள் விரைவில்) அங்கர் பால்மா பக்கட்டுக்கள் பல இலட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக கொள்வனவு செய்திருக்கின்றனர். ஒரு அங்கர் பக்கட்டுக்கு மொத்த விலையிலும் பார்க்ள 15 ரூபா மேலதிகமாக விலை குறித்து பற்றுச்சீட்டு பெற்றிருக்கின்றனர்.
ஆறு இலட்சம் ரூபாவிற்கு தண்ணீர் போத்தல்கள் வாங்கியதாக பற்றுச்சீட்டு  பெற்றிருக்கின்றனர். ஆனால் தணணீர்ப் போத்தல்கள் வாங்கவில்லை இவ்வாறு பல விடயங்கள்.

மீண்டும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

முன்னர் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது நான் பலருக்கு அழைப்பு விடுத்திருந்தேன் முடிந்தவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என்று.

மட்டக்களப்பு மக்கள் பாரிய அழிவினை சந்தித்திருந்தனர். அவர்களுக்கு உதவுவது தொடர்பாக சர்வதேசத்திலே இருக்கின்ற தமிழர்கள் அக்கறை காடடியது மிக மிகக் குறைவு.

குறிப்பாக தமிழக தமிழர்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாகவே இருந்தது. ஒரு சிலர் தங்களால் முடிந்ததை செய்திருக்கின்றனர். அவர்களுக்கு நன்றிகள்.

என்னுள்ளே இருக்கின்ற சந்தேகம் சின்ன சின்ன விடயங்டகளை எல்லாம் பெரிது படுத்தி ஒன்றுபடும் உலகத் தமிழர்கள் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வெள்ளத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டபோது அக்கறை செலுத்தாதது ஏன் மட்டக்களப்பு என்பதாலா?

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "மீண்டும் அழிவுகளை நோக்கி கிழக்கு மாகாண தமிழர்கள்"

Admin said...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலைப்பதிவு நண்பர்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக வந்து பல்வேறு பணிகளில் சில வலைப்பதிவு நண்பர்கள் ஈடுபட்டனர் அவர்களுக்கு நன்றிகள்.

Admin said...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை ஒரு பாடசாலையில் தங்குவதற்கு வந்தவுடன் ஒரு பிரதேச செயலாளருக்கு அறிவித்தபோது அவரிடமிருந்து வந்த பதில் உறவினர் வீடுகளில் போய் தங்கச் சொல்லுங்கள்.

Post a Comment