முன்னைய பதிவொன்று மீண்டும்...
இன்று இலங்கையிலே மிஞ்சி இருப்பது என்ன கிராமத்துக்கொரு சிறுவர் இல்லங்களேதான். (அநாதை இல்லம் என்று சொல்லவேண்டாம் அவர்கள் அனாதைகள் இல்லை அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள்) நாட்டில் நடந்து வந்த உத்த சூழ்நிலையின் காரணமாக இன்று சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
இவர்கள் தாய் தந்தையரை இழந்த நிலையில் சிறுவர் இல்லங்களிலே ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் தனது தாய் தந்தையரோடு, உறவினர்களோடு சந்தோசமாக வாழ வேண்டியவர்கள் இன்று பல இன்னல்களுக்கு மத்தியிலும் தமது வாழ் நாளைகளித்துக்கொண்டு இருக்கின்றார்கள். எத்தனை சிறுவர்கள் தாய் பாசத்துக்காக ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். ஏனைய சிறுவர்கள்போல் தாங்களும் வாழ வேண்டுமே என்று ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்தச் சிறுவர்களால் தங்களது ஆசா பாசங்களை கட்டுப்படுத்தி எப்படித்தான் வாழ முடயும். சந்தோசமாக வாழ வேண்டிய சிறுவர்கள் இன்று விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்
சந்தோசமாக தமது வாழ்நாளைகளிக்க வேண்டிய நாளைய நம் தலைவர்கள் சந்தோசமாக சிறுவர் இல்லங்கல்ளிலே வாழ்வார்களா? அவர்களால் படிப்போ அது சார்ந்த செயற்பாடுகளிலோ எப்படி ஈடுபட முடயும். எப்போதும் அவர்களை தாங்கள் அனாதைகள் என்றும் தங்களுக்கு யாரும் இல்லையே என்ற ஏக்கமுமே இருக்கும். சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற சிறுவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை ஏனைய சிறுவர்கள்போல் பெற்றுக்கொள்ளத்தான் முடயுமா
இந்த சிறுவர் இல்லங்களிலே ஆண் பிள்ளைகள் மட்டுமல்ல பெண் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இந்த பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி யோசித்துப்பாருங்களேன். ஆண் பிள்ளைகளோ ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் எல்லாம் சரியாகிவிடும் ஆனால் பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரை பல பிரட்சனைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. தங்களது வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு கவலையும் விரக்தியும் அதிகரிக்கின்றது. தங்களுக்கு யாரும் இல்லையே என்ற ஏக்கம் வருகின்றது. தங்கள் எதிர் காலத்தை பற்றி சிந்திக்க தொடங்கி மனதை குழப்பிக்கொண்டே இருப்பார்கள்

அவர்களது எதிர்காலத்தை பற்றி அவர்களை விட நாமே சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இன்றைய கால கட்டத்தில் பணக்கார வீட்டு பெண்களுக்கே சீதனம் என்ற ஒன்றினால் திருமணம் தள்ளப்பட்டுக்கொண்டு போகும் இந்த காலத்தில் இவர்களின் நிலை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்
இந்த பெண் பிள்ளைகள் தங்களது பருவ வயதை அடைந்ததும் பல பிரட்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இன்று நாகரிக மோகத்தில் இளம் பெண்கள் நாகரிகமான உடை, (நடை), அலங்காரங்களோடு திரிவதை கண்டால் இவர்களது மனதிலே எப்படி கவலை வராமல் இருக்கும்.
இந்த சிறுவர்கள், பெண் பிள்ளைகள் பற்றி யாரும் கவலைப்படுவதாகத்தெரியவில்லை அவர்களின் எதிர் காலம் பற்றி எவரும் சிந்திப்பாரும் இல்லை.
இந்த இடத்திலே நான் ஒன்றை குறிப்பிட வேண்டும் நான் இந்த பதிவினை மேற்கொள்ள துண்டியது எனக்கு தெரிந்த ஒரு அக்காவின் தாராள மனசுதான். அவரோ ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் தேயிலை தோட்டங்கள் எல்லால் இருக்கின்றன அந்தளவிற்கு பணம் படைத்தவர். ஆனால் ஏழைகளுக்கு உதவி செய்பவர். அவர் அடிக்கடி என்னிடம் கூறுவார் இந்த சிறுவர் இல்லங்களில் இருக்கின்ற பெண் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி தான் சிந்திப்பதாகவும் கவலை அடைவதாகவும்.
அவர் அண்மையில் என்னிடம் கூறிய ஒருசில விடயங்களை என்னால் நம்ப முடியவில்லை அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்கள் இருவரையும் சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற பெண் பிள்ளைகளுக்கே திருமணம் செய்து வைக்க நினைத்து இருப்பதாகவும். இதனால் அந்த பிள்ளையின் உறவுகளை இளந்த கவலை இல்லாமல் போவதோடு அந்த பிள்ளையின் எதிர் காலம் வளம் பெறும் என்றும். தாய் பாசத்துக்காக ஏங்கிய அந்த பிள்ளைக்கு தான் ஒரு தாயக இருக்க போவதாகவும் கூறினார். தனது மகன் கூட சம்மதம் தெரிவித்து விட்டார் என்பது சந்தோசமான விடயம்.
இப்படி எல்லோரும் இருப்பார்களானால் இவர்களின் வாழ்க்கை வளப்படுமல்லவா.
3 comments: on "நாளைய தலைவர்களின் இன்றைய நிலை"
/// அவர்கள் இருவரையும் சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற பெண் பிள்ளைகளுக்கே திருமணம் செய்து வைக்க நினைத்து இருப்பதாகவும். இதனால் அந்த பிள்ளையின் உறவுகளை இளந்த கவலை இல்லாமல் போவதோடு அந்த பிள்ளையின் எதிர் காலம் வளம் பெரும் என்றும். தாய் பாசத்துக்காக ஏங்கிய அந்த பிள்ளைக்கு தான் ஒரு தாயக இருக்க போவதாகவும் கூறினார்.///மிகப்பெரிய நல்ல மனசு ..
யுத்தம் முடிந்து விட்டாலும், யுத்தத்தின் விளைவுகள் ஏதாவது ஒரு ரூபத்தில் தொடர்கிறது. அதிலொன்று சிறுவர் இல்லத்தில் இருக்கிற குழந்தைகளின் எதிர்காலம். அந்த அக்காவை போன்ற நல்ல மனம் கொண்டவர்களால் தான், வாழ்க்கையின் மீதான நம்பிக்கை ஒளி வருகிறது.
மலையளவு துக்கத்தில் ஒரு துளியளவு மகிழ்ச்சி .மகிழ்ச்சியின் அளவு அதிகரிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுதல் ......
Post a Comment