Monday 19 October 2009

கிழக்கை நேசிக்கும் ஊடகங்கள்.

வறட்சியில் கிழக்கு மக்கள்

இன்று கிழக்கு மாகாணத்தில் மழையின்றி மக்கள் பெரும் கஸ்ரங்களை அனுபவித்து வருகின்றனர். குளங்கள் மட்டுமல்லாமல், கிணறுகள்கூட வற்றிவிட்டன. இதனால் சில பிரதேசங்களிலே மக்கள் குடி நீரைப்பெறுவதிலே பல்வேறுபட்ட சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


அத்தோடு விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகிக்கொண்டு இருக்கின்றது. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே விவசாயத்திலே முன்னிலையில் இருக்கின்ற களுதாவளை தேத்தாத்தீவு போன்ற விவசாயக் கிராமங்களிலே நீர் தட்டுப்பாட்டினால் விவசாயிகள் பல சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இப்பிரதேசங்களிலே நீர் உவர் நீராக மாறிவருவது வேறு விடயம்.


கிழக்கை நேசிக்கும் ஊடகங்கள்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே சில வானொலி, தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தொடர் இசை நிகழ்சிகளை நடாத்தினார்கள். முன்னொரு காலத்திலேயே இசை நிகழ்சி என்றாலே மக்கள் பாரிய எதிர் பார்ப்புக்களோடு இருப்பார்கள். ஆனால் இந்த இசை நிகழ்சிகளை பார்க்கச் சென்று ஏமாற்றமடைந்த மக்கள் இன்று இசைக்குழுக்களையே வெறுக்குமளவில் இருக்கின்றனர்.


ஒரு இசை நிகழ்சியின் விறுவிறுப்பானது அறிவிப்பாளரின் பேச்சுத்திறனிலே தங்கி இருக்கின்றது . நானும் எனது நண்பர்களும் எங்கு இசை நிகழ்சி நடாந்தாலும் சென்று விடுவோம். சென்றால் ஆட்டம் போடாமல் வந்த நாள் இல்லை. ஒரு வானொலியின் இசை நிகழ்சிக்கு அறிவிப்புச் செய்ய வந்த அறிவிப்பாளருக்கு தமிழைவிட வேறு வார்த்தைகளே அதிகம் தெரியும் போன்று இருந்தது. ஒரு சிங்களவர் இதனைவிட நன்றாக தமிழிலே அறிவிப்புச் செய்வார் என்றார் எனது நண்பர்.


எனது கிராமத்திலே பத்துக்கு அதிகமான இசை நிகழ்சிகளை ஒரு மாதத்தில் செய்துவிட்டனர். ஒரு நாள் இரு வானொலிகள் ஒரு விளையாட்டு மைதானத்திலே ஒரே நேரத்தில் இசை நிகழ்சி நடாத்தவந்து இருவருக்குமிடையில் வாய்த தகராறு ஏறபட்டதுமுண்டு.


இன்னுமொரு வானொலி கிழக்கில் நுளம்புகளை ஒழித்தல் எனும் ஒரு நிகழ்சியினை பல இடங்களிலும் செய்தனர். நுளம்புகள் பற்றி மக்களுக்கு அறிவூட்டப்பட்டதோடு பல போட்டிகளையும் நடாத்தி நல்ல பரிசுகளையும் வழங்கினர். இப்படியான நிகழ்சிகள் வரவேற்கப்படுகின்றன.


இந்த நிறுவனங்கள் மக்களை தன் பக்கம் இழுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துக்குமப்பால் இம்மக்களது பிரச்சனைகளை வெளி உலகுக்கும் எடுத்துச் சொல்லுகின்ற ஊடகங்களாக அமையவேண்டும்.


இவர்கள் இசை நிகழ்சிகளை நடாத்தும்போது அந்தந்தப்பிரதேசங்களிலே இருக்கின்ற இசைக்குழுக்களைக் கொண்டு நடாத்தலாமல்லவா அப்போது அந்தந்தப்பிரதேசக் கலைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுவதோடு. அவர்களின் திறமைகள் வெளி உலகிற்கு கொண்டுவரப்படலாமல்லவா.



கிறுக்கல்கள்.....



அன்று உன்
இதயத்தில் எனக்கோர்
இடம் கேட்டேன்
மறுத்துவிட்டாய் - இன்று
என் இதயத்தில்
ஓரிடம் கேட்கின்றாய்
என்னால் தரமுடியவில்லை
என் இதயம் இன்று
வேறோருத்தியிடம்
இருக்கின்றது.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

23 comments: on "கிழக்கை நேசிக்கும் ஊடகங்கள்."

ஆ.ஞானசேகரன் said...

அன்று உன்
//இதயத்தில் எனக்கோர்
இடம் கேட்டேன்
மறுத்துவிட்டாய் - இன்று
என் இதயத்தில்
ஓரிடம் கேட்கின்றாய்
என்னால் தரமுடியவில்லை
என் இதயம் இன்று
வேறோருத்தியிடம்
இருக்கின்றது.//


அருமையா இருக்கு நண்பா...

ஸ்ரீராம். said...

மழை மற்றும் தண்ணீர் பிரச்னை தமிழ்நாட்டிலும் தலை விரித்தாடுகிறது. கால மாற்றத்தால் வரும் இம்மாதிரி சிரமங்களை எப்படி சமாளிக்கப் போகிறோமோ? மேலே உள்ள தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் கீழே ஒரு கவிதை...நன்றாக இருந்தது.

Ramesh said...

//மக்கள் குடி நீரைப்பெறுவதிலே பல்வேறுபட்ட சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.//
இப்போ மிகக் கடுமையாக இருக்கு.

//நீர் தட்டுப்பாட்டினால் விவசாயிகள் பல சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இப்பிரதேசங்களிலே நீர் உவர் நீராக மாறிவருவது//

உண்மை தான்,அதுக்குள்ள மின்சாரமும் நிப்பாட்டுவது விவசாயப் பயிர்களுக்கு நீர் இறைப்பதில பெரும் கஷ்டம் தான். வீட்டில குடிக்க கூட பெரிய தட்டுப்பாடு. இதனை பற்றி யாருமே எந்த ஊடகமோ வெளிச்சம் காட்டாதது மிக கவலைக்குரிய விடயம்.

*இயற்கை ராஜி* said...

தங்களின் வலைப்பூவைப் பற்றிய விவரத்தை httப்://blogintamil.blogspot.com இங்கே தந்துள்ளேன்.நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள். நன்றி

வால்பையன் said...

//அன்று உன்
இதயத்தில் எனக்கோர்
இடம் கேட்டேன்
மறுத்துவிட்டாய் - இன்று
என் இதயத்தில்
ஓரிடம் கேட்கின்றாய்
என்னால் தரமுடியவில்லை
என் இதயம் இன்று
வேறோருத்தியிடம்
இருக்கின்றது.//


விரைவில் டும் டும் டும் கொட்ட வாழ்த்துக்கள்!

Unknown said...

//கிழக்கில் நுளம்புகளை ஒலித்தல் //
//இசைக்குளு//

இவற்றைத் திருத்துங்கள்...
குறைறயாகச் சொல்லவில்லை... வேண்டுகோளாக சொல்கிறேன்...

மற்றும்படி இசை நிகழ்ச்சிகள் பற்றி நீங்கள் சொன்னது சரிதான்...
மக்கள் இவற்றைஇப்போது வெறுக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்...

அலுத்துவிட்டதா அல்லது மமக்கள் இவற்றை இரசிக்கும் மனநிலையில் இல்லையா என்பது தெரியவில்லை....

Menaga Sathia said...

//அன்று உன்
இதயத்தில் எனக்கோர்
இடம் கேட்டேன்
மறுத்துவிட்டாய் - இன்று
என் இதயத்தில்
ஓரிடம் கேட்கின்றாய்
என்னால் தரமுடியவில்லை
என் இதயம் இன்று
வேறோருத்தியிடம்
இருக்கின்றது.//சூப்பர் சந்ரு!!

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க

சுசி said...

ஆக்கபூர்வமான பதிவு சந்ரு.

கிறுக்கல் மாதிரி தெரியலையே????

ஹேமா said...

சந்ரு,பதிவுக்கும் கவிதைக்கும் சம்பந்தமேயில்லை.என்றாலும் கவிதையில்தான் என் கண்.உண்மையான அன்பை ஒரு இதயத்திடம் கொடுத்துவிட்டால் மாறச் சந்தர்ப்பம் குறைவு.

Kala said...

சந்ரு!
யார் அந்தப் பாக்கியசாலி__சந்ரு
யார் அந்த துர்பாக்கியசாலி__சத்ரு

கை தவற விட்டவருக்கு
நீங்கள் சந்ருவா? சத்ருவா?

Admin said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
அன்று உன்
//இதயத்தில் எனக்கோர்
இடம் கேட்டேன்
மறுத்துவிட்டாய் - இன்று
என் இதயத்தில்
ஓரிடம் கேட்கின்றாய்
என்னால் தரமுடியவில்லை
என் இதயம் இன்று
வேறோருத்தியிடம்
இருக்கின்றது.//


அருமையா இருக்கு நண்பா...//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...
மழை மற்றும் தண்ணீர் பிரச்னை தமிழ்நாட்டிலும் தலை விரித்தாடுகிறது. கால மாற்றத்தால் வரும் இம்மாதிரி சிரமங்களை எப்படி சமாளிக்கப் போகிறோமோ? மேலே உள்ள தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் கீழே ஒரு கவிதை...நன்றாக இருந்தது.//

பதிவிடும்போது எண்ணத்தில் அந்தக் கவிதை மனதில் உதித்தது இடுகையில் சேர்த்துவிட்டேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

//ramesh கூறியது...
//மக்கள் குடி நீரைப்பெறுவதிலே பல்வேறுபட்ட சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.//
இப்போ மிகக் கடுமையாக இருக்கு.

//நீர் தட்டுப்பாட்டினால் விவசாயிகள் பல சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இப்பிரதேசங்களிலே நீர் உவர் நீராக மாறிவருவது//

உண்மை தான்,அதுக்குள்ள மின்சாரமும் நிப்பாட்டுவது விவசாயப் பயிர்களுக்கு நீர் இறைப்பதில பெரும் கஷ்டம் தான். வீட்டில குடிக்க கூட பெரிய தட்டுப்பாடு. இதனை பற்றி யாருமே எந்த ஊடகமோ வெளிச்சம் காட்டாதது மிக கவலைக்குரிய விடயம்.//




இன்று அதிகரித்துவிட்ட குழாய் நீர் பாவனையால் களுதாவளைக் கிராமத்தின் நீர் உவர் நீராக மாறி வருகின்றது இதனால் பல பிரச்சனைகளை கிராம மக்களும் விவசாயிகளும் எதிர் நோக்கி வருவதோடு களுதாவளைக் கிராமத்தில் எதிர் காலத்தில் சுத்தமான குடி நீரைப்பெருவது கேள்விக்குறியாகி விட்டது. இதனைத் தடுப்பதற்குரிய வழிவகைகளைக் கண்ணறிய உரியவர்கள் நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா...

Admin said...

//இய‌ற்கை கூறியது...
தங்களின் வலைப்பூவைப் பற்றிய விவரத்தை httப்://blogintamil.blogspot.com இங்கே தந்துள்ளேன்.நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள். நன்றி//


வந்து பார்த்தேன். எனது வலைப்பதிவைப்பற்றி குறிப்பிட்டிருப்பதட்கு நன்றிகள்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//வால்பையன் கூறியது...
//அன்று உன்
இதயத்தில் எனக்கோர்
இடம் கேட்டேன்
மறுத்துவிட்டாய் - இன்று
என் இதயத்தில்
ஓரிடம் கேட்கின்றாய்
என்னால் தரமுடியவில்லை
என் இதயம் இன்று
வேறோருத்தியிடம்
இருக்கின்றது.//


விரைவில் டும் டும் டும் கொட்ட வாழ்த்துக்கள்!//


விரைவில் டும், டும் டும் கொட்டி என் சுதந்திரத்தை பறிக்க நினைப்பது நியாயமா நண்பா.

Admin said...

வருகைக்கு நன்றிகள் வால்.

Admin said...

//கனககோபி கூறியது...
//கிழக்கில் நுளம்புகளை ஒலித்தல் //
//இசைக்குளு//

இவற்றைத் திருத்துங்கள்...
குறைறயாகச் சொல்லவில்லை... வேண்டுகோளாக சொல்கிறேன்...

மற்றும்படி இசை நிகழ்ச்சிகள் பற்றி நீங்கள் சொன்னது சரிதான்...
மக்கள் இவற்றைஇப்போது வெறுக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்...

அலுத்துவிட்டதா அல்லது மமக்கள் இவற்றை இரசிக்கும் மனநிலையில் இல்லையா என்பது தெரியவில்லை....//


தவறுகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் . தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போதுதான் நாம் விடும் தவறுகளை திருத்திக்கொள்ள முடியும்.


குறுகிய நேரத்தில் பதிவிடவேண்டி இருந்ததால் அவசரத்தில் வந்த தவறுதான் நண்பா. திருத்திவிட்டேன்.
இவர்களால் நடாத்தப்பட்ட இசை நிகழ்சிகள் இசை நிகழ்சியாக இல்லை அதனால் மக்கள் வெறுத்தனர். இரசிக்கும்படி இல்லை.

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
//அன்று உன்
இதயத்தில் எனக்கோர்
இடம் கேட்டேன்
மறுத்துவிட்டாய் - இன்று
என் இதயத்தில்
ஓரிடம் கேட்கின்றாய்
என்னால் தரமுடியவில்லை
என் இதயம் இன்று
வேறோருத்தியிடம்
இருக்கின்றது.//சூப்பர் சந்ரு!!//


பொய் இல்லையே?...


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//நேசமித்ரன் கூறியது...
நல்லா இருக்குங்க//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//சுசி கூறியது...
ஆக்கபூர்வமான பதிவு சந்ரு.

கிறுக்கல் மாதிரி தெரியலையே????//


அப்போ கவிதை என்று வைத்துக்கொள்ளுங்கள்.


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//ஹேமா கூறியது...
சந்ரு,பதிவுக்கும் கவிதைக்கும் சம்பந்தமேயில்லை.என்றாலும் கவிதையில்தான் என் கண்.உண்மையான அன்பை ஒரு இதயத்திடம் கொடுத்துவிட்டால் மாறச் சந்தர்ப்பம் குறைவு.//



வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//Kala கூறியது...
சந்ரு!
யார் அந்தப் பாக்கியசாலி__சந்ரு
யார் அந்த துர்பாக்கியசாலி__சத்ரு

கை தவற விட்டவருக்கு
நீங்கள் சந்ருவா? சத்ருவா?//


எப்போதும் சந்ரு சந்ருவாகவே இருக்கட்டுமே.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Post a Comment