ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை சேர்ப்பதாக இருக்கின்றன.
மட்டக்களப்பைப் பொறுத்தவரை சில சொற்களோடு "கா" சேர்த்து பயன் படுத்தும் வழக்கம் இருக்கின்றது. (ஏனைய பிரதேசங்களிலும் இருக்கலாம் இருந்தால் பின்னூட்டங்களில் தரலாம் நண்பர்களே)
உதாரணமாக நாம் என்ன நடக்கிறது என்று கேட்பதனை என்னாகா நடக்கிறது என்று பேசுவார்கள். யார் - யாருகா, எப்போ - எப்போகா, வா - வாகா, தெரியுமா - தெரியுமாகா, சாப்பிட்டாச்சா - சாப்பிட்டாச்சாகா போன்று "கா" சேர்த்து பயன் படுத்தப்படுகிறது.
இங்கே பேசுகின்ற போது ஆணுடனோ, பெண்ணுடனோ பேசுவதாக இருந்தாலும் கா போட்டே பேசுகின்றனர். இப்போது இவ்வாறு கா போட்டுப் பேசுவது இளைய சமுதாயத்திடம் குறைவான பயன்பாட்டில் இருந்தாலும். வயது வந்தவர்களாலும், கிராமப்புறங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
என்ன என்பதற்கும் என்னகா என்பதற்கும் இடையிலே ஒரு அன்பு அல்லது பாசப்பிணைப்பு வித்தியாசங்கள் இருப்பதாக உணரப்படுகின்றது. என்ன என்பதனைவிட என்னகா என்பது பேசுபவர்களுக்கிடையே ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்துகின்றது. என்ன என்பது நாம் பேசும் தொனியிலே வித்தியாசப் படுகிறது. என்ன என்று கோபமாகவும் கேட்கலாம் சந்தோசமாகவும் கேட்கலாம். என்னகா எனும்போது பெசுபவர்களுக்குள்ளேயான உறவு அல்லது அன்பு நெருக்கமடைவதாக உணர்கின்றனர்.
இன்றும் கிராமப் புறங்களிலும், முதியவர்களாலும் கா சேர்த்து சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பல பிரதேச பேச்சு வழக்குச் சொற்கள் இருக்கின்றன அவற்றையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.
45 comments: on "பேச்சுத் தமிழுக்கு இனிமை சேர்க்கும் "கா""
நன்று. தமிழ் நாட்டில் சில இடங்களில் 'வே','லே' சேர்த்து பேசுவார்கள். அது நினைவுக்கு வருகிறது
சந்ரு,சில இடங்களில்
"மா"சேர்த்துக்கொள்வார்கள்.
அதாவது அம்மா என்பதுபோல.
சந்ரு,எனக்கு சரியான கவலையாப் போச்சு.இலங்கைப் பதிவாளர் நிகழ்வின்போது Chat லும் பேசமுடியவில்லை.காணொளிப் பதிவுகளையும் பார்க்க முடியவில்லை.எங்கு பார்த்துக்கொள்ளலாம் இப்போ?என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மனநிறைவோடு வந்திருக்கிறீர்கள் என்ப் பதிவுகள் சொல்கிறது.
நானும் ‘மா’ சேர்த்து பேசுவேன் அதிகம்.
எங்கள் மலையகத்திலும் பலர் இந்த கா போட்டு பேசுவார்கள். எங்களுக்கு படிப்பித்த கிழக்கிலங்க ஆசிரியர்கள் ”ஹ“ என்கதை ”க” உச்சரிப்பார்கள். இதுவும் கிழக்கிலங்கை பேச்சு வழக்கு என எண்ணுகிறேன். உங்கள் பக்கங்களில் க போ எஙகள் பக்கங்களில் ங்க போட்டு பேசுவோம். இது மாியாதையாக எங்கள் கருத்துகளை வெளிக்காட்டுவதாக நாங்கள் நினைக்கிறோம்..
//ஸ்ரீராம். கூறியது...
நன்று. தமிழ் நாட்டில் சில இடங்களில் 'வே','லே' சேர்த்து பேசுவார்கள். அது நினைவுக்கு வருகிறது//
உண்மைதான் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபட்ட பல பேச்சுத்தமிழ் சொற்கள் இருக்கின்றன.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//ஹேமா கூறியது...
சந்ரு,சில இடங்களில்
"மா"சேர்த்துக்கொள்வார்கள்.
அதாவது அம்மா என்பதுபோல.//
இங்கும் மா போட்டு பயன்படுத்துவார்கள் ஆனால் குறைவு. பெண்களோடு பேசும்போது மட்டுமே சிலர் மா பயன் படுத்துவதுண்டு.
//ஹேமா கூறியது...
சந்ரு,எனக்கு சரியான கவலையாப் போச்சு.இலங்கைப் பதிவாளர் நிகழ்வின்போது Chat லும் பேசமுடியவில்லை.காணொளிப் பதிவுகளையும் பார்க்க முடியவில்லை.எங்கு பார்த்துக்கொள்ளலாம் இப்போ?என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மனநிறைவோடு வந்திருக்கிறீர்கள் என்ப் பதிவுகள் சொல்கிறது.//
மிகவும் சந்தோசமாக சிறப்பான முறையிலே முதல் சந்திப்பு இடம் பெற்றிருக்கின்றது. எல்லோர் மனதிலும் சந்தோசம்.
வீடியோ இடுகைகளை நண்பர்கள் போடுவார்கள் அப்போது விபரங்களை அறியத்தருகிறேன்.
இப்போது சந்திப்பின் முற்று முழுதான கலந்துரையாடலின் ஒலி வடிவத்தினை கேட்கமுடியும் சுட்டி இதோ..
http://n-aa.blogspot.com/2009/08/blog-post_23.html
//நட்புடன் ஜமால் கூறியது...
நானும் ‘மா’ சேர்த்து பேசுவேன் அதிகம்//
ஆமா... நானும் ஆமா என்று அடிக்கடி போடுகிறேனோ..
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
திருநெல்வேலி பக்கம் "லே" போட்டு பேசுவாங்க.
வணக்கம் சந்துரு , பல நாட்களாக தங்களின் பக்கம் பார்த்து வருகிறேன் , இன்று தான் பின்னுட்டம் இட சந்தர்ப்பம் கிட்டியது ,
நான் கோவையை சார்தவன் , எங்கள் ஊர் வழக்கப்படி " ங்க " போட்டு பேசுவது வழக்கம்
வாழ்த்துக்கள் இந்த பதிவிற்கு
அழியாத அன்புடன்
அடலேறு

//யோ வாய்ஸ் கூறியது...
எங்கள் மலையகத்திலும் பலர் இந்த கா போட்டு பேசுவார்கள். எங்களுக்கு படிப்பித்த கிழக்கிலங்க ஆசிரியர்கள் ”ஹ“ என்கதை ”க” உச்சரிப்பார்கள். இதுவும் கிழக்கிலங்கை பேச்சு வழக்கு என எண்ணுகிறேன். உங்கள் பக்கங்களில் க போ எஙகள் பக்கங்களில் ங்க போட்டு பேசுவோம். இது மாியாதையாக எங்கள் கருத்துகளை வெளிக்காட்டுவதாக நாங்கள் நினைக்கிறோம்..//
நீங்கள் சொல்வது சரிதான் நண்பா.. இந்த இடுகையின் நோக்கமே சில பிரதேசங்களில் பயன்படுத்தப்படும் பேச்சுத் தமிழ் சொற்களை அராய்வதாகவும் இருக்கலாம்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
ஓ தவறுதலுக்கு வருந்துகிறேன், தொழில்நுட்ப கோளாறு என கருதி பல முறை சொடக்கி விட்டேன் அது 5 முறை என் பின்னுட்டதை காட்டுகின்றது.
//S.A. நவாஸுதீன் கூறியது...
திருநெல்வேலி பக்கம் "லே" போட்டு பேசுவாங்க.//
ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள். என்பது அறியமுடிகிறது..
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
உண்மைதான் நண்பா...
எங்கள் தமிழ்நாட்டிலும் வந்தாக, போனாக...போன்ற வார்த்தைகளை சிலர் சேர்த்து பேசுவார்கள்...
//adaleru கூறியது...
வணக்கம் சந்துரு , பல நாட்களாக தங்களின் பக்கம் பார்த்து வருகிறேன் , இன்று தான் பின்னுட்டம் இட சந்தர்ப்பம் கிட்டியது ,
நான் கோவையை சார்தவன் , எங்கள் ஊர் வழக்கப்படி " ங்க " போட்டு பேசுவது வழக்கம்
வாழ்த்துக்கள் இந்த பதிவிற்கு
அழியாத அன்புடன்
அடலேறு//
மட்டக்களப்பிலும் "ங்க" போட்டு ஒரு சிலர் பயன் படுத்துவதுண்டு. அதிலும் கணவனை மனைவி "ங்க" போட்டு பேசுகின்ற வழக்கம் இருக்கின்றது.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
தொடருங்கள்.
//adaleru கூறியது...
ஓ தவறுதலுக்கு வருந்துகிறேன், தொழில்நுட்ப கோளாறு என கருதி பல முறை சொடக்கி விட்டேன் அது 5 முறை என் பின்னுட்டதை காட்டுகின்றது.//
புரிந்து கொண்டேன். நானும் சில வேளைகளில் இப்படி பிரட்சனைகளை எதிர் நோக்குவதுண்டு.
//க. பாலாஜி கூறியது...
உண்மைதான் நண்பா...
எங்கள் தமிழ்நாட்டிலும் வந்தாக, போனாக...போன்ற வார்த்தைகளை சிலர் சேர்த்து பேசுவார்கள்...//
இந்தச் சொற்கள் மட்டுமல்ல இன்னும் பல சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுகின்றன. உங்களால் அறியப்பட்ட வேறு சொற்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
இன்றும் கிராமப் புறங்களிலும், முதியவர்களாலும் கா சேர்த்து சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
உண்மை
சரியாதான்வே சொல்லிருக்கீக!
//இது நம்ம ஆளு கூறியது...
இன்றும் கிராமப் புறங்களிலும், முதியவர்களாலும் கா சேர்த்து சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.//
வாங்க நம்ம ஆளு..
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்
//குட்டி பிரபு கூறியது...
சரியாதான்வே சொல்லிருக்கீக!//
வாங்க குட்டி பிரபு தம்பி.. நீங்களும் "க" போடுவீங்களோ..
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்
இந்த கா' விடறதுல ஆரம்பிச்சுப் பழம்னு அப்புறமாச் சேந்துக்கறதெல்லாம் சின்னப் பிள்ளையா இருந்தப்ப! நான் இப்ப யாரோடும் கா'விடறதில்ல! கா சேர்த்துப் பேசறதும் இல்ல!
ஒரு நல்ல தகவல் கொடுத்து இருக்கீங்கப்பா.... நான் பேசும் தமிழை கண்டு நண்பர்கள் சொல்லிடுவாங்க ..என்ன இப்படி தமிழ் பேசற என்று கோவை மதுரை பக்கம் நண்பர்கள் கேட்பார்கள் அவர்கள் பேசும் தமிழ் கேட்கவே இனிக்கும் இலங்கை தமிழ் என்றால் ஒரு முறை தணிகாஷிடம் பேசும் போது கேட்டேன்..உண்மை சொல்லனும் என்றால் எனக்கு கொஞ்சம் விளங்கவுமில்லை அத்தனை சுத்தமான தமிழ்..என் மாமா இலங்கை சென்று திரும்பியதும் கூட சொன்னார் தமிழ் என்றால் அங்கு தான் தூய தமிழ் என்று உங்கள் இடுகையின் மூலம் இன்று எனக்கொரு அரிய தகவல்...
சந்ரு, எங்களுடைய பிரதேசத்தைப் பொறுத்த வரை "ங்க " சொல் அதிகமாகப் பயன்படுத்தப் படும். ஹேமா அக்கா சொன்னது போல அம்மா என்ற சொல்லும் பயன் படுத்துவார்கள். இது அத்தனை சொற்களும் அன்பின் ஆழத்தைத் தான் உணர்த்துகிறது சந்ரு....
வாழ்த்துக்கள் சந்ரு, நல்ல ஒரு பதிவு....
//கிருஷ்ணமூர்த்தி கூறியது...
இந்த கா' விடறதுல ஆரம்பிச்சுப் பழம்னு அப்புறமாச் சேந்துக்கறதெல்லாம் சின்னப் பிள்ளையா இருந்தப்ப! நான் இப்ப யாரோடும் கா'விடறதில்ல! கா சேர்த்துப் பேசறதும் இல்ல!//
அப்போ சின்னப் பிள்ளையில "கா" போட்டு பேசினிங்க என்று சொல்றிங்க...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//தமிழரசி கூறியது...
ஒரு நல்ல தகவல் கொடுத்து இருக்கீங்கப்பா.... நான் பேசும் தமிழை கண்டு நண்பர்கள் சொல்லிடுவாங்க ..என்ன இப்படி தமிழ் பேசற என்று கோவை மதுரை பக்கம் நண்பர்கள் கேட்பார்கள் அவர்கள் பேசும் தமிழ் கேட்கவே இனிக்கும் இலங்கை தமிழ் என்றால் ஒரு முறை தணிகாஷிடம் பேசும் போது கேட்டேன்..உண்மை சொல்லனும் என்றால் எனக்கு கொஞ்சம் விளங்கவுமில்லை அத்தனை சுத்தமான தமிழ்..என் மாமா இலங்கை சென்று திரும்பியதும் கூட சொன்னார் தமிழ் என்றால் அங்கு தான் தூய தமிழ் என்று உங்கள் இடுகையின் மூலம் இன்று எனக்கொரு அரிய தகவல்...//
உண்மைதான் வேறு நாடுகளிலே இலங்கைத் தமிழுக்கு ஒரு தனி மரியாதை இருக்கின்றது.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
சந்ரு, எங்களுடைய பிரதேசத்தைப் பொறுத்த வரை "ங்க " சொல் அதிகமாகப் பயன்படுத்தப் படும். ஹேமா அக்கா சொன்னது போல அம்மா என்ற சொல்லும் பயன் படுத்துவார்கள். இது அத்தனை சொற்களும் அன்பின் ஆழத்தைத் தான் உணர்த்துகிறது சந்ரு....
வாழ்த்துக்கள் சந்ரு, நல்ல ஒரு பதிவு....//
இப்படியான சொற்கள் பேசுபவர்களின் அன்பினை நெருக்கமாக்குகின்றன என்று சொல்லலாம்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
Little words make the difference Shanthru,Ve & Le in Nellai,ennammaa & ennappa in Madurai,see the mmaa & ppa making the proximiy.Nalla pathivu regarding words still in villages.
மலேசியாவில் 'லா' போட்டு பேசுவார்கள் என்று நினைக்கிறேன். கொங்கு மண்டலத்தில் 'ங்க' போட்டு பேசுவாங்க. நல்ல பதிவு!
எங்க ஊரு பக்கம் எந்த வகையான வட்டார வழக்கும் இல்லைங்க. ஆனா எனக்கு கொங்கு தமிழ் ரொம்ப பிடிக்கும். அவிங்க திட்டுனா கூட பாராட்டுற மாதிரி இருக்கும். விழுப்புரம் டு சென்னை தமிழ் கேட்டிங்கனா "ல" "ள" அதிகமா உபயோகப்டுத்த மாட்டாங்க. எல்லாத்துக்குமே "ழ" தான். அதுவும் சுவையாத்தான் இருக்கும்.
//Muniappan Pakkangal கூறியது...
Little words make the difference Shanthru,Ve & Le in Nellai,ennammaa & ennappa in Madurai,see the mmaa & ppa making the proximiy.Nalla pathivu regarding words still in villages.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//ஜெகநாதன் கூறியது...
மலேசியாவில் 'லா' போட்டு பேசுவார்கள் என்று நினைக்கிறேன். கொங்கு மண்டலத்தில் 'ங்க' போட்டு பேசுவாங்க. நல்ல பதிவு!//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//குட்டி பிரபு கூறியது...
எங்க ஊரு பக்கம் எந்த வகையான வட்டார வழக்கும் இல்லைங்க. ஆனா எனக்கு கொங்கு தமிழ் ரொம்ப பிடிக்கும். அவிங்க திட்டுனா கூட பாராட்டுற மாதிரி இருக்கும். விழுப்புரம் டு சென்னை தமிழ் கேட்டிங்கனா "ல" "ள" அதிகமா உபயோகப்டுத்த மாட்டாங்க. எல்லாத்துக்குமே "ழ" தான். அதுவும் சுவையாத்தான் இருக்கும்.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
சந்தேகமே வரக்கூடாது. அதான் நானே கௌரவமா சொல்லிட்டேனே. ரொம்ப நன்றி உங்கள் பதிவையும் காணக்கிடைத்தது. பதிவர் சந்திப்பில் உங்களை காணமுடியவில்லை. முதன் முதலில் சினிமாவை விமர்சித்த ஒருவர் படத்தை பார்த்துவிட்டு மரங்களும் ஆட்டுக்குட்டியும் நல்லா நடித்திருக்கு என்றாராம். ஆனால் இப்ப சினிமாவின் வளர்ச்சி பிரமாண்டமானது அது போல நம்ம பதிவர் சந்திப்பும் வரணும் என்ற ஆதங்கத்தில தான் இப்பிடி ஒரு பதிவு. ஓகே
//ilangan கூறியது...
சந்தேகமே வரக்கூடாது. அதான் நானே கௌரவமா சொல்லிட்டேனே. ரொம்ப நன்றி உங்கள் பதிவையும் காணக்கிடைத்தது. பதிவர் சந்திப்பில் உங்களை காணமுடியவில்லை. முதன் முதலில் சினிமாவை விமர்சித்த ஒருவர் படத்தை பார்த்துவிட்டு மரங்களும் ஆட்டுக்குட்டியும் நல்லா நடித்திருக்கு என்றாராம். ஆனால் இப்ப சினிமாவின் வளர்ச்சி பிரமாண்டமானது அது போல நம்ம பதிவர் சந்திப்பும் வரணும் என்ற ஆதங்கத்தில தான் இப்பிடி ஒரு பதிவு. ஓகே//
அடுத்த பதிவர்கள் சந்திப்பிலே நிச்சயமாகச் சந்திக்கலாம்.
இந்தச் சந்திப்பிலே இலங்கைப் பதிவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா.
குறிப்பாக ஆண்களைவிட பெண்களே "கா" சேர்த்து பேசுவது வழக்கம். ஒரு வெளியிடத்தைச் சேர்ந்த தமிழ்ப் புலவர் மட்டக்களப்பு வந்தபோது
"ஆடவர் தோளிலும் "கா"
அரிவையர் நாவிலும் கா" எனப் பாடியிருக்கிறார். யாரென்பது மறந்துவிட்டது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். ஆடவர் தோள் "கா" தெரியுந்தானே. நம்மூரில் புதிர் கொண்டு போகப் பயன்படுத்துவது
எழில்
//Neelaavanan- நீலாவணன் கூறியது...
குறிப்பாக ஆண்களைவிட பெண்களே "கா" சேர்த்து பேசுவது வழக்கம். ஒரு வெளியிடத்தைச் சேர்ந்த தமிழ்ப் புலவர் மட்டக்களப்பு வந்தபோது
"ஆடவர் தோளிலும் "கா"
அரிவையர் நாவிலும் கா" எனப் பாடியிருக்கிறார். யாரென்பது மறந்துவிட்டது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். ஆடவர் தோள் "கா" தெரியுந்தானே. நம்மூரில் புதிர் கொண்டு போகப் பயன்படுத்துவது
எழில்//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா..
வணக்கம் நன்பர் சந்துரு அவர்களே
ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு வகையான பேச்சு வழக்குச் சொற்கள் இருக்கின்றன.ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம்.
தமிழ்நாட்டில் மதுரை பக்கம் அனைவரையும் சின்னவங்க, பெரியவங்க அனைவறையும் வாங்க, போங்க என்று சொல்வார்கள். ஒவ்வொரு இடத்திற்ககும் வட்டார வழக்கு இருக்கிறது. அதவது பேச்சு தமிழ் அர்த்தம் ஒன்றுதான் பேசுவதுதான் வித்தியாசமாக இருக்கும் நீங்கள் சொல்வது மாதிரி நிறைய சொல் வழக்கத்தில் இருக்கிறது.சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வருகிது என்ற ஆதங்கம் உங்கள் மாதிரி நிறையபேருக்கு இருக்கிறது.
நன்றி
சோ.ஞானசேகர்..
Good to see a Mattakalapan on blogging. I am from Batti too. Why don't you try to write on our own slang... like Dilan...I think you have the capacity/talent to do so..
I know Kaluthavalai people are very good in writing & interested in literature & politics.
Keep it up! good job
Post a Comment