Monday 24 January 2011

பாரிய இயற்கை அனர்த்தத்திற்கு தயாராகுங்கள்? முன்னெச்சரிக்கை விடுக்கும் பாம்புகள்

கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் என்றதுமே அண்மைக்காலத்தில் பேசப்பட்ட விடயம். கடும் மழை பெரு வெள்ளம்.

மடமக்களப்பு மாவட்டத்திலே வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் எல்லோராலும் பரவலாக பேசப்பட்ட விடயம். மட்டக்களப்பு வாவியிலே பெருந்தொகையான  பாம்புகளின் வருகை.

இதனை பார்ப்பதற்காக இரவு பகலாக கல்லடிப் பாலத்திலே மக்கள் கூட்டமாக சில நாட்கள் இருந்தன. பாம்புகளின் வருகையைக் கண்ட மக்கள் அச்சமடைந்தனர். சுனாமி ஏற்படப் போகின்றன எல்லோரும் பேசிக் கொண்டனர். பாராளுமன்றத்தில்கூட இவை பற்றிப் பேசப்பட்டன.

 மக்கள் அச்சமடைந்தமைக்கு காரணம் இல்லாமல் இல்லை. சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் சில நாட்கள் மட்டக்களப்பு வாவியிலே அதிகளவான பாம்புகள் கூட்டம் கூட்டமாக வெளிப்பட்டன.

சுனாமிக்கு முன்னர் ஒரு போதும் இவ்வாறு பாம்புகள் வெளிப்பட்டதில்லை. சுனாமிக்கு முன்னரும் இவ்வாறு பாம்புகளின் வருகையை கண்ட மக்கள் பாரிய அழிவு வரப்போகின்றதோ என்று அச்சம் கொண்டனர். அதேபோல் சுனாமி பாரிய அழிவை ஏற்படுத்தியது.

தற்போதைய நிலையில் மட்டக்களப்பில் கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர். பாம்புகளின் வருகையை கண்ட மக்கள் பெரும் அச்சமடைந்தனர். மக்கள் பாம்புகளின் வருகையை கண்டு ஏதோ அழிவு வரப்போகின்றது என்று அச்சப்பட்டபோது கேலி செய்தவர்களும் உண்டு. நானும்தான்.

ஆனால் பாம்புகளின் வருகையானது. ஒரு இயற்கை அழிவிற்கான முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம். சில பறவைகள் மிருகங்களுக்கு இயற்கை அழிவுகளை முன்கூட்டியே அறியும் திறன் இருப்பதுபோல் இந்த பாம்புகளுக்கும் இருக்கலாம்.

எல்லோரும் இவற்றை பாம்பு என்று சொல்கின்றனர். ஆனால் இவை ஒரு வகை மீனினம்.

இவை ஒருபுறமிருக்க வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல மக்கள் இன்னும் எந்தவிதமான உதவிகளையும் பெறாமல் இருக்கின்றனர். உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?



Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "பாரிய இயற்கை அனர்த்தத்திற்கு தயாராகுங்கள்? முன்னெச்சரிக்கை விடுக்கும் பாம்புகள்"

ம.தி.சுதா said...

பகிர்வுக்கு நன்றி...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்

Admin said...

//
ம.தி.சுதா கூறியது...
பகிர்வுக்கு நன்றி...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்//

வருகைக்கு நன்றிகள்.

vanathy said...

மிருகங்களுக்கு முன்கூட்டியே அறியும் திறன் இருக்கு என்று படித்திருக்கிறேன். பாம்புகள் பற்றிய செய்தி வியப்பாக இருக்கு. நல்ல தகவல்.

Unknown said...

இப்ப கூட எங்கயோ நிஓலம் சகதியா உள்ள போகுதாமே...அடுத்து என்னவோ?

Post a Comment