மட்டக்களப்பிலே மழை குறைந்திருந்தாலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டுதான் இருக்கின்றது. படுவான் கரைப் பிரதேசத்துக்கான (புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம்) தரைவழித் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்துக்கான போக்குவரத்து படகு மூலம் இடம் பெறுகின்றது.
அரசாங்கத்தினால் நிவாரணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றபோதிலும். பல இடங்களிலே சரியான முறையிலே உதவிகள் கிடைக்கவில்லை. இதற்கு சில அரச அதிகாரிகளின் அக்கறையில்லாத் தன்மையே காரணமாகும்.
பல பிரதேச மக்கள் பல்வேறுபட்ட கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அம்மக்களுக்கு உடனடியாக உதவிகள் தேவைப்படுகின்றன.
இலங்கை வலைப்பதிவர்கள் பல்வேறுபட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர். பதிவர் வதீஸ் இப்போழுது மட்டக்களப்பிலேதான் இருக்கின்றார்.
வெளிநாடுகளிலே இருக்கின்ற சில பதிவர்கள் எவ்வாறு உதவலாம் என்று என்னுடன் தொடர்பு கொண்டு கேட்டிருந்தனர். வெளிநாடுகளிலே இருக்கின்ற பதிவர்கள் மாத்திரமல்ல வலைப்பதிவு வாசகர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும்.
வெளிநாடுகளிலே இருக்கின்றவர்கள் உதவ முன்வருகின்றபோது அவர்களை நிவாரணப் பணிகளிலே ஈடுபடுகின்ற அமைப்புக்களோடு இணைந்து தங்கள் பங்களிப்பினை வழங்குவதற்கு நான் ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க தயாராக இருக்கின்றேன்.
வெளிநாடுகளிலே இருப்பவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை கண்டிப்பாக எதிர் பார்க்கின்றோம். எமது மக்களுக்காக குரல் கொடுக்கும் நாம் எமது மக்களின் துயரினையும் துடைப்போம். அனைவரும் முன்வாருங்கள்.
நானும் என்னுடைய நண்பர்கள் அனைவருமே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். இணையப்பக்கம் தொடர்ந்து இருக்க முடியாது.
என்னோடு தொடர்பு கொள்ள தொலைபேசி 0094778548295
6 comments: on "வலைப்பதிவர்களுக்கும் வலைப்பதிவு வாசகர்களுக்கும் அவசர வேண்டுகோள்"
வணக்கம் சந்ரு, நாங்கள் எங்களால் முடிந்த அளவு பொருட்களை சேர்த்துக்கொண்டே இருக்கின்றோம். மிக விரைவாக அவற்றை அனுப்புவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்
சகோதரம் வரம் ஞாயிறு எமது கரவெட்டி பிரதேச சபையுடன் இணைந்து நானும் சேகரிப்பில் இணைய உள்ளேன்... அவர்களுக்கான மன ஆறுதலை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...
//
நிரூசா கூறியது...
வணக்கம் சந்ரு, நாங்கள் எங்களால் முடிந்த அளவு பொருட்களை சேர்த்துக்கொண்டே இருக்கின்றோம். மிக விரைவாக அவற்றை அனுப்புவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்//
நீங்கள் தொடர்ந்து பொருட்கள் சேகரிப்பில் ஈடுபடுவதற்கும். தொடர்பில் இருப்பதற்கும் நன்றிகள்.
// ம.தி.சுதா கூறியது...
சகோதரம் வரம் ஞாயிறு எமது கரவெட்டி பிரதேச சபையுடன் இணைந்து நானும் சேகரிப்பில் இணைய உள்ளேன்... அவர்களுக்கான மன ஆறுதலை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...//
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் தொடருங்கள்...
அன்பின் தோழமைக்கு வணக்கம்.... உமது தொடர்புகளை எமது தளத்தில் வெளியிடுகிறோம்... அது மட்டுமின்றி எம்மால் ஆன அனைத்து வித உதவிகளையும் செய்ய முழு முயற்சி எடுக்கின்றோம். உதவும் கரங்கள் நிச்சயம் உம்மை வந்து சென்றடையும்...
// தமிழ்ச்சரம் கூறியது...
அன்பின் தோழமைக்கு வணக்கம்.... உமது தொடர்புகளை எமது தளத்தில் வெளியிடுகிறோம்... அது மட்டுமின்றி எம்மால் ஆன அனைத்து வித உதவிகளையும் செய்ய முழு முயற்சி எடுக்கின்றோம். உதவும் கரங்கள் நிச்சயம் உம்மை வந்து சென்றடையும்...//
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்..
Post a Comment