Monday 21 December 2009

காட்சிப் பொருளாக்கப்பட்ட பெண்கள்



இது ஒரு தொடர் பதிவாக அமைய இருக்கிறது. இத் தொடர் பதிவு ஆண்களையோ, பெண்களையோ குற்றம் சொல்வதற்காக அல்ல. என்னால் அறியப்பட்ட  சில சம்பவங்களும் நான் என்னக்குள்ளே கேட்டுக்கொண்ட கேள்விகளுமே தொடர் பதிவாக வர இருக்கின்றது. இப் பதிவுகளிலே நான் ஏதாவது தவறாக குறிப்பிட்டால் நேர்மையான முறையிலே சுட்டிக்காட்டுங்கள். நேர்மையான விமர்சனங்களை நான் என்றுமே ஏற்றுக்கொள்ள தயங்கியவனல்ல.

இன்று பெண்ணடிமை பற்றி பேசப்பட்டாலும். பெண்களுக்கு எதிரான  வன்முறைகளுக்கு எதிராகா பல்வேறுபட்ட அமைப்புக்கள் குரல்கொடுத்து வந்தாலும். இன்று பெண்ணடிமை இன்று இல்லையா என்று கேட்டால். பதில் கேள்விக்குரிஎதான்.

இன்று பெண்ணடிமை இல்லை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லை என்று சொல்ல முடியாது. பெண்ணடிமை என்று சொன்னாலே எல்லோரும் பெண்களை ஆண்கள்தான் அடிமைப் படுத்துகின்றனர் என்று கருத்திலேடுத்துக் கொள்கின்றனர். ஆண்கள் மட்டுமல்ல இன்று பெண்களை பெண்களே அடிமைப் படுத்துகின்ற நிலை பரவலாக இருக்கின்றது. பெண்கள் பல்வேறு வழிகளிலே பல்வேறு காரணங்களுக்காக  அடிமைப் படுத்தப் படுவதோடு வன்முறைகளுக்கும் ஆளாக்கப் படுகின்றனர்.

 பெண்களை ஏன் நாம் இரண்டாம் நிலைக்கு தள்ளுகின்றோம். பெண்களும் எங்களைப் போன்ற மனிதர்களேதான்.  அவர்களுக்கும் எல்லோர்போலவும் சம உரிமை இருக்கின்றது. ஆனால் என்ன செய்கின்றோம் பெண்களை சிலர் (பெண்கள் உட்பட) அடக்கியாள நினைக்கின்றோம். இதனால் சில பெண்கள் தாங்களாகவே பெட்டிப்பாம்பாக வீட்டுக்குள்ளேயே அடங்கி விடுகின்றனர்.

இந்த அடக்கு முறைகளையும் மீறி ஒரு பெண் தலை நிமிர்ந்து வாழ நினைத்தால், அடக்கு முறைகளுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து அவள் சம உரிமையோடு முன்னேற நினைத்தால் அவளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற சமூகமும் இருக்கின்றது. இதனால் அந்தப் பெண்ணால்  தொடர்ந்துதான் முன்னேற முடியுமா?

பெண்களுக்கு சில சமுக கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதேபோல் ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் பெண்கள் அந்த கட்டுப்பாட்டை சிறிது மீறினாலே   அவளைப் பற்றி இலவச விளம்பரம் செய்கின்ற மனிதர்களும் ஊடகங்களும் சில ஆண்கள் செய்கின்ற காம லீலைகளை ஏன் அரங்கேற்ற மறுக்கின்றன.

இன்று எத்தனை போலிசாமியார்களுக்கு எத்தனை ஊடகங்கள் விலைபோய் இருக்கின்றன. அவர்களின் காம லீலைகளை அரங்கேற்றலாம்தானே. அதனை விடுத்து ஒரு பெண் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறை செய்தால் ஏன் அவளை மட்டும் நடத்தை கெட்டவள் என்ற பெயர் சூட்ட வேண்டும்.


ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டால் என்றால் அவளை கைது செய்து விபச்சாரி எனும் பட்டத்தோடு. உலகிக்கே அவளை மானம் கெட்டவள் என்று வெளிச்சம் போட்டுக்காட்டும் இந்த ஊடகங்களும் நபர்களும் ஏன் அந்த பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆணை வெளிச்சத்துக்கு கொண்டுவர மறுக்கின்றது.

பெண் தவறு செய்தால் நடத்தை கெட்டவள். ஆண் தவறு செய்தால் நல்லவனா?  ஒரு ஆண் ஒரு விபச்சாரியிடம் போகவில்லை என்றால் அவள் எப்படி விபச்சாரி ஆகமுடியும். இங்கே பெண்ணில் மட்டும் தவறில்லை. ஆண்களிலும் தவறு இருக்கின்றது. அதனை விடுத்து பெண்களுக்கு மட்டும் விபச்சாரி பட்டம் வழங்குவது என்ன நியாயம் இருக்கிறது?

இன்று பெண்களை காட்சிப் பொருளாக பார்க்கின்ற நிலை இருக்கின்றது. இன்று பெண்கள் காட்சிப் பொருளாக பயன்படுத்தப் படாத இடம் இல்லை என்றேதான் சொல்லவேண்டும். கணவன் மட்டுமே கண் காணும் அழகை சில பெண்கள் காட்சிப் பொருளாக விற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

இன்று விளம்பரங்களிலே அரை குறை ஆடைகளோடு ஒரு பெண் வந்தால்தான் அந்த பொருளுக்கு நல்ல விற்பனை வாய்ப்புக்கள் கிடைக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. எப்படிப்பட்ட ஒரு தரமற்ற பொருளையும் ஒரு பெண்ணை அரை குறை ஆடைகளோடு காட்டி அதிக கேள்வியை ஏற்படுத்தி பொருளை இலகுவாக விற்க முடியும் என்ற நிலை தோன்றிவிட்டது.

இன்று வெளிநாடுகளில் மட்டுமல்ல எமது நாட்டை எடுத்துப் பாருங்கள் வீதிகளிலே இருக்கின்ற விளம்பரப் பலகைகளில் அதிகமானவை எப்படி இருக்கின்றன. இந்த சமுக சீர்கேடு தேவைதானா? அது அவர்களின் சுதந்திரம் என்று சொல்ல வேண்டாம் ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் மூக்குவரை செல்லாதவரைக்கும்தான். சுதந்திரம் இருக்கலாம் ஆனால் ஒரு சமுகத்தின் கலாசாரத்தை பதிக்காத வகையில் அந்த சுதந்திரம் இருக்க வேண்டும்.

தொடர்ந்து வரும்......

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

22 comments: on "காட்சிப் பொருளாக்கப்பட்ட பெண்கள்"

தர்ஷன் said...

நல்ல ஆரம்பம்
மேம்போக்காக கருத்துக்களை சொல்லியிருக்கீர்கள் அடுத்தடுத்த பதிவுகளில் ஆழமாய் தொடர்வீர்கள் என நம்புகிறேன். அப்போது எனக்கிருக்கும் முரண்களைப் பற்றி விவாதிக்கலாம். முடிந்தால் இதைப் பாருங்கள் முன்பொரு முறை எழுதியது.

http://sridharshan.blogspot.com/2009/03/08.html

கருணையூரான் said...

சமூகத்துக்கு தேவையான பதிவு ..தொடர வாழ்த்துக்கள் ......
சந்தேகம் ஒண்டு .......
ஒரு ஆண் ஒரு நல்ல பெண்ணை விபச்சாரியாக்கிய பின் விபச்சாரத்துக்கு செல்கின்றானா ...
இல்லை ......ஒரு ஏற்கனவே விபச்சாரியான பெண்ணிடம் விபச்சாரத்துக்கு செல்கின்றானா ......

Admin said...

//தர்ஷன் கூறியது...
நல்ல ஆரம்பம்
மேம்போக்காக கருத்துக்களை சொல்லியிருக்கீர்கள் அடுத்தடுத்த பதிவுகளில் ஆழமாய் தொடர்வீர்கள் என நம்புகிறேன். அப்போது எனக்கிருக்கும் முரண்களைப் பற்றி விவாதிக்கலாம். முடிந்தால் இதைப் பாருங்கள் முன்பொரு முறை எழுதியது.

http://sridharshan.blogspot.com/2009/03/08.html//

ஆழமாகப் பார்க்க வேண்டிய விடயங்கள்தான். இந்த பதிவிலே மேலோட்டமாகப் பார்த்து இருக்கிறேன். அடுத்த பதிவுகளில் விரிவாகப் பார்க்க இருக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

இன்றுதான் உங்களது அந்த இடுகையைப் பார்த்தேன். நீங்களும் முக்கிய விடயங்களைப் பற்றிப் சொல்லி இருக்கிறிர்கள்.

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//கருணையூரான் கூறியது...
சமூகத்துக்கு தேவையான பதிவு ..தொடர வாழ்த்துக்கள் ......
சந்தேகம் ஒண்டு .......
ஒரு ஆண் ஒரு நல்ல பெண்ணை விபச்சாரியாக்கிய பின் விபச்சாரத்துக்கு செல்கின்றானா ...
இல்லை ......ஒரு ஏற்கனவே விபச்சாரியான பெண்ணிடம் விபச்சாரத்துக்கு செல்கின்றானா ......//

வாழ்த்துக்களுக்கு நன்றிகள்... விரைவில் அடுத்த பகுதி வரும்.

இங்கு யார், யாரை விபச்சாரியாக்கினார்கள் என்பதல்ல பார்க்கவேண்டியது. தகாத முறையிலே ஆணும் பெண்ணும் நடந்து கொள்கின்றார்கள். அது சமுகத்துக்கு தெரிய வரும்போது பெண்களை மட்டும் குற்றம் சொல்வது ஏன். ஆண் இல்லாமல் தனியவா விபச்சாரம் நடாத்திநாலா அந்தப் பெண் இல்லையே. ஏன் இங்கே பெண்ணை மட்டும் தண்டிக்க வேண்டும்.

ஒரு நல்ல பெண்ணை ஆண் விபச்சாரியாக்கினாளும்சரி. ஒரு விபச்சாரியிடம் ஒரு ஆண் விபசாரத்தில் ஈடுபட்டாலும் அந்தப் பெண்ணைப் பற்றித்தானே எல்லோரும் பேசுகின்றோம். ஏன் அந்த ஆணைப் பற்றி எவரும் பேசுவதில்லை.

ஸ்ரீராம். said...

எல்லாப் பெண்களும் ஏமாற்றப் பட்டுதான் அந்தத் தொழிலுக்கு தள்ளப் படுகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை இல்லை. பெருமளவு என்று கொள்ளலாம். விளம்பரங்களுக்கும் சீரழிவுகளுக்கும் பெண்ணுரிமைச் சங்கங்கள் என்ன செய்கின்றன? இயற்கை பெண்ணை மெல்லினமாகப் படைத்திருபதால் இந்த நிலை. தவறு செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆண்களுக்கு இல்லை என்பதால் ஆண்களுக்கு தவறு தொடர்ந்து செய்யும் தைரியத்தை தருகிறது...

சென்ற பதிவில் சந்ருவா சந்த்ருவா என்று கேட்டிருந்தீர்கள். சந்ருவுக்கு வோட் போட்டேன். மேலும் ஒரு தகவலாக சந்துரு என்ற பெயரில் இலங்கையிலிருந்து ஒரு பதிவர் பக்கம் (Student) பார்த்தேன். எனவே சந்ருவே நல்லது!

நிலாமதி said...

அவசியம் தேவையான பதிவு...தொடருங்கள்.

Anonymous said...

அவசியமான பதிவு நேர்மையான அலசல்...தொடருங்கள் உண்மை தகவல்களை பகிருங்கள் சந்துரு..

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நல்லாயிருக்கு சந்த்ரு அல்லது சந்துரு (ந் பற்றி பதிவிடுவதாக இருக்கிறேன்)

பெண்களைக் காட்சிப் பொருளாக்குவதில் எமது சக சில பதிவர்களே தெரிந்தோ தெரியாமலோ ஈடுபடுகிறார்கள்.

பதிவுகளில் பெண்களின் கவர்ச்சிப் படத்தைப் போடுவதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. என்ன செய்வது ஆண்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காக கவர்ச்சிப் படத்தைப் போடுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் பதிவுகளில் போடப்படும் கவர்ச்சிப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம், அதைப் பார்க்கும் பெண்கள் என்ன சிந்திப்பார்கள் என்பதுதான் எனது மனதில் ஓடும்.

தொடர்ந்து எழுதுங்கள் சந்த்ரு.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

பித்தனின் வாக்கு said...

நல்ல கட்டுரைத் தொடர். எழுதுங்கள் படிக்கின்றேம். நன்றி சந்துரு.

ரோஸ்விக் said...

//இன்று விளம்பரங்களிலே அரை குறை ஆடைகளோடு ஒரு பெண் வந்தால்தான் அந்த பொருளுக்கு நல்ல விற்பனை வாய்ப்புக்கள் கிடைக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. எப்படிப்பட்ட ஒரு தரமற்ற பொருளையும் ஒரு பெண்ணை அரை குறை ஆடைகளோடு காட்டி அதிக கேள்வியை ஏற்படுத்தி பொருளை இலகுவாக விற்க முடியும் என்ற நிலை தோன்றிவிட்டது.//

உங்களின் விபச்சாரம் பற்றிய கருத்துக்கு உடன் படுகிறேன்.

விளம்பரம், சினிமாக்களில் பணத்திற்காக இவர்களாக போய் விழுகிறார்கள். இதற்கு ஆண்களோ அல்லது வேறு பெண்களோ முழு பொறுப்பு ஏற்க முடியாது.

கூர்ந்து நோக்குங்கள் எல்லா இடங்களிலும் பணம் ஒழிந்திருப்பது தெரியும். பெண் பணத்திற்காக விபச்சாரம் செய்கிறாள். பெண்களை விபச்சாரி என்று எழுதும்போது தான் பத்திரிக்கைகள் அதிகம் விற்கிறது. அங்கும் பணம். மாடலிங் மற்றும் திரைத்துறையில் அதிக பணம் பெற வேண்டி இவர்கள் ஆடை அவில்பிற்கு தயாராகிறார்கள். அதன் மூலம் படமும் நிறைய பணம் ஈட்டும் என்பதால் தயாரிப்பாளர்களும் உடன் படுகிறார்கள்.

பெண்களை இது போன்ற காரியங்களில் இருந்து வெளி வர சொல்லுங்கள். கட்டாயப்படுத்தும் ஆண்களை கால்களுக்கிடையில் மிதிப்போம்.
பெண்களை இது போன்ற விஷயங்களில் ஈடு படக்கூடாது என்று தடை போட்டால்.... அதற்கும் ஒரு கூட்டம் வரும், எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிரதேன்று....

பெண்களின் அழகு ஆண்களை மட்டுமல்ல... பெண்களையும் கவரக்கூடியது என்று நீங்கள் கருதினால், சில பெண்களை விளம்பரத்தில் இருந்து மட்டுமல்ல... விபச்சாரத்தில் இருந்தும் வெளிக்கொணர முடியாது.

:-)

Unknown said...

//பெண் தவறு செய்தால் நடத்தை கெட்டவள். ஆண் தவறு செய்தால் நல்லவனா? //

திருத்தம்...
பெண் தவறு செய்தால் விபச்சாரி... ஆண் செய்தால் அவன் ஆண்மையானவன்.... இதுதான் எம் கொள்கை....
வாழ்க எம் கொள்கைகள்...


மது அண்ணா சொல்வதில் எனக்கு பூரண சம்மதமுண்டு....


தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம் சந்த்ரு அண்ணா....

Nila Loganathan said...

நல்ல பதிவு சந்த்ரு அண்ணா, தொடருங்கள் ...

சொல்லப் படவேண்டிய கருத்துக்கள் இவை ....

Nila Loganathan said...

நல்ல பதிவு சந்த்ரு அண்ணா, தொடருங்கள் சொல்லப் படவேண்டிய கருத்துக்கள் இவை ...

Nila Loganathan said...

நல்ல பதிவு சந்த்ரு அண்ணா, தொடருங்கள் சொல்லப் படவேண்டிய கருத்துக்கள் இவை ...

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...
எல்லாப் பெண்களும் ஏமாற்றப் பட்டுதான் அந்தத் தொழிலுக்கு தள்ளப் படுகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை இல்லை. பெருமளவு என்று கொள்ளலாம். விளம்பரங்களுக்கும் சீரழிவுகளுக்கும் பெண்ணுரிமைச் சங்கங்கள் என்ன செய்கின்றன? இயற்கை பெண்ணை மெல்லினமாகப் படைத்திருபதால் இந்த நிலை. தவறு செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆண்களுக்கு இல்லை என்பதால் ஆண்களுக்கு தவறு தொடர்ந்து செய்யும் தைரியத்தை தருகிறது..//

உங்கள் கருத்துக்களும் சரியானவைதான். தொடரும் பதிவுகளிலே எல்லாவற்றையும் விளக்கமாகத் தர இருக்கிறேன்.

//சென்ற பதிவில் சந்ருவா சந்த்ருவா என்று கேட்டிருந்தீர்கள். சந்ருவுக்கு வோட் போட்டேன். மேலும் ஒரு தகவலாக சந்துரு என்ற பெயரில் இலங்கையிலிருந்து ஒரு பதிவர் பக்கம் (Student) பார்த்தேன். எனவே சந்ருவே நல்லது!//

என் பெயர் தொடர்பிலே நான் அன்றுமுதல் எந்த மாற்றமும் செய்யப் போவதில்லை என்றுதான் சொல்லி வருகிறேன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

Admin said...

//நிலாமதி கூறியது...
அவசியம் தேவையான பதிவு...தொடருங்கள்.//

நிட்சயமாக பல விடயங்களோடு தொடர்கிறேன். வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//தமிழரசி கூறியது...
அவசியமான பதிவு நேர்மையான அலசல்...தொடருங்கள் உண்மை தகவல்களை பகிருங்கள் சந்துரு..//

பக்கம் சாராது சில விடயங்களை ஆராய வேண்டும் என்பதே எனது எண்ணம். தொடர்கிறேன் நன்றிகள்.

Admin said...

//மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...
நல்லாயிருக்கு சந்த்ரு அல்லது சந்துரு (ந் பற்றி பதிவிடுவதாக இருக்கிறேன்)//

என் பெயர் தொடர்பிலே நீங்கள் சொன்ன கருத்துக்களில் உண்மை இருக்கின்றது. அதனை மாற்றுகின்றபோதும் சில பிரட்சினைகள் இருக்கின்றன. நல்ல விடயம் பதிவிடுங்கள்

//பெண்களைக் காட்சிப் பொருளாக்குவதில் எமது சக சில பதிவர்களே தெரிந்தோ தெரியாமலோ ஈடுபடுகிறார்கள்.//

இப்படி வெளிப்படையான முறையிலே கருத்துக்களை பகிர்வது பிடித்திருக்கின்றது. சிலர் நண்பர்கள் செய்வதை நாம் சுட்டிக்காட்டுவது சரியில்லை என்று விட்டுவிடுவார்கள். என்ன பதிவிட வேண்டும் என்பது பதிவர்களைப் பொறுத்ததுதான். இருந்தாலும் சில விடயங்களில் இப்படிப்பட்ட படங்கள் இருக்கும்போது சிலர் அந்த பதிவுக்கு போவதை விரும்பமாட்டார்கள்

//பதிவுகளில் பெண்களின் கவர்ச்சிப் படத்தைப் போடுவதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. என்ன செய்வது ஆண்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காக கவர்ச்சிப் படத்தைப் போடுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் பதிவுகளில் போடப்படும் கவர்ச்சிப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம், அதைப் பார்க்கும் பெண்கள் என்ன சிந்திப்பார்கள் என்பதுதான் எனது மனதில் ஓடும்.//

இந்த விடயம் தொடர்பாக என் கருத்துக்களை தொடரும் பதிவுகளில் எதிர் பாருங்கள்.

//தொடர்ந்து எழுதுங்கள் சந்த்ரு.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.//

இத்தொடர் பதிவு மூலம் ஆண்கள் என்னோடு சண்டைக்கு வருவார்கள் என்று நினைத்தேன். உங்கள் ஆதரவுக்கு நன்றிகள். தொடர்கிறேன்.

Admin said...

//பித்தனின் வாக்கு கூறியது...
நல்ல கட்டுரைத் தொடர். எழுதுங்கள் படிக்கின்றேம். நன்றி சந்துரு.//

தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றிகள். தொடர்கிறேன்.

Admin said...

//ரோஸ்விக் கூறியது...

உங்களின் விபச்சாரம் பற்றிய கருத்துக்கு உடன் படுகிறேன்.//

நன்றிகள். உண்மையான நிலையைத்தான் சொன்னேன்.

//விளம்பரம், சினிமாக்களில் பணத்திற்காக இவர்களாக போய் விழுகிறார்கள். இதற்கு ஆண்களோ அல்லது வேறு பெண்களோ முழு பொறுப்பு ஏற்க முடியாது.


கூர்ந்து நோக்குங்கள் எல்லா இடங்களிலும் பணம் ஒழிந்திருப்பது தெரியும். பெண் பணத்திற்காக விபச்சாரம் செய்கிறாள். பெண்களை விபச்சாரி என்று எழுதும்போது தான் பத்திரிக்கைகள் அதிகம் விற்கிறது. அங்கும் பணம். மாடலிங் மற்றும் திரைத்துறையில் அதிக பணம் பெற வேண்டி இவர்கள் ஆடை அவில்பிற்கு தயாராகிறார்கள். அதன் மூலம் படமும் நிறைய பணம் ஈட்டும் என்பதால் தயாரிப்பாளர்களும் உடன் படுகிறார்கள்.

பெண்களை இது போன்ற காரியங்களில் இருந்து வெளி வர சொல்லுங்கள். கட்டாயப்படுத்தும் ஆண்களை கால்களுக்கிடையில் மிதிப்போம்.
பெண்களை இது போன்ற விஷயங்களில் ஈடு படக்கூடாது என்று தடை போட்டால்.... அதற்கும் ஒரு கூட்டம் வரும், எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிரதேன்று....

பெண்களின் அழகு ஆண்களை மட்டுமல்ல... பெண்களையும் கவரக்கூடியது என்று நீங்கள் கருதினால், சில பெண்களை விளம்பரத்தில் இருந்து மட்டுமல்ல... விபச்சாரத்தில் இருந்தும் வெளிக்கொணர முடியாது.

:-)//
எனது அடுத்த பதிவிலே இதற்குரிய விளக்கங்களைத் தருகின்றேன்.

Admin said...

//கனககோபி கூறியது...
//பெண் தவறு செய்தால் நடத்தை கெட்டவள். ஆண் தவறு செய்தால் நல்லவனா? //

திருத்தம்...
பெண் தவறு செய்தால் விபச்சாரி... ஆண் செய்தால் அவன் ஆண்மையானவன்.... இதுதான் எம் கொள்கை....
வாழ்க எம் கொள்கைகள்...//

இப்படிப்பட்ட ஆணாதிக்க கொள்கைகள் இருப்பதனால்தான் இன்று பெண்கள் பின்தள்ளப்படுகின்றார்கள்.


//மது அண்ணா சொல்வதில் எனக்கு பூரண சம்மதமுண்டு....//

என் கருத்தும் அடுத்தடுத்த பதிவுகளில் வரும்.

//தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம் சந்த்ரு அண்ணா....//

உங்கள் ஆதரவிற்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//tharshayene கூறியது...
நல்ல பதிவு சந்த்ரு அண்ணா, தொடருங்கள் சொல்லப் படவேண்டிய கருத்துக்கள் இவை ...//

தொடர்ந்தும் எழுதுகின்றேன். உங்கள் ஆதரவுக்கும், எதிர்பார்ப்புக்கும் நன்றிகள்.

Post a Comment