இலங்கையில் வலைப்பதிவர் சந்திப்பு மிக விரைவில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்ற இந்த வேளையில். பதிவர் சந்திப்பு தொடர்பான தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இலங்கையின் பிரபல பதிவர் சட்டத்தின் மகன் தலைமையில் மறைவான இடம் ஒன்றில் இடம் பெற்றன. ஊடகவியலாளர் சந்திப்பிலே சொல்லப்பட்ட விடயங்களை தருகிறேன்.
சட்டத்தின் மகன் தனது ஒரு நிமிட பேச்சில் தனக்கு நேரம் இல்லாத காரணத்தினால் மேலதிக விபரங்களை பதிவர் சந்திப்புக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுவரும் ரவை அவர்கள் தருகிறார் என்று சொல்லி அமர நினைத்தவர் அமராமலே வெளியேறிவிட்டார்.
இந்தச் சந்திப்பிலே இலங்கையின் பிரபல பதிவர்கள் பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ரவை கூறுகையில்... இங்கே வந்திருக்கும் எந்த ஊடகவியலாளரும் எந்தக் கேள்விக்களும் கேட்கக் கூடாது. நாங்கள் சொல்வதை மட்டும் கேளுங்கள் என்று கூறிவிட்டுத் தொடர்ந்தார்.
இந்த பதிவர் சந்திப்பிலே பல முக்கிய பதிவர்கள் பங்கு பற்றுவதனால் ஏனைய ஏற்பாடுகளை விட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும். பாதுகாப்பு விடயங்களை தான் ஏற்றிருப்பதாகவும் கூறினார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக சந்திப்புக்கான இடம், நேரம் தப்போதைக்கு வெளியிட முடியாது எனவும் கூறினார். கடல் ஏறும் பதிவர் தலைமையில் விசேட பாதுகாப்புக்குழு அமைக்கப் பட்டிருப்பதோடு. கொழும்பின் முக்கிய வீதிகள் நாளை முதல் போக்குவரத்துக்குத் தடை செய்யப்படுவதோடு. சந்தேகத்துக்கிடமான நபர்களையோ வாகனங்களையோ கண்டால் பதிவர்கள் ஒளிந்து கொள்வதற்குரிய ஏற்பாடுகளும் நடை பெறுவதாகக் கூறினார்.
அத்தோடு பதிவர் சந்திப்பு இடம் பெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இருந்து கொழும்புக்கு வரும் வாகனங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்யப்படும் என்றார். பதிவர் சந்திப்பின் போது வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உண்மையான தகவல்களை வெளியிடுவார்கள் என்ற காரணத்தினால் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் இலங்கையின் ஊடக சுதந்திரத்தை கடைபிடித்து தாம் தரும் செய்திகளை மட்டும் வெளியிடுமாறும் கூறினார்.
இது இவ்வாறிருக்க கொழும்பிலே இருக்கும் உணவகமொன்றில் பல பதிவர்கள் கூடி பதிவர் சந்திப்பு தொடர்பாக பல விடயங்களை ஆராய்ந்து இருப்பதாக நம்பத்தகாத ரோட்டோரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதில் பல விடயங்கள் ஆராயப்பட்டு இருக்கின்றன. ஊடக அனுசரனைக்காக ஒரு வானொலியினை அழைக்கவேண்டும் என்றபொழுது வாந்தி எடுக்கும் பதிவர் சில ஊடகங்களில் பலர் தமிழை கொலை செய்கின்றனர். தமிழை வளர்க்கக்கூடிய ஒரு வெற்றி நடை போடும் வானொலி ஒன்றை அழைப்பது என்றும் முடிவேடுக்கப்பட்டிருக்கின்றது.
அடுத்து பதிவர்களை செங்கம்பளம் விரித்து வரவேற்கவேண்டும் என்றும் அதற்கான பொறுப்பினை தொடர் பதிவொன்றினை ஆரம்பித்து இருப்பதோடு பெயரில்லாதவர்களின் தொல்லைகளால் இது யாரோ ஒருவனின் சதி... சதி... ஷ் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பதிவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது.
மேடையினை அலங்கோலப் படுத்தும் பொறுப்பினை மகிழுந்தில் தீ வைத்த பதிவரிடம் வழங்கப்பட்டபோது அவர் யாழ்ப்பாணம் போக இருப்பதால் வேறு ஒருவருக்கு வழங்கும் படியும் கூறி இருக்கிறார். உணவு பற்றிப்பேசுகின்றபோது மிகவும் குறைந்த விலையிலே பெறக்கூடிய உணவுகளைப் பெறுவதென்றும். அதனால் ஏற்படும் வியாதிகளை கவனிப்பதற்கு ஊசி போடும் மூத்த பதிவரும் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
குளிர்பானங்கள் வழங்குவதற்கு இனிய இசையோடு வரும் பதிவர் மகளிர் அனித்த தொலைவியிடம் ஒப்படைக்கப்பட்டபோது அவரால் சாப்பிட மட்டுமே தெரியும் என்று மறுத்துவிட்டாராம். ஒரு ஓரத்தில் ஒதுங்கி இருந்த சுபமான ஒரு அங்கத்தினை உடைய பதிவர் தனக்கு பாதுகாப்பில் நம்பிக்கை இல்லாததால் தான் சந்திப்பு இடம் பெறும் இடத்திலே ஆரம்ப ஏற்பாடாக பதிவர்கள் ஓடி ஒழிப்பதற்கு சில பெட்டிகளை வைப்பதாகவும் கூறி இருக்கிறார்
அத்தோடு பல பதிவர்கள் எந்தவித திரட்டிகளிலும் இணைந்து கொள்ளாது இருப்பதாகவும். அவர்களை கண்டு பிடிப்பதற்கு ட்வீட்டும் இணையத் தளம் ஒன்றில் அழகான அ நடிகைக்கு வலை விரித்த பதிவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதும் தனக்கு நேரம் இல்லை என்று சொல்லி இருக்கின்றார். திரட்டிகளில் இணைந்து கொள்ளாது இருக்கும் பதிவர்களை கண்டு பிடிப்பதெட்கென மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன.
இவை எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த துருப்பிடிக்காத மகன் பதிவர் பதிவர் சந்திப்பிலே பதிவர்கள் வேற்று மொழி பேசக்கூடாது என்றும் பேசினால் அவர்கள் தமிழ் பதிவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றார்.
சுமார் ஒன்பது மணித்தியால சந்திப்பிலே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
இது எல்லாம் ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே.
விரைவில் இலங்கை பதிவர் சந்திப்பு ஒன்று இடம்பெற இருக்கின்றது முதல் கட்டமாக கொழும்பு பதிவர்கள் சந்திப்பு இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுகின்றன.
42 comments: on "விரைவில் இலங்கை பதிவர் சந்திப்பு..... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்...."
உண்மையான சந்திப்பில் எனக்கும் கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை. ஆனால் முடியாமல் இருக்கிறது சந்ரு. சந்திப்பு முடிந்ததும் கட்டாயம் அது பற்றி தொடர் பதிவு எழுதுங்கள்.
அது சரி, சும்மா இருந்த சதீஷ் அண்ணாவ வம்புக்கு இழுத்திருக்கீன்களே?... அவருக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது... (லொள்.....)
கற்பனை வித்தியாசமாக இருந்தது.....
வாழ்த்துக்கள்.....
ஏனய்யா..? ஏனய்யா..?
//இது இவ்வாறிருக்க கொழும்பிலே இருக்கும் உணவகமொன்றில் பல பதிவர்கள் குகுடி பதிவர் சந்திப்பு தொடர்பாக பல விடயங்களை ஆராய்ந்து இருப்பதாக நம்பத்தகாத ரோட்டோரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இது கூடி.... நெடில்.
தெளிவாகப் போடுங்கய்யா...
//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
உண்மையான சந்திப்பில் எனக்கும் கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை. ஆனால் முடியாமல் இருக்கிறது சந்ரு. சந்திப்பு முடிந்ததும் கட்டாயம் அது பற்றி தொடர் பதிவு எழுதுங்கள்.
அது சரி, சும்மா இருந்த சதீஷ் அண்ணாவ வம்புக்கு இழுத்திருக்கீன்களே?... அவருக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது... (லொள்.....)
கற்பனை வித்தியாசமாக இருந்தது.....
வாழ்த்துக்கள்.....//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...
//கொழும்பின் முக்கிய வீதிகள் நாளை முதல் போக்குவரத்துக்குத் தடை செய்யப்படுவதோடு. சந்தேகத்துக்கிடமான நபர்களையோ வாகனங்களையோ கண்டால் பதிவர்கள் ஒளிந்து கொள்வதற்குரிய ஏற்பாடுகளும் நடை பெறுவதாகக் கூறினார்.//
இதல்லாம் கொஞ்சம் அதிகமா தெரியலயா?... நல்ல பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள் நண்பா... கலக்குங்க
//ஆதிரை கூறியது...
ஏனய்யா..? ஏனய்யா..?//
எல்லாம் ஒரு நகைச்சுவைதான்... அதிலும் சில விடயங்கள் மறைமுகமாக இருக்கிறது. (பாதுகாப்பு ஏற்பாடு, ஊடக சுதந்திரம் சொல்லாமல் சொல்லி இருக்கிறேன்)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...
//இது கூடி.... நெடில்.
தெளிவாகப் போடுங்கய்யா...//
கு+கு= கூ னு நினைக்கின்றேன்... சரிதானே சந்ரு...
//ஆதிரை கூறியது...
//இது இவ்வாறிருக்க கொழும்பிலே இருக்கும் உணவகமொன்றில் பல பதிவர்கள் குகுடி பதிவர் சந்திப்பு தொடர்பாக பல விடயங்களை ஆராய்ந்து இருப்பதாக நம்பத்தகாத ரோட்டோரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இது கூடி.... நெடில்.
தெளிவாகப் போடுங்கய்யா...//
அவசரம் யாரை விட்டது இப்போது சரி நண்பா சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பா...
//ஆ.ஞானசேகரன் கூறியது...
//கொழும்பின் முக்கிய வீதிகள் நாளை முதல் போக்குவரத்துக்குத் தடை செய்யப்படுவதோடு. சந்தேகத்துக்கிடமான நபர்களையோ வாகனங்களையோ கண்டால் பதிவர்கள் ஒளிந்து கொள்வதற்குரிய ஏற்பாடுகளும் நடை பெறுவதாகக் கூறினார்.//
இதல்லாம் கொஞ்சம் அதிகமா தெரியலயா?... நல்ல பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள் நண்பா... கலக்குங்க//
நகைச்சுவையாக இருந்தாலும் பல விடயங்களை சொல்லாமல் சொல்லி இருக்கிறேன். ( இலங்கையின் நிலை பற்றித்தான்)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...
//ஆ.ஞானசேகரன் கூறியது...
//இது கூடி.... நெடில்.
தெளிவாகப் போடுங்கய்யா...//
கு+கு= கூ னு நினைக்கின்றேன்... சரிதானே சந்ரு...//
அதேதான் நண்பரே..... எல்லாமே அவசரம்தான் வாழ் பையனின் வலைப்பதிவிலே காரசாரமான விவாதம் நடக்கிறது அந்த விவாதத்தில் இருக்கும்போது அவசர அவசரமாக பதிவிட்டேன். அவசரமே காரணம். பிழை விடக்கூடாது என்பதிலே கண்ணும் கருத்துமாக இருக்கிறேன். இருந்தும் அவசரம் விடுவதாக இல்லை.
உங்கள் பதிவர் சந்திப்பு இனிதே நடை பெற வாழ்த்துக்கள் சந்ரு!
//யாழினி கூறியது...
உங்கள் பதிவர் சந்திப்பு இனிதே நடை பெற வாழ்த்துக்கள் சந்ரு!//
ஆஹா இது உங்களுக்கே ஓவரா தெரியல்ல... அப்போ உங்க பதிவர் சந்திப்பு....
சங்கதி தெரியுமா யாழினி...
இதெல்லாம் ஒரு பகிடி என்று நினைக்கிறீர்களோ? வன்னிக்காம்பிலே இருக்கிற சனத்திட்டை இதைப் பகிடி என்று சொல்லிப் பாரும். மனச்சாட்சி இருக்குதா உமக்கெல்லாம்? உங்களை எல்லாம் வெள்ளைவானிலை உண்மையிலையே கடத்திக்கொண்டு போய்வச்சால் மட்டுமே நக்கலும் நளினமும் வெளிக்கும்.
கேட்டால் கொழும்பிலையிருந்து கூவுறம் என்று பாதுகாப்புமட்டும் பேசுவியள். குறைஞ்சது மனுசத்தன்மையோட இப்பிடியான குரங்காட்டங்களை மொக்கை மொன்னை என்று போடாமல் இருந்தாலே பெரிசு.
இலங்கைப் பதிவர் சந்திப்பு நடக்கமுன்னர் அதுபற்றி கிண்டல் செய்து பதிவிடுவது உங்களைப்போன்ற மூத்த ஊடகவியளாலருக்கு அழகில்லை. இந்தப் பதிவை எடுத்துவிடவும், வெறும் நகைச்சுவைக்குத்தான் என்றாலும் அந்த முயற்சியில் ஈடுபடுபவர்களை பாதிக்கும்.
முதல் பதிவர் சந்திப்பு.. நலமாகவே நடக்கட்டும்.. முதலில் சந்திப்போம்..பின்னர் ஆரோக்கியமான விடயங்களை கலந்தாலோசித்து கொண்டு செல்வோம்.
//சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…
உண்மையான சந்திப்பில் எனக்கும் கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை. ஆனால் முடியாமல் இருக்கிறது சந்ரு. சந்திப்பு முடிந்ததும் கட்டாயம் அது பற்றி தொடர் பதிவு எழுதுங்கள். //
அவ்வ்வ்.. தொடர் பதிவா.. இதுக்குமா...
சந்த்ரு.. அநாமதேயங்களின் கருத்துக்களை வாசித்துவிட்டு மட்டும் விடுங்கள். :)
ஹாஹாஹ! சந்துரு.. நீங்க சீரியஸ் பதிவர்... என்னைப்போல கடியப்போட இறங்கிட்டீங்களே? என்ன கொடுமை? அதுவும் நான் சும்மா நக்கலுக்கு ஆரம்பித்த கிசுகிசு போமட்டில... எல்லாரும் என்னையல்லோ குமட்டில குத்தப்போறாஙகள்... ஹிஹி! பரவால்ல...
காமெடியா இருந்திச்சு...
சும்மா சுப்பரா நச்சுன்னு இருக்குது பதிவு. எனக்கு கவலையா இருக்கு சந்திப்பில் கலந்து கொள்ள முடியாததையிட்டு. என்ன செய்ய வீடுதானே முக்கியம். இன்னொரு முறை சந்திப்போம்.
//பெயரில்லா கூறியது...
இதெல்லாம் ஒரு பகிடி என்று நினைக்கிறீர்களோ? வன்னிக்காம்பிலே இருக்கிற சனத்திட்டை இதைப் பகிடி என்று சொல்லிப் பாரும். மனச்சாட்சி இருக்குதா உமக்கெல்லாம்? உங்களை எல்லாம் வெள்ளைவானிலை உண்மையிலையே கடத்திக்கொண்டு போய்வச்சால் மட்டுமே நக்கலும் நளினமும் வெளிக்கும்.
கேட்டால் கொழும்பிலையிருந்து கூவுறம் என்று பாதுகாப்புமட்டும் பேசுவியள். குறைஞ்சது மனுசத்தன்மையோட இப்பிடியான குரங்காட்டங்களை மொக்கை மொன்னை என்று போடாமல் இருந்தாலே பெரிசு.//
பெயரில்லாதவரே முதலில் பெயரை வைத்துவிட்டு வாருங்கள். நிஇங்கள் வருவீர்கள் என்பது எனக்கு நான் இடுகை இடுவதற்கு முன்னரே தெரியும். என் இடுகை ஒரு நகைச் சுவையாக இருந்தாலும் அதில் என்ன சொல்லவருகிறேன் என்பது புரிகிறவர்களுக்குப் புரியும்.
உண்மையைச் சொன்னவன் எல்லோருக்கும் வெள்ளை வான் கதைதான் என்பது எனக்கும் தெரியும். வன்னி மக்களைப் பற்றிய கவலை உங்களைவிட எனக்கு அதிகமாகவே இருக்கின்றது. எம் உறவுகள் என்ற ரீதியில். இதற்கு என் இடுகைகளும் நான் இடுகின்ற பின்னூட்டங்களும் சாட்சி என் இடுகைகளை பாருங்கள். இந்த விடயத்துக்கு வன்னி மக்களைப் பற்றி கவலைப்படுவதாக கூறும் நீங்கள் வெள்ளைவான் பற்றியோ தமிழ் மக்கள் படும் துன்பங்கள் பற்றியும் ஏன் அலட்டிக்கொள்ளவில்லை. இப்படித்தான் யாராவது ஏதாவது சொல்ல வெளிக்கிட்டால் மிரட்டல்கள், வெள்ளைவான் என்று வந்து விடுவீர்கள்.
மிரட்டல்களுக்கோ, வெள்ளை வானுக்கோ இதுவரை பயந்தவனுமல்ல, பயப்படப் போரவனுமல்ல.... நான் உங்களைப்போல் கோழையுமல்ல.... நீங்கள் யார் என்று சொல்லிவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் நான் எதனையும் ஏற்கத் தயார். அனாமதேய கருத்துக்களை நான் பெரிது படுத்தப் போவதுமில்லை
//பெயரில்லா கூறியது...
இலங்கைப் பதிவர் சந்திப்பு நடக்கமுன்னர் அதுபற்றி கிண்டல் செய்து பதிவிடுவது உங்களைப்போன்ற மூத்த ஊடகவியளாலருக்கு அழகில்லை. இந்தப் பதிவை எடுத்துவிடவும், வெறும் நகைச்சுவைக்குத்தான் என்றாலும் அந்த முயற்சியில் ஈடுபடுபவர்களை பாதிக்கும்.//
இந்த இடுகை பதிவர்களை கிண்டல் செய்யும் பதிவல்ல. சில விடயங்களைச் சொல்லி இருக்கின்றேன். (புரிபவர்களுக்குப் புரியும்.) இலங்கைப் பதிவர் சந்திப்பு நடைபெற வேண்டுமென்று ஆதங்கப்படுபவன் நான். பதிவர்களை கிண்டல் செயுமளவில் நான் பைத்திய காரணல்ல. எல்லாமே நகைச்சுவையுடன் சில விடயங்களைச் சொல்லி இருக்கிறேன். எனக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. (???????????)
இலங்கைப் பதிவர்களை மதிப்பவன் நான் அவர்களுக்கு உஉக்கம் கொடுக்க நினைப்பவன் நான். இலங்கைப் பதிவர் யாராவது இந்த இடுகை தங்களை அவமதிப்பதாக சொன்னால் அவர்களுக்கு நான் சில விளக்கங்களை (இந்த இடுகை இடப்பட்டதன் நோக்கம்) சொல்வதற்கு தயாராக இருக்கிறேன். உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
//மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...
முதல் பதிவர் சந்திப்பு.. நலமாகவே நடக்கட்டும்.. முதலில் சந்திப்போம்..பின்னர் ஆரோக்கியமான விடயங்களை கலந்தாலோசித்து கொண்டு செல்வோம்.//
பதிவர் சந்திப்பு நல்லபடியாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர் பார்ப்பு. நல்லபல விடயங்கள் அந்தச் சந்திப்பிலே இடம் பெறும் என்பதும் உறுதி.
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...
//மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...
சந்த்ரு.. அநாமதேயங்களின் கருத்துக்களை வாசித்துவிட்டு மட்டும் விடுங்கள். :)//
உண்மைதான் நண்பரே... இப்படித்தான் ஒவ்வொருவராக வம்புக்கு இழுத்துத் திரிவதே இவர்களது வேலையாப்போச்சு...
//புல்லட் கூறியது...
ஹாஹாஹ! சந்துரு.. நீங்க சீரியஸ் பதிவர்... என்னைப்போல கடியப்போட இறங்கிட்டீங்களே? என்ன கொடுமை? அதுவும் நான் சும்மா நக்கலுக்கு ஆரம்பித்த கிசுகிசு போமட்டில... எல்லாரும் என்னையல்லோ குமட்டில குத்தப்போறாஙகள்... ஹிஹி! பரவால்ல...
காமெடியா இருந்திச்சு...//
இவ்வளவு காலமும் ஏன் இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு நடக்கவில்லை என்று யோசித்தேன். இப்படி ஒரு இடுகை போடலாமே என்று தோன்றியது. உங்க கிசு கிசு இடுகை ஞாபகத்துக்கு வந்திடுச்சி..
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...
//கார்த்தி கூறியது...
சும்மா சுப்பரா நச்சுன்னு இருக்குது பதிவு. எனக்கு கவலையா இருக்கு சந்திப்பில் கலந்து கொள்ள முடியாததையிட்டு. என்ன செய்ய வீடுதானே முக்கியம். இன்னொரு முறை சந்திப்போம்.//
இப்போ வீட்டுக்குப் போவதென்றால் பல கச்ரங்களுக்கு மத்தியிலேதான் போக வேண்டி இருக்கிறது முதலில். முதலில் வீட்டுக்கு போய்வாருங்கள் வாருங்கள் அடுத்த சந்திப்புக்களில் கலந்து கொள்ளுங்கள்....
பதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்......
//முனைவர் சே.கல்பனா கூறியது...
பதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.....//
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்
வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/
Tamil10.com
கற்பனை மட்டும் தானா.
ம்ம்ம்
நகைச்சுவையுடன் நக்கலும் கொஞ்சம் அதிகமாத்தான்
/* சந்திப்பிலே பதிவர்கள் வேற்று மொழி பேசக்கூடாது என்றும் பேசினால் அவர்கள் தமிழ் பதிவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் */
வழிமொழிகிறேன்.... குறிப்பாக ஆங்கிலத்தில் பேசுவோர் அவையிலிருந்து வேளியெற்றபடுவர்..
//நட்புடன் ஜமால் கூறியது...
கற்பனை மட்டும் தானா.
ம்ம்ம்//
எல்லாமே கற்பனைதான் நண்பரே..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....
//பனையூரான் கூறியது...
நகைச்சுவையுடன் நக்கலும் கொஞ்சம் அதிகமாத்தான்//
நகைச் சுவையுடன் நக்கலும் அதிகம்தான்.. ஆனால் பதிவர்களுக்கு நக்கல் நக்கல் பண்ணவில்லை. பண்ணவேன்டியவர்களுக்கு நக்கல் பண்ணி இருக்கிறேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....
//கார்த்திக் கூறியது...
/* சந்திப்பிலே பதிவர்கள் வேற்று மொழி பேசக்கூடாது என்றும் பேசினால் அவர்கள் தமிழ் பதிவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் */
வழிமொழிகிறேன்.... குறிப்பாக ஆங்கிலத்தில் பேசுவோர் அவையிலிருந்து வேளியெற்றபடுவர்.//
ஆஹா எனக்குத் துணையா நீங்களுமா..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....
யார் யாரையோ கனமா பகடி பண்ணியிருக்கீங்கபோல! கலக்கறேள் சந்ரு!
ஏன் இந்தக் கொலை வெறி?
ஏற்கெனவே இதைப் போல ஒரு பதிவை புல்லட் போட்டிருந்ததனால் கிக் ஒன்றில்லாமல் இருந்தது..
இதிலே நீங்கள் பெயர் சொல்லாத ஏனைய இலங்கைப் பதிவர்கள் சண்டைக்கு வருவார்கள்.. கவனம்.. :)
இப்படியான கிண்டல் பதிவுகள் மூலமாக இந்த மாதத்தில் நடைபெறவுள்ள பதிவர்கள் சந்திப்புக்கு வருவோர் அதிகரிப்பராக இருந்தால் மகிழ்ச்சியே.. :)
//ஜெகநாதன் கூறியது...
யார் யாரையோ கனமா பகடி பண்ணியிருக்கீங்கபோல! கலக்கறேள் சந்ரு!//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா....
//LOSHAN கூறியது...
ஏன் இந்தக் கொலை வெறி?
ஏற்கெனவே இதைப் போல ஒரு பதிவை புல்லட் போட்டிருந்ததனால் கிக் ஒன்றில்லாமல் இருந்தது..
இதிலே நீங்கள் பெயர் சொல்லாத ஏனைய இலங்கைப் பதிவர்கள் சண்டைக்கு வருவார்கள்.. கவனம்.. :)
இப்படியான கிண்டல் பதிவுகள் மூலமாக இந்த மாதத்தில் நடைபெறவுள்ள பதிவர்கள் சந்திப்புக்கு வருவோர் அதிகரிப்பராக இருந்தால் மகிழ்ச்சியே.. :)//
இந்த இடுகை மூலம் நான் பதிவர் சந்திப்புக்களையோ, அல்லது பதிவர்களையோ கிண்டல் செய்யும் நோக்கம் இல்லை அண்ணா... இதுவரை இலங்கையில் ஏன் இதுவரை பதிவர் சந்திப்பு நடைபெறவில்லை என்பதை எண்ணிப்பார்த்தேன். இலங்கையில் நடைபெறும் சில விடயங்களை நகைச் சுவையாக பகிர்ந்து கொள்ள நினைத்தேன் அப்போது புல்லட்டின் ஞாபகம் வந்தது...
இன்று இலங்கையில் அடிக்கடி நடைபெறும் சில விடயங்களை (எதட்கெடுத்தாலும் போக்குவரத்து தடை) போன்ற விடயங்களை வைத்து நகைச்சுவையாக சொல்லி இருக்கின்றேன்.
வாழ்த்துக்கள், எனக்கும் இதில் பஙகுபெற ஆவல்தான், ஆனால் எனக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேண்டும். மேலும் செங்கம்பள வரவேற்பும் வேண்டும். இவை எல்லாம் தர விரும்பினால் சொல்லுங்கோ வருவதை பற்றி யோசிக்கிறேன்...
//யோ (Yoga) கூறியது...
வாழ்த்துக்கள், எனக்கும் இதில் பஙகுபெற ஆவல்தான், ஆனால் எனக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேண்டும். மேலும் செங்கம்பள வரவேற்பும் வேண்டும். இவை எல்லாம் தர விரும்பினால் சொல்லுங்கோ வருவதை பற்றி யோசிக்கிறேன்...//
அதனை பற்றிய கவலை எதற்கு. வாருங்கள் தாராளமாக...
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...
ஹ்ம்ம் என்னையும் ஒரு வாங்கு வாங்கி விட்டீர்கள். இனிய ஒரு அனுபவத்திற்காக காத்திருக்கின்றேன். அதுசரி இந்த ஏற்ப்பாட்டில் உங்கள் பங்கை சொல்லவே இல்லையே. பெயரில்லாதவர்கள் எல்லாம் கருத்து சொல்றாங்களாம். இவர்களை எல்லாம் கணககேடுக்காதீர்கள் .அனுபவம் பேசுகிறது....
//SShathiesh கூறியது...
ஹ்ம்ம் என்னையும் ஒரு வாங்கு வாங்கி விட்டீர்கள். இனிய ஒரு அனுபவத்திற்காக காத்திருக்கின்றேன். அதுசரி இந்த ஏற்ப்பாட்டில் உங்கள் பங்கை சொல்லவே இல்லையே. பெயரில்லாதவர்கள் எல்லாம் கருத்து சொல்றாங்களாம். இவர்களை எல்லாம் கணககேடுக்காதீர்கள் .அனுபவம் பேசுகிறது....//
சொல்லாமல் இல்லை சொல்லி இருக்கிறேன்...
இவை எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த துருப்பிடிக்காத மகன் பதிவர் பதிவர் சந்திப்பிலே பதிவர்கள் வேற்று மொழி பேசக்கூடாது என்றும் பேசினால் அவர்கள் தமிழ் பதிவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றார்.
இவர்தான் அடியேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...
Post a Comment