Monday 10 August 2009

இலங்கைப் பதிவர்களுக்கோர் அழைப்பு.

இலங்கைப் பதிவர்களிடையே தப்போது அதிகமாகப் பேசப்படுகின்ற விடயம்தான் இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு. சந்திப்புக்கான நேரம், இடம், நோக்கங்கள் என்பன தீர்மானிக்கப் பட்டுவிட்டன.


எதிர்வரும் 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு கொழும்பு தமிழ் சங்க வினோதன் மண்டபத்திலே இடம்பெற இருக்கின்றன.

இப் பதிவர் சந்திப்பு இலங்கைப் பதிவர்களுக்கோர் முக்கிய திருப்பு முனையாக அமைய இருக்கின்றன. நீண்ட காலமாக எதிர் பார்க்கப்பட்ட விடயம் தற்போது கை கூடியிருக்கிறது.

இச் சந்திப்பிலே பல முக்கிய விடயங்கள் பற்றி ஆராயப்பட இருக்கின்றன.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com



இந்த பதிவர்கள் சந்திப்புக்கு வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

சந்திப்புத் தொடர்பான அனைத்து விபரங்களையும் லோஷனின் வலைப்பதிவில் பார்வையிடவும்.

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

37 comments: on "இலங்கைப் பதிவர்களுக்கோர் அழைப்பு."

கலையரசன் said...

எங்களுக்கும் ஃபிளைட் டிக்கெட் எடுத்து குடுத்தா.. நாங்களும் வருவோமுல்ல!!

எப்பூடி??????

Admin said...

//கலையரசன் கூறியது...
எங்களுக்கும் ஃபிளைட் டிக்கெட் எடுத்து குடுத்தா.. நாங்களும் வருவோமுல்ல!!

எப்பூடி??????//

அடடா இப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா... என்னால முடியல்ல....

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்...

கார்த்தி said...

நல்ல முயற்சி!!! கலக்குங்கள்!!

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் சந்ரு பதிவர் சந்திப்புக்கு

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
வாழ்த்துக்கள்!!//


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//கார்த்தி கூறியது...
நல்ல முயற்சி!!! கலக்குங்கள்!!//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு பதிவர் சந்திப்புக்கு//


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா...

ஆதிரை said...

//சந்திப்புத் தொடர்பான அனைத்து விபரங்களையும் லோஷனின் வலைப்பதிவில் பார்வையிடவும்.
இணைப்பினை லோஷன் அண்ணாவின் தளத்துக்கு அன்றி, அவரின் இடுகைக்கு (http://loshan-loshan.blogspot.com/2009/08/blog-post_10.html) கொடுத்தால் நன்று.


http://4.bp.blogspot.com/_OayCEnRHAWM/SoBPDayYB7I/AAAAAAAADL8/jn9sycZH-Jw/s400/kadaleri-invitation.jpg

இயலுமானால் உங்கள் வலைப்பதிவில் இடுக நண்பரே...

Admin said...

//ஆதிரை கூறியது...
//சந்திப்புத் தொடர்பான அனைத்து விபரங்களையும் லோஷனின் வலைப்பதிவில் பார்வையிடவும்.
இணைப்பினை லோஷன் அண்ணாவின் தளத்துக்கு அன்றி, அவரின் இடுகைக்கு (http://loshan-loshan.blogspot.com/2009/08/blog-post_10.html) கொடுத்தால் நன்று.//


இப்பொழுது சரி நண்பரே...

//http://4.bp.blogspot.com/_OayCEnRHAWM/SoBPDayYB7I/AAAAAAAADL8/jn9sycZH-Jw/s400/kadaleri-invitation.jpg

இயலுமானால் உங்கள் வலைப்பதிவில் இடுக நண்பரே...//


இதனை உங்களிடம் கேட்கவேண்டும் என்று இருந்தேன் இப்பொழுது எனது வலைப்பதிவிலும் இடுகிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Anonymous said...

மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com

நன்றி
ஈழவன்

SShathiesh-சதீஷ். said...

வெற்றியோடு ஒன்றாய் சேருவோம். கலக்குவோம். அண்ணே இதற்கான ஏற்ப்பாட்டில் நிறைய விடயங்கள் செய்ய வேண்டி இருக்கும். எனவே உங்கள் இந்த மிகப்பெரிய வேலைகளில் நானும் உதவியாக இருக்க விரும்புகின்றேன்.

தங்க முகுந்தன் said...

பதிவர்கள் அனைவரும் சந்தித்து - ஒன்றுபட்டு ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்! என்னால் பங்குகொள்ள முடியாவிடினும் செய்திகளை நோக்கியபடி இருப்பேன்!

சுசி said...

எனக்கு டிக்கட் போட்டுட்டீங்கதானே சந்ரு..

நட்புடன் ஜமால் said...

நல் முறையில் நடந்தேரி பதிவிடுங்கள்.

Admin said...

ஈழவன் கூறியது...
மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் //வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com

நன்றி
ஈழவன்//


நன்றிகள்

Admin said...

//SShathiesh கூறியது...
வெற்றியோடு ஒன்றாய் சேருவோம். கலக்குவோம். அண்ணே இதற்கான ஏற்ப்பாட்டில் நிறைய விடயங்கள் செய்ய வேண்டி இருக்கும். எனவே உங்கள் இந்த மிகப்பெரிய வேலைகளில் நானும் உதவியாக இருக்க விரும்புகின்றேன்.//


சிந்திப்போம், சிந்திப்போம்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//தங்க முகுந்தன் கூறியது...
பதிவர்கள் அனைவரும் சந்தித்து - ஒன்றுபட்டு ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்! என்னால் பங்குகொள்ள முடியாவிடினும் செய்திகளை நோக்கியபடி இருப்பேன்!//

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//சுசி கூறியது...
எனக்கு டிக்கட் போட்டுட்டீங்கதானே சந்ரு..//


ஆஹா மறந்துட்டமே.... வந்து சேர்ந்துவிட்டிங்க என்று சொல்லுங்க... பயணங்கள் எப்படி.....

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சுசி...

Admin said...

//நட்புடன் ஜமால் கூறியது...
நல் முறையில் நடந்தேரி பதிவிடுங்கள்.//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வழ்த்துக்கள்......பதிவர் சந்திப்பு பயனுள்ளதாக அமைய......

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பரே! நாங்களும் வர வேண்டும் என்ற ஆசைதான்.. முடிந்தால் ஒரு விமான பயண சீட்டை அனுப்புங்களேன்..

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் சந்ரு, நானும் வர முயற்சிக்கிறேன். சந்திப்பு இனிதே நிகழ வாழ்த்துகிறேன்.

Admin said...

//முனைவர் சே.கல்பனா கூறியது...
வழ்த்துக்கள்......பதிவர் சந்திப்பு பயனுள்ளதாக அமைய......//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...

Admin said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
வாழ்த்துகள் நண்பரே! நாங்களும் வர வேண்டும் என்ற ஆசைதான்.. முடிந்தால் ஒரு விமான பயண சீட்டை அனுப்புங்களேன்..//


அனுப்புவதில் பிரட்சனை இல்லை அதற்கான செலவை அனுப்பிவிடுங்கள் நான் விமானப்பயணச் சீட்டை அனுப்புகிறேன். (சும்மா லொள்ளு)


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..

Admin said...

//யோ (Yoga) கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு, நானும் வர முயற்சிக்கிறேன். சந்திப்பு இனிதே நிகழ வாழ்த்துகிறேன்.//


நானும் வர முயற்சிக்கிறேன். என்று அல்ல நானும் கட்டாயம் வருகின்றேன் என்றே வந்திருக்கவேண்டும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...

சுபானு said...

நிறைய எதிர்பார்ப்புக்களுடன் காத்திருக்கின்றோம்... !

Admin said...

//சுபானு கூறியது...
நிறைய எதிர்பார்ப்புக்களுடன் காத்திருக்கின்றோம்... !//


எல்லோரிடமும் எதிர்பார்ப்பு இருப்பது கிடைக்கின்ற ஆதரவுகளில் இருந்து புரிகிறது.. வாழ்த்துக்கள் நண்பா....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..

வால்பையன் said...

இலக்கியவாதிகளுக்குள் சண்டை சச்சரவில்லாமல் கூட்டம் நடக்க வாழ்த்துக்கள்!

Admin said...

//வால்பையன் கூறியது...
இலக்கியவாதிகளுக்குள் சண்டை சச்சரவில்லாமல் கூட்டம் நடக்க வாழ்த்துக்கள்!//


சண்டை சச்சரவு இல்லாமல் நடைபெறும் என்ற 100% நம்பிக்கை இருக்கிறது...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...

சப்ராஸ் அபூ பக்கர் said...

கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை, ஆர்வம் இருக்கிறது. ஆனால் கடல் கடந்து இருக்கிறேன்.

சந்திப்பு வெற்றி கரமாய் அமைய வாழ்த்துக்கள்.

மாசிலன் said...

சகோதர, சகோதரிகளே, உங்களது பதிவர் சந்திப்பு நல்லபடியாக நடக்க மனதாற வாழ்த்துகிறேன். அங்கே, உங்கள் தீவில் காலம் ரொம்ப கெட்டுப்போய் கிடக்கிறது. எதற்கும் கவனமாக இருங்கள்.

உங்களது முயற்சியில் சீரிய வெற்றி பெற அனைத்து தமிழ் உள்ளங்களையும் மீண்டும் மனதாற வாழ்த்துகிறேன்.

நன்றி.

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை, ஆர்வம் இருக்கிறது. ஆனால் கடல் கடந்து இருக்கிறேன்.

சந்திப்பு வெற்றி கரமாய் அமைய வாழ்த்துக்கள்.//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...

Admin said...

//மாசிலன் கூறியது...
சகோதர, சகோதரிகளே, உங்களது பதிவர் சந்திப்பு நல்லபடியாக நடக்க மனதாற வாழ்த்துகிறேன். அங்கே, உங்கள் தீவில் காலம் ரொம்ப கெட்டுப்போய் கிடக்கிறது. எதற்கும் கவனமாக இருங்கள்.

உங்களது முயற்சியில் சீரிய வெற்றி பெற அனைத்து தமிழ் உள்ளங்களையும் மீண்டும் மனதாற வாழ்த்துகிறேன்.

நன்றி.//

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...

வேந்தன் said...

வலைப்பதிவர்கள் சந்திப்புக்கு வழ்த்துக்கள்.

Admin said...

//வேந்தன் கூறியது...
வலைப்பதிவர்கள் சந்திப்புக்கு வழ்த்துக்கள்.//

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...

மாயா said...

வணக்கம் !

சக வலைப்பதிவர் சிங்கை நாதன் இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அவரின் இவ் வைத்தியச் செலவுகளுக்கான உதவிகளை சக பதிவர்கள் உலகெங்குமிருந்து உதவி வருகின்றனர்.

23ம் திகதி இலங்கை பதிவர் ஒன்றுகூடல் நடைபெற இருக்கும் அந்நாளில் இலங்கைப்பதிவர்கள் அனைவரும் தங்களால் இயன்றளவு தொகையை அன்றே திரட்டி சிங்கை நாதன் அவர்களுக்கு அனுப்பினால் நல்லது. இதை ஏற்பாட்டுக்குழுவிலுள்ள யாரேனும் செய்யலாம். இன்றுவரை அவருக்கு தேவையான பணத்தேவையில் அரைப்பங்கு தான் சேர்ந்துள்ளது. எனவெ நண்பர்களே வரும் 23ம் திகதி இது தொடர்பாகவும் கலந்துரையாடுங்கள் நிதியைச் சேருங்கள். நண்பர் விரைவாக நலம்பெறப் பிரார்த்தியுங்கள்.

அறுவை சிகிச்சைக்கு பெரும் பொருளுதவி தேவைப்படுகிறது, பதிவர் நண்பர்கள் இயன்றதை அளித்தும், நீங்கள் அறிந்த சேவை அமைப்புகளிடம் பேசி பொருளுதவி பெற்றுத் தந்து நம்மில் ஒருவரான நண்பர் சிங்கை நாதனின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும்.

நீங்கள் தருவது எவ்வளவு குறைவாக இருந்தாலும் கொடுங்கள்.

சிறுதுளி பெருவெள்ளமென உணர்த்துவோம்

இலங்கை வலைப்பதிவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிகளுடன்
மாயா

Post a Comment