இந்த புதிய ஆண்டில் கடந்த வருடத்தின் சுவடுகளை திரும்பிப் பார்க்கின்றேன். தமிழன் தமிழ்மொழி இந்த நாடு ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். என்னுள்ளே பல எண்ண அலைகள். இந்த நாட்டில் தமிழ் மொழியின் எதிர்காலம்……
தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் புத்தர் சிலைகள் புத்த விகாரைகள் பரவலாகப் பேசப்பட்டுக் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழர்களுக்கே தனிப்பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பல இடங்கள் பறிபோகின்ற நிலை காணப்படுகின்றது.
சிங்களக் குடியேற்றங்கள் புத்தர் சிலைகள் பற்றி கூறவேண்டிய அவசியமில்லை எல்லோருராலும் பேசப்பட்ட விடயம். இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படவேண்டும் தமிழ் மொழியில் பாடப்படக்கூடாது என்று சொல்லப்பட்டபோது. நான் ஏன் இந்த நாட்டில் பிறந்தேன் என்று எண்ணத் தோன்றியது.
தமிழ் மொழியிலே பாடக்கூடாது என்று சொன்னவர்கள். செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழியின் சிறப்பு தெரியாதவர்கள்தானே அவர்கள் தமிழிலே கதைக்கக்கூட தெரியாதவர்கள் அப்படித்ததான் சொல்வார்கள் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
இருந்தபோதும் தாங்களும் தமிழர்கள்தான் என்று அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டு தமிழர்களுக்காகப் பாடுபடுகின்ற சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனம் சாதித்ததைப் பார்த்து வெட்கித்தலை குனிந்தேன்.
நான் யோசித்தேன் இலங்கையின் தேசிய கீதம் தமிழிலே பாடுவதற்கு அருகதை அற்றதோ என்று அத்தனை சிறப்பு வாய்ந்ததுதானே நம் தமிழ்மொழி.
அல்லது இலங்கை அரசாங்கமே தமிழர்களுக்கு தனி ஒரு நாடு என்பதனை ஒத்துக்கொண்டுவிட்டார்களா? தமிழ் மொழியில் பாடுவதற்கு தனி ஒரு தேசிய கீதமா?
இவை அனைத்தையும் தாண்டி தமிழர்களின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல பிரதேசங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.
இலங்கையின் சின்னக் கதிர்காமம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற தாந்தாமலை முருகன் ஆலயம் தமிழர் கைகளில் இருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. தாந்தாமலை மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தமிழர் பிரதேசமாகும்.
இப்பிரதேசம் போர்க் காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசமாகும். இப்பொழுது தாந்தாமலை முருகன் ஆலயத்திலே பிள்ளையார் ஆலயம் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் அம்பாறை மாவட்ட தொல்பொருள் ஆராட்சி நிலைய அதிகாரிகள் பிள்ளையார் ஆலயம் அமைக்கக்கூடாது என்று தடை விதித்திருக்கின்றனர். தாந்தாமலை அமைந்துள்ள பிரதேசம் தொல்போருள் ஆராட்சிக்கு உட்பட்ட பிரதேசம் அதனால் ஆலய அமைப்பு வேலைகளை இடை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள் அவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவைகளை எல்லாம் பார்க்கும்போது நாளை இலங்கையில் தமிழினம்………………….
3 comments: on "பறிபோகும் தமிழர் பிரதேசங்கள்… தாந்தாமலை முருகன் ஆலயத்தை இழக்க நீங்கள் தயாரா?"
உங்கள் பிள்ளையான் அய்யா காப்பாற்றுவார். கவலைப்படாதீர்கள்.
//இவைகளை எல்லாம் பார்க்கும்போது நாளை இலங்கையில் தமிழினம்…………………//
கேள்விக்குறியாக உள்ளது நண்பரே
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் வருடம் பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்
//பெயரில்லா கூறியது...
உங்கள் பிள்ளையான் அய்யா காப்பாற்றுவார். கவலைப்படாதீர்கள்.//
நீங்கள் தைரியமா உங்கள் பெயரிலே கருத்தினைத் தெரிவித்திருந்தால் வரவேற்றிருப்பேன். நீங்கள் சில உண்மை நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும். எடுத்ததற்கெல்லாம் தேவையற்ற கருத்துரைகளை இடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இன்று எத்தனையோ தமிழ் அரசியல்வாதிகள் அரசுடன் இணைந்து அமைச்சப் பொருப்புக்களுடன் இருக்கின்றனர். அவர்கள் இவ்வாறான பிரச்சினைகள் பற்றிப் பேசுகின்றனரா?.
ஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சரைப் பொறுத்தவரை அரசாங்கத்திலிருந்து விலகி பல சவால்களுக்கு மத்தியிலே கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
கிழக்கு மாகாணசபைத் தோற்றத்தின் பின்னர்தான் இன்று கிழக்கு மாகாணம் அபிவிருத்திப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.
தமிழர் பிரதேசங்கள் பறிபோவதை கிழக்கு மாகாண முதலமைச்சரும் அனுமதிக்கப் போவதில்லை. இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பிலே முதலமைச்சர் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
தாந்தாமலை பிரச்சினை தொடர்பிலே அரசுடன் இணைந்திருக்கின்ற அமைச்சுப் பொறுப்புக்களோடு இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளே எந்த நடவடிக்கையும் எடுக்காதபோதிலும் முதலமைச்சர் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
முதலமைச்சரின் கட்சி சார்ந்த இணையத்தளத்திலும் இந்தப் பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்டிருக்கின்றன.
மீன்மகள் http://meenmagal.net/?p=15484
Post a Comment