Thursday 26 November 2009

என்னைக் கதை சொல்ல சொன்னால்....

சுசி அக்கா நான் பதிவெழுத வந்த கதையினை சொல்லும்படி தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றார். அவருக்கு முதலில் நன்றிகள்.

இணைய இணைப்பு இருந்தும் எனக்கு வலைப்பதிவுகள் பற்றி அவ்வளவாகத் தெரியாத காலம். என் பொழுதுகள் அதிகம் இணையத்தில்தான். புதிய விடயங்களை அறிந்து கொள்வதிலும் உள்நாட்டு, உலக நடப்பு விவாகாரங்களையும் அறிந்து கொள்வதோடு அவ்வப்போது அரட்டை அடிக்காமலும் விடுவதில்லை (அரட்டையில் பல கதைகளே இருக்கிறது)

துணிவும், தன்னம்பிக்கையும், தமிழ் பற்றும்  என்னோடு கூடப் பிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும். என்னில் எனக்கு மட்டுமல்ல என் நண்பர்களுக்கே என்னிடம்  பிடிக்காத விடயம் நான் அநீதிகளை யாராக இருந்தாலும்  தட்டிக் கேட்பதுதான். இதனால் பல பிரஷ்சினைகளுக்கும் முகம் கொடுத்ததுண்டு.

மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள், அவலங்களை வெளி உலகுக்கு கொண்டு செல்லவேண்டும், அநீதிகளை  வெளி உலகுக்கு கொண்டு செல்லவேண்டும் என்கின்ற ஆதங்கம் அதிகம். இதனால் நான் ஒரு பத்திரிகையாளராக வரவேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளே இருந்தது ஆனால் என் நண்பர்களும் என் குடும்பத்தாரும் தடுத்துவிட்டனர்.

இருந்தாலும் நான் ஒரு இணையத்தளத்தினை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இணையத்தளத்தினை உருவாக்குவதட்குரிய வேலைகளை செய்து கொண்டிருக்கும்போதுதான் நண்பர் பிரபா என்னிடம் வலைப்பதிவு பற்றி சொன்னார். பிரபாவுக்கு நன்றிகள்.

அந்தவேளையில் பிரபா வலைப்பதிவினை உருவாக்கி இருந்தார் அவருக்கும் வலைப்பதிவு பற்றிய போதிய அறிவு இருக்கவில்லை. அவர் வலைப்பதிவு பற்றி சொல்லிய அன்றிரவே வலைப்பதிவை உருவாக்கிவிட்டேன் ஆனால் எனக்கு தமிழிலே தட்டச்சு செய்யத் தெரியாது. அவற்றைக் கற்பதற்கே இரண்டு வாரங்கள் சென்றுவிட்டன.

பின்னர் http://www.google.co.in/transliterate/indic/Tamil முலமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொண்டேன் (இன்றும் அதனைத்தான் பயன்படுத்துகின்றேன்) அப்போது எனக்கு அவ்வளவாக வலைப்பதிவுகளை தெரியாது. கருத்துரையிடுதல் எதுவுமே  தெரியாது. அப்போது பிரபா மூலம்  லோஷன் அண்ணாவின் வலைப்பதிவு முகவரியை அறிய முடிந்தது. அப்போது அதிக நேரம் அவரது வலைப்பதிவிலேதான் செலவு செய்தேன். எவ்வாறு பதிவிடுதல். போன்ற விடயங்களை அவரது வலைப்பதிவு மூலமாகத்தான் அறிந்து கொண்டேன். நான் அடிக்கடி லோஷன் அண்ணாவைப் பற்றி சொல்வதனால் தவறான  கண்ணோட்டத்தில் எவரும் பார்க்கவேண்டாம். நாம் நல்ல மனிதர் ஒருவரை பின்பற்றும்போது நாங்கள் எங்களை வளர்த்துக்கொள்ள முடியும். பதிவுலகில் அவரது வலைப்பதிவும், அவர்  எனக்கிடுகின்ற கருத்துரைகளும் என்ன வளர்த்துக்கொள்ள உதவியது.

நான் பதிவுலகுக்கு வந்து தமிழர் கலை, கலாசாரங்களையும், தமிழ்மொழி பற்றியும், எமது மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளையும், அவலங்களையும் பதிவிட வேண்டும் என்று பதிவுலகுக்கு வந்தேன். சில விடயங்களை பதிவிட முடியாது இருக்கின்றபோது கவலைதான். நகைசுவை , சினிமா மற்றும் விளையாட்டு பதிவுகளை தவிர்த்து வந்தபோதும் அவற்றையும் பதிவிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. காரணம் எல்லோரையும் என் பதிவுப் பக்கம் திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணமே. அவ்வப்போது ஒரு சில நகைசுவை பதிவுகளை இடுகையிட்டபோது. சில நண்பர்களை இழக்கவேண்டி ஏற்பட்டது.

ஆரம்பத்திலே வைத்திருந்த எனது பதிவு தொலைந்துவிட்டது. இப்போது புதிய வலைப்பதிவிலே இருக்கிறேன். ஆரம்ப காலங்களிலே திரட்டிகளில் இணைப்பது பற்றி எதுவுமே தெரியாது. இரண்டு மாதங்களின் பின் திரட்டிகளில் வாக்களிப்பதற்கான வாக்களிப்பு பட்டையை என் வலைப்பதிவிலே இணைத்துவிட்டேன். அவ்வளவுதான். ஒரு மாதம் வரைக்கும் பதிவுகளை இணைப்பது பற்றித் தெரியாது. பின்னர் எல்லாவற்றையும் ஓரளவு கற்றுக் கொண்டேன்.

ஆரம்ப காலங்களிலே நான் பல வலைப்பதிவுகளுக்கு சென்றாலும் கருத்துரையிடுவதில்லை. ஆனால் தானாகவே எனது வலைப்பதிவுக்கு வந்து பல நண்பர்கள் ஊக்கப்படுத்தினார்கள். அவர்களிலே பிரபா, சிந்து, கலை, சசி, சக்கரை சுரேஷ், காயத்திரி போன்றோர் என்னை ஊக்கப்படுத்தி இருக்கின்றனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.

நான் புதிய வலைப்பதிவுக்கு வந்தபோது நிறையவே நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் சொல்வதென்றால் தொடர் பதிவே இட வேண்டும். அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இருந்தபோது ஒருவருக்கு நான் நன்றி சொல்லவேண்டும். இவரிடம் வலைப்பதிவு இல்லை என்னை ஆரம்ப காலம் முதல் எனக்கு கருத்துரைகள் மூலம் ஊக்கப்படுத்திவரும் கலா அவர்களுக்கு நன்றிகள். இவர் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் நான் விடுகின்ற சின்ன பிழைகளை கூட சுட்டிக்காட்டி திருத்துகின்ற ஒருவர். இவர் என் இடுகைகளிலே ஒரு எழுத்துக்குட பிழையாக இருக்கக் கூடாது என்று நினைப்பவர்.

எனக்கு இணையத்தளம், பிளாக்கர் தொடர்பான எந்த விதமான அறிவுமே இல்லை. (பொதுவாக தொழிநுட்பமே தெரியாது) இவைகளை அறிய வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அப்போது எந்த ஒரு தொழிநுட்ப பதிவுகளையும் விட்டு வைக்கவில்லை அனைத்தையும் தேடிப்படிப்பதுண்டு.

இதற்காக நான் தினமும் தமிழிஸ் திரட்டியின் தொழிநுட்ப பதிவுகளைப் பார்த்து வருகின்றேன். அப்பதிவுகளுக்கு சென்று அந்தப் பதிவரால் இடுகையிட்ட அத்தனை இடுகைகளையும் பார்ப்பதுண்டு அதனால் நிறையவே என்னை வளர்த்துக்கொள்ள முடிந்தது.

ஆரம்ப காலங்களிலே எனது வலைப்பதிவிலே பின்தொடர்வோர் கட்ஜெட் இருக்கவில்லை. இவற்றை இணைக்கவேண்டும் என்று இணைப்பதற்கான வழிகளை பல நாள் முயற்சியின் பயனாக தேடலின் மூலம் ஒரு வலைப்பதிவிலே கண்டுபிடித்துவிட்டேன். புதிய பதிவார்கள் பயன்பெற வேண்டும் என்று எவ்வாறு அந்த கட்ஜெட் எவ்வாறு இணைப்பது என்று ஒரு பதிவுமிட்டேன்.

இதுதான் அந்தப் பதிவு..

அதே போன்றுதான் எனக்கும் கூகிள் விளம்பரங்களை எனது வலைப்பதிவுக்கு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கூகிள் விளம்பரங்களுக்காக பதிவு செய்தேன் இன்னும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அறிந்தேன் ஆங்கிலப் பதிவுகளுக்கு உடனடியாக கூகிள் விளம்பரங்கள் கிடைப்பதாக அறிந்தேன். எனக்கு ஆங்கிலப் பதிவுகள் எழுதுமளவுக்கு அறிவு இல்லை என்பதனால் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஒரு எண்ணம் தோன்றியது ஆங்கில பதிவு ஆரம்பிக்கலாம் என்று. ஆரம்பித்துவிட்டேன் சினிமா நடிகர், நடிகைகளின் படங்களை இடுகையிட்டேன். நிறையவே பார்வையாளர்கள் வந்தார்கள் கூகிள் விளம்பரத்துக்கு பதிவு செய்தேன் அடுத்த நாளே அனுமதி கிடைத்தது. அந்த அந்த கணக்கு மூலம் எனது இந்த வலைப்பதிவிலே கூகிள் விளம்பரங்களை போட்டிருக்கிறேன்.

கூகிள் விளம்பரங்களை பெற விரும்பும் பதிவர்கள் இலகுவாக இந்த முறை மூலம் கூகிள் விளம்பரங்களை பெற முடியும் நான் இதுவரை நான்கு வலைப்பதிவுகளுக்கு கூகிள் விளம்பரம் பெற்றிருக்கிறேன் இந்த முறை மூலம். பதிவு செய்து அடுத்த நாளே அனுமதி கிடைத்துவிடும். பின்னர் எமது தமிழ் வலைப்பதிவுகளில் பயன்படுத்த முடியும்.

பதிவுலகிலே சில விடயங்கள் என்னை கவலையடைய வைத்ததுண்டு. நான் எவரையும் ஒரு போதும் தனிப்பட்ட ரீதியில் தாக்கி பதிவிட்டதில்லை என் கருத்துக்களை சொல்கின்றேன். யார் ஏற்றுக்கொள்ளக் கூடிய விமர்சனங்களை முன் வைத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் சில பெயர் குறிப்பிடாதவர்கள் தேவையற்ற விதத்திலும், தகாத வார்த்தைகளாலும் கருத்துரை இடுகின்றனர்.


சில மிரட்டல்கள் என்று இன்னும் பல விடயங்களை சொல்லலாம். இந்த தாக்குதல்களால் இன்னும் எழுத வேண்டும் எண்ணமே வந்தது.

இந்த பதிவுலகிலே உலகெங்குமிருந்து பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர் அவர்களுக்கு எனது நன்றிகள். எழுத்துத் துறையிலே இன்னும் நான் வளரவேண்டும் என்று நினைக்கின்றேன். இன்னும் என்னை வளர்த்துக்கொள்வேன். நல்ல விடயங்களை பதிவிடவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது என்றும் நண்பர்களின் ஆதரவும் இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.


இந்த தொடர் பதிவினை தொடர்வதற்கு நான் யாரையும் அழைக்கவில்லை. பலர் பதிவிட்டு விட்டார்கள். தொடர விரும்பும் யாரும் தொடரலாம்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

31 comments: on "என்னைக் கதை சொல்ல சொன்னால்...."

ஸ்ரீராம். said...

வலைப் பயணம் மேலும் மேலும் இனிமையானதாக ஆக வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

இன்னும் சப்மிட் ஆகாததால் ஓட்டுப் போடவில்லை!

Starjan (ஸ்டார்ஜன்) said...

உங்களை பத்தி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி

Subankan said...

அட!, இவ்வளவு கதையிருக்கா? சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.

Anonymous said...

//துணிவும், தன்னம்பிக்கையும், தமிழ் பற்றும் என்னோடு கூடப் பிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும். என்னில் எனக்கு மட்டுமல்ல என் நண்பர்களுக்கே என்னிடம் பிடிக்காத விடயம் நான் அநீதிகளை யாராக இருந்தாலும் தட்டிக் கேட்பதுதான்.//

வேற்? போடாங்,,,,,,,,

யோ வொய்ஸ் (யோகா) said...

கடந்து வந்த பாதையை அழகாக எழுதியிருக்கிறீர்கள் சந்ரு, வாழ்த்துக்கள்.

Kala said...

இதைப் படித்தவுடன் உங்களை எப்படிப்
பாராட்டுவதென்றே புரியவில்லை.எவ்வளவு
கஷ்ரப்பட்டு,ஆர்வத்துடன் பல இடங்களில்
தேடி கண்டுபிடித்து அப்பப்பா....

இது..இது.இதுதான் வேண்டும் உங்களைப்போல்
உள்ள இளைஞர்களுக்கு!உங்கள் தேடல்{எதிலும்}
தொடரவேண்டும்,அப்பதான் ஒரு ஆர்வம்,துடிப்பு
வரும்,இது வந்தால் மற்றவைகள் தானாக
உங்களிடம் வந்து சேர்ந்துவிடும்.
ஒளிமயமான எதிர்காலம் உங்கள் எண்ணத்தில்,எழுத்தில்
பிரகாசிக்கின்றன.ஒளி பரவட்டும்! பிராத்தனையுடன்...
வாழ்த்துக்கள்.நன்றி.

Menaga Sathia said...

அழகா எழுதிருக்கிங்க,சந்ரு.வாழ்த்துக்கள்!!

Admin said...

// ஸ்ரீராம். கூறியது...
இன்னும் சப்மிட் ஆகாததால் ஓட்டுப் போடவில்லை!//


நன்றி நண்பா

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...
இன்னும் சப்மிட் ஆகாததால் ஓட்டுப் போடவில்லை!//


நான் திரட்டிகளில் இணைக்க முன்னரே கருத்துரையிட்டு விட்டிர்களே.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
உங்களை பத்தி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி//

நன்றி நண்பா நீங்களும் தொடரலாம்...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//Subankan கூறியது...
அட!, இவ்வளவு கதையிருக்கா? சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.//

இன்னும் நிறையவே இருக்கிறது தம்பி...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//பெயரில்லா கூறியது...
//துணிவும், தன்னம்பிக்கையும், தமிழ் பற்றும் என்னோடு கூடப் பிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும். என்னில் எனக்கு மட்டுமல்ல என் நண்பர்களுக்கே என்னிடம் பிடிக்காத விடயம் நான் அநீதிகளை யாராக இருந்தாலும் தட்டிக் கேட்பதுதான்.//

வேற்? போடாங்,,,,,,,,//

இதெல்லாம் ஒரு....

Admin said...

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...

கடந்து வந்த பாதையை அழகாக எழுதியிருக்கிறீர்கள் சந்ரு, வாழ்த்துக்கள்.//

நீங்களும் எழுதவில்லை என்று இப்போதுதான் அறிந்தேன் நீங்களும் தொடருங்கள் யோகா..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//Kala கூறியது...
இதைப் படித்தவுடன் உங்களை எப்படிப்
பாராட்டுவதென்றே புரியவில்லை.எவ்வளவு
கஷ்ரப்பட்டு,ஆர்வத்துடன் பல இடங்களில்
தேடி கண்டுபிடித்து அப்பப்பா....

இது..இது.இதுதான் வேண்டும் உங்களைப்போல்
உள்ள இளைஞர்களுக்கு!உங்கள் தேடல்{எதிலும்}
தொடரவேண்டும்,அப்பதான் ஒரு ஆர்வம்,துடிப்பு
வரும்,இது வந்தால் மற்றவைகள் தானாக
உங்களிடம் வந்து சேர்ந்துவிடும்.
ஒளிமயமான எதிர்காலம் உங்கள் எண்ணத்தில்,எழுத்தில்
பிரகாசிக்கின்றன.ஒளி பரவட்டும்! பிராத்தனையுடன்...
வாழ்த்துக்கள்.நன்றி.//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
அழகா எழுதிருக்கிங்க,சந்ரு.வாழ்த்துக்கள்!!//


நீங்களும் இத் தொடர் பதிவை பதிவிடவில்லை என்றால் பதிவிடுங்கள்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சந்ரு , நான் இந்த இடுகை ஏற்கனவே எழுதிட்டேன் .

அழைப்புக்கு மிக்க நன்றி நண்பா

நானும் என் வரலாறும் - தொடர்பதிவு

தர்ஷன் said...

மேலும் சிறப்பாய் எழுதிப் புகழ் பெற வாழ்த்துக்கள்

Anonymous said...

//துணிவும், தன்னம்பிக்கையும், தமிழ் பற்றும் என்னோடு கூடப் பிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும். என்னில் எனக்கு மட்டுமல்ல என் நண்பர்களுக்கே என்னிடம் பிடிக்காத விடயம் நான் அநீதிகளை யாராக இருந்தாலும் தட்டிக் கேட்பதுதான். இதனால் பல பிரஷ்சினைகளுக்கும் முகம் கொடுத்ததுண்டு.//

No wonder.. Same blood. I told you right that I started reading your blog after knowing about yourself only... Hats off Sandrunna... Glad to say that you are my friend too.. Could say that am so PROUD of you...

Ignore those idiots btw...

Atchuthan Srirangan said...

வாழ்த்துக்கள் சந்ரு அண்ணா...........

சுசி said...

நல்லா எழுதி இருக்கீங்க சந்ரு.

உங்கள் ஆர்வமும் திறமையும் உங்களை இன்னும் உயர் நிலைக்கு கொண்டு செல்லும்.

வாழ்த்துக்கள்.

Nathanjagk said...

//துணிவும், தன்னம்பிக்கையும், தமிழ் பற்றும் என்னோடு கூடப் பிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.//
இ​தை நன்கு நானறி​வேன்!
//சில விடயங்களை பதிவிட முடியாது இருக்கின்றபோது கவலைதான்//
எதற்கு கவ​லை? துணிந்து ​எழுதுங்க! தூள் கிளப்புங்க! நாங்க.. அட அட்லீஸ்ட் நானிருக்​கேன் மாப்ள!
//கலா அவர்களுக்கு நன்றிகள். இவர் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் நான் விடுகின்ற சின்ன பிழைகளை கூட சுட்டிக்காட்டி திருத்துகின்ற ஒருவர்.//
ஆமாமா.. பி​ழைகள் சுட்டிக் காட்டுவதில் கலா ​கெட்டிக்காரர்தான்..! நன்கு அறிந்தவன் என்கிற மு​றையில் ​சொல்கி​றேன்.. என்ன கலா.. ​மே..டம்.. க​ரெக்டா?
//இந்த பதிவுலகிலே உலகெங்குமிருந்து பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர்//
நானும் இருக்​கேன்னில்ல??

ஆ.ஞானசேகரன் said...

கடந்து வந்த பாதைகள் நன்று வாழ்த்துகள் நண்பா

Unknown said...

பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.....

பித்தனின் வாக்கு said...

அன்பு நண்பரே, நான் தங்களுக்கு ஒரு விருதினை அளித்துள்ளேன், அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்க வேண்டுகின்றேன். நன்றி.

Kala said...

ஐயா ஜெகநாதன் அவர்களே!
அந்த ஆமாமா....எதையோ ஒன்றைச்
சொல்வது போல் தெரிகிறது.

மே...{டம்} ஏன்?என்மேல் இவ்வளவு
கோபம் இப்படித் திட்டும் அளவுக்கு
நான் ஒன்றும் தப்புச் செய்யவில்லையே!

Chitra said...

"சினிமா நடிகர், நடிகைகளின் படங்களை இடுகையிட்டேன். நிறையவே பார்வையாளர்கள் வந்தார்கள் கூகிள் விளம்பரத்துக்கு பதிவு செய்தேன் அடுத்த நாளே அனுமதி கிடைத்தது."
------------------ உங்களது உண்மையான வெளிப்படையான பேச்சு அசத்தல். வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

அருமை சந்ரு

மிக அழகாக நீங்கள் கடந்து வந்த பாதையை விவரித்து இருக்கிறீர்கள்

எனக்கு கூட இன்னும் பல விஷயங்கள் தெரியாது

உங்கள் பதிவில் பின் தொடர்பவர்கள் பற்றி அறிந்து கொண்டேன் நன்றி நண்பரே

மயில்வாகனம் செந்தூரன். said...

பணிவும், தன்னடக்கமும் தோற்றதாக வரலாறே இல்லை........ உங்களிடம் அது நிறையவே உள்ளது அண்ணா.... நீங்கள் இன்னும் இன்னும் சாதனைகள் படைக்க இதயங்கனிந்த வாழ்த்துக்கள்..... உங்களால் அழைக்கப்பட்ட ஒரு தொடர் பதிவை என்னால் தொடரமுடியாமல் போனமைக்காக தயவு செய்து மன்னிக்கவும் அண்ணா........

தங்க முகுந்தன் said...

இவ்வார யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவருக்கு எமது வாழ்த்துக்கள்!

Post a Comment