- எதற்கு நான் ரெடி நீங்க ரெடியா என்று கேட்கிறேன் என்று கேட்கின்றீர்களா கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 04 பார்ப்பதற்கு... அதற்கு முன் இதனைப் பாருங்கள். ...
- கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 03
பள்ளியங் கட்டிலில் கண்ணகை அம்மன் விக்கிரகம் இல்லை. களுதாவளையில் கண்ணகையம்மன் கோவில்களோ கண்ணகை விக்கிரகமோ இல்லை. எனவே கொம்புமுறி விழையாட்டின் இறுதியில் நடைபெறும் பொங்கலுக்கு செட்டிபாளையம் கண்ணகையம்மன் ஆலயத்திலுள்ள கண்ணகையம்மனையே எழுந்தருளப் பண்னுவது பாரம்பரியம்.
செட்டிபாளையம் கண்ணகையம்மன் நிருவாகத்தினருக்கும் சடங்கு செய்யும் கட்டாடியாருக்கும் முன்னறிவித்தல் கொடுக்கப்படும். அத்துடன் அம்மன் எழுந்தருளி வரும் நாள் என்பனபற்றி செட்டிபாளையம் மாங்காடு தேற்றாத்தீவு களுதாவளை மக்களுக்கு பகிரங்கமாக வள்ளுவன் மூலம் அறிவித்தல் கொடுக்கப்படும்.
இவ்வறிவித்தல் கிடைத்ததும் வீடு வீதி வாசல் அனைத்தையும் சுத்தம் செய்து பிரதான தெருவிலே நிறைகுடம் குத்துவிளக்கு என்பன வைத்து வழிபட்டு வரவேற்பர். மேளதாள வாத்தியங்களுடன் மேற்கட்டி பிடித்துவர கட்டாடியார் கண்ணகையம்மனை எழுந்தருளப்பண்ணுவார். அம்மன் காவியங்களை மந்திரவாதிகளும் பூசாரிமார்களும் உடுக்கடித்துப் பாடிவர சிலம்பு அம்மானைக்காய் ஆகியவற்றின் ஒலியுடன் தேவாதிகள் ஆடிவருவர்.
வீதிகளிலே நிறைகுடம் மங்கல விளக்கு வைத்தவர்கள் பெரிய பாத்திரங்களிலே மஞ்சள் நீர் கரைத்து வைத்திருப்பார்கள். தேவாதிகள் தங்கள் கைகளிலே இருக்கின்ற வேப்பங்குழைகளை மஞ்சள் நீரினுள் தோய்த்து குழுமியுள்ள பக்தர்கள் மீது தெளிப்பர். அந்த நீர் பேய் பிசாசு பில்லி வஞ்சனை சூனியங்களை போக்கடிக்கும் என்னும் நம்பிக்கை மக்களுக்கு உண்டு.
களுதாவளையில் கொம்புச் சந்தியில் தேர்ப் புரைகட்டிய பெரு மரங்கள் அண்மைக் காலம்வரை பிரதான வீதியின் மேற்குப் புறமாக நடப்பட்டிருந்தன. இந்த மரங்கள் வைரமானதும் உயரமானதுமாகும்.
தாம் செய்கின்ற சோடனைகள் மற்றைய வாரத்தினருக்கு தெரியக்கூடாது என்பதிலே கண்ணும் கருத்துமாக இருப்பர். தேர்ச் சோடனைகள் இடம்பெறும்போது அதனை தென்னோலையினால் இழைத்த கிடுகு மட்டைகளினால் முற்றாக மூடிமறைத்து வைத்துக் கொள்வர்.
தங்கள் வாரக்கட்டிலே நம்பிக்கை நாணயம் மிக்கவர்களாகவும் இரகசியம் பேணக்மூடியவர்களையுமே உள்ளே அனுமதிப்பதோடு 24 மணிநேரமும் காவல் புரிந்தனர். தங்கள் தேர்கள் பேர் பெற வேண்டும் என்பதே இவர்களது எண்ணம்.
இதற்காக வலம்புரிச்சங்கு யானைத்தந்தம் போன்ற அபூர்வமான பொருட்களை காட்சிக்கு வைத்தனர். அரும்பொருட்காட்சி அறை போலவும். அலங்காரப் போட்டி போலவும் தேர்கள் அமைந்திருந்தன.
இரு வாரத்தினருக்கும் ஒவ்வொரு தேர்முடி இருந்தது. வடசேரி வாரத்தினர் கோவலன் கடசியினராகையால் அவர்களது தேர்முடி ஆணுக்குரிய தேர்முடியாகவும். தென்சேரி வாரத்தினர் கண்ணகை கடசியினராகையால் அவர்களது தேர்முடி பெண்ணுக்குரிய உருவச் சாயலில் அமைந்திருந்தன.
கொம்புமுறி விளையாட்டுக்கு ஏற்பட்ட செலவுகளை ஈடுசெய்ய முடியாத நிலையிலே தமது வாரத்துக்குரிய தேர்முடி ஏகாவடம் என்பவற்றை ஈடுவைத்த சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
1897 ஆம் ஆண்டு ஜப்பசி மாதம் 01ம் திகதி எருவில் பற்று களுதாவளை கதிராமர் கண்ணப்பனுக்கு வடசேரி வாரத்துக் கடுக்கண்டவர்களாகிய… என்று 19 கடுக்கண்டவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு…..
தேருக்கு முடி ஏகாவடம் செய்ததிலும் கடைகளில் வாரக்காரர் கொடுக்கவேண்டிய நிலுவைகளை தேர்ச்சீலை அவிழ்ப்பித்தவகளுக்கு வேணுமென்று சிலர் கூடிக் குழப்பினதால் குறித்த முகாமைக் காரராகிய நாங்கள் முற் குனுறித்த க.கண்ணப்பனிடம் காசி ரூபாய் இருபத்து நாலு (24) இந்த 24 ரூபாய்க்கும் குறித்த தேர் முடியும் ஏகாவடம் ஜந்தையும் குறித்த பணத்துக்கு ஆதாரமாகக் கொடுத்த படியால் இனிமேல் கொம்பு விளையாட்டு நடைபெற வேண்டுமென்று வாரக்காரர்கூடி தேவை என்று வரும்போது குறித்த பணத்துக்கு ஞாயமான லாபம் கூட்டி இவருக்கு கொடுத்து குறித்த சாமான்களை வாரக்காரர் எடுத்துக்கொள்ளும்படி சம்மதித்து இத்துண்டு கொடுத்தோம்.
1897ம் ஆண்டிற்குப் பின்னர் கொம்புமுறி விளையாட்டு இடம்பெற்றமைக்கான ஆவணங்களைக் காணமுடியவில்லை கண்ணப்பனிடமிருந்து மீளப் பெற்றுக் கொண்ட விபரமும் இல்லை.
தேர்முடி ஏகாவடம் முதலியன சில ஆலயங்களுக்கு வழங்கப் பட்டதாக அறிய முடிகின்றது. தென் சேரி வாரத்துக்குரியவற்றுள் சில களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலய வீரமாகாளி கோவிலிலே வைத்துப் பேணப்பட்டு வருகின்றன.
தொடர்ந்தும் விளையாடலாம்.
4 comments: on "நான் ரெடி... நீங்க ரெடியா..."
:))))))))))
நல்லதொரு விளையாட்டு போல..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..
//வதீஸ்-Vathees கூறியது...
:))))))))))//
வாங்க....வதீஸ்...
வருகைக்கு நன்றிகள்...
// ம.தி.சுதா கூறியது...
நல்லதொரு விளையாட்டு போல..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..//
தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு விளையாட்டு..
வருகைக்கு நன்றிகள்.
Post a Comment