Monday 7 December 2009

பேச்சுத் தமிழுக்கு இனிமை சேர்க்கும் "கா"

இன்று முதல் யாழ்தேவியின்  நட்சத்திரப் பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் யாழ்தேவி நிர்வாகத்திற்கு எனது நன்றிகள். 


எனது முன்னைய பதிவொன்று மீண்டும் பதிவாகிறது. இன்னும் ஓரிரு மணித்தியாலங்களில் எனது அடுத்த பதிவு வரும்...



ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை சேர்ப்பதாக இருக்கின்றன.

மட்டக்களப்பைப் பொறுத்தவரை சில சொற்களோடு "கா" சேர்த்து பயன் படுத்தும் வழக்கம் இருக்கின்றது. (ஏனைய பிரதேசங்களிலும் இருக்கலாம் இருந்தால் பின்னூட்டங்களில் தரலாம் நண்பர்களே)

உதாரணமாக நாம் என்ன நடக்கிறது என்று கேட்பதனை என்னாகா நடக்கிறது என்று பேசுவார்கள். யார் - யாருகா, எப்போ - எப்போகா, வா - வாகா, தெரியுமா - தெரியுமாகா, சாப்பிட்டாச்சா - சாப்பிட்டாச்சாகா போன்று "கா" சேர்த்து பயன் படுத்தப்படுகிறது.

இங்கே பேசுகின்ற போது ஆணுடனோ, பெண்ணுடனோ பேசுவதாக இருந்தாலும் கா போட்டே பேசுகின்றனர். இப்போது இவ்வாறு கா போட்டுப் பேசுவது இளைய சமுதாயத்திடம் குறைவான பயன்பாட்டில் இருந்தாலும். வயது வந்தவர்களாலும், கிராமப்புறங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

என்ன என்பதற்கும் என்னகா என்பதற்கும் இடையிலே ஒரு அன்பு அல்லது பாசப்பிணைப்பு வித்தியாசங்கள் இருப்பதாக உணரப்படுகின்றது. என்ன என்பதனைவிட என்னகா என்பது பேசுபவர்களுக்கிடையே ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்துகின்றது. என்ன என்பது நாம் பேசும் தொனியிலே வித்தியாசப் படுகிறது. என்ன என்று கோபமாகவும் கேட்கலாம் சந்தோசமாகவும் கேட்கலாம். என்னகா எனும்போது பெசுபவர்களுக்குள்ளேயான உறவு அல்லது அன்பு நெருக்கமடைவதாக உணர்கின்றனர்.

இன்றும் கிராமப் புறங்களிலும், முதியவர்களாலும் கா சேர்த்து சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பல பிரதேச பேச்சு வழக்குச் சொற்கள் இருக்கின்றன அவற்றையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

8 comments: on "பேச்சுத் தமிழுக்கு இனிமை சேர்க்கும் "கா""

தர்ஷன் said...

வாழ்த்துக்கள் சந்துரு
நட்ச்சத்திர வாரத்தில் கலக்கல் பதிவுகள் போடுங்கள்

Unknown said...

நட்சத்திரப் பதிவராகியமைக்கு வாழ்த்துக்கள்....

எனக்குத் தெரிந்தவரை யாழ்ப்பாணத்தில் 'கா'போடும் பழக்கம் இல்லை....

Starjan (ஸ்டார்ஜன்) said...

நட்சத்திரப் பதிவராகியமைக்கு வாழ்த்துக்கள்....

நட்ச்சத்திர வாரத்தில் இனி சந்ருவின் கலக்கல் பதிவுகளை காணலாம் ...

கலக்குங்க ...

Subankan said...

நட்சத்திரப் பதிவரானதுக்கு வாழ்த்துகள் அண்ணா.

Ramesh said...

நட்சத்திர பதிவர் சந்ரு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

//இன்று முதல் யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் யாழ்தேவி நிர்வாகத்திற்கு எனது நன்றிகள். //

வாழ்த்துகள் நண்பா

Muruganandan M.K. said...

வாழ்த்துக்கள் சந்ரு. நட்சத்திர பதிவராக உங்கள் படைப்புகளை அசத்துங்கள்.

ஹேமா said...

வாழ்த்துக்கள் சந்ரு.நல்ல பதிவுகளை எதிர்பார்க்கலாம்.

Post a Comment