முன்னாள் SSP டசி செனவிரத்தின பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் (1990) முன்னாள் விடுதலைப்புலிகளின் கிழக்குப்பிராந்திய தளபதியான கருணா சரணடைந்த 600 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சுட்டுக்கொண்டார். இக் கொலை தொடர்பில் இன்னும் எவ்.விதமான விசாரனையும் மேற்கொள்ளப்படவில்லை. அக்கொலைக்கு முழுப் பொறுப்பும் வாய்ந்தவர் தற்போதைய மீழ்குடியேற்ற பிரதியமைச்சர் வி.முரளிதரன் என கடந்த (24.01.2011) அன்று LLRC முன்னிலையில் சாட்சியமளித்த முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் டசி செனவிரத்ன தெரிவித்தார்.
அது போன்ற மிலேச்சத்தனமான பயங்கரமான படுகொலைகலைச் செய்தவர் இன்று அரசின் கட்சியின் உப தலைவரும் பிரதி அமைச்சருமாவார். இவருக்கு எதிராக விசாரனைகள் உடன் ஆரம்பிக்கப்படவேண்டும் இல்லையேல் அரசு அக்கொலைகளை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகிவிடும். இதனால் ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்குமே களங்கம் ஏற்படும். இது தொடருமானால் அரசுக்குள்ள நற்பெயரும் கெட்டுவிடும் என அவர் மேலும் தெரிவித்தார். அவரது முழுமையான சாட்சியம் 25.01.2011 வெளியான தி ஜலண்ட் பத்திரிக்கையில் முன் பக்கத்தில் பிரசுரமாகிஇருக்கிறது
5 comments: on "600 பொலிசாரையும் கொலைசெய்த பொறுப்பு கருணாவையே சாரும"
எது எப்படியோ...நம் இரத்த சொந்தங்களை அழித்தவர்களை ஒழித்தால் சந்தோஷப்படும் பலகோடி இதயங்களில் நானும் ஒருவன்.
இதில் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது....
காலம் தான் பதிலளிக்கும்.
//sakthistudycentre-கருன் கூறியது...
எது எப்படியோ...நம் இரத்த சொந்தங்களை அழித்தவர்களை ஒழித்தால் சந்தோஷப்படும் பலகோடி இதயங்களில் நானும் ஒருவன்.//
நம் உறவுகள் அழிக்கப்பட்டால் கொதித்தேளுபவர்களில் நானும் ஒருவன்தான். உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.
// சி. கருணாகரசு கூறியது...
இதில் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது....
காலம் தான் பதிலளிக்கும்.//
நிட்சயமாக காலம் விரைவில் பதில் சொல்லும்.
வருகைக்கு நன்றிகள்.
எம்மை அழிக்க வந்தவர்களை கொன்றவன். எனினும் இவன் அதன் பின் தனது துரோகச் செயலால் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட எம் உறவுகளை அழிக்க கொலைவெறியருடன் கைகோர்த்தவன். இன உணர்வுடன் இவன் செயல்படவில்லை பதவிக்கும் பணத்திற்குமே வாழ்பவன். இவனுக்கு தண்டனை நிச்சயம் கிட்ட வேண்டும்.
Post a Comment