Saturday 24 October 2009

தொல்லை தரும் தொலைபேசிக் கலாச்சாரம்...

கிடைத்த சிறிது நேரத்தில் ஒரு மீள் பதிவு விரைவில் எனது வழமையான பதிவுகள் தொடரும்.


இன்று கையடக்கத்தொலைபேசி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது. கையடக்கத்தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தமது பாவனயளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த கையடக்க தொலைபெசிப்பாவனயால் நன்மைகள் இருந்த போதும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.



எது எப்படி இருப்பினும் இந்தப்பதிவில் எனது நண்பர்களுக்குள் நிகழ்ந்த சில கையடக்கத்தொலைபேசி உரையாடல் தொடர்பான சுவாரஸ்யமான பல சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.



இன்று இலங்கையில் வலயமைப்புகளிடையே பல ஆயிரக்கணக்கான நிமிடங்கள் வெளித்செல்லும் அழைப்புகள் இலவசம் என்றதுமே எனது நண்பர்களுக்கு சந்தோசம் சொல்லவே தேவை இல்லை. எனக்கும்தான்....



நானும் நண்பர்களும் அடிக்கடி எங்கள் ஊரில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஆலயத்துக்கு வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் செல்வோம் கடவுளின் தரிசனத்துக்காக அல்ல வேறு தரிசனம் கிடைப்பதுக்காக. இரு நாட்களிலும் பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அதனால் எப்படியோ சென்று விடுவோம்.
அங்கு ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு உதவி செய்வது. என்ன உதவி என்று கேட்காதிங்க சொல்றன் பொங்கல் பொங்கி கொடுப்பது..... இதிலும் எனது நண்பர்கள் படு கில்லாடிகள் அழகான பெண் பிள்ளைகளுடன் வந்திருக்கும் பக்தர்களுக்கு அதிகமாகவே உதவி செய்வார்கள்.




அது மட்டுமல்ல அந்த பெண் பிள்ளைகளுடன் எப்படியோ கதைத்து தொலைபேசி இலக்கத்தை வாங்கிக்கொள்வார்கள். இனி என்ன நடக்கும் நான் சொல்லத்தேவை இல்லை....




இப்போ விடயத்துக்கு வருகிறேன் ஒருஞாயிற்றுக்கிழமை நண்பர்களும் நானும் கோவிலுக்கு சென்றிருந்தோம். ஆலயத்தில் நடந்த சில உண்மை சம்பவங்கள்.....


ஆலயத்தில் பொங்கல் பானைகள் பக்கத்தில் பக்கத்தில் இருக்கும் ஒரு நண்பன் ஒரு இடத்திலும் மற்ற நண்பன் என்னொரு இடத்திலும் இருக்கிறார்கள் ஒரு நண்பன் மற்ற நண்பனிடம் அழைப்பை எடுத்து சொன்னான் அடுப்பு எரியவில்லை பாருடா என்று அவர்களுக்கு இடைப்பட்ட துரம் 5 மீற்றர்தான்.



எனது ஒரு நண்பனின் ஒரு நண்பி ஆலயத்துக்கு வந்து இருந்தார். அப்பொழுது பூசை நேரம் எனது நண்பர் தனது நண்பிக்கு அழைப்பை எடுத்தார். அவர் அந்த நண்பியிடம் கேட்டார் என்ன கேட்டு கும்பிடுறிங்க எனக்கும் ஒரு நல்ல கேர்ள் பிரென்ட் கிடைக்கணும் எண்டு கும்பிடுங்க என்று.



கடவுளுக்கே கோல் பண்ணி பேசுவாங்க போல இருக்கிறது....
விட்டுக்கு வந்தா விடுறாங்களா இரவில் நித்திரை செய்வதுக்கு. இரவு பகலாக மிஸ் கோல் நள்ளிரவில் கோல் பண்ணி தேவை இல்லாமல் கதைத்து வெறுப்பு ஏற்றுவது



என்னும் ஒரு பழக்கம் பல பசங்களிடம் இருக்கிறது யாராவது பெண் பிள்ளைகளின் தொலைபேசி இலக்கத்தை எப்படியோ எடுத்துன் மிஸ் கோல் பண்ணுவது இரவிலே தூங்க விடாமல் வெறுப்பு ஏற்றுவது


பசங்க மட்டுமா நம்ம சில பெண்களும்தான் சில பொண்ணுகளுக்கு இரவில் கோல் பண்ணினா வேய்டிங்தான் இரவு 12 , 01 மணிக்கும் வெயிட்டிங்க்தான்... என்னதான் நடக்கிறதோ தெரியல்ல...



இன்று கையடக்க தொலை பேசிகளின் பாவனை அதிகரித்து விட்டது என்பது நாம் அறிந்தது. சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவர் கையிலும் இன்று தவழ்ந்து பலரை சீரழித்துக்கொண்டு இருக்கிறது இந்தத் தொல்லைபேசி என்று சொல்லலாம்.


கையடக்க தொலைபேசி நல்ல விடயங்களுக்கு பயன் படுத்தும் காலம் மாறி இன்று தொலைத்துதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் போட்டியின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பட்ட சேவைகளை போட்டி போட்டுக்கொண்டு வழங்குகின்றன.



ஒரு நண்பர் தனது நண்பி ஒருவருக்கு இரவு 9 மணியளவில் அவசர செய்தி ஒன்று சொல்வதற்காக அழைப்பினை எடுத்து இருக்கிறார். அந்த நண்பி வெய்ட்டிங்கில் இருந்திருக்கிறார் நண்பரோ அவசர செய்தி சொல்லவேண்டியவர் பலதடவை அழைப்பினை எடுத்து பார்த்தார் அழைப்பு கிடைக்கவில்லை வேய்டிங்தான். நண்பரும் விடவில்லை நள்ளிரவு 1.30 போல் நண்பிக்கு அழைப்பு கிடைத்தது. நண்பர் கேட்டார் 9 மணிமுதல் 1.30 வரை இந்த இரவில் யாரோடு பேசுனிங்க என்று. நண்பி சொன்ன பதில் அண்ணாவோடு பேசினேன் என்றார். நண்பர் நினைத்தார் அண்ணா எதோ வெளி நாட்டில் இருக்கிறார் என்று. அண்ணா எங்கே இருக்கிறார் என்று கேட்டார். நண்பி சொன்னார் அண்ணா பக்கத்து ரூம்ல இருக்கிறார் என்று . நண்பருக்கு கோபம் கோபமாக வந்ததாம். ஒரு வீட்டில் இருந்து கொண்டு பக்கத்து ரூம்ல இருக்கும்இந்த நேரத்துல ...... கடவுள்தான் காப்பாத்தணும்



பெரிய தேன்னை மரங்களிலே தேங்காய் பறிப்பவர்கள் மரத்திலே ஏறி தேங்காய் பறிக்கும் போது ஒரு தேங்காயை பறித்து கிழே போடுவார் கிழே நிற்பவர் அது தேங்காயா என்று பார்த்து சத்தம் போட்டு சொல்லுவார் மரத்தில் இருப்பவரும சத்தம் போட்டு தேங்காயா என்று கேட்பார் அது அந்த பிரதேசத்தில் எல்லோருக்கும் கேட்கும்படியாக இருக்கும். இது அந்தக்காலம். இன்று மரத்தில் ஏறுபவரும் கிழே நிற்பவரும் தொலை பேசியில் உரையாடுகின்றார்கள்.

இன்று வாகனங்களிலே பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகரித்து விட்டது. அது ஒருபுறமிருக்க. ஒரு தெருவோர பிச்சைக்காரன் ஒரு பேருந்து தரிப்பிடத்திலே. யாருமற்ற ஒரு பக்கம் சென்றான் என்ன செய்கிறான் என்று பார்த்தேன் தொலைபேசியை எடுத்து தனது மற்ற நண்பனிடம் சொல்கிறான் பஸ்சில் சனக்கூட்டம் அதிகமாக இருக்கிறது உடனே வரவும் என்று.

தொலைபேசி முலமாக நண்பர்களிடையே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் எடம் பெறுவதோடு சில வேளைகளில் அவர்களது நட்புக்கும் பாதிப்பு ஏற்படுவதுண்டு. அதே போன்று ஒரு சம்பவம்தான் இது.

ஒரு நண்பர் தன்னுடைய ஒரு நண்பரை கலாய்க்க விரும்பினார். அதற்கு தனது காதலியை துரும்பு சீட்டாக பயன் படுத்தினார். அது வேறு விபரிதமாகிவிட்டது.

ஒருவர் தனது காதலியிடம் தனது நண்பனின் தொலைபேசி இலக்கத்தினை கொடுத்து.தனது நண்பருக்கு அழைப்பினை எடுத்து யார் என்று சொல்லாமல் காதலிப்பது போல் கலாய்க்க சொல்லி இருக்கிறார். 2, 3 நாட்கள் நன்றாகவே நண்பரை குழப்பி இருக்கிறார்கள். அத்தோடு முடியவில்லை காதலியோ காதலனுக்கு தெரியாமல் அடிக்கடி அழைப்பினை எடுத்து கதலனின் நண்பனோடு காதலனுக்கு தெரியாமல் பேச ஆரம்பித்து விட்டார். இன்னும் சொல்ல வேண்டுமா?........



இன்று குரல்களை மாற்றிப்பேசும் தொலைபேசிகள் முலமும் நிறையவே நம்ம பசங்கள பசங்களே பெண்களாக நடித்து ஏமாற்றிக்கொண்டு இருகாங்க. பெண்கள் ஏமாற்றியது போதாதா நண்பர்களே நீங்களும் ஏமாற்றனுமா...



இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் சொல்ல முடியாத விசயமும் நிறையவே இருக்குங்க...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

7 comments: on "தொல்லை தரும் தொலைபேசிக் கலாச்சாரம்..."

thiyaa said...

இப்ப கை இல்லாட்டிலும் பரவாயில்லை கைப்பேசி முக்கியம் என்று ஆயிப் போச்சு

யோ வொய்ஸ் (யோகா) said...

இதை ஒன்றும் பண்ண முடியாது சநரு. கைபேவிகள் காலத்தின் தேவை

ஆ.ஞானசேகரன் said...

நண்பா, கைபேசி இல்லாவிட்டால் உலகமே நம்மை துண்ட்டாக்கி விட்டது போல உணர்கின்றேன்..

ஸ்ரீராம். said...

கை பேசிகள் காலத்தின் கட்டாயம்! கம்ப்யூட்டர் கேம்ஸ் போல அதிலேயே உள்ள கேம்ஸ் மக்களை கவர்வதை விட்டு விட்டீர்களே...குறுஞ்செய்தி கூட!

தங்க முகுந்தன் said...

சந்ரு!

தொலைபேசியில் பேசினாலும் பரவாயில்லை - இப்போது வந்திருக்கும் சில தொலைபேசிகளால் பெருந்தொல்லை! புகையிரதத்திலும் - பஸ்ஸிலும் பயணிக்கும்போது பலர் பாடல் கேட்டு மற்றவர்களைத் தொந்தரவு செய்வது! காதில் போட்டு தாம் தனியாகக் கேட்கும் கருவியிருந்தும் எம்மவர்கள் பலர் உரத்துப் பாடலைப் போடுவதால் சில வேளைகளில் ஓட்டுனரிடமும் - ரிக்கற் பரிசோதகரிடமும் இங்கு முறையாக வாங்கிக் கட்டுவார்கள்! எமக்கு மானம் போகிற மாதிரி ஒரு உணர்வு! யாரிடம் சொல்வது?

Unknown said...

//சில பொண்ணுகளுக்கு இரவில் கோல் பண்ணினா வேய்டிங்தான் இரவு 12 , 01 மணிக்கும் வெயிட்டிங்க்தான்...//

எங்கயோ புகைஞ்சு மணக்கிற மாதிரி இருக்கே.... ஓ... அது உங்கட வயிறா? ஹி ஹி....

நம்மவர்களுக்குத் தான் எதையும் அளவோடு பயன்படுத்தத் தெரியாதே...

அப்படியே, பதிவின் ஆரம்பத்தில் 'மீழ் பதிவு' என்றிருக்கிறது, 'மீள் பதிவு' என்று மாற்றிவிடுங்கள்...

அத்தோடு நீங்கள் ஏன் யாழ்தேவியில் உங்கள் பதிவை புதுப்பிப்பதில்லை? பலமுறை கவனித்திருக்கிறேன்...
ஏதாவது காரணமா???

maruthamooran said...

////நானும் நண்பர்களும் அடிக்கடி எங்கள் ஊரில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஆலயத்துக்கு வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் செல்வோம் கடவுளின் தரிசனத்துக்காக அல்ல வேறு தரிசனம் கிடைப்பதுக்காக. இரு நாட்களிலும் பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அதனால் எப்படியோ சென்று விடுவோம்.////

நீங்களுமா?

Post a Comment