Monday, 18 January 2010

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வேற்றுக்கிரகவாசிகள் வருகை

வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பில் இப்போது பல்வேறு பட்ட தகவல்கள், செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. ஆனாலும் இவைகளை நான் பெரிதாக அலட்டிக்
 கொள்வதில்லை.

நேற்று முன்தினம் இரவு எங்கள் கிராமத்திலே சிறிய மனிதர்கள் சிலரின் நடமாட்டத்தை சிலர் அவதானித்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது எந்தவிதமான நம்பிக்கையும் இன்றியே சென்றபோது. சில விடயங்கள் என்னை சிந்திக்க  வைத்துவிட்டன.

சுமார் பத்துக்கும் அதிகமான சிறிய மனிதர்களை அவதானித்ததாக கண்டவர்கள் சொன்னார்கள். அங்கே இருந்த காலடித்தடங்கள் போன்றவற்றைப் பார்க்கும் போது என்னாலும் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஆனாலும் இது வேற்றுக்கிரக வாசிகளின் காலடித்தடமா  அல்லது வேறு ஏதாவதா என்பதுதான் தெரியவில்லை. எல்லோரும் இதை வேற்றுக்கிரக வாசிகளின் காலடித்தடமாக இருக்கலாம் என்றே சொல்லிக்கொள்கின்றனர்.

அன்றிரவு முழுவதும் வேற்றுக்கிரக வாசிகளை தேடிக்கண்டு பிடிப்பதிலேயே பலர் ஈடுபட்டனர்.

இங்கே எனது முந்திய இடுகையிலே நான் இடுகையிட்ட படங்கள் நான் நேரடியாக சென்று வேற்றுக்கிரகவாசிகளின் காலடித்தடம் என்று நம்பப்படுகின்ற காலடித்தடங்களை புகைப்படம் எடுத்த உண்மைப் படமே.

இது ஒரு நகை சுவைப் பதிவல்ல. வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய செய்திகளை நம்பாத எனக்கு. இந்த சம்பவம் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய தேடலை அதிகரித்திருக்கிறது.

அண்மைக்காலமாக இலங்கையிலே பல இடங்களில் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இலங்கையைப்  பற்றி வேற்றுக்கிரகவாசிகள் ஆய்வு செய்கின்றனரோ என்று ஏன் நண்பன் என்னிடம் கேட்டான்  . இல்லை ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க வந்திருக்கின்றார்கள் என்று நான் சொன்னேன்.

உண்மையாகவே வேற்றுக்கிரகவாசிகள் இருக்கின்றனரா? 

காலடித்தடங்களை வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கின்றன.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

9 comments: on "இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வேற்றுக்கிரகவாசிகள் வருகை"

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

லெமூரியா கண்ணத்தில வசித்தாக்கள் சிலர் பர்முடா முக்கோணத்தில கடலுக்கடியில வசிக்கிறாங்களாம். அவங்கள்தான் வந்துபோயிருப்பாங்களோ என்று எனக்கொரு சந்தேகம்.

balavasakan said...

சந்துரு நான் தலைப்பை பாரத்த உடனே மொக்கைன்னு லேபிள்பண்ணிருக்கீங்களோன்னு பாத்தன் பின்ன சானதிபதி தேர்தலை கண்காணிக்க வேற்று கிரகவாசிகள் ன்னு போட்டால் போங்கபாஸ்... ஆனாலும் இது என்ன தடயம் விளங்கவில்லை... பலநாடுகள் வேற்றுகிரக வாசிகள் சம்பந்தமான ஆராச்சிகளை கைவிட்டுவிட்டார்கள் ... வேலையில்லாத வேலை என்று...ம் ...பாப்பம்...

Subankan said...

//லெமூரியா கண்ணத்தில வசித்தாக்கள் சிலர் பர்முடா முக்கோணத்தில கடலுக்கடியில வசிக்கிறாங்களாம். அவங்கள்தான் வந்துபோயிருப்பாங்களோ என்று எனக்கொரு சந்தேகம்.
//
ஹி ஹி


எங்க ஊரிலயும் இப்படித்தான் குள்ளமா, சின்னதா நாய், பூனையெல்லாம் இரவில திரியிறது.

கன்கொன் || Kangon said...

//எங்க ஊரிலயும் இப்படித்தான் குள்ளமா, சின்னதா நாய், பூனையெல்லாம் இரவில திரியிறது. //

lol....
இதச் சொல்லத்தான் நான் வந்தன், சுபாங்கன் முந்திக் கொண்டார்......

பார்ப்போம்...

கலா said...

ஓஓ..சந்ரு இப்படியெல்லாம்
நடக்கின்றதா?
பாழ் பட்ட நாட்டில் யாரும்
எளிதாக நுழைய முடியும்.

சில பேர்களுக்கு அவர்களால்
காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக
ஏதாவது{லஞ்சம்}கொடுத்து
வரவழைத்திருப்பார்கள் போலும்....

சந்ரு எனக்கொரு விமானப் பயணச்சீட்டு
வாங்கிக் கொடுத்தால்{லஞ்சமாக} நானும் வந்து
பார்பேனல்லவா!!

இலங்கன் said...

அண்ணா 2010 கிரகமாற்றம் காரணமாக 5 வித வித அழிவுகள் இந்தியாவுக்கு நடக்கலாம் என இந்திய (புPமியதிர்வு) வானியலாளர் எதிர்வு கூறியுள்ளார். எனவே இந்த கிரகமாற்றம் தனியே புவிக்கு மட்டும் தாக்கம் செலுத்தும் என நான் எண்ணவில்லை. இதனை முற்கூட்டி அறிந்து கொண்ட வேசற்றுக்கிரகவாசிகள் தங்கள் பாதுகாப்பிற்காக வேறொரு இடத்தை தெரிவு செய்கிறார்கள் என எண்ணிக்கொள்ளலாம். (வேற்றுக் கிரக வாசிகள் என யாராவது இருந்தால்)

malarvizhi said...

!!!!!!!!!!! என்ன ஆச்சு !!!!!!!!!ம் ...

அனோஜன் PC said...

இது மட்டுமா கடந்ந மாதமும் பாடசாலைக்குள் நுழைந்துள்ளார்கள்

Post a Comment