கிழக்கு மாகாணத்திலே தொடர்ந்தும் கடும்மழை பெய்து வருகின்றது. பல கிராமங்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் அதிகமாகப் பாதிக்கப் பட்டிருக்கின்றன.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால். தொடர்ந்தும் வெள்ள நிலமை மோசமடைந்து வருகின்றது. பல இடங்களிலே மக்கள் முகாம்களில் கூட இருக்க முடியாத அளவுக்கு வெள்ளம் இருக்கின்றது.
அரசாங்கத்தினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் கிழக்கு மாகாண முதலமைச்சரினாலும் உடனுக்குடன் உடனடி நிவாரண சேவைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இருந்தபோதும் தொடர்து பெய்துவரும் மழையினால் வெள்ளப் பெருக்கு அதிகரிப்பதனால். தினமும் மக்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைகின்றனர்.
ஆகவே உடனடியாக அவர்களுக்கு உலருணவுப் பொருட்கள் உடைகள் சிறுவர்களுக்கான பால்மா வகைகள் பிஸ்கட் நுளம்பு வலைகள் மருந்துப் பொருட்கள் என்பன உடனடித் தேவையாக இருக்கின்றன.
வலைப்பதிவர்கள் நாமும் கஸ்ரப்படுகின்ற இந்த மக்களுக்கு எங்களால் முடிந்தவற்றை செய்ய வேண்டும்.
இலங்கை வலைப்பதிவர்கள் மட்டுமன்றி உலகெங்கும் இருக்கின்ற தமிழ் வலைப்பதிவர்களும். பாதிக்கப் பட்ட மக்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதனைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
வெறுமனே எழுத்துக்களோடு மட்டும் நின்று விடாமல் வலைப்பதிவிற்கு வெளியே செயலிலும் இறங்க வேண்டும்.
1 comments: on "வலைப்பதிவர்களுக்கு… அவசர உதவிக்கான அழைப்பு."
எப்படி உதவுவது சொல்லுங்கள்...
என்னால் முடிந்ததை செய்கிறேன்
Post a Comment