தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் 1இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை வெய்யப்பட்டுள்ளார். அண்மையில் வெள்ள நிவாரணத்தை பதுக்கி வைத்துள்ளதைக் கண்டித்து ஆரையம்பதி பிரதேச செயலகத்தை மக்கள் முற்றுகையிட்டபோது மாகாண சபை உறுப்பினர் அவ்விடத்தில் இருந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் இருந்திருந்தார்கள். அப்போது பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
இதன்போது மாகாண சபை உறுப்பினர் தன்னை அச்சுறுத்தியதாக பொலிசில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் தனபாலசிங்கம் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து குறித்த மாகாண சபை உறுப்பினரை பொலிசார் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.இன்று சட்டத்தரணி மூலம் நீதி மன்றில் ஆஜராகிய மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்
Post Comment
2 comments: on "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் பிணையில் விடுதலை"
unnai thiruththave mudiyathu
//பெயரில்லா கூறியது...
unnai thiruththave mudiyathu//
என்னை யாரும் திருத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் உங்களை திருத்துங்கள் பெயருடன் வாருங்கள்.
Post a Comment