skip to main |
skip to sidebar
கிழக்கிலே குறிப்பாக மட்டக்களப்பிலே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு சில இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் வெள்ளம் வெள்ளம் வடிந்திருக்கின்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
வெள்ள அனர்த்தத்தின்போது பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்திருந்தாலும் நான் எதிர் பார்த்தவர்கள் போதிய உதவிகள் செய்யவில்லை.
இலங்கை வலைப்பதிவர்களைப் பொறுத்தவரை வலைப்பதிவுக்கு வெளியே என்ன செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்த காலம். நிவாரணப் பணிகளிலே முடிந்தவரை எல்லோரும் பங்களிப்பு செய்திருக்கலாம். இந்த வேளையில் எனது முன்னைய பதிவு ஒன்று ஞாபகத்துக்கு வருகின்றது.
ஆனால் ஒருசில பதிவர்கள்தான் பல்வேறுபட்ட விதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்திருந்தனர். அவர்களுக்கு நன்றிகள்.
நாம் வெறும் பேச்சளவிலேதான் இருக்கின்றோம் செயலில் எதுவுமில்லை. பல பதிவர்கள் எவ்வளவோ எழுதுகின்றனர். ஆனால் இந்த விடயத்தில் பின் வாங்கியது ஏன்?
பதிவெழுதுகின்றோம் சந்திக்கின்றோம் என்பதோடு நின்றுவிடாமல் எமது மக்கள் பாதிக்கப்படுகின்றபோது எங்களால் முடிந்தவற்றைச் செய்ய வேண்டும்.
இது ஒருபுறமிருக்க வெளிநாடுகளிலே இருக்கின்ற பதிவர்களும் (ஒருசிலரைத்தவிர) பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் பாரா முகமாய் இருப்பது கவலைப்படவேண்டிய விடயம். நான் பல வெளிநாட்டு வலைப்பதிவர்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகள் தேவை என்று தெரியப்படுத்தி இருந்தேன். செந்தழல் ரவி மட்டுமே உதவி செய்வதாக உறுதியளித்தார்.
அதேபோன்று இன்னும் சில வெளிநாட்டு வலைப்பதிவர்களும் உதவி செய்வது பற்றி பதிவிட்டிருந்தனர் அவர்களுக்கும் நன்றிகள்.
பல ஆயிரக்கணக்கானவர்கள் பதிவெழுதுகின்றோம். ஏதோ தேவையற்ற விடயங்களை எல்லாம் எழுதுகின்றோம். எங்களால் உதவிதான் செய்ய முடியாது என்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் தேவை என்பதனையாவது பதிவட்டிருக்கலாம் அல்லவா?
தமிழ் மக்கள் மீதும் தமிழ் மீதும் அதிக அக்கறை கொண்ட பல பதிவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கையை விரித்ததை அறிய முடிந்தது.
இனிவரும் காலங்களிலாவது பேச்சிலும் எழுத்திலும் மட்டும் இல்லாமல் செயலிலும் இறங்க வேண்டும்.
உலகத் தமிழர்கள்கூட பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து விட்டனர்.
இவை அத்தனைக்கும்மேல் போதிய அளவு உதவிகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லப்படுகின்ற போதிலும் உண்மைநிலை அதுவல்ல பல மக்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர். போதியளவு உதவிகள் வழங்கப்படவில்லை. இவை பற்றிய உண்மைகள் அடுத்த பதிவில்.
Post Comment
2 comments: on "உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தான்டி"
சந்ரு நான் பதிவில் எழுதாவிடினும் எங்களை போன்றவர்கள் அனர்த்திலுள்ளவர்களுக்கு ஏராளமான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளோம். நீங்கள் குறிப்பிட்ட மாதிரி பதிவர்கள் இணைந்து செய்யாவிடினும் அவரவர்களுக்கு முடிந்தளவு உதவி செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். நீங்கள் இங்கு பதிவர்களை வாய்சொல் வீரர்கள் என விளிப்பது இவ்வாறு உதவியவர்களுக்கும் மன கவலையை ஏற்படுத்தும் என்பது எனது கருத்து
//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
சந்ரு நான் பதிவில் எழுதாவிடினும் எங்களை போன்றவர்கள் அனர்த்திலுள்ளவர்களுக்கு ஏராளமான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளோம். நீங்கள் குறிப்பிட்ட மாதிரி பதிவர்கள் இணைந்து செய்யாவிடினும் அவரவர்களுக்கு முடிந்தளவு உதவி செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். நீங்கள் இங்கு பதிவர்களை வாய்சொல் வீரர்கள் என விளிப்பது இவ்வாறு உதவியவர்களுக்கும் மன கவலையை ஏற்படுத்தும் என்பது எனது கருத்து//
நான் ஒட்டு மொத்தத்தில் அனைத்துப் பதிவர்களையும் குற்றம் சொல்லவில்லை என்னுடைய பதிவிலே
//ஆனால் ஒருசில பதிவர்கள்தான் பல்வேறுபட்ட விதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்திருந்தனர். அவர்களுக்கு நன்றிகள்.
///
என்று குறிப்பிட்டிருக்கின்றேன்.
ஒருசில பதிவர்கள் நேரடியாக மட்டக்களப்புக்கு வந்து உதவிகளை செய்திருந்தனர். அவர்களுக்கும் நன்றிகளை சொல்லி இருக்கின்றேன்.
Post a Comment