Tuesday 18 January 2011

சாமி வரம் கொடுக்க பூசாரி பறித்த கதை

இன்று(18.01.2011) மட்டக்களப்பு மாநகரில் மாபெரும் மக்கள் போராட்டம் இடம்பெற்றது.மேற்படி போராட்டமானது மக்களுக்காக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை பதுக்கி வைத்த அதிகாரிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்டதாகும்.இப் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொணடிருந்தமை விசேட அம்சமாகும். நேற்று இதே போன்றதொரு மக்கள் ஆர்ப்பாட்டம் ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கிழக்கு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்ததை அனைவரும் அறிவர்.இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்த மக்கள் பட்டினியால் வாடக்கூடாது என அரசு அறிவித்திருந்தது. அதற்காக வேண்டி பல கோடி ரூபாய் பெறுமதியான பொருட்களை அரசு மக்களுக்காக வழங்கி வைத்தது.அரசு மாத்திரமன்றி பல தனியார் அமைப்புக்கள் மற்றும் தனவந்தர்களும் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்காக நிவாரணப் பொருட்களை வழங்கி இருந்தார்கள்.


இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் வழங்கப்பட்ட பொருட்களை சில அதிகாரி மட்டத்திலானவர்கள் பதுக்கி வைத்ததாக கூறியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். மட்டக்களப்பு மணிக்கூட்டுச் சந்தியில் சுமார் ௨ மணிநேரம் இப் போராட்டம் இடம்பெற்றது.
தங்களுக்காக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இல்லையேல் நாங்கள் இவ் இடத்தை விட்டு செல்ல மாட்டோம் என அம்மக்கள் தெரிவித்தனர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் நிலமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.


உண்மையில் அரசு எந்தவித நிபந்தனைகளும் இல்லாது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் பணித்திருந்தும் அது மக்களுக்கு சேரவில்லை என்றால் அது யார் குற்றம். அதிகாரிகளின் குற்றமா? அல்லது அரசின் குற்றமா? எனச் சிந்தித்தே மக்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கோரி ஆரர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். சாமி வரம் கொடுத்தும் பூசாரி மறுத்த கதையாகியது மக்களின் நிலை.



_mg_0879



aar
aaaaa

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 comments: on "சாமி வரம் கொடுக்க பூசாரி பறித்த கதை"

ARV Loshan said...

அப்பாவி மக்களின் அடிவயிற்றில் கை வைக்கும் இந்த அநியாயக்காரர்கள் நாசமாய்த் தான் போவார்கள்.

நிரூஜா said...

என்னதா சபிக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தானே...!

ஹேமா said...

ஏன் தான் இப்படி இருக்கிறார்களோ.
யாரைக் கோபப்பட முடிகிறது !

Admin said...

//
LOSHAN கூறியது...
அப்பாவி மக்களின் அடிவயிற்றில் கை வைக்கும் இந்த அநியாயக்காரர்கள் நாசமாய்த் தான் போவார்கள்//

உண்மைதான் அண்ணா... உங்கள் உதவிகளுக்கு நன்றிகள்.

Admin said...

//
நிரூசா கூறியது...
என்னதா சபிக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தானே...//

எல்லாவிதத்திலும் அப்பாவி மக்களே பாதிக்கப்படுகின்றனர். உங்கள் உதவிகளுக்கு நன்றிகள்.

Admin said...

//ஹேமா கூறியது...
ஏன் தான் இப்படி இருக்கிறார்களோ.
யாரைக் கோபப்பட முடிகிறது !//

என்னவென்று சொல்வது... வருகைக்கு நன்றிகள்.

Post a Comment