உன் இதயத்தை என்னிடம்
தந்துவிட்டாய் - என்
இதயத்தையும் திருடிவிட்டாய்...
இன்று என் இதயத்தை
தூக்கி எறிந்துவிட்டாய்
இன்னும் என்னிடம்
வந்து சேரவில்லை
என் இதயம் -உன்னை
சுற்றியே அலைகிறது
உன்னோடு வாழ்வதற்கு...
என்னிடம் இருக்கும் -உன்
இதயத்தை தட்டிப் பறிக்க
நினைக்கின்றாய் - ஏன்
இன்னொருவன் - உன்
கண்களால் கைது
செய்யப்பட்டு விட்டானா?...
உன் இதயம்
என்னிடமே இருக்கட்டும்
அவனும் என்னைப்போல்
அவஸ்த்தைப்பட வேண்டாம்.
************************************
என் வாழ்க்கை
மதுவோடுதான்
போகிறது - அன்று
என் காதலி
மதுவோடு வாழ்க்கை
வசந்தமானது -அவள்
கை விட்டதால் - இன்று
மது கிண்ணத்தோடு
என் வாழ்க்கை
வாரம் ஒரு வலை உலா..
உறு பசி
இன்றைய வலைப்பதிவு அறிமுகத்திலே இலங்கையிலே இருந்து பதிவிடுகின்ற பெண்பதிவர் தர்ஷாயணீ (உறு பசி) அவர்களின் பதிவுகள் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இவரது உறு பசி எனும் வலைப்பதிவிலே கவிதைகள், தமிழ் மொழியோடு, தமிழ் இலக்கியத்தோடு சார்ந்த பல இடுகைகளை தந்து வருகின்றார். தமிழ் மொழியின்பால் தனக்கு இருக்கின்ற பற்றினை இவரது பதிவிலே காணமுடிகின்றது.
அத்தோடு, சமகால நிகழ்வுகள், நகைசுவை சார்ந்த பதிவுகள், சமூகம் சார்ந்த கட்டுரைகள் என்று பலதரப்பட்ட விடயங்களை பகிர்ந்து வருகின்றார்.
எனக்கு அவரது பதிவுகள் அனைத்தும் பிடித்திருந்தாலும். எனக்கு மிகவும் பிடித்த சமகாலத்துக்கு பொருத்தமான கவிதை ஒன்றை தருகிறேன்.
புத்தம்...
புத்தனை
போதையில் சந்தித்தேன்.
இன்று அவனிடம் எதுவுமில்லை
ஒரு ,காவியையும் ,
சதக் காகாசுகளையும் தவிர.
காலத்தின்அழுகிய நாற்றத்தால்
போதியில் சந்திக்க
வேண்டிய அவனை ..............................
பொம்மைகளின் யாசகர்கள் பற்றியும்,
வானம் வழுக்கி விழுந்த தடம் பற்றியுமாய்
அவன் பதில்கள் இருக்கவில்லை.
'வாசவதத்தை' பற்றியும்,
தீண்டப்ப டாத, வீணை பற்றியுமாய் இருந்தது....
புனையப்படாத ஓவியத்திலிருந்து வரும்
அவனின் பௌர்ணமி,
பெருத்துப் போன பெருச்சாளி போன்றிருந்தது....!
அவனுக்கும் தெளிவில்லை ,
எனக்கும், தெளிவில்லை.....
காவிக்கும் , கர்த்தாவுக்குமான உட்கிடக்கையில்...........
அரச மரத்துஅணில் சொன்னது,
இவன் நெடுகாலமாய் இங்குதான் கிடக்கிறான்.....
வேலையத்த பயல்!
மௌனத்தின் காற்று வெளி -
படபடத்தது....
அவனுக்கு மூல வியாதி வரக்கூடாமைக்கு வேண்டி -
மீண்டு வந்தேன்.
அவன் சீடன் சொன்னான்,
நானும் புத்தனாகி விட்ட கதை.....
திரும்பிப் பார்த்தேன்...........,,
அவன் அமர்ந்திருந்த இடம் -
சவக் கிடந்க்காய் கிடந்தது...
புத்தத்துக்கு பின்னாலும் ,
சரணத்துக்கு பின்னாலும் 'ஆமி'
தான் நின்றார்கள்.
அனைத்து பதிவுகளையும் உறு பசி வலைப்பதிவுக்கு சென்று பாருங்கள்.
http://urupasi.blogspot.com/
9 comments: on "அலைகிறது என் இதயம்"
//உன் இதயம்
என்னிடமே இருக்கட்டும்
அவனும் என்னைப்போல்
அவஸ்த்தைப்பட வேண்டாம்//
இந்தக் கவிதை வரிகள் நல்லா இருக்கு...,ஆனா எங்கேயோ இடிக்குது.....!!!
உறுபசியைப் பற்றி என்னவோ ஏகத்துக்கு புகழ்ந்து எழுதியிருக்கிறிங்கள், ஆரும் வந்து பார்த்து விட்டு அப்பிடி ஒண்டுமே இல்லை எண்டப் போகினம்.....! எதுக்கும் நான் இப்பவே தலை மறைவு...:)))
மிக்க நன்றி அண்ணா......
சந்ரு,இரண்டு கவிதைகளுமே அருமை.உறுபசி பதிவாளருக்கு வாழ்த்துகள்.
புத்தம்......மனதை வலிக்கச் செய்கிறது.இங்கு வெளிநாட்டவர்கள் உங்கள் நாட்டில் இப்போ பிரச்சனை இல்லையே.இனிச் சந்தோஷமாய் ஊருக்குப் போய்வரலாமே என்று சொல்கிறார்கள். எங்கள் பிரச்சனை இன்னும் கூடியிருப்பது அவர்களுக்குத் எங்கே தெரிகிறது !
தவறிப்பூகும் காதலா... சொல்லவே இல்ல.. ம்ம்
மது காலைவாரினால்
மதுச்சாலைதான் வாழ்க்கையா???
உறுபசிக்கு வாழ்த்துக்கள்
வலிக்கச் செய்கிறது
வாழ்த்துக்கள்
சந்ரு நலமா?
நல்ல கவிதைகள். உறுபசி
பதிவாளரிடமிருந்து இன்னும் இன்னும்
நல்ல பதிவுகள் வெளிவர
வாழ்த்துக்கள்.
எப்படி அண்ணா உங்களால மட்டும் இப்படி முடியிது..
அனுபவமா? கவனம், அவளுடன் ஒன்றை விட பல இதயங்கள் இருந்திவிடப் போகின்றன.
புதிய நண்பியின் வலைத் தளத்தைப் பார்க்கப் போகிறேன், வரட்டா..
நல்ல கவிதை சந்ரு.
அனுபவம் இல்லையே?
அறிமுகத்துக்கு நன்றி .
அருமைங்க.. அரும!!
கவிதை
Post a Comment