Thursday, 6 August 2009

ரோபோக்களின் துணையுடன் இருதய சத்திர கிச்சை

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பல்வேறுபட்ட தேவைகளுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.


ரோபோக்களின்உதவியுடன் மிகவும் இலகுவான முறையிலே இருதய சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர் சென்னை மருத்துவர்கள். இருதய அறுவைச் சிகிச்சையில் ரோபோக்களை பயன் படுத்துவது முக்கிய திருப்பம் எனவும், இருதய அறுவைச் சிகிச்சையினை ரோபோக்களின் உதவியோடு மேற்கொள்வது நோயாளிகளுக்கு பல வசதிகள் காணப்படுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த அறுவைச் சிகிச்சை முறை மூலமாக சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவைச் சிகிச்சையினை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.


இந்த அறுவைச் சிகிச்சை மூலம் குறைந்த அளவு திசுக்களே சேதமடைவதால் குறைந்தளவு இரத்த விரயமே ஏற்படுவதாகவும். இதனால் நோயாளிக்கு குறைந்த அளவு இரத்தம் ஏற்றினால் போதுமானது என்றும், இவனை பயன் படுத்துவதனால் நோயாளிக்கு வலி குறையும் என்றும், அறுவைச் சிகிச்சையின்போது வெளியேறும் இரத்தத்தின் அளவு குறைவு என்பதனால் நோயாளிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம் குறைந்தளவு பகுதிகளே சேதமடைவதுடன் போடப்படும் தையல் உறுதியானதாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

24 comments: on "ரோபோக்களின் துணையுடன் இருதய சத்திர கிச்சை"

நட்புடன் ஜமால் said...

போன மாதம்

ஜப்பானில் சமையல் செய்யும் ரோபோவை பற்றி தொலைக்காட்ச்சியில் பார்த்தேன் ...


நல்ல தகவல் பகிர்வு சந்துரு

ஆ.ஞானசேகரன் said...

நல்ல தகவலாக இருக்கின்றது , நன்றி சந்ரு

புல்லட் said...

பயன்மிகு தகவல் நண்பா.. நானெங்கே ரத்தக்களரியாக ஒரு விளக்கப்படம் போட்டிருக்கபபோகிறீர்களோ என்று பயந்து பயந்து திறந்தேன்...ஹிஹி!

யோ வொய்ஸ் (யோகா) said...

என்ன தான் இப்படி வசதிகள் வந்தாலும் எல்லாம் பணக்காரர்களுக்கே, பாவம் எழைகள்... இந்த வைத்திய செலவுகளை அவர்களால் தங்க தான் முடியுமா?

எனினும் புதிய தகவல்களுக்கு நன்றி சந்த்ரு

SShathiesh-சதீஷ். said...

நல்ல விடயம்தானே சந்த்ரு சத்திர சிகிச்சை செய்யவிருக்கும் நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி நம்ம நாட்டிலும் இது வந்தால். என்ன தட்டு தடுமாறி ரோபோக்க மாறி ஏதும் பண்ணிவிட்டால் ஐயா கதி அதோ கதிதான்.

Admin said...

//நட்புடன் ஜமால் கூறியது...
போன மாதம்

ஜப்பானில் சமையல் செய்யும் ரோபோவை பற்றி தொலைக்காட்ச்சியில் பார்த்தேன் ...


நல்ல தகவல் பகிர்வு சந்துரு//

ஜப்பானில் அதெல்லாம் சகஜமப்பா.... இது நம்ம இந்தியாவில நடந்திருக்கிறதே என்று பெருமைப்படலாம்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்ல தகவலாக இருக்கின்றது , நன்றி சந்ரு//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//புல்லட் கூறியது...
பயன்மிகு தகவல் நண்பா.. நானெங்கே ரத்தக்களரியாக ஒரு விளக்கப்படம் போட்டிருக்கபபோகிறீர்களோ என்று பயந்து பயந்து திறந்தேன்...ஹிஹி//


நமக்குத்தானே இரத்தக்களரி பரிட்சயமாகி விட்டது கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே. //பயந்து பயந்து வந்தேன்// எனக்கு சிரிப்பாக இருக்கிறது உங்களுக்கா பயம்?????????

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//யோ (Yoga) கூறியது...
என்ன தான் இப்படி வசதிகள் வந்தாலும் எல்லாம் பணக்காரர்களுக்கே, பாவம் எழைகள்... இந்த வைத்திய செலவுகளை அவர்களால் தங்க தான் முடியுமா?

எனினும் புதிய தகவல்களுக்கு நன்றி சந்த்ரு//

உண்மைதான் நண்பா... சாதாரண வைத்திய செலவுகளுக்கே திண்டாடும் மக்களின்
நிலைதான் கஸ்ரம்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//SShathiesh கூறியது...
நல்ல விடயம்தானே சந்த்ரு சத்திர சிகிச்சை செய்யவிருக்கும் நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி நம்ம நாட்டிலும் இது வந்தால். என்ன தட்டு தடுமாறி ரோபோக்க மாறி ஏதும் பண்ணிவிட்டால் ஐயா கதி அதோ கதிதான்//

இன்று இலங்கையில் எல்லாமே மாறித்தான் நடக்கின்றது என்பதாலோ இந்தக் கவலை.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

வரும் காலங்களில் இயந்திரங்கள்தான்
மனிதனை ஆட்சி செய்ய போகின்றன..!

சப்ராஸ் அபூ பக்கர் said...

ரோபோ பற்றிய தகவல் அருமை சந்ரு.... இன்னும் வித்தியாசமான தகவல்கள் தேடி பதிவிடுவதற்கு வாழ்த்துக்கள்......

குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்படியா?
நல்ல பகிர்வுங்க,, நன்றி...

Prapa said...

எவ்வளோவோ பண்ணிட்டம் இத பன்னமட்டமா "சந்துரு".
சர்ச்சைகளுக்கு உட்பட்ட உங்க பெயர எழுத புது எழுத்துக்கள் தந்திருக்கிறேன் இனிமேல் இப்படியே பயன்படுத்தலாம்.

கார்த்திக் said...

விஞ்ஞானம் ரொம்பவே வளருதுங்க.. அதுனாலதான் வேலை வாய்ப்பு இல்லாம போகுது.. ஒன்ன பெறனும்னா ஒன்ன இழக்க வேண்டிருக்கு..

S.A. நவாஸுதீன் said...

நல்ல தகவல் நண்பரே. நன்றி

Admin said...

//தமிழ் வெங்கட் கூறியது...
வரும் காலங்களில் இயந்திரங்கள்தான்
மனிதனை ஆட்சி செய்ய போகின்றன..!//


உண்மைதான் நண்பரே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே...

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
ரோபோ பற்றிய தகவல் அருமை சந்ரு.... இன்னும் வித்தியாசமான தகவல்கள் தேடி பதிவிடுவதற்கு வாழ்த்துக்கள்......//

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
அப்படியா?
நல்ல பகிர்வுங்க,, நன்றி...//


அப்படியேதான்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே

Admin said...

//பிரபா கூறியது...
எவ்வளோவோ பண்ணிட்டம் இத பன்னமட்டமா "சந்துரு".
சர்ச்சைகளுக்கு உட்பட்ட உங்க பெயர எழுத புது எழுத்துக்கள் தந்திருக்கிறேன் இனிமேல் இப்படியே பயன்படுத்தலாம்.//

அதுதானே பார்த்தேன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே

Admin said...

//கார்த்திக் கூறியது...
விஞ்ஞானம் ரொம்பவே வளருதுங்க.. அதுனாலதான் வேலை வாய்ப்பு இல்லாம போகுது.. ஒன்ன பெறனும்னா ஒன்ன இழக்க வேண்டிருக்கு..//


உண்மைதான் நண்பரே இன்று விஞ்ஞான, தொழினுட்பங்கள் மனிதனது வேலைவாய்ப்பினை பறித்துவிட்டன..

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே

Admin said...

//S.A. நவாஸுதீன் கூறியது...
நல்ல தகவல் நண்பரே. நன்றி//

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே

Kala said...

ஆமா !1 இனிமேல் ரோபோக்கும்,ரோபோக்கும்
திருமணம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதைத்தான் ஜயா விஞ்ஞான வளர்ச்சி
என்கிறது பார்ப்போம்.....பார்போம் என்ன
நடக்கிறதென்று.

Admin said...

//Kala கூறியது...
ஆமா !1 இனிமேல் ரோபோக்கும்,ரோபோக்கும்
திருமணம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதைத்தான் ஜயா விஞ்ஞான வளர்ச்சி
என்கிறது பார்ப்போம்.....பார்போம் என்ன
நடக்கிறதென்று.//


ஆமா நல்ல சிந்தனைதான்... நடக்கலாம்.... பொறுத்திருந்து பார்ப்போம்...

Post a Comment