சின்ன வயசில படிக்கும்போது ஓடிவிளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா எனும் பாரதியின் பாடலைக்கேட்டே.... ஓடி, ஓடி விளையாடிய நம்ம கோபி இப்போ இந்தபோபாடல் மட்டுமல் ஓடி... ஓடி... விளையாடு என்று எந்தப்பாடல் வந்தாலே ஓடி ஒழிந்து கொள்கிறார்.
பச்சிளம் பாலகன் என்று இருந்த இவர் இப்போ சந்தோசம்.... சந்தோசம்... வாழ்க்கையின்.... என்றும், ஒரு தேவதை வந்து விட்டாள் என்னைத் தேடியே.... என்றும் பாடிக்கொண்டு திரிகின்றார். காரணம் அவருக்கு பெண் பார்க்கப்பட்டு விட்டதாக நம்பத்தகாத வதந்திகள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும் கோபி வாழ்வே மாயம்... இந்த வாழ்வே மாயம்... என்று இன்னும் சில நாட்களில் பாடாமல் இருந்தால் சரிதான்.
இது ஒரு புறமிருக்க சுபாங்கனின் வயிறு பத்தி எரிகிறதாம். கோபிக்கே பெண் கிடைத்துவிட்டாள் என் அழகுக்கும், அறிவுக்கும் எந்தப் பெண்ணும் பார்க்கிறாளே இல்லை என்று புலம்பிக்கொண்டு இருக்கின்றார்.
இதனை அறிந்த வந்தி சுபாங்கனை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கிறார். நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்னைப் போன்றவர்களைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கின்றார்.
இந்தக் கதை இப்படியே போய்க்கொண்டிருக்க திருமனத்துக்குள் காலடி எடுத்து வைக்க இருக்கும் கோபிக்காக சில ஆலோசனைகள். ஆனாலும் விரைவில் திருமணத்துக்காக தேவதைகளை தேடிக்கொண்டிருக்கும் புல்லட், ஆதிரை, வந்தி, சுபாங்கன், யோகா (தேவதைகளே இவர்கள் மீது உங்கள் கடைக்கண் பார்வை படட்டுமே) ஆகியோருக்கும் பயன் பயன்படும்.
திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில வழிகள்.
01. உங்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை திருமண நாள் அன்றோடு மறந்து விடுங்கள், உங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்று தெரியாதவர்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம்.
02 . மனைவி பிள்ளைகளோடு வெளியில் செல்வதை தவிருங்கள்.
03. நீங்கள் எப்போதும் திருமணமாகாத இளம் நண்பர்களோடு மட்டுமே பழகுங்கள். அப்போது மற்றவர்கள் உங்களையும் திருமணமாகாத ஒருவர் என்று நினைத்து விடுவார்கள்.
04. எப்போதும் நாகரிகமான ஆடைகளை அணியுங்கள் அடிக்கடி இளம் பெண்கள் அதிகம் நடமாடும் இடங்களுக்கு சென்று உங்கள் வழமையான சில்மிசங்களை செய்யுங்கள்.
05. இளம் பெண்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது அந்தப் பெண்கள் உங்களிடம் உதவி கேட்காமலேயே நீங்களாகவே சென்று உதவி செய்யுங்கள். அப்போது அந்தப் பெண்ணின் மனதிலே இலகுவில் இடம் பிடிக்கலாம்.
06. சில காலம் குழந்தை பெறுவதை தவிர்க்க வேண்டும். காரணம் பிள்ளைகளின் தொல்லை அதிகமாகும் அப்போது வெளியில் நீங்கள் கல்யாணமானவர் என்பது தெரிய வரலாம். அப்போது இளம் பெண்கள் உங்களை கண்டாலே ஓடி விடுவார்கள்.
07. உங்கள் மனைவி வெளியில் சென்று வருவதற்கு ஒரு காரினையும் (மகிழுந்து) ஒரு சாரதியையும் ஏற்பாடு செய்து வையுங்கள். ( உங்கள் மனைவியை அந்த சாரதி ஏற்பாடு செய்தால் நான் பொறுப்பல்ல)
08. மூஞ்சி புத்தகத்தில் (face book) அதிகம், பெண் நண்பிகளை தேடிக்கொள்ளுங்கள்.அல்லது அதிகம் பெண் நண்பிகளை வைத்திருக்கின்ற ஆதிரை போன்றோரையும், அதிகம் பெண் நண்பிகளை சேர்க்க துடிக்கும் சந்ரு போன்றோரின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.
09. திருமண, பிறந்தநாள் போன்ற விசேட நிகழ்வுகளுக்கு மனைவியுடன் செல்வதை தவிர்த்து தனியாக செல்லுங்கள். ஏல்லும்போது கம்பிரமான தோற்றத்தோடு செல்லுங்கள். அங்கேயும் பல இளம் பெண்களை கவர முடியும்.
10. இதுதான் மிக முக்கியமான ஒன்று ஏற்கனவே திருமணமான மூத்த பதிவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அவர்களது அனுபவத்துடன் கூடிய ஆலோசனைகளை பெறுங்கள்.
இந்த பதிவுக்கான கருப்பொருளை எனக்கு வழங்கிய பதிவு வந்தி அண்ணாவின் பதிவுதான் அங்கேயும் சென்று பாருங்கள்.
கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1
கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 2
இது நகை சுவைப் பதிவு மட்டுமே...
கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1
கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 2
இது நகை சுவைப் பதிவு மட்டுமே...
