Sunday 25 December 2011

இலங்கைப் பதிவர்களின் அராஜகமும் தலைக்குமேல் ஏறிய ஏழரைச் சனியனும்

இது என்னுடைய 400 வது பதிவு


Christmas Myspace Graphics

அனைத்து நண்பர்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.



நான் பதிவுலகிற்கு வந்து நிறைய விடயங்களை கற்றிருக்கின்றேன். பல மனச் சங்கடங்களை எதிர் கொண்டீருக்கின்றேன். என் வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் தலைக்கு மேல் ஏறிக்கொண்டிருக்கும் ஏழரைச் சனியன் வலைப்பதிவிரும் என்னை விடுவதாக இல்லை.
நான் வலைப்பதிவில் எழுதுவதும் அடிக்கடி காணாமல் போவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எல்லாம் என் குடும்ப சூழ்நிலை. அது ஒரு பக்கம் இருக்கட்டும் விடயத்துக்கு வருகின்றேன் எனது இந்த 400 வது பதிவிலே சில விடயங்களை மனம் விட்டு பேச நினைக்கின்றேன்.
இலங்கையில் அதிகமாக அனானித் தாக்குதலுக்கு இலக்கான பதிவர் நானாகத்தான் இருக்க முடியும். 400 பதிவுகளை தந்திருந்தாலும் நான் எதனையும் சாதிக்கவுமில்லை. தலைக்கனமும் எனக்கு இல்லை. புதிய பதிவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உடையவன் பலரை ஊக்கப்படுத்தி இருக்கின்றேன். 

இப்போதெல்லாம் அதிகமான நேரம் இணையத்தில் எனது பொழுதைப் போக்கினாலும் வலைப்பதிவெழுத மனம் வருவதில்லை. காரணம் நான் வாங்கிய அனானித் திட்டுக்களும். இலங்கை பதிவர்களின் போக்கும் ஒரு காரணமாகும்.

இப் பதிவில் என்னைப் பற்றி சில விடயங்களை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இவ் வலைப்பதிவினை வெறுமனே பொழுது போக்குக்காக இல்லாமல் எமது சமூகத்தின் அவலங்களையும் பிரச்சினைகளையும் வெளிப்படத்தும் ஒரு தளமாகவே பயன் படுத்துகின்றேன். தொடர்ச்சியாக எமது சமூகத்தின் பிரச்சினைகளை எழுதி வருகின்றேன். 

ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு மாற்றுக் கருத்துக்கள் இருக்கும் கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும். மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றபோதுதான் உண்மைகள் வெளிவரும். எனது கருத்துக்களை நான் எனது வலைப்பதிவில் எழுதுகின்றபோது அக் கருத்துக்களில் எங்கே தவறிருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டினால் நான் ஏற்றுக் கொள்ள தயங்கப் போவதில்லை. 

நான் மறைக்கப்பட்ட துரோகங்கள் எனும் அரசியல் சார்ந்து தொடர் பதிவொன்றை எழுதியிருந்தேன். அத் தொடர் பதிவினை ஒரு சிலர் எதிர்த்தனர் பொய்யான தகவல்களை வழங்குவதாக. எந்த இடத்திலே பொய் இரக்கின்றது என்று சுட்டிக் காட்டச் சொன்னேன் குற்றம் சாட்டிய எவரும் எது பொய்யான தகவல்கள் என்று சுட்டிக்காட்டவில்லை. ஆனாலும் ஆதாரமாக தொடர்ந்த பதிவுகளில் 24 க்கு மேற்பட்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் ஆதாரம் காட்டியிருந்தேன்.

குறித்தவர்கள் என்னை குற்றம் சாட்டுவதற்காகவும் என்னுடன் ஏனையவர்கள் பகைத்துக் கொள்வதற்காகவும் கையாண்ட விடயம் நான் பிரதேச வாதம் பேசுகின்றேன் என்பதாகும். நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதனாலும் அரசியல் சார்ந்து தொடர்பதிவு எழுதியதனாலும் பிரதேசவாதம் பேசுகின்றான் என்று; என்னுடன் பதிவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்தவர்களும் இருக்கின்றனர். 

ஆனாலும் என்னுடைய மறைக்கப்பட்ட துரோகங்கள் எனும் தொடர் பதிவிற்கு எதிர்த்த குழுவினரைத் தவிர பலர் மத்தியிலே வரவேற்பு இருந்தது. அத் தொடர் பதிவானது கடந்தகால அரசியல் வரலாறுகளை புரட்டிப் பார்க்கும் ஒரு பதிவாக அமைந்திருந்தது. 60 பகுதிகளுக்குமேல் எழுதி இருந்தேன். இந்த இடத்தில் ஒன்றை சொல்கின்றேன் நான் பொய்களை எழுதுகிறேன் என்று என்னுடன் சண்டைக்கு வந்தவர்கள் எந்த இடத்தில் பொய் சொல்லி இருக்கின்றேன் என்பதனை இப்பொழுதாவது சுட்டிக்காட்ட முடியுமா?

இது ஒருபுறமிருக்க இலங்கையின் பதிவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது வெட்கித் தலைகுனியவேண்டிய நிலையில் இருக்கின்றது. ; இலங்கையிலிருந்து புதியவர்கள் பலர் பதிவுலகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். நல்ல பல பதிவுகளைத் தந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

இலங்கையில் வலைப்பதிவர்களிடையே ஒற்றுமை இல்லை. பல குழுக்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது. பல புதிய பதிவர்கள் வந்திருக்கின்றபோதிலும் பழையவர்களுக்கும் புதியவர்களுக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு இல்லாத நிலை காணப்படுகின்றது. 

இலங்கையின் இன்றைய நிலையினைப் பொறுத்தவரையில் எவ்வளவோ முக்கியமான விடயங்களை பதிவிட வேண்டிய அவசியமிருக்கின்றது. இருந்தும் வெறுமனே மொக்கைப் பதிவுகளையும் கும்மிப் பதிவுகளையும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். பதிவெழுதுவது எதை எழுதுவதென்பது அவரவர் விருப்பம். ஆனாலும் இவ்வாறான பதிவெழுதுபவர்கள் தாங்கள்தான் இலங்கையின் சிறந்த பதிவர்கள் என தங்களை காட்டிக்கொள்ள நினைப்பதுதான் கேலிக்கிடமானது. இலங்கை பதிவர்களைப் பொறுத்தவரை ஒருவரை ஒருவர் மாறிமாறி தங்களை தாங்களே புகழ்ந்து எழுதிக் கொள்ளும் செயற்பாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இலங்கையின் புதிய தமிழ் வலைப்பதிவர்களிடம் கேட்கின்றேன். இலங்கை தமிழ் வலைப்பதிவர் குழுமம் என்று ஒன்று இருக்கின்றது. அதில் பலர் சேர்ந்து கொள்ளாமல் இருக்கின்றனர். சேர்ந்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன? குறித்த சிலரே குழுமத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பலர் இக் குழுமத்தில் இணைந்து கொள்ளவில்லையாயின் எதற்காக இலங்கை தமிழ் வலைப் பதிவர் குழுமம் என்று சொல்ல வேண்டும். 

இலங்கை தமிழ் மக்களின் சமூக கலை கலாசார பாரம்பரியங்களை ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. எமது கலை கலாசார பாரம்பரியங்கள் இன்று அழிவடைந்து வருகின்றன. இவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்குடன்தான் ஈழத்து முற்றம் எனும் தளம் உருவாக்கப்பட்டது என்று நினைக்கின்றேன். இதில் பல இலங்கை பதிவர்கள் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நானும் ஈழத்து முற்றத்திலே பதிவிடவேண்டும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆனாலும் அது நிலைக்கவில்லை. மிக மிகக் குறிகிய காலமே ஈழத்து முற்றத்தில் உறுப்புரிமையுடன் இருக்க முடிந்தது நான்கு இடுகைகளே இட்டிருக்கின்றேன். 

நான் எனது வலைப்பதிவில் அரசியல் சார்ந்து எழுதியதனால் ஈழத்து முற்றத்திற்கான எனது உறுப்புரிமை என்னிடம் சொல்லாமலே பறிக்கப்பட்டது. அரசியல் பதிவெழுதும் அல்லது மாற்றுக் கருத்துள்ள ஒருவனுக்கு தனது சமூகம் சார்ந்த கலை கலாசாரம் சார்ந்த விடயங்களை எழுத உரிமை இல்லiயா? அல்லது அவன் எழுதக் கூடாதா? 

இன்று இலங்கை தமிழ் வலைப்பதிவர்களிடையே அதிகம் பேசப்படுகின்ற விடயம் ஈழவயல் ஈழவயலானது பல நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்க விடயம். ஈழத்தின் கலை கலாசார பாரம்பரியங்களை ஆவணப்படுத்தும் தளமாகவும். தளத்தில் பதியப்படும் விடயங்களை நூலுருவில் ஆவணப்படுத்தல். நிதியம் ஒன்றினை ஆரம்பித்து பல சமூக சேவைகளைச் செய்யவும் என்று பல நல்ல நோக்கங்களோடு உருவாக்கப்பட்டிருப்பதாக ஈழவயல் குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இவர்களின் இச் சேவை பாராட்டத்தக்கது.

ஆனாலும் சிலர் ஈழவயல் தளத்தின் வருகையை பொறுத்துக் கொள்ள முடியாமல் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றனர். ஈழத்து முற்றம் இருக்கும்போது ஈழவயல் எதற்கு என்று கேட்கின்றனர். ஈழத்து முற்றம் புதியவர்களை உள்வாங்குவதுடன் சரியாக செயற்பட்டிருந்தால் இன்னொரு தளத்தின் தேவை உணரப்பட்டிருக்காது. 

ஈழத்து முற்றம் இருக்கும்போது எதற்கு ஈழவயல்  என்று கேட்டிவர்களின் மனநிலையை பார்த்தீர்களா? தமிழர்களின் கலை கலாசார பாரம்பரியங்களை எழுத பல தளங்கள் இருந்தால் எமக்குத்தானே பெருமை. இவர்கள் வரவேற்க வேண்டியவர்கள். எதிர்க்கின்றனர். உண்மையான நல்ல மனமுள்ளவர்கள் நல்ல விடயம் இரண்டிலும் பதிவிடுவோம் என்று வரவேற்றிருக்க வேண்டும்.

ஒரு சிலர் வேண்டுமென்று திசை திருப்பி என்னுடன் சில பதிவர்களை மோதவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்த நினைக்கின்றனர். ஈழவயல் தளம் சந்ருவுக்காகவா உருவாக்கப்பட்டது என்று இலங்கை வலைப்பதிவர் குழுமத்திலே கேள்வியினைத் தொடுத்து விவாதத்ததை என் பக்கம் திசை திருப்பியிருந்தனர். இது எனக்காக உருவாக்கப்பட்ட தளமல்ல. புதிய தளத்தின் தேவை உணரப்பட்டதன் வெளிப்பாடாக ஈழவயல் குழுமத்தினர் உருவாக்கியிருக்கின்றனர். என்னிலும் என் எழுத்துக்களிலும் நம்பிக்கை இருந்தால் ஈழவயல் குழுமத்தினர் என்னை அழைக்கட்டும். அழைத்தார்களானால் அவர் என்ன நோக்கத்திற்காக ஈழவயலினை உருவாக்கினார்களோ அந் நோக்கத்திற்கமைய செயற்படுவேன்.

இன்று இலங்கையைப் பொறுத்தவரை பதிவர் சந்திப்பு ஒன்று மிக மிக அவசியம் இலங்கைப் பதிவர்கள் சந்திப்புப்பற்றி சிந்திக்க வேண்டும். இச் சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெறுவது நல்லதென நான் நினைக்கின்றேன். காரணம் நான் மிகவும் கவலைப்படுகின்ற விடயம் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் பதிவெழுதுபவர்கள் மிக மிகக் குறைவு இதற்கு காரணம் வலைப்பதிவு பற்றி பலருக்கு தெரியாது. மட்டக்களப்பிலே பதிவர் சந்திப்பு ஒன்றினை செய்கின்றபோது ஒரு விழப்புணர்வினை ஏற்படுத்த முடியும். (இதனையும் பிரதேசவாத முத்திரை குத்த வேண்டாம்)

இனிவரும் காலங்களில் தொடர்ந்தும் பதிவிட நினைத்திருக்கின்றேன். இன்று முதல் உங்கள் பதிவுகளுக்கும் வலம் வர இருக்கின்றேன்.




Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

21 comments: on "இலங்கைப் பதிவர்களின் அராஜகமும் தலைக்குமேல் ஏறிய ஏழரைச் சனியனும்"

Jana said...

வணக்கம் சந்துரு..
தாங்கள் ஆத்கங்கள் புரிகின்றது... என்ன செய்வது பதிவுலக சாபக்கேடாக ஒரு சிலரின் செயல்களால் முழுப்பதிவுலகமும் வேதனைப்படும்படி நடந்துகொண்ட சந்தர்ப்பங்கள் உங்களுக்கு மட்டுமன்றி பலருக்கும் நடந்துள்ளது.
காரணம் விரிவான சிந்தனைகள் இல்லாமை என்பது வெளிப்படை.
கருத்துக்களை கருத்துக்களால் வெல்வதும், பிறரது கருத்துக்களையும் சீர்தூக்கி பார்ப்பதுமே ஆரோக்கியத்தை கொண்டுவருவதுடன் பல கருத்தாடல்களையும் தரும்.
அதுதவிர ஒருவருடைய கருத்து, எழுத்தை அவராகவே பார்க்கும் மாஜை செய்யும் வேலைகள்தான் இவை அனைத்துமே. ஒருவருடைய கருத்தில் முரண்பாடு வரவேண்டுமே தவிர அவருடன் அல்ல என்ற அறிவும் அற்றுப்போனதே இவை அனைத்திற்கும் காரணம்.

நீங்கள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் எழுத்திக்கொண்டே இருங்கள். அதை யாராலும் தடுத்துவிட முடியாது. கருத்துச்சுதந்திரம் எவமுக்கும் உண்டு என்ற நிலைப்பாட்டில் இன்றும் நான் உறுதியாகவே உள்ளேன்.
நன்றி

இராஜராஜேஸ்வரி said...

400 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Anonymous said...

நீங்களும் இலங்கைப்பதிவர் தானே சந்ரு?

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவு நானூறு நச்! த.ம.3

மாதேவி said...

நாநூறுக்கு வாழ்த்துக்கள்.

K said...

உங்களைப் புரிந்துகொள்கிறோம்! - ஆழமாக!

ஈழவயல் பற்றிய உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும் உவகை தருகின்றன! மிகுதி விஷயங்களை நண்பர்கள் பேசுவார்கள்! \

நன்றி நண்பா!

சுதா SJ said...

பாஸ்... இப்பொழுதுதான் முதல் முதல் உங்கள் தளம் வாறன்.... நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டேன்... இலங்கை பதிவர்கள் பற்றி என் நண்பர்கள் சொல்லி நிறைய கேட்டுள்ளேன்... ஆனாலும் என்னால் அதை முழுதாக நம்ப முடியாமல் இருந்தது. இப்போது பாதிக்கபட்ட நீங்களே சொல்லும் போதுதான்.. அதெல்லாம் எவ்ளோ உண்மை என்று நம்பமுடிகிறது.

ஈழவயலை ஏன் எதிர்க்கிறார்கள் என்று உண்மையில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை..
ஈழ முற்றம் இருந்தால் என்ன இன்னொரு தளம் (ஈழவயல்) வருவதில் என்ன நட்டம் இவர்களுக்கு...
சொல்லபோனால் பாராட்டத்தானே வேணும்.... நம் மண்ணின் பெருமை பேசும் பேச தளங்கள் வருவது வரவேற்க தக்கது தானே....

அப்புறம்... ஈழவயல் உருவாக்கினோரில் நானும் ஒருவன் என்ற முறையில் ஒன்றை மட்டும் தெளிவு படுத்த முடியும்.
ஈழ வயல்.... யாருக்கும் போட்டியாகவோ... அல்லது பழிவாங்கவோ... அல்லது தனிப்பட்ட ஒருவரின் சுய லாபத்துக்காகவோ உருவாக்கபட்டது இல்லை.
அது முழுக்க முழுக்க நம் மண்ணின் பெருமை பேசவே நம் மண்ணின் சிறப்பை உலகம் முழுக்க பரப்பவே ஆரம்பிக்கப்பட்டது.

இன்னொன்று ஈழவயல் உருவாக்கியோர் பதினொரு பேரில் ஒரு சிலரை தவிர மற்ற யாருக்கும் முன்னமே ஈழ முற்றம் என்று ஒரு தளம் இருப்பதே தெரியாது... நான் உட்பட...... இதுதான் உண்மை.

நிரூபன் said...

வணக்கம் நண்பா,

உங்களின் பதிவினைப் படித்தேன், சில விடயங்கள் புதியவையாக இருக்கிறது. அறியாத விடயங்களாக இருக்கிறது. இப்போது வேண்டியது பேதங்களை மறந்து எல்லோரும் செயற்பட வேண்டியது தான்.

கடந்த காலங்கள் கசப்பானவையாக இருந்தாலும் நிகழ்காலத்திலும், எதிர்காலம் நோக்கிய வழியிலும் நாம் பிரிவுகளைப் புறக்கணித்து உட் பூசல்களைத் தவிர்த்து பதிவர்கள் எனும் குடையின் கீழ் இயங்க வேண்டும்!

Anonymous said...

விரைவில் இலங்கை பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்த்துகிறேன்.

Admin said...

//பிளாகர் Jana கூறியது...//

கருத்துக்களக்கு நன்றி அண்ணா...

பல புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தியவர் நீங்கள். என்னை ஊக்கப்படுத்தியவர்களுள் நீங்களும் ஒருவர். சில பதிவர்களின் நடவடிக்கைகள் தொர்பாக தொடர்ந்தும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. மற்றவரை திருத்த நினைப்பவர்கள் சிலர் திருந்தாமல் இருப்பதுதான்?????...


கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல நினைப்பவன் நான். கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாத கோளையும் அல்ல நான். உண்மையானவர்களாக இருந்தால் எனது கருத்துக்கள் தவறான பொய்யான கருத்துக்களாக இருந்தால் எது தவறான பொய்யான கருத்துக்கள் என்பதனை சுட்டிக் காட்டியிருக்க வேண்டும்.

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//பிளாகர் இராஜராஜேஸ்வரி கூறியது...//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//பெயரில்லா பெயரில்லா கூறியது...

நீங்களும் இலங்கைப்பதிவர் தானே சந்ரு?//

நானும் ஒரு இலங்கைப் பதிவர் என்பதனால்தான் இந்த ஆதங்கம்.

Admin said...

//திண்டுக்கல் தனபாலன் கூறியது...

பதிவு நானூறு நச்! த.ம.3//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//மாதேவி கூறியது...

நாநூறுக்கு வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...//

உங்கள் புரிதலுக்கு நன்றிகள் நண்பா...

எமது தமிழ் கலை கலாசாரங்கள் மீது அதிக பற்றுக் கொண்டவன். அதனால் ஈழவயலின் வருகையால் அதிக சந்தோசப் படுபவர்களில் நானும் ஒருவன்.

வருகைக்கு நன்றிகள் நண்பா..

Admin said...

//துஷ்யந்தன் கூறியது...//

இதற்கு முன்னரும் என் தளத்தில் நீங்கள் கருத்துரையிட்ட ஞாபகம் இருக்கின்றது எனக்கு... உங்கள் கருத்துத்தான் என் கருத்தும். ஒன்றை மட்டும் சொல்கிறேன் இலங்கைப் பதிவுலக ஏகபோக உரிமை ஒரு சிலருக்கு மட்டுNமு இருக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதுதான்????????...


வருகைக்கு நன்றிகள் நண்பா...

Admin said...

//நிரூபன் கூறியது...//

உங்கள் அவாதான் என்னுடைய அவாவும் நண்பா

வருகைக்கு நன்றிகள் நண்பா...

Admin said...

//! சிவகுமார் ! கூறியது...//

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

ஈழவயல் said...

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சந்துரு அவர்கட்கு,

தங்களின் பதிவினைப் படித்தோம். கடந்த காலத்தில் இடம் பெற்ற கசப்பான சம்பவங்கள் என்று நீங்கள் இங்கே முன் வைத்திருக்கும் விடயங்கள் எமக்குப் புதியனவாக இருக்கிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் மனித வரலாற்றின் பண்பு தானே...
ஆகவே இவற்றையெல்லாம் மறந்து இப்போது ஓர் வழியில் நாம் அனைவரும் இணைவோம்.

ஈழவயல் தொடர்பான தங்களின் ஆர்வத்திற்கும், ஆவலுக்கும் எங்களின் உளமார்ந்த நன்றிகள். ஈழவயல் குழுமம் சார்பில் உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியும், பேருவகையும் அடைகின்றோம்.
http://www.eelavayal.com/p/blog-page_26.html

மேற்படி இணைப்பில் ஈழவயலோடு இணைந்து கொள்வதற்கான விபரங்களைப் பதிவிட்டிருக்கிறோம். இதற்கு அமைவாக தங்களது ஆதரவுகளையும், தங்கள் பங்களிப்புக்கள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் உங்களை எங்கள் குழுமத்தின் உறுப்பினராகவும் இணைத்துக் கொள்ளக் கடமைப்பட்டுளோம்.

உங்களின் வெளிப்படையான கருத்திற்கும், ஆதரவிற்கும் மீண்டும் நன்றிகள்.

ஈழவயல் குழுமத்தினர்.

ஈழவயல் said...

மீண்டும், வாழ்த்துக்களும், நன்றிகளும் உறவே!

Post a Comment