Wednesday 26 August 2009

இலங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பின் பின் நடப்பதென்ன.

இலங்கை வலைப் பதிவர் சந்திப்பு சிறப்பான முறையின் நடந்து முடிந்திருக்கின்றது. இன்னும் பதிவர் சந்திப்புத் தொடர்பான பரபரப்பான செய்திகளை தாங்கிய இடுகைகளாகவே வலைப்பதிவுகளில் காண முடிகின்றது.

இன்று அதிகமான வலைப்பதிவுகளிலே இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு தொடர்பான செய்திகளாகவும் வாழ்த்துக்களாக்கவுமே இருக்கின்றன. வெளிநாட்டு வலைப்பதிவர்கள் கூட இச் சந்திப்பு தொடர்பாக தமது வலைத்தளங்களிலே இடுகையிட்டு இருப்பது இச் சந்திப்பின் வெற்றியையே காட்டுகின்றது.


எனது இந்த இடுகை மூலமாக என் வலைப்பதிவுக்கு வரும் நண்பர்களுக்காக சந்திப்பின் பின்னரான செயற்பாடுகள் பற்றிய சில விடயங்களை பகிர்ந்து கொள்கின்றேன். இன்று பெயரில்லாதவர்களின் (அனானி) தொல்லை இலங்கைப் பதிவர்களுக்கு அதிகரித்து இருக்கின்றது. அவர்களின் தொல்லை என்னையும் விட்டபாடில்லை. ஒரு பெயரில்லாதவர் (அனானி) எனக்கு பின்னூட்டமிட்டு இருந்தார் சந்திப்பிலே என்ன சாதித்தீர்கள் என்றும் தமிழர்களை இழிவு படுத்தும் வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தார். பெயரில்லாதவர்களின் பின்னூட்டங்களை வெளியிட்டு விளக்கம் கொடுக்கும் நான் வெளியிட முடியாத வார்த்தைப்பிரயோகங்களினால் நான் அப்பின்னூட்டத்தை வெளியிடவில்லை. அவரும் இந்த இடுகை மூலம் என்ன சாதித்தோம் என்பதனை அறிந்து கொள்வார். (அறிந்தும் என்ன செய்யப்போகிறார்).

எனக்கு இருந்த வேலைகளை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு வலைப்பதிவுகளிலே பதிவர்கள் சந்திப்புத் தொடர்பாக என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று ஆவலோடு பார்த்து முடித்தாகிவிட்டது. இன்னும் எழுதுவார்கள். எல்லோருமே வாழ்த்துக்களும் நல்ல விடயங்கள் பேசப்பட்டதாகவும் சில விடயங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சந்திப்பினை புகழ்ந்தே இருக்கின்றார்கள். இதுவே சந்திப்பின் வெற்றியினை காட்டுகின்றது.


யாழ்தேவி பற்றிய விவாதம் தேவையற்றது என நினைக்கின்றேன். யாழ் என்பதனை பிரதேச வாதமாக எடுத்துக்கொள்வது நல்லதொரு விடயமல்ல. பதிவர்கள் இதுபற்றி பேசுவதனைவிட வேறு நல்ல விடயங்கள் பற்றி பேசுவது சிறந்ததே. யாழ்தேவியின் நிர்வாகம் இது பற்றி கவனம் செலுத்தட்டுமே. பதிவர்கள் நாம் ஏன் கருத்து மோதல்களில் ஈடுபடுவது.

சந்திப்பிலே இந்தியத் தமிழிலே எழுவது தொடர்பாக பேசப்பட்டது. இலங்கையிலே பேசப்படுகின்ற தமிழ் மொழியினை வேறு நாடுகளிலே வாழும் தமிழர்களே விரும்புகின்றனர். நல்ல பேச்சுத்தமிழ் என்று சொல்கின்றனர். இந்தியத் தமிழர்களே இலங்கைத் தமிழை விரும்புகின்றனர். பதிவுகளிலே இலங்கைத் தமிழிலும், வேற்று மொழிக் கலப்பு இல்லாமலும் பதிவிடுவதோடு பிரதேசபேச்சுத்தமிழை தவிர்ப்பதும் நல்லதே.

சந்திப்பின் பின் பல செயற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதிலே புல்லட், வந்தி, ஆதிரை, லோஷன் அண்ணா, இன்னும் பல நண்பர்கள் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களுக்கு இலங்கைப் பதிவர்கள் அனைவரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கைப் பதிவர்கள் அனைவரும் ஒன்றாகத் திரட்டப்பட்டு பட்டியல் படுத்தப் பட்டுள்ளது. பட்டியல்களை

http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_7197.html , http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_7197.html

இரு பதிவுகளிலும் பெற்றுக்கொள்ள முடியும். பட்டியல் படுத்தப்பட்டவர்களிலே வலைப்பதிவு குறிப்பிடப் படாதவர்கள் தங்கள் வலைப்பதிவுகளை. புல்லட், வந்தி. ஆதிரை, லோஷன் யாரிடமாவது ஒருவருடன் தொடர்பு கொண்டு தங்கள் வலைப்பதிவை இணைத்துக் கொள்ள முடியும். சந்திப்பில் கலந்து கொள்ளாதவர்களும் இவர்களில் ஒருவரை தொடர்புகொண்டு தங்களையும் இணைத்துக்கொள்ள முடியும்.


பதிவர் சந்திப்பின் தீர்மானத்துக்கு அமைய கௌபாய் மது அவர்களினால் இலங்கைத் தமிழ் வலைப்பதிவர் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய விடயமே. இதில் இணைந்து கொள்வதன் மூலம் பதிவர்கள் பல நன்மைகளை அடைய முடியும். இக்குழுமத்தில் இணைய http://groups.google.com/group/srilankantamilbloggers எனும் முகவரிக்குச் சென்று தங்களை இணைத்துக் கொள்ளலாம்.


இப்பவே அடுத்த சந்திப்புக்குரிய ஏற்பாடுகள் இடம் பெறுவதாக அறிய முடிகின்றது. நாட்டின் பல பாகங்களிலும் இந்த சந்திப்புக்கள் இடம்பெற இருக்கின்றன. அடுத்த சந்திப்புக்கள் இதனைவிட வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கிறது.


நானும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ற ஆதங்கம் இருந்தது. சந்திப்பிலே கலந்து கொள்ளவும் முடியவில்லை. சரி இலங்கை தமிழ் வலைப்பதிவர்களின் வலைப்பதிவுகளை பட்டியலிடும் ஒரு வலைப்பதிவினை ஆரம்பிக்கலாமே. என்ற எண்ணம் தோன்றியது. இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் எனும் வலைப்பதிவினை ஆரம்பித்துவிட்டேன். http://slnanparkal.blogspot.com/ இதிலே இணைக்கப்படாத நண்பர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் இணைத்துக்கொள்ள முடியும்


சந்திப்பின் பின்னர் தொடரும் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களைபெற
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

அல்லது http://groups.google.com/group/srilankantamilbloggers செல்லுங்கள்.


வலைப்பதிவர் சந்திப்பு பல வெற்றிகளைப் பெற்று இருக்கின்றது. இலங்கை தமிழ் வலைப் பதிவர்கள் சாதிப்பார்கள் என்கின்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது.


சந்திப்பினை ஏற்பாடு செய்த புல்லட், ஆதிரை, லோஷன் அண்ணா , வந்தி ஆகியோருக்கும் கௌபாய் மது மற்றும் ஏனைய நண்பர்களுக்கும் நன்றிகள் பல

தகவல்களுக்கு நன்றிகள் புல்லட் மற்றும் வந்தி

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

23 comments: on "இலங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பின் பின் நடப்பதென்ன."

Prapa said...

தங்களையும் எல்லோரும் கவனிக்க வேண்டும் என்பதற்காக ஒருசிலர் கருத்துக்களை வெளியிடுவது வழமை , அது காத்திரமான விமர்சனங்களாக இருந்தால் வரவேற்கலாம் ,அதைவிடுத்து ஒரு சில அரசியல் கட்சிகள் போல முன்னுக்கு பின் முரணான் கருத்துக்கள் பேசும் அனாமதையர் பற்றி கவலைப்பட வேண்டாம் சந்த்ரு.

அடுத்த பதிவர் சந்திப்பு தயாராகுவோம் , கிழக்கில் நடந்தால் முழு பொறுப்பையும் நாங்கள் எடுக்க வேண்டி இருக்கும் எனவே தயார்படுத்தல்களில் ஈடுபடுவோம்.

யோ வொய்ஸ் (யோகா) said...

பதிவுகளிலே இலங்கைத் தமிழிலும், வேற்று மொழிக் கலப்பு இல்லாமலும் பதிவிடுவதோடு பிரதேசபேச்சுத்தமிழை தவிர்ப்பதும் நல்லதே//

வட்டார வழக்கு என்னும் விஷயத்தை கைவிட சொல்லுவது போன்று இக்கருத்து இருக்கிறது சந்ரு. இதை கைவிட்டு தூய மொழிநடையில் எழுதும் போது அது எழுபவர்களின் தனித்தன்மையை அற்று போக செய்துவிடலாம். அவரவர்க்கும் அவரவரது மொழிநடையில் எழுதுவது இலகுவானதும் கூட. அதற்காக கொச்சை தமிழில் அல்லது ஆங்கிலம் கலந்து எழுத சொல்லவில்லை. ஆனாலும் பொது அல்லது தூயதமிழிலே தான் எழுத வேண்டும் என வந்தால் பலர் எழுத தயங்குவார்கள் என்பது என் கருத்து

நட்புடன் ஜமால் said...

நல்ல முயற்சிகள் எடுக்கையில் பல தடைகற்கள் வரத்தான் செய்யும்

விலக்கிவிட்டு வீர நடை போடுங்க

வால்பையன் said...

யாழ்பான தமிழில் எழுதுவதை பற்றி ஒரு யாழ்பான தமிழ் எழுத்தாளரின் பதில்!

**

நீங்கள் மட்டும் கொங்கு தமிழ், நெல்லைதமிழ், சென்னை தமிழ் என்று எழுதுவீர்கள், நாங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும், நாங்கள் எழுதும் தமிழை உங்களால் புரிந்து கொள்ள இயலாதே!

**

உங்களுக்கு வரும் தமிழில் எழுதுங்கள்,
நாங்கள் புரிந்து கொள்கிறோம்!

வால்பையன் said...

யோ வாய்ஸின் கருத்தை வழிமொழிகிறேன்!

Admin said...

//பிரபா கூறியது...
தங்களையும் எல்லோரும் கவனிக்க வேண்டும் என்பதற்காக ஒருசிலர் கருத்துக்களை வெளியிடுவது வழமை , அது காத்திரமான விமர்சனங்களாக இருந்தால் வரவேற்கலாம் ,அதைவிடுத்து ஒரு சில அரசியல் கட்சிகள் போல முன்னுக்கு பின் முரணான் கருத்துக்கள் பேசும் அனாமதையர் பற்றி கவலைப்பட வேண்டாம் சந்த்ரு.

அடுத்த பதிவர் சந்திப்பு தயாராகுவோம் , கிழக்கில் நடந்தால் முழு பொறுப்பையும் நாங்கள் எடுக்க வேண்டி இருக்கும் எனவே தயார்படுத்தல்களில் ஈடுபடுவோம்.//


நல்ல கருத்துக்களாக இருந்தால் பரவாயில்லை. அவர்களின் கருத்துக்களை நான் பெரிது படுத்துவதில்லை.

வருகைக்கும் கருத்துக்களுக்கும், நன்றிகள்.

Admin said...

//யோ வாய்ஸ் கூறியது...
பதிவுகளிலே இலங்கைத் தமிழிலும், வேற்று மொழிக் கலப்பு இல்லாமலும் பதிவிடுவதோடு பிரதேசபேச்சுத்தமிழை தவிர்ப்பதும் நல்லதே//

வட்டார வழக்கு என்னும் விஷயத்தை கைவிட சொல்லுவது போன்று இக்கருத்து இருக்கிறது சந்ரு. இதை கைவிட்டு தூய மொழிநடையில் எழுதும் போது அது எழுபவர்களின் தனித்தன்மையை அற்று போக செய்துவிடலாம். அவரவர்க்கும் அவரவரது மொழிநடையில் எழுதுவது இலகுவானதும் கூட. அதற்காக கொச்சை தமிழில் அல்லது ஆங்கிலம் கலந்து எழுத சொல்லவில்லை. ஆனாலும் பொது அல்லது தூயதமிழிலே தான் எழுத வேண்டும் என வந்தால் பலர் எழுத தயங்குவார்கள் என்பது என் கருத்து//


வட்டாரச் சொற்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை பதிவர்களின் நன்மைக்காகவே தவிர்ப்பது நல்லது என்று சொன்னேன். நான் பிரதேசசொற்களை நேசிப்பவன். மறைந்து வரும் அச் சொற்கள் பாது காக்கப்பட வேண்டும் என்பதே என் நோக்கமும்.

உங்கள் கருத்துடன் நானும் உடன் படுகிறேன். எல்லாராலும் சில சொற்கள் புரிந்து கொள்ள முடியாது என்பதற்காகவே அவ்வாறு குறிப்பிட்டேன்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும், நன்றிகள்.

Admin said...

//நட்புடன் ஜமால் கூறியது...
நல்ல முயற்சிகள் எடுக்கையில் பல தடைகற்கள் வரத்தான் செய்யும்

விலக்கிவிட்டு வீர நடை போடுங்க//


உண்மைதான் நண்பா..
வருகைக்கும் கருத்துக்களுக்கும், நன்றிகள்.

Admin said...

//வால்பையன் கூறியது...
யாழ்பான தமிழில் எழுதுவதை பற்றி ஒரு யாழ்பான தமிழ் எழுத்தாளரின் பதில்!

**

நீங்கள் மட்டும் கொங்கு தமிழ், நெல்லைதமிழ், சென்னை தமிழ் என்று எழுதுவீர்கள், நாங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும், நாங்கள் எழுதும் தமிழை உங்களால் புரிந்து கொள்ள இயலாதே!

**

உங்களுக்கு வரும் தமிழில் எழுதுங்கள்,
நாங்கள் புரிந்து கொள்கிறோம்!//

உங்கள் கருத்துக்களோடு உடன் படுகிறேன். சிலருக்கு விளங்கிக் கொள்வது கடினமாக இருக்கும் என்பதே என் கருத்து.

Admin said...

//வால்பையன் கூறியது...
யோ வாய்ஸின் கருத்தை வழிமொழிகிறேன்!//



உங்கள் கருத்துக்களோடு உடன் படுகிறேன். சிலருக்கு விளங்கிக் கொள்வது கடினமாக இருக்கும் என்பதே என் கருத்து.

வருகைக்கும் கருத்துக்களுக்கும், நன்றிகள்.

வந்தியத்தேவன் said...

சந்ரு உங்களின் வலைப்பதிவுகளின் தொகுப்பு நல்லதொரு விடயம். பாராட்டுக்கள். முடியுமானல் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். அனானிப் பிரச்சனைகள் பற்றி சில விடயங்கள் சொல்கின்றேன். இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரு திரட்டியை நடத்துபவரும் பெண்கள் பற்றிய கீழத்தரமான பின்னூட்டங்களை எமக்கு இட்டுக்கொண்டேயிருக்கிறார் சிலவேளை உங்களுக்குப் பின்னூட்டம் இட்ட அந்த அனானியும் அவராகத் தான் இருக்கும்.

புல்லட் said...

அருமையான வேலை சந்ரு.. பாராட்டுக்கள்

Admin said...

//வந்தியத்தேவன் கூறியது...
சந்ரு உங்களின் வலைப்பதிவுகளின் தொகுப்பு நல்லதொரு விடயம். பாராட்டுக்கள். முடியுமானல் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். அனானிப் பிரச்சனைகள் பற்றி சில விடயங்கள் சொல்கின்றேன். இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரு திரட்டியை நடத்துபவரும் பெண்கள் பற்றிய கீழத்தரமான பின்னூட்டங்களை எமக்கு இட்டுக்கொண்டேயிருக்கிறார் சிலவேளை உங்களுக்குப் பின்னூட்டம் இட்ட அந்த அனானியும் அவராகத் தான் இருக்கும்.//


அந்த அனானி இலங்கையைச் சேர்ந்தவர்தான் என்பதனை ஊகிக்க முடிந்தது. நீங்கள் குறிப்பிடும் நபராகவும் இருக்கலாம். நான் உங்களோடு தொடர்பு கொள்கின்றேன்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//புல்லட் கூறியது...
அருமையான வேலை சந்ரு.. பாராட்டுக்கள்//



உங்களுக்கு உதவிதான் செய்ய முடியவில்லை இதனையாவது செய்வோமே.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

கிருஷ்ண மூர்த்தி S said...

இயல்பாக இருங்கள் சந்ரு! அதுபோதும்!

ilangan said...

தாமரை, குளத்திலுள்ள நீரின் அளவுக்கே வளர்கிறது.. அதே போல கலைக்கும் விமர்சனம் குளத்திலுள்ள நீரின் அளவைப்போல்இருக்க வேண்டும். நல்ல விமர்சனங்கள் வளப்படுத்தும். குளம் என்றால் சேறு இருக்கத்தானே செய்யும். சிலவற்றை கணக்கிலெடுக்காதீர்கள். பதிவுக்கு வாழ்த்துக்கள். அடுத்த பதிவர் சந்திப்பை எதிர் பார்த்த வண்ணம் இலங்கன்

இது நம்ம ஆளு said...

பாராட்டுக்கள்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல விடயங்கள் பாராட்டுகள் நண்பா

Admin said...

//கிருஷ்ணமூர்த்தி கூறியது...
இயல்பாக இருங்கள் சந்ரு! அதுபோதும்!//



வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//ilangan கூறியது...
தாமரை, குளத்திலுள்ள நீரின் அளவுக்கே வளர்கிறது.. அதே போல கலைக்கும் விமர்சனம் குளத்திலுள்ள நீரின் அளவைப்போல்இருக்க வேண்டும். நல்ல விமர்சனங்கள் வளப்படுத்தும். குளம் என்றால் சேறு இருக்கத்தானே செய்யும். சிலவற்றை கணக்கிலெடுக்காதீர்கள். பதிவுக்கு வாழ்த்துக்கள். அடுத்த பதிவர் சந்திப்பை எதிர் பார்த்த வண்ணம் இலங்கன்//

உண்மைதான் நண்பா..
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//இது நம்ம ஆளு கூறியது...
பாராட்டுக்கள்//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்ல விடயங்கள் பாராட்டுகள் நண்பா//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நீங்க நீங்களாகவே இருங்க..

Post a Comment