Sunday, 3 January 2010

திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில வழிகள்.


சின்ன வயசில  படிக்கும்போது ஓடிவிளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா எனும் பாரதியின் பாடலைக்கேட்டே.... ஓடி, ஓடி விளையாடிய நம்ம கோபி இப்போ இந்தபோபாடல் மட்டுமல் ஓடி... ஓடி... விளையாடு என்று எந்தப்பாடல் வந்தாலே ஓடி ஒழிந்து கொள்கிறார்.

பச்சிளம் பாலகன் என்று இருந்த இவர் இப்போ சந்தோசம்.... சந்தோசம்... வாழ்க்கையின்.... என்றும், ஒரு தேவதை வந்து விட்டாள் என்னைத் தேடியே.... என்றும் பாடிக்கொண்டு திரிகின்றார். காரணம் அவருக்கு பெண் பார்க்கப்பட்டு விட்டதாக நம்பத்தகாத வதந்திகள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும் கோபி வாழ்வே மாயம்... இந்த வாழ்வே மாயம்...  என்று இன்னும் சில நாட்களில் பாடாமல் இருந்தால் சரிதான்.

இது ஒரு புறமிருக்க சுபாங்கனின் வயிறு பத்தி எரிகிறதாம். கோபிக்கே பெண் கிடைத்துவிட்டாள் என் அழகுக்கும், அறிவுக்கும் எந்தப் பெண்ணும் பார்க்கிறாளே இல்லை என்று புலம்பிக்கொண்டு இருக்கின்றார்.

இதனை அறிந்த வந்தி சுபாங்கனை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கிறார். நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்னைப் போன்றவர்களைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கின்றார்.

இந்தக் கதை இப்படியே போய்க்கொண்டிருக்க திருமனத்துக்குள் காலடி எடுத்து வைக்க இருக்கும் கோபிக்காக சில ஆலோசனைகள். ஆனாலும் விரைவில் திருமணத்துக்காக தேவதைகளை தேடிக்கொண்டிருக்கும் புல்லட், ஆதிரை, வந்தி, சுபாங்கன், யோகா (தேவதைகளே இவர்கள் மீது உங்கள் கடைக்கண் பார்வை படட்டுமே)  ஆகியோருக்கும் பயன் பயன்படும்.

திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில வழிகள்.

01. உங்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை திருமண நாள் அன்றோடு மறந்து விடுங்கள், உங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்று தெரியாதவர்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம்.

02 . மனைவி பிள்ளைகளோடு வெளியில் செல்வதை தவிருங்கள்.

03. நீங்கள் எப்போதும் திருமணமாகாத இளம் நண்பர்களோடு மட்டுமே பழகுங்கள். அப்போது மற்றவர்கள் உங்களையும் திருமணமாகாத ஒருவர் என்று நினைத்து விடுவார்கள்.

04. எப்போதும் நாகரிகமான ஆடைகளை அணியுங்கள் அடிக்கடி இளம் பெண்கள்  அதிகம் நடமாடும் இடங்களுக்கு சென்று உங்கள் வழமையான சில்மிசங்களை செய்யுங்கள்.

05. இளம் பெண்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது அந்தப் பெண்கள் உங்களிடம் உதவி கேட்காமலேயே நீங்களாகவே சென்று உதவி செய்யுங்கள். அப்போது அந்தப் பெண்ணின் மனதிலே இலகுவில் இடம் பிடிக்கலாம்.

06. சில காலம் குழந்தை பெறுவதை தவிர்க்க வேண்டும். காரணம் பிள்ளைகளின் தொல்லை அதிகமாகும் அப்போது வெளியில் நீங்கள் கல்யாணமானவர் என்பது தெரிய வரலாம். அப்போது இளம் பெண்கள் உங்களை கண்டாலே ஓடி விடுவார்கள்.

07. உங்கள் மனைவி வெளியில் சென்று வருவதற்கு ஒரு காரினையும் (மகிழுந்து) ஒரு சாரதியையும் ஏற்பாடு செய்து வையுங்கள். ( உங்கள் மனைவியை அந்த சாரதி ஏற்பாடு செய்தால் நான் பொறுப்பல்ல)

08. மூஞ்சி   புத்தகத்தில் (face book) அதிகம், பெண் நண்பிகளை தேடிக்கொள்ளுங்கள்.அல்லது அதிகம் பெண் நண்பிகளை வைத்திருக்கின்ற ஆதிரை போன்றோரையும், அதிகம் பெண் நண்பிகளை சேர்க்க துடிக்கும் சந்ரு போன்றோரின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.

09. திருமண, பிறந்தநாள் போன்ற விசேட நிகழ்வுகளுக்கு மனைவியுடன் செல்வதை தவிர்த்து தனியாக செல்லுங்கள். ஏல்லும்போது கம்பிரமான தோற்றத்தோடு செல்லுங்கள். அங்கேயும் பல இளம் பெண்களை கவர முடியும்.

10. இதுதான் மிக முக்கியமான ஒன்று ஏற்கனவே திருமணமான மூத்த பதிவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அவர்களது அனுபவத்துடன் கூடிய ஆலோசனைகளை பெறுங்கள்.

இந்த பதிவுக்கான கருப்பொருளை எனக்கு வழங்கிய பதிவு வந்தி அண்ணாவின் பதிவுதான் அங்கேயும் சென்று  பாருங்கள்.

கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1

கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 2

இது நகை சுவைப் பதிவு மட்டுமே...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

16 comments: on "திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில வழிகள்."

கனககோபி said...

அடப்பாவிகளா.....
ஒருத்தன் சொந்த ஊருக்குப் போட்டு வாற்த ரணகளம் ஆக்கீற்றீங்களே....

உது பக்கத்து இலைக்கு பாயாசம் விளையாட்டுத் தான்....
சந்ரு அண்ணருக்கு கலியாண ஆசை வந்திற்றுது....

சந்ரு அண்ணான்ர அம்மா! மகனுக்கு பொம்பிள பாக்கிறியளோ அல்லது நாங்கள் பாத்துவிடவோ?

//அதிகம் பெண் நண்பிகளை சேர்க்க துடிக்கும் சந்ரு போன்றோரின் ஆலோசனைகளைப் பெறுங்கள். //

இதுபோதும்.... இனி சந்ரு அண்ணரின் மூஞ்சிப்புத்தகத்தில் அவர் பெயர் நாறடிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.....

கனககோபி said...

சொல்ல மறந்துவிட்டேன்....

புதுவருட வாழ்த்துக்கள்...
யாழ்ப்பாணம் போயிருந்தததால் பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியாமல் போனது, ஆகவே வாழ்த்தவும் முடியாமல் போனது....

அண்ணாமலையான் said...

”பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் சமூகத்துக்கு ஏதாவது செய்யத்துடிப்பவன்."
சந்ரு இப்போ நல்லா புரியுதுப்பா உன் துடிப்பு...

Subankan said...

அதெப்பிடிண்ணா ஒரே டொபிக்கில எல்லாராலயும் ஓயாம எழுதமுடியுது? எப்படியோ எனக்கு ஆப்பு கம்மிதான்.

//இது ஒரு புறமிருக்க சுபாங்கனின் வயிறு பத்தி எரிகிறதாம். கோபிக்கே பெண் கிடைத்துவிட்டாள் என் அழகுக்கும், அறிவுக்கும் எந்தப் பெண்ணும் பார்க்கிறாளே இல்லை என்று புலம்பிக்கொண்டு இருக்கின்றார்.//

சீ போங்கண்ணா, எனக்கு வெக்கவெக்கமா வருது

சந்ரு said...

//கனககோபி கூறியது...
அடப்பாவிகளா.....
ஒருத்தன் சொந்த ஊருக்குப் போட்டு வாற்த ரணகளம் ஆக்கீற்றீங்களே....//

உண்மையை சொல்லி இருக்கிறேன் அதில் தப்பில்லையே...

//உது பக்கத்து இலைக்கு பாயாசம் விளையாட்டுத் தான்....
சந்ரு அண்ணருக்கு கலியாண ஆசை வந்திற்றுது....//

வரவேண்டிய வயசில வரத்தானே வேண்டும்.. (லொள்ளு) கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா?.....

சந்ரு அண்ணான்ர அம்மா! மகனுக்கு பொம்பிள பாக்கிறியளோ அல்லது நாங்கள் பாத்துவிடவோ?//

இதை முதலில் செய்யலாமே... ஹா... ஹா...

//அதிகம் பெண் நண்பிகளை சேர்க்க துடிக்கும் சந்ரு போன்றோரின் ஆலோசனைகளைப் பெறுங்கள். //

இதுபோதும்.... இனி சந்ரு அண்ணரின் மூஞ்சிப்புத்தகத்தில் அவர் பெயர் நாறடிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.....//

என் இந்தக் கொலை வெறி ஏன் பாட்டுக்கு சந்தோசமாக காலத்தை போக்குவது பிடிக்கவில்லையோ...

சந்ரு said...

//கனககோபி கூறியது...
சொல்ல மறந்துவிட்டேன்....

புதுவருட வாழ்த்துக்கள்...
யாழ்ப்பாணம் போயிருந்தததால் பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியாமல் போனது, ஆகவே வாழ்த்தவும் முடியாமல் போனது....//

உங்களுக்கும் எனது புதுவருட, மற்றும் திருமண வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

சந்ரு said...

//அண்ணாமலையான் கூறியது...
”பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் சமூகத்துக்கு ஏதாவது செய்யத்துடிப்பவன்."
சந்ரு இப்போ நல்லா புரியுதுப்பா உன் துடிப்பு...//


இதுவும் ஒரு சமுக சேவைதானே இலவச ஆலோசனை சேவை. (லொள்ளு) எத்தனை பேர் இதனால் நன்மை அடைகின்றனர் என்று தெரியுமா?

நகை சுவைக்காக மட்டுமே என்று போட்டிருக்கிறேன் நண்பரே பார்க்கவில்லையா?

மயில் said...

அடப்பாவி... விளங்கும். :))

Sinthu said...

அண்ணா எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்களே.. இதுவும் ஒருவகை சமுக சேவை தான் என்றீங்களா?

ஹேமா said...

சந்ரு என்ன நிறைய லீவு கிடைச்சிருக்கோ.ஒரு வழி பண்றீங்கள் !

Dr.எம்.கே.முருகானந்தன் said...

புதுவருட வாழ்த்துக்கள். சிரிக்க வைத்துக் கலக்கியிருக்கறீர்கள்

ஜெகநாதன் said...

அடிங்.. நண்பா....
பின்ன ஆரம்பிச்சுட்டீங்க... ம்ம்.. நமக்கும் நாலு அஞ்சு டிப்ஸு உதவிகரமாத்தான் இருக்கு.. ஹிஹி...!

ஜெகநாதன் said...

மறந்துட்​டேன் மாப்​ளே... புதுவருட வாழ்த்துக்கள்.. நலமும் வளமும் ​பெருக வாழ்த்துகி​​றேன்..!

ஜெகநாதன் said...

அரிஷ்விஜ-விற்கு என் வாழ்த்துக்கள்!
​தேவ​தை​யை சின்ன வயசில பாத்த மாதிரி இருக்குப்பா..!!

வால்பையன் said...

//இதுதான் மிக முக்கியமான ஒன்று ஏற்கனவே திருமணமான மூத்த பதிவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அவர்களது அனுபவத்துடன் கூடிய ஆலோசனைகளை பெறுங்கள்.//

எங்கிட்ட கேட்டா சொல்லிட்டு போறேன்!

henry J said...

தினசரி 10 விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் Trekpay PTC இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

Post a Comment