ஜெகநாதனால் கேட்கப்பட்ட கேள்விகள் இதோ..
மொழி கலப்புப் பற்றி.. மொழியின் அளப்பெரிய சிற்பம்சம் அது ஒன்றை ஏற்கும் போது ஒன்றை மற்றதுக்கு கொடுத்தும் விடுகிறது. Cashew nut கதை தெரியும்தானே?மொழிக்கலப்பு பரஸ்பர கைகுலுக்கல் மாதிரிதான். மொழியை எந்த ஒரு வேற்று மொழியும் ஊருடுவி அழிக்க முடியாது (அல்லது இப்படிசெத்துப்போன மொழிகளின் பட்டியல் எனக்குத் தெரியாது)கிரேக்க, லத்தீன் வார்த்தைகளை நீக்கிவிட்டால் ஆங்கில அகராதி பாக்கெட் நாவல் சைஸ்தான் வரும்.
August 1, 2009 6:54 AM
அன்பு சந்ருவுக்கு நட்புநாள் நல்வாழ்த்துக்கள்! என்னங்க என் கருத்தைப் பற்றி ஏதாவது சொல்வீங்கன்னு பாத்தா, பதிலையே காணோம்? கோபமாயிட்டீங்களோ? சரி, விடுங்க, அங்க இலங்கையில் ரத்தினபுரின்னு ஏதாவது ஊரு இருக்கா என்ன?
August 2, 2009 6:46 பம்
.நான் எனது இடுகைகளிலே வலியுறுத்தி வந்த விடயம் நான் வேற்று மொழிகளை எதிர்ப்பவனோ, வெறுப்பவனோ அல்ல என்று. எமது தமிழ் மொழியிலே வேற்று மொழிகள் தேவையற்ற விதத்திலே கலப்பதனையே எதிர்க்கிறேன். அன்று நாம் பயன் படுத்திவந்த பல இனிய தமிழ் சொற்கள் இன்று பயன் பாட்டிலே இருக்கின்றதா? இல்லையே அவற்றுக்கு பதிலாக நாம் ஆங்கில வார்த்தைகளையே பயன் படுத்துகின்றோம்.இதனையே நான் எதிர்க்கிறேன்.
அதற்காக நான் விஞ்ஞான தொழிநுட்ப, புதிய கண்டுபிடிப்பு சொற்களுக்கு உடனடியாக தமிழ் சொற்கள் அறிமுகப் படுத்த வேண்டும் என்றும் வாதிடவில்லை. அவற்றுக்கு கணணி அல்லது கணினி, இணையம் போன்ற சொற்கள் பாவனையில் வந்ததைப்போல் காலப்போக்கில் பாவனைக்கு வரலாம். இன்று இணையம் என்பதற்கு பல சொற்கள் பயன் படுத்தப்படுவது உண்மைதான். அது பாரிய குழப்பத்தை, பிரட்சனையை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.
தமிழ் மொழியிலே சொற்களுக்கு பஞ்சமில்லை ஒரு சொல்லுக்கு எத்தனையோ ஒத்த கருத்துச் சொற்கள் இருக்கின்றன. உதாரணமாக நாம் சந்திரனுக்கே எத்தனை ஒத்த கருத்துச் சொற்களை பயன் படுத்துகின்றோம். (நிகண்டு இதற்கு ஆதாரம்). அதே போன்றுதான் இணையம், கணணி போன்ற சொற்களுக்கும் பல ஒத்தக்கருத்துச் சொற்கள் வருவதில் தப்பு இல்லை.
என்னால் பல புத்தகங்களை ஆதாரம் காட்டி வாதிட முடியும் அதேபோல் வேற்று மொழிக்கலப்பு தமிழ் மொழியை கொலை செய்யவில்லை என்றும் வாதிட முடியும் அதுவல்ல என் வாதம் தேவையற்ற விதத்திலே தமிழ் மொழியோடு வேற்று மொழி கலப்பதனால் தமிழ் மொழி சீரழிக்கப்படுகின்றது என்பதேதான்.
நான் தமிழ் மொழியோடு புதிய தமிழ் சொற்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த இனிய தமிழ் சொற்களை பாவனைக்கு மீண்டும் கொண்டு வரவேண்டும் என்றுதான் சொன்னேன்.
இலங்கையைப் பொறுத்தவரை அன்று தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.போன்ற பல இனிய சொற்கள் அன்று மக்களின் பயன்பாட்டிலே இருந்தன ஆனால் அவை இன்று பயன் பாட்டில் இருப்பது குறைவு அப்படிப்பட்ட சொற்களையே நான் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்கின்றேன். புதிய சொற்களை கண்டு பிடித்து பயன் பாட்டுக்கு கொண்டுவர தமிழ் மொழியிலே சொற்களுக்கு பஞ்சமில்லை. நாம்தான் அறியாமல் இருக்கின்றோம். இச் சொற்களை பயன்போட்டுக்கு கொண்டுவர முடியும் என்பதே எனது வாதம்.
என்னால் கூட சில மொழிகள் தமிழிலிருந்துதான் தோற்றம் பெற்றன என்று வாதிட முடியும். சிங்களம் கூட தமிழ் மொழியிலிருந்துதான் தோற்றம் பெற்றது என்று என்னால் வாதிட முடியும். சிங்களத்திலே எத்தனை சொற்கள் தமிழ் சொற்களை ஒத்த சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. உதாரணமாக ஊஞ்சல், பாடலை நாம் சிந்து என்று சொல்வதுண்டு, காலை நேரத்தினை நாம் உதயம் என்று சொல்வதுண்டு, என்னும் ஏராளமான சொற்கள். இவற்றுக்கு சிங்களத்திலே என்ன சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன என்று யோசித்துவிட்டு சொல்லுங்கள் சிங்களம் தமிழிலிருந்துதானே வந்திருக்க வேண்டும்.
என்வாதம் இதுவல்ல எந்த மொழி எந்த மொழியிலிருந்து வந்தது என்பதல்ல. தமிழ் மொழியோடு வேற்று மொழிகள் தேவையற்ற விதத்தில கலப்பதை தடுக்கவேண்டும் என்பதே என் கருத்து.
எது எப்படி இருப்பினும் தமிழன் தமிழனாகவும், தமிழ்மொழி தமிழ் மொழியாகவும் இருந்தால் சரிதான்.
இரத்தினபுரி என்று இலங்கையிலே இரத்தினக் கற்களுக்கு பிரசித்தி பெற்ற இடம் இருக்கிறது. இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் இடம், பல உயர் தரமான இரத்தினக் கற்கள் இங்கே கிடைக்கின்றன இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்போகலாம். ...
21 comments: on "தமிழர்கள்தான் சிந்திக்க வேண்டும்"
//எது எப்படி இருப்பினும் தமிழன் தமிழனாகவும், தமிழ்மொழி தமிழ் மொழியாகவும் இருந்தால் சரிதான்.//
இந்த அடிப்படை உணர்வு மட்டும் எல்லாத் தமிழர்களுக்கும் இருந்துவிட்டால், தமிழினம் எப்போதோ தலைநிமிர்ந்து இருக்கும்.
இந்த உணர்வின் குறைபாடே நமது மொழி - இனத்தின் மட்டுப்பாடு! தட்டுப்பாடு! எல்லாமே.
நல்ல இடுகை. பாராட்டுகள்.
ஆரோக்கியமான விடயங்கள்.
நல்ல முயற்சி
வாழ்த்துகள்.
ஆரோக்கியமான விடயங்கள்.
நண்பர் சந்ரு
தொடருங்கள்
இனிதே.
நல்ல முயற்சி
//சுப.நற்குணன் கூறியது...
//எது எப்படி இருப்பினும் தமிழன் தமிழனாகவும், தமிழ்மொழி தமிழ் மொழியாகவும் இருந்தால் சரிதான்.//
இந்த அடிப்படை உணர்வு மட்டும் எல்லாத் தமிழர்களுக்கும் இருந்துவிட்டால், தமிழினம் எப்போதோ தலைநிமிர்ந்து இருக்கும்.
இந்த உணர்வின் குறைபாடே நமது மொழி - இனத்தின் மட்டுப்பாடு! தட்டுப்பாடு! எல்லாமே.
நல்ல இடுகை. பாராட்டுகள்.//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..
//நட்புடன் ஜமால் கூறியது...
ஆரோக்கியமான விடயங்கள்.
நல்ல முயற்சி
வாழ்த்துகள்.//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..
//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. கூறியது...
ஆரோக்கியமான விடயங்கள்.
நண்பர் சந்ரு
தொடருங்கள்
இனிதே.
நல்ல முயற்சி//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..
நல்ல பணி... தொடருங்கள்..
நல்ல பதிவுகள் சந்ரு,.. எனக்கு படிக்கும் போதெல்லாம் என் பின்னூட்டத்தை பதிவு செய்ய நினைப்பேன். ஆனால் எழுத ஆரம்பித்தால் நிறைய போகும். அதனால் படித்து மற்றவர்களின் எண்ணங்களை பார்த்து செல்வதோடு சரி. ஆனால் எந்த மொழிக்கும் வேற்று மொழி படையெடுப்பை தவிர்க்க முடியாது. ஆனால் அதையெல்லாம் தாண்டி நிற்பதுதான் செம்மொழி. தமிழ் செம்மொழிதான் என்பதில் சந்தேகம் இல்லை.
சந்ரு கடந்த இரு நாட்களாக கொஞ்சம் வேலை அதிகம் ஆனாலும் இடையிடையே பதிவுகளும் பின்னூட்டங்களும் போட்டிருந்தேன். உங்கள் பதிவிற்கு எழுந்தமானமாக பின்னூட்டம் இடமுடியாது அதனால் தான் சற்றுப் பிந்திவிட்டது.
ஜெகநாதன் கூறியது போல மொழி கலப்பு என்பது ஒரு மொழிக்கு சிறப்பாக இருக்கலாம். நாமும் பல திசைச் சொற்களை( ஒருமொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு வந்த சொற்கள்) அன்றாட வாழ்வில் பாவிக்கின்றோம். எம் நாடு போர்த்துகீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்ததால் பெரும்பாலும் அவர்களின் பல சொற்களை இன்றும் பாவிக்கின்றோம்.
ஆனால் இன்றைய நிலையில் ஊடகங்கள் பல ஆங்கிலத்தை வேண்டுமென்றே திணிக்கின்றார்கள். இது ஒரு திட்டமிட்ட மொழிகொலையாக கூட இருக்கலாம். எனென்றால் பெரும்பால ஊடகங்களை வைத்திருப்பவர்கள் அந்த மொழியைச் சேர்ந்தவர்கள் அல்ல அத்துடன் அவர்கள் ஆதிக்க சக்திகள்(குறிப்பாக இந்தியாவில் பிராமணர்கள் கைகளில் தான் பெரும்பாலான ஊடகங்கள் உண்டு). அவர்களைப் பொறுத்தவரை தமிழ் மொழி இரண்டாம் பட்சம் தான் ஆகவே மொழிப்பற்று இல்லாதவர்களிடமிருந்து நாம் அதனை எதிர்பார்க்கமுடியாது.
அதே நேரம் இங்கே(இலங்கையில்) தொழில்நுட்ப பாடங்களாகட்டும், விஞ்ஞான பாடங்களாகட்டும் நாம் தாய் மொழியில் தான் படிக்கின்றோம். தமிழர்கள் தமிழில் சிங்களவர்கள் சிங்களத்தில். அதனால் எமக்கு அவற்றின் கலைச் சொற்கள் பல தெரியும் அத்துடன் அவற்றிற்க்குரிய ஆங்கிலச் சொற்களும் தெரியும். சின்ன உதாரணம் நுண்கணிதம் என்றால் Calculus என எத்தனை பேருக்குத் தெரியும். சேதன இரசாயனம் என்றால் என்ன? அசேதன இரசாயனம் என்றால் என்ன எத்தனை பேருக்குத் தெரியும்? எமக்கு ஆங்கிலத்திலும் அதனைச் சொன்னபடியால் தெரியும். இந்த கலைச்சொற்களுக்கு ஆங்கிலவார்த்தைகளை சில சிங்கள கிராமப் புறங்களில் சொல்லித் கொடுப்பதில்லை.
தொடரும்
August 6, 2009
ஆரோக்கியமான விடயங்கள்.
அவர்கள் சிங்களச் சொல்லை மட்டும் போதிப்பார்கள் இது பின்னர் அவர்கள் ஆங்கிலத்தில் உயர் கல்வியைத் தொடரும் போது சிக்கலைக் கொடுக்கிறது. ஒருமுறை எங்கள் வகுப்பில் ஆள்கூற்றுக் கேத்திரகணிதம் பற்றி விரிவுரையாளர் ஆங்கிலத்தில் சொல்லும்போது பல சிங்கள மாணவர்களுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை பின்னர் அவர் அதற்குரிய சிங்களச் சொல்லைச் சொல்ல அவர்களுக்கு புரிந்தது.
இதேபோல தமிழகத்தில் இருக்கும் பலருக்கு தாய்மொழியில் கல்வி கற்பது ஏதோ தீண்டக்கூடாத செயல் போல் இருந்தது. இன்றைக்கு கலைஞர் ஆட்சியில் அது ஓரளவேணும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் அங்கே ஆங்கிலம் கதைத்தால் தான் அவன் அறிவாளி என நினைக்கின்றார்கள். ஆங்கிலம் என்பது இணைப்பு மொழி இரண்டு வேறு வேறு மொழிக்காரர்களை இணைக்கப்பயன்படும் ஒரு பாலம். இதே அவர்கள் இருவருக்கும் சீனமொழி தெரிந்தால் சீனத்தில் உரையாடுவார்கள்.
ஆனால் நம்மவர்கள் மட்டும் தான் ஆங்கிலத்தில் உரையாடினால் தங்கள் அந்தஸ்து உயர்ந்ததாக கருதுவார்கள்.
ஒரு சின்ன உதாரணம் தமிழ்மொழியே தெரியாத ஒருவன் விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எந்தப் பிரச்சனையும் இன்றிப் பார்க்கலாம். ஏனென்றால் அந்த தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஆங்கிலத்தில் தான் சில நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நடக்கும்.
இதே வேலையை ஒரு மலையாளத் தொலைக்காட்சியிலோ அல்லது கன்னடத் தொலைக்காட்சியிலோ செய்வார்களா? ஏன் சன் தன் தமிழ் தொலைக்காட்சிக்கு சன் என ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கின்றது ஆனால் மலையாள, கன்னட, தெலுங்கு தொலைக்காட்சிகளுக்கு அந்தந்த மொழிகளிலே பெயர் வைத்திருக்கின்றார்கள். இதற்கான காரணம் தமிழன் இளிச்சவாயன் என்ன செய்தாலும் ஏற்பான் என்ற திமிர்.
தமிழ்மொழியில் எந்தச் சொற்களுக்கும் பஞ்சமில்லை. பழைய கண்ணதாசன் அல்லது வாலியின் பாடல்களையும் இடைக்காலத்தில் ராஜேந்தரின் பாடல்களையும் கேளுங்கள் தமிழில் புகுந்துவிளையாடியிருப்பார்கள்.
தமிழன் தமிழனாக இல்லாமல் ஆங்கிலேயனாக மாறமுயற்சிக்கின்றான் ஆனால் ஆங்கிலேயனுக்கு நாங்கள் என்றும் கறுப்பர்கள் தான் என்ற உண்மையை ஏனோ மறந்துவிடுகின்றான்.
இறுதி மானமுள்ள இன உணர்வுள்ள தமிழன் இருக்கும் வரை தமிழ்மொழிக்கு அழிவில்லை.
சந்ரு பின்னூட்டமே என்னுடைய ஒரு பதிவினை விட அதிகமாகிவிட்டது.
வணக்கம் சந்ரு... உங்க பதிவுகளை சிறிது நாட்களாகத் தான் படித்துக் கொண்டிருக்கிறேன்... பின்னூட்டம் இட வேண்டுமென்று நினைப்பேன்.. ஆனால், பிறகென்னமோ, படித்து விட்டுச் சென்றுவிடுவேன்..
இதற்கு முக்கியக் காரணம்-நான் என்னுடைய இடுகைகளில் தமிழ் மொழியை நான் பேசுவதைப் போலவே எழுதுவதாகக் கூட இருக்கலாம்! என் சொந்த ஊர் சென்னை, ஆங்கில வழிக் கல்வியை மேற்க்கொண்டதாலோ என்னவோ, எனக்கு அந்த அளவிற்கு(நீங்கள் பேசும்/எழுதும் அளவிற்கு) தமிழ் வார்த்தைகள் தெரியாது...
ஆதலால், என் இடுகைகளில் நான் சில சமயம் ஆங்கில சொற்களை எழுதி இருக்கிறேன்!
உங்கள் இடுகைகளைப் படிக்க ஆரம்பித்த பிறகு பல (புதிய-எனக்கு!!) தமிழ் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.. அதற்காக முதலில் உங்களுக்கு, என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
உங்களுக்கு நேரமிருந்தால், என் பதிவுகளையும் படித்து என் பிழைகளைச் சுட்டிக் காட்டினால் நான் அதைத் திருத்திக் கொள்ள உதவும். நன்றி...
//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
நல்ல பணி... தொடருங்கள்..//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா
//jothi கூறியது...
நல்ல பதிவுகள் சந்ரு,.. எனக்கு படிக்கும் போதெல்லாம் என் பின்னூட்டத்தை பதிவு செய்ய நினைப்பேன். ஆனால் எழுத ஆரம்பித்தால் நிறைய போகும். அதனால் படித்து மற்றவர்களின் எண்ணங்களை பார்த்து செல்வதோடு சரி. ஆனால் எந்த மொழிக்கும் வேற்று மொழி படையெடுப்பை தவிர்க்க முடியாது. ஆனால் அதையெல்லாம் தாண்டி நிற்பதுதான் செம்மொழி. தமிழ் செம்மொழிதான் என்பதில் சந்தேகம் இல்லை.//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா
//ஆ.ஞானசேகரன் கூறியது...
ஆரோக்கியமான விடயங்கள்.//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா
//வந்தியத்தேவன் கூறியது...
சந்ரு பின்னூட்டமே என்னுடைய ஒரு பதிவினை விட அதிகமாகிவிட்டது.//
நல்ல விடயம் பற்றித்தானே பேசினோம். உங்கள் கருத்துக்கள் அத்தனையும் உண்மையே.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா..
//Priyanka கூறியது...
வணக்கம் சந்ரு... உங்க பதிவுகளை சிறிது நாட்களாகத் தான் படித்துக் கொண்டிருக்கிறேன்... பின்னூட்டம் இட வேண்டுமென்று நினைப்பேன்.. ஆனால், பிறகென்னமோ, படித்து விட்டுச் சென்றுவிடுவேன்..
இதற்கு முக்கியக் காரணம்-நான் என்னுடைய இடுகைகளில் தமிழ் மொழியை நான் பேசுவதைப் போலவே எழுதுவதாகக் கூட இருக்கலாம்! என் சொந்த ஊர் சென்னை, ஆங்கில வழிக் கல்வியை மேற்க்கொண்டதாலோ என்னவோ, எனக்கு அந்த அளவிற்கு(நீங்கள் பேசும்/எழுதும் அளவிற்கு) தமிழ் வார்த்தைகள் தெரியாது...
ஆதலால், என் இடுகைகளில் நான் சில சமயம் ஆங்கில சொற்களை எழுதி இருக்கிறேன்!
உங்கள் இடுகைகளைப் படிக்க ஆரம்பித்த பிறகு பல (புதிய-எனக்கு!!) தமிழ் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.. அதற்காக முதலில் உங்களுக்கு, என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
உங்களுக்கு நேரமிருந்தால், என் பதிவுகளையும் படித்து என் பிழைகளைச் சுட்டிக் காட்டினால் நான் அதைத் திருத்திக் கொள்ள உதவும். நன்றி...//
நீங்கள் ஆங்கில வழிக் கல்வியினை மேற்கொண்டாலும் உங்களிடம் தமிழ் மொழி பற்று இருக்கின்றதே அதனைப் பாராட்ட வேண்டும். பேச்சுத்தமிழில் எழுதுவதென்பதில் எந்த தப்பும் இல்லை அது தமிழாக இருக்கும் பட்சத்தில்.
உங்கள் வலைப் பக்கமும் வருகிறேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
பின்னூட்டங்களைப் பார்க்கும் போது, அனைவர் மனசிலும் தூய தமிழ் பயன்பாடு பிடித்திருக்கிறது என்று அறிகிறேன். இது மகிழ்ச்சியான நிலை! உங்கள் முயற்சிக்கும் இந்த இடுகைகள் மூலம் சில பதிவர்கள் மத்தியிலாவது இத்தகைய விழிப்புணர்வை உண்டாக்கியதற்கும் என் வாழ்த்துக்கள்!
உலகத்தரத்திலான நடுமையான பரவலாக அனைத்து தரப்பினாலும் அங்கீகரிக்கப்பட்ட புதுச்சொல்லாடல்களை இணைத்து செறிவுடன் இருக்கும் வகையில் ஒரு தமிழ் அகராதி நிறுவப்பட வேண்டும் என்பதே என் கனவு. கனவு கைப்படும் சமயம் எப்போது என்றுதான் தெரியவில்லை.
அதுவரையில், இந்த இடுகையின் விளைவாக, ஒரு வெள்ளோட்ட முயற்சியாக, நாம் மறந்து வரும் தமிழ்சொற்களை அறிமுகப்படுத்தலாம். நீங்கள் அதைச் செய்ய சாத்தியமானவர் என்று உளமாற நம்புகிறேன்.
சந்ருவின் வலைப்பக்கத்தில் நிறைய கெட்ஜெட்களைப் பார்க்கிறேன். நன்றாகவும் இருக்கின்றன. மறந்து வரும் தமிழ் வார்த்தைகளுக்கென்று ஒரு கெட்ஜெட் சேர்த்து அதில் தினமும் 5 வார்த்தைகளை பொருளுடன் வெளியிடலாமே? வலைமனையின் ஓரத்தில் ஒரு சிறுபெட்டி. அதில் 5 வார்த்தைகள் மற்றும் அவற்றின் சிறு விளக்கம். உதாரணம்: கெட்ஜெட் (Gadget) - இதற்கு இணையான தமிழ் வார்த்தை + விளக்கம்.
முக்கியமாக பதிவர்கள் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ்சொற்களை அறிமுகப்படுத்தலாம். மொத்த தமிழ் பயனர்களுக்கும் இது உபயோகமானதாக திகழும். தொடர்ச்சியான பயன்பாட்டில், அத்தகைய வார்த்தைகள் வலையுலகத்தை தாண்டியும் பரவலாகக்கப்படும் என்று நம்புகிறேன்.
இது என் யோசனை அவ்வளவே. தங்களுக்கும் இது விருப்பமாயின், கருத்தறிய ஆசை.
ஒரு நல்ல விவாதத்தின் விளைவாக ஏதேனும் ஒரு முயற்சி நடந்திருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!
விவாதம் இனிதே நிறைவேறுகிறது என்று நினைக்கிறேன்! ஒரு வெறுமையான பரப்பிலிருந்து, சிறு புள்ளியாக ஒரு நடை எடுத்து வைப்பது போல் நம்பிக்கையும் நிறைகிறது!
சந்ருவுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்!!
நீங்கள் சொன்ன கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். முயற்சியில் இறங்குவதற்கு யோசிப்போம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜெகநாதன்
Post a Comment