Monday, 18 January 2010

மட்டக்களப்பில் வேற்றுக்கிரகவாசிகளின் கைவரிசை

றுமுதல் எங்கள் பிரதேசங்களிலே பரபரப்பாக  பேசப்படுகின்ற விடயம் வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய விடயமே.

 கிழக்கு மாகாணத்திலே பல இடங்களில் வெற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டத்தை பலர் கண்டதாக பல செய்திகள் வந்தன.  இந்த  செய்திகளில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கவில்லை.

நேற்றைக்கு  முன்தினம் இரவு பத்து மணியளவில் வேற்றுக்கிரக வாசிகள் பலர் எமது கிராமத்தில் உலாவுவதை பலர் கண்டதாக செய்தி பரவ ஆரம்பித்தது.

வெற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டம் இருந்த இடத்துக்கு சென்றால். அங்கே பல சிறிய காலடித்தடங்கள் இருந்தன. நேரில் கண்டவர்களை விசாரித்தால் பத்துக்கும் மேற்பட்ட சிறிய உருவம் கொண்ட (இரண்டடி இருக்குமாம்) பலரை கண்டிருக்கிறார்கள் நமது மனிதர்களின் நடமாட்டத்தைக் காண மாயமாக மறைந்து விட்டார்களாம்.

மழை அவ்வப்போது பெய்துகொண்டிருந்ததால் ஏன் நண்பன் காலடித்தடங்களை உடனடியாக இரவிலேயே புகைப்படம் எடுத்துவிட்டார்.

இதோ படங்கள் காலடித்தடங்களை வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கின்றன.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

10 comments: on "மட்டக்களப்பில் வேற்றுக்கிரகவாசிகளின் கைவரிசை"

Bavan said...

ஆஹா, கிழக்கு மாகாணம் என்று சொல்லுறீங்க அப்ப திருமலைப்க்கம் வருவாங்களோ?

தகவலுக்கு நன்றி அண்ணா...;)

Admin said...

//Bavan கூறியது...
ஆஹா, கிழக்கு மாகாணம் என்று சொல்லுறீங்க அப்ப திருமலைப்க்கம் வருவாங்களோ?

தகவலுக்கு நன்றி அண்ணா...;)//

வரலாம் கவனமாக இருங்கள். அதிகமான காலடித்தடங்களை அவதானிக்க முடிந்தது அதிக புகைப்படங்கள் இருக்கின்றன. நேரமின்மையால் ஒருசிலவற்றையே பதிவிட்டேன்.

என்னதா நடக்குது நம்ம தேசத்தில் ஒண்ணுமே புரியவில்லை.

இலங்கன் said...

என்னங்க 2010 ஒரே விரோதியா இருக்கு. யாழ்ப்பாணத்திலும் ஏதோ வெளிச்சம் தெரியுது எண்டு தலையாட்டி பதிவிட்டிருந்தார்.

Admin said...

//இலங்கன் கூறியது...
என்னங்க 2010 ஒரே விரோதியா இருக்கு. யாழ்ப்பாணத்திலும் ஏதோ வெளிச்சம் தெரியுது எண்டு தலையாட்டி பதிவிட்டிருந்தார்.//

நானும் ஆரம்பத்தில் இந்த விடயங்களை நம்புவதில்லை. காலடித்தடங்களை நானே ஏன் கண்களால் கண்டபோது என்னால் நம்பவே முடியவில்லை.

இது சிறிய பிள்ளைகளின் காலடித்தடம்போல் இருக்கின்றன. அதிகமான தடங்கள் இருந்தன. வேற்றுக்கிரக வாசிகள் என்று பலராலும் பேசப்படுகின்றது.

நானும் வேற்றுக்கிரகத்துக்கு அவர்களோடு போகலாம் என்று பார்க்கிறேன். (லொள்ளு)

புல்லட் said...

ஹாஹாஹா! ஏன் சந்த்ரு ஏன்? ஹையோ ஹையோ!

ஸ்ரீராம். said...

நகைச்சுவை இடுகையா?

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...
நகைச்சுவை இடுகையா?//


இது ஒரு நகைசுவை இடுகையல்ல. இது பற்றிய எனது முழுவிபரங்களும் சில நிமிடங்களில்.

எழில் said...

//நானும் வேற்றுக்கிரகத்துக்கு அவர்களோடு
போகலாம் என்று பார்க்கிறேன். //

நீர் இவ்வளவு நாளும் எழுதின விஷயங்களில பிடிச்சது இதுமட்டும்தான். கட்டாயம் செய்யுமப்பு.. பண உதவி வேண்டுமானாலும் செய்யிறன். பிளீஸ் போ அப்பூ.. உலகம் நிம்மதியாக இருக்கட்டும்.

Think Why Not said...

/*....
நானும் வேற்றுக்கிரகத்துக்கு அவர்களோடு போகலாம் என்று பார்க்கிறேன்.
...*/

அதுக்கு ரொம்ப குவாலிபிகேசன் இருக்கோணுமாம்...
அங்கத்தையான் சிட்டிசன்சிப் எக்ஸாமுக்குதான் வந்தி அண்ணரும் ஆதிரை அண்ணரும் விழுந்து விழுந்து படிக்கிறதா கேள்வி...

அங்கையும் ஒரு ரிச்சு கேள நூலு விடுவம் என்று கௌபாயும், அங்கயாவது அணில் கடிக்காத புருட் இருக்கா என்று புல்லட் அண்ணரும் ரிசேச் பண்ணி கொண்டு இருக்கினமாம்...

கன்கொன் || Kangon said...

பாப்பம் பாப்பம்...
எனக்கு இப்போதும் நம்பிக்கையில்லை...

நேரில் கண்டால் பிறகு தான் நம்பமுடியும்.... பார்ப்போம்....
தகவலுக்கு நன்றி அண்ணா...

Post a Comment