Thursday 1 October 2009

நாளைய தலைவர்களின் இன்றைய நிலை..

நம் சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பிலே அதிகம சிந்திப்பவன் நான். பல்வேறு காரணங்களினால் நமது சிறார்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிட்டன... சரி முதலில் படங்களைப் பாருங்கள் அப்புறம் கதைகளை சொல்லுங்கள்...

இதுதான் நம் வாழ்க்கையா?


என்ன பாவம் செயதேனோ

தமிழனாய் பிறந்ததால் கையேந்தும் நிலை

சிறுவர்நாம் என்ன கொடுமை செய்தோம்






ஏன் கை ஏந்துகிறீர்கள் கை ஏந்தவேண்டியவர்களா நீங்கள்....
காத்திருப்பே எமது வாழ்க்கையாகிப்போனதேன்....
என்றுதான் எமக்கு விடிவு கிடைக்குமோ.....
இதுதான் என் அழகிய தேசம்...
தொலைத்துவிட்ட எம் நிம்மதியைத் தேடிடும் பயணம்....
என் சொந்த மண்ணிலும் காலுன்ற முடியவில்லை என்னதான் நடக்கிறது உலகமென்பது இதுதானா...
தடைகளை தாண்டுவதா இல்லையா .... முளையிலே தடை போடும் தேசமிது....
இங்கேயாவது சற்று நிம்மதியாக விளையாடலாமா....


ஏக்கத்தோடு சந்தொசப்படுவதேன்றால் முடியுமா.....
வாழ்க்கையின் சுமை கையிலும், மனதிலும்.....




அறியாத பருவம் விடுங்கள்........ அவன் எதையும் அறியும் காலம் தொலைவில் இல்லை....


வாழ்க்கையின் சுமை என்பது இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா


எதற்காக இந்த ஆழ்ந்த சிந்தனை நம் சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டு விட்டனவே...

????????????இதுதான் வாழ்க்கை என்பதா.....
இதுதான் உலகமென்பதா....

இதுதான் நம் விதி....


இதனையும் பாருங்கள்

இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன....

படங்கள் பல இணையத்தளங்களில் பெறப்பட்டவை.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

26 comments: on "நாளைய தலைவர்களின் இன்றைய நிலை.."

அ. நம்பி said...

//அறியாத பருவம் விடுங்கள்........ அவன் எதையும் அறியும் காலம் தொலைவில் இல்லை....//

`அறியும் காலம் தொலைவில் இல்லை' என்பதனையும் அறியாத பருவம்; மகிழ்ச்சியில் திளைக்கிறான்; திளைக்கட்டும்.

ஆனால் அறியும் பருவத்தை அவன் அடையும்போது, `ஏன் இப்பருவம் எய்தினோம்' என்று எண்ணி அவன் கலங்கக்கூடாது.அதற்கு ஆவன செய்யவேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.

gayathri said...

kastama iruku pa

Unknown said...

போரில் சிறுவர்கள் ஈடுபட்டார்களா? அவர்கள் போரை விரும்பினார்களா?
அவர்கள் யாரையும் கொன்றார்களா?

ஆனால் பாருங்கள் சிறுவர்கள் தான் மோசமாகப் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள்...

இவற்றைப் பார்த்து 'உச்சுக் கொட்டுவதே' எம் வாழ்க்கையாகிவிட்டது...

என்று திருந்தும் இந்த ஆறறிவு மிருக இனம்?

Anonymous said...

:(

க.பாலாசி said...

கொடுமைகளில் இத்தனைவிதங்களா? வலிக்கிறது நண்பா....

ஸ்ரீராம். said...

"என் சொந்த மண்ணிலும் காலூன்ற முடியவில்லை..." Touching.

சுசி said...

வார்த்தைகள் ஏதுமில்லை...

எழில் said...

30 வருஷ போராட்டம் என்று சொன்னது இதை பெற்றுத்தரத்தானா?

ஆ.ஞானசேகரன் said...

சொல்ல தெரியாத வலிகள் ஏற்படுத்திவிட்டது

Kala said...

இதைப் பார்த்து கதை சொல்ல வருமா?
பார்த்துப், பார்த்து கேட்டுக் கேட்டு கண்ணீர்,
இதயம்,உணர்ச்சிஎல்லாமே வற்றிவிட்டன.
என்ன சொல்ல..........????

இது நம்ம ஆளு said...

பல்வேறு காரணங்களினால் நமது சிறார்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிட்டன..

சொல்ல தெரியாத வலிகள் ஏற்படுத்திவிட்டது

இறக்குவானை நிர்ஷன் said...

என்னத்தச் சொல்ல?????

Anonymous said...

வலிக்கும் இதயத்திற்கு வழி சொல்ல தெரியவில்லை வாய்விட்டு அழவும் முடியவில்லை......பரிதாபப்பட பிடிக்கவில்லை பார்த்துக் கொள்ளவும் முடியவில்லை என் இயலாமைக்கு வெட்கி தலைகுனிகிறேன்...

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப கஷ்டமா இருக்கு சந்ரு

ஹேமா said...

சந்ரு,என்ன சொல்ல.
கேட்பாரில்லாமல் போய்விட்டோமே.
இனி என்ன ஆகும் என்று எதிர்பார்த்தபடிதான் ஒவ்வொரு நாளும்.

ஹேமா said...
This comment has been removed by the author.
Nathanjagk said...

கனக்கிறது மனம்! எல்லா நிழல்களிலும் நிறைந்திருக்கிறது தடுக்கிவிடும் ​சோகம்!உள்ளுறைக்​கோபத்தை உணர்ச்சி வழியலாக சிதறடிக்காமல்.. இன்னும் பூக்கள் பூக்கும், ​வெயில் சாய்க்கும் நிழல் இதமாய் இருக்கும், பின் பனிக்காலத்தில் பிறைநிலா பார்ப்போம், மாறிய உலகின் அதிசயங்கள் வியப்போம் என்று உளமார நம்புகிறேன். வலிகள் மறையும்; ஈடு​செய்ய முடியா இழப்புகளுக்களை, மண் தன் ப்ரக்ஞையில் விதைத்துக் கொள்ளும்!
இந்த நிலை மிகமிகத் தற்காலிகம் என்று நம்புகிறேன். மாறும் என்று நம்புவோம் நண்பா!

ilangan said...

எங்களால் வருந்த மட்டுமே முடிகிறது...

வால்பையன் said...

மகா கொடுமை!

இலங்கன் நிலை தான் எனக்கும்!

சாரங்கன் said...

ஹாய் சந்துரு!
இன்றைய மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் உங்களது வலைப்பூ பற்றிய விபரங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தது. உங்களது வலைப்பூ நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

Muniappan Pakkangal said...

Nalla visual pathivu Shanthru abt IDP.Something miracle should happen.

ஸ்ரீராம். said...

என்ன ஆச்சு? நீ....ண்ட மௌனம்? உடம்பு சரி இல்லையா? அல்லது விடுமுறையில் சென்றுள்ளீர்களா?

ஆரூரன் விசுவநாதன் said...

வலியைப் போக்க வழி தெரியவில்லை.....

அழுது தீர்க்க மனமொப்ப
வில்லை.....


அடிமீது அடி,
வலியோடு வலி-ஆயினும்
மறுத்துப் போகவில்லை-இனி
மறக்கப்போவதுமில்லை.

Jaya.Sivanathan said...

புலத்தில் இருக்கும் எல்லோரும் இணையத்தில் ஒலை விட்டுக்கொண்டு இருந்தால் யார் தான் ஐயா காக்கப்போகிறார் இனி உஙள் உறவுகளை ?
நான் ஜெயா தேனூர் { தேத்தா தீவு

Post a Comment