Friday, 1 January 2010

புது வருடத்திலாவது விடிவு கிடைக்குமா?இன்று புதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். இந்த புதுவருடம் அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த ஆண்டு  பலருக்கு நல்லதொரு ஆண்டாக அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். என்னைப் பொறுத்தவரை கடந்த ஆண்டின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கின்றபோது என்  வாழ்க்கையிலே என்னை அதிகம் சங்கடப்படவைத்த ஒரு ஆண்டாக இருக்கின்றது.

தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டை மறக்கவே முடியாது அந்தளவுக்கு தமிழர்களின் உயிர்களையும், உடமைகளையும் பறித்து தமிழர்களின்  கண்ணீரிலே சந்தோசம் கண்ட ஆண்டு 2009. தமிழர் மனங்களிலே மாறாத வடுக்களை உருவாக்கிய ஆண்டு.

எது எப்படி இருப்பினும் இந்த புதுவருடத்தில் கடந்த காலத்தில் நடந்த அந்த மாறாத வடுக்களை ஒரு கெட்ட கனவாக மறப்போம். புதிய ஒரு நாளில் புதிய சிந்தனைகளோடு நம்பிக்கையோடு நம் வாழ்க்கையை அமைப்போம்.

இன்று ஆரவாரமாக நாம் புது வருடத்தினைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். நாம் ஒவ்வொரு விசேட பண்டிகைகளையும் மிகவும் சிறப்பான முறையிலே ஒவ்வொருவரு ஒவ்வொரு விதமாக கொண்டாடுவோம். எத்தனையோ ஆடம்பரங்கள் , தேவையற்ற செலவுகள் செய்கின்றோம்.

 ஆனாலும் இன்று தாய், தந்தை, சொந்தங்களை இழந்த பல சிறுவர்கள் எத்தனையோ சிறுவர் இல்லங்களிலே அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஏனைய சிறுவர்கள் இவ்வாறான விசேட தினங்களிலே புத்தாடை அணிந்து வான வேடிக்கைகளோடு ஆடிப்பாடி விளையாடும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதனை நாம் ஒரு நாளாவது எண்ணிப் பார்த்திருக்கின்றோமா?

நாம் இந்த விசேட பண்டிகைகள், தினங்களிலே அனாவசியமாக, ஆடம் பரங்கள் மூலம்   வீண் செலவுகள் செய்வதனை விடுத்து அந்த பணத்தை கொண்டு சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து அன்றைய நாளை அவர்களோடு நம் பொழுதைப் போக்கலமால்லவா?  இதனால் அந்த சிறுவர்களின் மனதிலே ஒரு சந்தோச உயணர்வு தோன்றுமல்லவா?

நாம் எத்தனை பேர் இந்த சிறுவர்களைப் பற்றி சிந்திக்கின்றோம். அவர்கள் குறிப்பிட்ட சிறுவர் இல்லங்களிலே நல்ல முறையிலே நடாத்தப்பட்டாலும் அவர்கள் மனதிலே தான் ஒரு அனாதை என்கின்ற, தன்னால் மற்றவர்களைப்போல் சந்தோசமாக இருக்க முடியவில்லையே என்ற ஒரு கவலை இருக்கும்.

இன்று இலங்கையின் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை எத்தனையோ சிறுவர் இல்லங்கள்  இருக்கின்றன. இந்த சிறுவர் இல்லங்களிலே ஆண் சிறார்கள் மட்டுமல்ல பெண் பிள்ளைகளும் பலர் இருக்கின்றார்கள். அந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலம் பற்றி யாராவது சிந்தித்திருக்கின்றோமா?

இன்று பெரிய வசதியான குடும்பத்திலே பிறந்த சில பெண் பிள்ளைகளின் வாழ்க்கையே சீதனம், வரதட்சனை, அது, இது என்று திண்டாட்டமாக இருக்கின்றது. இப்படி அவர்களுக்கு இந்த நிலை என்றால் அனைத்தையும் இழந்து சிறுவர் இல்லமே தஞ்சமென்று இருக்கின்ற சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற அந்த பெண் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமைய இருக்கின்றது. இன்று அழகு, அந்தஸ்து பெரிய இடமென்று எல்லோரும் பெரிய இடம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலத்துக்காக சிந்திப்போம்.

சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற சிறுவர்கள் நன்கு படிக்கக் கூடியவர்களாக இருந்தாலும் அவர்களின் மனதில் இருக்கின்ற கவலையின் காரணமாக படிக்கத்தான் முடியுமா?

நாம் இன்று நம் சிறுவர்களின் கல்வி வளர்சியிலே பின்தள்ளப் படுகின்றபோது நாளைய நம் சமுகத்தின் கல்வி நிலைதான் என்ன?

இன்றைய நம் சிறுவர்களே நாளைய நம் தலைவர்கள் அவர்களின் எதிர் காலத்துக்காக நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போம்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

12 comments: on "புது வருடத்திலாவது விடிவு கிடைக்குமா?"

Dr.எம்.கே.முருகானந்தன் said...

உங்கள் ஆழ்ந்த சிந்தனை வெளிப்பாட்டுடன் கூடிய வாழ்த்து. நன்றாக இருக்கிறது.
மனத்தில் வலியோடு மகிழ்வும் வருகிறது.
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

பிரியமுடன்...வசந்த் said...

நல்வழி பிறக்கட்டும் புத்தாண்டில்

புத்தாண்டு வாழ்த்துகள் சந்ரு...!

Subankan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா.

உங்கள் மனதின் வலிகள் புரிகின்றன

வானம்பாடிகள் said...

புத்தாண்டு வாழ்த்துகள் சந்ரு. உங்கள் வலைமனையை வலைச்சரத்தில் சுட்ட விழைகிறேன்.

ஷங்கி said...

புத்தாண்டு வாழ்த்துகள்!

சுசி said...

இந்த புதிய ஆண்டிலாவது வழி பிறக்கட்டும்..

நல்ல பதிவு.

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

ரோஸ்விக் said...

இந்த வழிகள் நீங்கி... இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துகள் நண்பரே.

cheena (சீனா) said...

அன்பின் சந்ரு

இனிய இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

புல்லட் said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சந்த்ரு

Priya said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள் சந்ரு!!!

Sinthu said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா.
அனைவருக்கும் இவ்வாண்டு நன்மையையே தரும் என்ற நம்பிக்கையுடன் வரவேற்போம்.

நிலாமதி said...

வலிகள் நீங்கி வழி பிறக்கும் புத்தாண்டாக அமையட்டும். வாழ்த்துக்கள்.

Post a Comment