Friday, 21 January 2011

உண்மைகளை சொல்ல மறுக்கும் ஊடகங்களும். கையேந்தும் தமிழ் மக்களும் மனிதநேயமற்ற மனிதர்களும

ஊடகங்கள் உண்மைகளை வெளியிட வேண்டும். ஆனால் சில ஒருசில ஊடகங்கள் தாம் நினைத்தவற்றை வெளியிட்டு வருகின்றன.

என்னைச் சுற்றி நடக்கின்ற உண்மைகளை வெளியிட வேண்டும் என்று நினைப்பவன் நான். கிழக்கு மாகாணத்திலே குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றபோதிலும் அதிகாரிகள் பலர் பதுக்கி வைக்கின்ற நிலை காணப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட பல மக்கள் இதுவரை எந்தவிதமான உதவிகளையும் பெறவில்லை ஆனால் தாராளமாக உதவிகள் செய்வதாக அரசாங்கம் சொல்கின்றது.

நான் பல இடங்களுக்கு சென்று அவதானித்தேன். ஒரு நபருக்கு நான்கு நாட்களுக்கு அரிசி 1 கிலோகிராம் பருப்பு 120 கிராம் சீனி 80 கிராம் தேங்காய் எண்ணை 40 கிராம் வழங்கப்படுவதாக நிவாரணம் வழங்கப்படுகின்ற கூட்டுறவு கடைகளிலே எழுதி ஒட்டப்பட்டிருக்கின்றன.

ஆனால் ஒரு குடும்பத்துக்கு இதுவரை ஒரு கிலோகிராம் அரிசி 250 கிராம் பருப்பு 250 கிராம் சீனி 80 கிராம் தேங்காய் எண்ணை வழங்கப்படுகின்றது.

எல்லாவற்றையும் இழந்து தவிக்கின்ற மக்கள் இவற்றை வைத்து என்ன செய்வது. பல பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை.

அரசாங்கத்தின் மூலமும் உலக உணவுத்திட்டத்தின் மூலமும் தாராளமாக உதவிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவை உரிய முறையில் மக்களைச் சென்றடையவில்லை. அதிகாரிகள் பதுக்கி வைத்திருக்கின்றனர்.

அண்மையில் ஆரையம்பதியிலே ஒரு கிராம சேவகரால் பதுக்கி வைக்கப்படடிருந்த ஒரு தொகைப் பொருட்களை மக்கள் கைப்பற்றியதுடன் மறுநாள் ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

படங்கள் கீழே இணைத்திருக்கின்றேன்.

இது தொடர்பான வீரகேசரி செய்தி..
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=29634

அந்த இரு நாட்களும் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நானும் சென்றேன். (நானும் ஒரு ஊடகப் பிரிவைச் சேர்ந்தவன்)
ஆரையம்பதி பிரதேச செயலகத்திலே மக்கள் ஆர்ப்பாட்டத்திலே ஈடுபட்டபோது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் அவ்விடத்துக்கு வந்தார்.

சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டிருந்தன. மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் அவர்களின் குழுவினர் ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு சேதம் ஏற்படுத்தியதுடன் ஊழியர்களைத் தாக்கியதாகவும்.

அன்றையதினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் முற்று முழுதாக வீடியோ எடுக்கப்பட்டு என்னிடம் இருக்கின்றது. அங்கே நடந்த சம்பவங்களுக்கும் மாகாணசபை உறுப்பினருக்கும் கைது செய்யப்பட்டிருப்பவர்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்பதனைப் பார்க்க முடியும்.


மாகாண சபை உறுப்பினர் தன்னை அச்சுறுத்தியதாக பொலிசில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் தனபாலசிங்கம் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து குறித்த மாகாண சபை உறுப்பினரை பொலிசார் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.இன்று சட்டத்தரணி மூலம் நீதி மன்றில் ஆஜராகிய மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

உண்மையாகவே ஊழல்களிலே ஈடுபடுகின்ற அதிகாரிகளை கைது செய்வதனை விட்டுவிட்டு அவர்களுக்காக சில அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் சில ஊடகங்களும் செயற்படுவது கவலைக்குரிய விடயம்.

இது ஒரு புறமிருக்க ஒரு இணையத்தளம் இன்று ஆரையம்பதியிலே பிரசாந்தன் அவர்களுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடுகின்றது. இன்று முழுவதும் நான் ஆரையம்பதியிலேதான் இருந்தேன் எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறவில்லை.


காவல்துறையினராகட்டும் ஊடகங்களாகட்டும் ஊழலில் ஈடுபடுபவர்களின் ஊழல்களை மூடி மறைப்பதனை விடுத்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
.



_mg_0066
_mg_0079
_mg_99042_mg_0626_mg_99091

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "உண்மைகளை சொல்ல மறுக்கும் ஊடகங்களும். கையேந்தும் தமிழ் மக்களும் மனிதநேயமற்ற மனிதர்களும"

ஜோதிஜி said...

இது போன்ற விசயங்களை நீங்களாவது எழுதுகிறீர்களே. அது வரைக்கும் மகிழ்ச்சி. தொடர்ந்து இது போல் நடக்கும்நிகழ்வுகளை எழுதுங்க.

ஹேமா said...

யாரைக் குற்றம் சொல்லலாம் சந்ரு.சனங்கள்தான் பாவம் !

Post a Comment