Monday 31 August 2009

தமிழர்கள் என்பதன் அடையாளம் என்ன?

எனது வலைப்பதிவு திருடப்பட்டபோது எனக்கு தெரியப்படுத்திய மற்றும் உதவிய அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள் பல.


எனது வலைப்பதிவிலே தமிழ் மொழி தொடர்பாக இடம் பெற்ற விவாதங்கள் மூலம் எனக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. என் மனதுக்குள் நானே கேட்டுக்கொண்ட கேள்விகளை உங்களிடம் கேட்கின்றேன்.

ஒரு இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துவது (அடையாளப் படுத்துவது) என்ன?. ஒருவரை எதனை வைத்துக்கொண்டு இவர் இந்த இனம்தான் என்று மதிப்பிடுகின்றோம்?.

தமிழர்கள் என்று சொன்னால் தமிழர்கள் என்று சொல்வதனை எதனை வைத்துத் தீர்மானிக்கின்றோம். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சரி தாய் மொழி தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னால் நாம் தமிழ் பேசுகிறோமா? எத்தனைபேர் தமிழை மறந்து இருக்கின்றார்கள். நான் கண்டிருக்கின்றேன். இனறு கொழும்பிலே எத்தனை தமிழ் பிள்ளைகள் தமிழ் தெரியாது. சிங்களம் ஆங்கிலம் மட்டும் தெரிந்து இருக்கின்றார்கள்

தாய் மொழி என்பது எது? தாய் பேசும் மொழியா அப்படி என்றால் எனது தாய் கொழும்பிலே சிறு வயது முதல் இருந்தவர் தமிழ் என்பதே தெரியாது தமிழ் ஒரு நாள் கூட பேசியதில்லை என்றால் என் தாய் மொழி என்ன?


இன்று தமிழ் மொழி தெரியாமல் கொழும்பிலே இருக்கும் அந்த பிள்ளைகளின் பெற்றோரில் சிலருக்கு தமிழ் மொழி தெரியாது அப்போ இவர்களின் தாய் மொழி என்ன?

தமிழர்களுக்கு என்று சில கலாசாரங்கள் இருக்கின்றன என்று சொல்லப்போகின்றீர்ளா? அப்படியானால் தமிழர்கள் என்பதனை அடையாள படுத்தும் அந்தக் கலாசாரங்கள் என்ன? அவை கடைப்பிடிக்கப் படுகின்றனவா? என்பதே எனது கேள்வி.



ஒரு இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துவது மொழியா, கலாசாரமா, அல்லது வேறு ஏதாவதா? அவை சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றதா? தமிழர்களை பிரதி நிதிப் படுத்துவது என்ன?


உங்கள் பதில்கள் பின்னூட்டங்களாக வரட்டுமே

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

47 comments: on "தமிழர்கள் என்பதன் அடையாளம் என்ன?"

க.பாலாசி said...

//தாய் மொழி என்பது எது? தாய் பேசும் மொழியா அப்படி என்றால் எனது தாய் கொழும்பிலே சிறு வயது முதல் இருந்தவர் தமிழ் என்பதே தெரியாது தமிழ் ஒரு நாள் கூட பேசியதில்லை என்றால் என் தாய் மொழி என்ன?//

நியாயமான கேள்விதான்...தாய் மொழி என்பது தாய்நாடு சார்ந்ததாக இருந்திருக்கவேண்டும் என்றே எண்ணுகிறேன்...உங்களின் தாய் பேசாததால் நீங்கள் தமிழன் அல்ல என்று அர்த்தமாகிவிடாது....என்பது என் எண்ணம்...

ilangan said...

ஒருவன் முதலில் பேசுகின்ற மொழி தாய்மொழி எனக்கொள்ளலாம். காரணம் முதலில் பேசுகின்ற மொழியினாலேயே அவன் சிந்திக்கின்றானாம் ஆய்வுகள் கூறுகின்றன.

//ஒரு இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துவது மொழியா, கலாசாரமா, அல்லது வேறு ஏதாவதா? அவை சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றதா? தமிழர்களை பிரதி நிதிப் படுத்துவது என்ன?//

இந்தக் கேள்விக்கு இன்னமும் விடை தெரியாமலேயே இருக்கின்றது. பலரால் கேள்வி கேட்க மட்டுமே முடிகிறது. விடை....

Prapa said...

தமிழர்= தன்மானம் உடையவர்

யோ வொய்ஸ் (யோகா) said...

தாய் தந்தையரை வைத்து தான் அவரது இனத்தை அடையாளபடுத்த வேண்டும். அப்படியும் இருவரும் இரு இனமாக இருந்தால், குழந்தை அந்த இரண்டில் எந்த இனக்கலாச்சார விழுமியங்களை உள்ளடக்குகிறதோ அந்த இனத்தை தான் அவரது இனமாக கருதலாம்.

தாய்மொழி என்பதும் இதே கருத்தை தான் கொண்டுள்ளது. ஆங்கிலத்திலே படித்து ஆங்கிலத்திலே பேசினாலும் அவங்க ஆங்கிலேயர்கள் ஆக மாட்டாங்க. மனிதனுக்கு சில விடயங்கள் தன்னால் தீாமானிக்க இயலாது. அவற்றில் இவை அடக்கம்.

Beski said...

எங்கு பிறந்தால் என்ன? எங்கு வளர்ந்தால் என்ன? தமிழ் பேசும் ஒருவனுக்கு, தமிழும் தமிழ் மக்களும் பிடித்திருக்கிறதென்றால்... நானும் தமிழன் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டால், அவனையும் தமிழனென்று தாராளமாக ஏற்றுக்கொள்வேன்.

இப்போதைக்கு நான் தமிழன்... என்னுடைய பூர்வீகத்தையெல்லாம் ஆராய்ச்சி செய்தால் அது என்ன சொல்லுமோ தெரியாது.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ரிஷி மூலம் நதி மூலம் மனிதனுக்கு மட்டும் அல்ல மொழிக்கும் பொருந்தும்!!

பாருங்க இப்படி கேட்டா பதில சொல்ல முடியாம நீங்க தமிழனே இல்லேண்ணு திசை திருப்புவாங்க!!

சுசி said...

இங்கானா நிறத்தை வச்சுதான் இனத்தை சொல்லுவாங்க சந்ரு. என்னைப் பொறுத்த வரை எம் மொழியும், கலாச்சாரமும்தான் எம்மை அடையாளம் காட்டும்.
சாரி.. கொஞ்ச நாள் உங்க பதிவுக்கு வரலை. என்னமோ நடந்திருக்குன்னு தெரியுது. கவலைப் படாதீங்க. உங்க திறமை மேல நம்பிக்கை வைங்க.

வால்பையன் said...

அப்ப ஒவ்வோரு மொழிகாரனும் அடையாளத்தோடத் தான் திரியிறானா!?
எனக்கு இது புது தகவல்!

என்ன அடையாளம் இப்போ நான் வச்சிகணும்

Admin said...

////வால்பையன் கூறியது...
அப்ப ஒவ்வோரு மொழிகாரனும் அடையாளத்தோடத் தான் திரியிறானா!?
எனக்கு இது புது தகவல்!

என்ன அடையாளம் இப்போ நான் வச்சிகணும்//


நான் கேட்பது எதனை வைத்து ஒருவரின் இனத்தினைத் தீர்மானிக்கின்றோம் என்பதுதான். அடையாளத்தோட திரிய வேண்டும் என்று சொல்லவில்லை.


உங்களை தமிழர் என்று எதனை வைத்து சொல்கின்றோம் என்பதுதான் என் கேள்வி

வால்பையன் said...

//உங்களை தமிழர் என்று எதனை வைத்து சொல்கின்றோம் என்பதுதான் என் கேள்வி //

நான் தமிழ் பேசுவதால்!

Admin said...

//வால்பையன் கூறியது...
அப்ப ஒவ்வோரு மொழிகாரனும் அடையாளத்தோடத் தான் திரியிறானா!?
எனக்கு இது புது தகவல்!

என்ன அடையாளம் இப்போ நான் வச்சிகணும்//


நான் எந்தத் தகவலும் வழங்கவில்லையே. ஒரு இனத்தினை அடையாள படுத்துவது எது என்றுதான் கேட்கின்றேன்.

வால்பையன் said...

//நான் எந்தத் தகவலும் வழங்கவில்லையே. ஒரு இனத்தினை அடையாள படுத்துவது எது என்றுதான் கேட்கின்றேன். //

எதுக்கு அடையாளம்!
நல்லாத்தானோ இருக்கோம்!
மனிதன் என்ற அடையாளம் பத்தாதா!?

Admin said...

//வால்பையன் கூறியது...
//உங்களை தமிழர் என்று எதனை வைத்து சொல்கின்றோம் என்பதுதான் என் கேள்வி //

நான் தமிழ் பேசுவதால்!//


அப்போ இன்றுதமிழ் தமிழர்களுக்கு பிறந்த பிள்ளைகள் பல தமிழ் மொழி பேசாமல் வேறு மொழி பேசுகின்றார்களே அவர்களுக்கு தமிழே தெரியாது. அவர்கள் என்ன இனம் தமிழினமா?

வால்பையன் said...

எங்கிருந்து இந்த இஅனம் வந்துச்சுன்னு தெரியல!
மனிதனை மனிதனாக பார்க்க என்ன பிரச்சனை உங்களுக்கு, அவன் என்ன மொழி பேசினா நமகென்ன!

Admin said...

//வால்பையன் கூறியது...


நான் தமிழ் பேசுவதால்!//

//எதுக்கு அடையாளம்!
நல்லாத்தானோ இருக்கோம்!
மனிதன் என்ற அடையாளம் பத்தாதா!?//




தமிழ் பேசுவோர் தமிழினம் என்றால் வெள்ளைக்காரர்கள் தமிழ் பேசினால் அவர்களை தமிழினமாக ஏற்றுக்கொள்ளலாமா. இன்று தமிழை மறந்து வேற்று மொழிகளை பேசுவோரை தமிழர்கள் இல்லை என்று சொல்வதா. தன்னைத் தமிழர்கள் என்று சொல்வோர் பலர் ஏன் தமிழை பேசுவதாக இல்லை வேற்று மொழிகளை பேசுகின்றனர். அதுதான் கேட்கிறேன் எதனை வைத்து தமிழன் என்று அடையாள படுத்துவது எதனை வைத்து.

வால்பையன் said...

//எதனை வைத்து தமிழன் என்று அடையாள படுத்துவது எதனை வைத்து. //

எதுக்கு தமிழன்னு அடையாளப்படுத்தனும்னு நான் கேக்குறேன்!
உங்களுக்கு அதில் என்ன பிரச்சனை!?

Admin said...

//வால்பையன் கூறியது...
எங்கிருந்து இந்த இஅனம் வந்துச்சுன்னு தெரியல!
மனிதனை மனிதனாக பார்க்க என்ன பிரச்சனை உங்களுக்கு, அவன் என்ன மொழி பேசினா நமகென்ன!//



தங்களை தமிழர்கள் என்பதனை அடையாள படுத்தும் தமது தாய் மொழி தமிழை மறப்பதுதான் பிரச்சனை.

Admin said...

//வால்பையன் கூறியது...
//எதனை வைத்து தமிழன் என்று அடையாள படுத்துவது எதனை வைத்து. //

எதுக்கு தமிழன்னு அடையாளப்படுத்தனும்னு நான் கேக்குறேன்!
உங்களுக்கு அதில் என்ன பிரச்சனை!?//



ஒருவர் தனது இனத்தை அடையாள படுத்த வேண்டிய அவசியம் இல்லையோ. ஒரு இடத்தில் தமிழன் என்றும் இன்னோர் இடத்தில் சிங்களவன் என்றும் சொல்லலாமோ.

வால்பையன் said...

//தங்களை தமிழர்கள் என்பதனை அடையாள படுத்தும் தமது தாய் மொழி தமிழை மறப்பதுதான் பிரச்சனை.//

மொழி என்பது ஒரு ஊடகம்!
டீவிக்கு முன்னாடி ரேடியோ தான் பொழுதுபோக்கு சாதனம், இப்போ அதை நாம மறந்துட்டோம், அது கோவிச்சுகிச்சா என்ன?
தமிழை யாரும் அழிக்கவும் முடியாது, புதுசா உருவாக்கவும் முடியாது!
அதை நாம கொலை பண்ணாம இருந்தால் சரி!

வால்பையன் said...

//ஒரு இடத்தில் தமிழன் என்றும் இன்னோர் இடத்தில் சிங்களவன் என்றும் சொல்லலாமோ.//

முதல்ல உயிர் வேணும் அது இருந்தா தான் என்ன மொழியா இருந்தாலும் பேச முடியும்!
சிலப்பதிகாரத்துல நரமாமிசம் சாப்பிடும் மனிதர்களிடமிருந்து கோவலன் தப்பிய முறை கதையை படித்ததில்லையா!?

jothi said...

//தமிழர்களை பிரதி நிதிப் படுத்துவது என்ன?//

நண்டு கதை,..

தமிழ் என் உயிர். தமிழின் கதை என்ன ?? தமிழிற்கு என சரித்திரம் உண்டா? தமிழிர்களின் மூலம் என்ன? வள்ளுவர் எழுதிய குறள், சிலப்பதிகாரம் எங்கு உள்ளது? எந்த நிலையில் உள்ளது. தமிழ்ர்களை பற்றி பேசுவது வேஸ்ட்,..

ஹேமா said...

சந்ரு சிக்கலாகத்தான் இருக்கிறது எங்கள் புலம் பெயர் வாழ்வில்.இங்கு பிறந்த பிள்ளைகள் தங்கள் தாய்மொழி பிறந்த நாட்டின் மொழி என்கிறார்கள்.பெற்றோர்களோ இல்லை எங்கள் மொழி தமிழ்தான்.
அதுதான் உன் தாய் மொழி என்கிறார்கள்.குழப்பம்தானே...!

Ramesh said...

தாய் மொழி என்பது தாய் மூதாதையாரை வைத்து சொல்வது மரபியல் ரீதியாக காரனம்,இசுரேல் நாடு உருவான்போது யூதரின் அடையாலத்தை தாய் வ்ழியாகத்தன் கனக்கிட்டனர், காரனம் தாயின் கருவரையில் இருந்து கட்ரு கொல்கிர மொழி என்ர காரனத்தால்,தாயோ அல்ல்து குலந்தைகலோ தாய் மொழியெய் படிக்கவில்லை என்பதர்க்காக அது தாய் மொழி இல்லை எண்ட்ரு பொருலாகாது என்பது எனது கனிப்பு. புலம்பெயர்ந்த நாட்டில் பிரந்தாலும்,அங்கு படிக்க சூல்னிலை இல்லா விட்டாலும் அது தாய் மொழி இல்லை எண்ட்ரு சொல்லிவிட முடியாது, பிழை இருந்தால் மன்னிக்கவும்,இது எனது சொந்த கருத்து. ரமெஷ்,அமெரிக்கா.

சோழன்... said...

நாம் மதத்தால், சாதியால், கட்சியால் பிளவுற்று நிற்கிறோம். நம்மை இணைக்க ஒரு பொதுப்பொருள் என்றுமே இருந்ததில்லை.

நாம் நம்மை இந்தியன் என்று பெருமை கொள்கிறோம் நன்று.ஆனால் தண்ணீர் தர மறுக்கிற சக இந்தியர்கள் நம்மை தமிழராய்த்தான் பார்க்கின்றனர்.அவர்களது பார்வையில் நாம் இந்தியர் அல்லர். நாம் நமக்குள் இத்தனை காலம் சுமந்து வந்த அத்தனை வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து ஒன்று பட வேண்டிய தருனம் இது. வாடிய பயிரைக் கண்டு வாடிய இனம் நம்முடையது. ஆனல் இன்று நம் சகோதரர்கள் தாக்கப்படும்போதும் அன்னையர்கள் அவமதிக்கப்படும்போதும் சகோதரிகள் வல்லுறவு கொள்ளப்படும்போதும் எல்லையற்ற சகிப்புத்தன்மையோடும் சகிக்கமுடியாத பொறுமையோடும் வேடிக்கை பார்த்து வருகிறோம். இதனால் இன உணர்வு சிறிதுமற்ற ஈனர்களின் கூட்டமென்ற அவப்பெயரையும் தாங்கி வருகிறோம்.

ஆ.ஞானசேகரன் said...

எனக்குள் இருக்கும் கெள்விகளில் இதுவும் ஒன்று.... இருக்கட்டும் தமிழன் என்பதை விட மனிதனாக முதலில் இருக்க கற்றுக்கொள்வோம் என்பது என் ஆசைகள்

வால்பையன் said...

//நாம் நம்மை இந்தியன் என்று பெருமை கொள்கிறோம் நன்று.ஆனால் தண்ணீர் தர மறுக்கிற சக இந்தியர்கள் நம்மை தமிழராய்த்தான் பார்க்கின்றனர்.அவர்களது பார்வையில் நாம் இந்தியர் அல்லர்.//

உங்கள் தெருவில் வரிசையாக வீடு இருக்கிறது!அவர்கள் வீட்டில் சொந்தமா போர் போட்டிருக்கிறார்கள், உங்கள் வீட்டில் கார்ப்பரேஷன் வாட்டர் தான்! உங்களுக்கு பத்தவில்லை, அதனால் பக்கத்துவீட்டில் வாங்கி கொள்கிறீர்கள்,ஆனால் பக்கத்துவீட்டில் ஆட்கள் அதிகமாகிவிட்டார்கள், அவர்களுக்கு தண்ணீர் தேவை அதிகமாக இருக்கிறது, என்ன செய்வார்கள், முதலில் அவர்களது தேவை, பின் தானே நமக்கு!

அவனிடம் தண்ணி வாங்க பல வழி இருக்கிறது, கேடுகெட்ட அரசியல்வாதிகள் உள்ளவரை சோத்துக்கு லாட்டரி தான் இங்கே இருப்பவர்களுக்கு!

வால்பையன் said...

//எல்லையற்ற சகிப்புத்தன்மையோடும் சகிக்கமுடியாத பொறுமையோடும் வேடிக்கை பார்த்து வருகிறோம். இதனால் இன உணர்வு சிறிதுமற்ற ஈனர்களின் கூட்டமென்ற அவப்பெயரையும் தாங்கி வருகிறோம்.//

சதிரியனா இருக்குறதை விட சாணாக்கியன இருன்னு தான் அரசியல்பாடம் சொல்லுது!, இதை ஆரம்பத்திலேயே நாம் உலகநாடுகளுக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும், ஆனால் இந்தியாவை நம்பி ஏமாந்தது தமிழ் ஈழம்!, இனியும் நம்பி கொண்டிருப்பது என்ன நியாயம்!

அஹோரி said...

'இந்நாள்' தமிழன் = நூறு ரூவா பிரியாணி + கருணாநிதிக்கு சப்பை கட்டு கட்டுறவன்.

கார்த்திக் said...

அருமையான பதிவு தமிழனே..

Admin said...

//க.பாலாஜி கூறியது...
//தாய் மொழி என்பது எது? தாய் பேசும் மொழியா அப்படி என்றால் எனது தாய் கொழும்பிலே சிறு வயது முதல் இருந்தவர் தமிழ் என்பதே தெரியாது தமிழ் ஒரு நாள் கூட பேசியதில்லை என்றால் என் தாய் மொழி என்ன?//

நியாயமான கேள்விதான்...தாய் மொழி என்பது தாய்நாடு சார்ந்ததாக இருந்திருக்கவேண்டும் என்றே எண்ணுகிறேன்...உங்களின் தாய் பேசாததால் நீங்கள் தமிழன் அல்ல என்று அர்த்தமாகிவிடாது....என்பது என் எண்ணம்...//


நாடு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றால் ஒரு நாட்டில் பல இனம் இருக்கிறதே. எந்த ரீதியில் நாடு சார்ந்தது என்று சொல்வது.

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//ilangan கூறியது...
ஒருவன் முதலில் பேசுகின்ற மொழி தாய்மொழி எனக்கொள்ளலாம். காரணம் முதலில் பேசுகின்ற மொழியினாலேயே அவன் சிந்திக்கின்றானாம் ஆய்வுகள் கூறுகின்றன.

//ஒரு இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துவது மொழியா, கலாசாரமா, அல்லது வேறு ஏதாவதா? அவை சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றதா? தமிழர்களை பிரதி நிதிப் படுத்துவது என்ன?//

இந்தக் கேள்விக்கு இன்னமும் விடை தெரியாமலேயே இருக்கின்றது. பலரால் கேள்வி கேட்க மட்டுமே முடிகிறது. விடை....//

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//பிரபா கூறியது...
தமிழர்= தன்மானம் உடையவர்//



தமிழர் தன்மானம் உள்ளவர் என்பது தெரியும் பிரபா... என் கேள்விக்கு பதில சொல்லுங்க.

Admin said...

//யோ வாய்ஸ் கூறியது...
தாய் தந்தையரை வைத்து தான் அவரது இனத்தை அடையாளபடுத்த வேண்டும். அப்படியும் இருவரும் இரு இனமாக இருந்தால், குழந்தை அந்த இரண்டில் எந்த இனக்கலாச்சார விழுமியங்களை உள்ளடக்குகிறதோ அந்த இனத்தை தான் அவரது இனமாக கருதலாம்.//

அப்போ இன்று நாகரிகம் என்ற போர்வையில் வெளிநாட்டு கலாசாரத்துடன் இருப்பவர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்லலாமா.



///தாய்மொழி என்பதும் இதே கருத்தை தான் கொண்டுள்ளது. ஆங்கிலத்திலே படித்து ஆங்கிலத்திலே பேசினாலும் அவங்க ஆங்கிலேயர்கள் ஆக மாட்டாங்க. மனிதனுக்கு சில விடயங்கள் தன்னால் தீாமானிக்க இயலாது. அவற்றில் இவை அடக்கம்.//



ஒரு இனம் என்பதனை மனிதனால் தீர்மானிக்க முடியாது என்றால் யாரால் தீர்மானிக்கப் படுகிறது. கடவுளாலா.


வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//எவனோ ஒருவன் கூறியது...
எங்கு பிறந்தால் என்ன? எங்கு வளர்ந்தால் என்ன? தமிழ் பேசும் ஒருவனுக்கு, தமிழும் தமிழ் மக்களும் பிடித்திருக்கிறதென்றால்... நானும் தமிழன் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டால், அவனையும் தமிழனென்று தாராளமாக ஏற்றுக்கொள்வேன்.

இப்போதைக்கு நான் தமிழன்... என்னுடைய பூர்வீகத்தையெல்லாம் ஆராய்ச்சி செய்தால் அது என்ன சொல்லுமோ தெரியாது.//



வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
ரிஷி மூலம் நதி மூலம் மனிதனுக்கு மட்டும் அல்ல மொழிக்கும் பொருந்தும்!!

பாருங்க இப்படி கேட்டா பதில சொல்ல முடியாம நீங்க தமிழனே இல்லேண்ணு திசை திருப்புவாங்க!!//


வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//சுசி கூறியது...
இங்கானா நிறத்தை வச்சுதான் இனத்தை சொல்லுவாங்க சந்ரு. என்னைப் பொறுத்த வரை எம் மொழியும், கலாச்சாரமும்தான் எம்மை அடையாளம் காட்டும்.
சாரி.. கொஞ்ச நாள் உங்க பதிவுக்கு வரலை. என்னமோ நடந்திருக்குன்னு தெரியுது. கவலைப் படாதீங்க. உங்க திறமை மேல நம்பிக்கை வைங்க.//


வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//jothi கூறியது...
//தமிழர்களை பிரதி நிதிப் படுத்துவது என்ன?//

நண்டு கதை,..

தமிழ் என் உயிர். தமிழின் கதை என்ன ?? தமிழிற்கு என சரித்திரம் உண்டா? தமிழிர்களின் மூலம் என்ன? வள்ளுவர் எழுதிய குறள், சிலப்பதிகாரம் எங்கு உள்ளது? எந்த நிலையில் உள்ளது. தமிழ்ர்களை பற்றி பேசுவது வேஸ்ட்,..//


தமிழன் பல சரித்திரம் படைத்து இருக்கிறான். எல்லோரும் இப்படிச் சொல்வதனால்தான் இன்று தமிழனை அளிக்க நினைப்பவனுக்கு இலகுவாகிவிட்டது.

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//சந்ரு சிக்கலாகத்தான் இருக்கிறது எங்கள் புலம் பெயர் வாழ்வில்.இங்கு பிறந்த பிள்ளைகள் தங்கள் தாய்மொழி பிறந்த நாட்டின் மொழி என்கிறார்கள்.பெற்றோர்களோ இல்லை எங்கள் மொழி தமிழ்தான்.
அதுதான் உன் தாய் மொழி என்கிறார்கள்.குழப்பம்தானே...!//


வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//சந்ரு சிக்கலாகத்தான் இருக்கிறது எங்கள் புலம் பெயர் வாழ்வில்.இங்கு பிறந்த பிள்ளைகள் தங்கள் தாய்மொழி பிறந்த நாட்டின் மொழி என்கிறார்கள்.பெற்றோர்களோ இல்லை எங்கள் மொழி தமிழ்தான்.
அதுதான் உன் தாய் மொழி என்கிறார்கள்.குழப்பம்தானே...!//


வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//Ramesh கூறியது...
தாய் மொழி என்பது தாய் மூதாதையாரை வைத்து சொல்வது மரபியல் ரீதியாக காரனம்,இசுரேல் நாடு உருவான்போது யூதரின் அடையாலத்தை தாய் வ்ழியாகத்தன் கனக்கிட்டனர், காரனம் தாயின் கருவரையில் இருந்து கட்ரு கொல்கிர மொழி என்ர காரனத்தால்,தாயோ அல்ல்து குலந்தைகலோ தாய் மொழியெய் படிக்கவில்லை என்பதர்க்காக அது தாய் மொழி இல்லை எண்ட்ரு பொருலாகாது என்பது எனது கனிப்பு. புலம்பெயர்ந்த நாட்டில் பிரந்தாலும்,அங்கு படிக்க சூல்னிலை இல்லா விட்டாலும் அது தாய் மொழி இல்லை எண்ட்ரு சொல்லிவிட முடியாது, பிழை இருந்தால் மன்னிக்கவும்,இது எனது சொந்த கருத்து. ரமெஷ்,அமெரிக்கா.//


எந்தப் பிழையும் இல்லை நண்பரே. கருத்துச் சுதந்திரம் இருக்கிறது தாராளமாக உங்கள் கருத்துக்களை சொல்லலாம்.

Admin said...

// சோழன்... கூறியது...
நாம் மதத்தால், சாதியால், கட்சியால் பிளவுற்று நிற்கிறோம். நம்மை இணைக்க ஒரு பொதுப்பொருள் என்றுமே இருந்ததில்லை.

நாம் நம்மை இந்தியன் என்று பெருமை கொள்கிறோம் நன்று.ஆனால் தண்ணீர் தர மறுக்கிற சக இந்தியர்கள் நம்மை தமிழராய்த்தான் பார்க்கின்றனர்.அவர்களது பார்வையில் நாம் இந்தியர் அல்லர். நாம் நமக்குள் இத்தனை காலம் சுமந்து வந்த அத்தனை வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து ஒன்று பட வேண்டிய தருனம் இது. வாடிய பயிரைக் கண்டு வாடிய இனம் நம்முடையது. ஆனல் இன்று நம் சகோதரர்கள் தாக்கப்படும்போதும் அன்னையர்கள் அவமதிக்கப்படும்போதும் சகோதரிகள் வல்லுறவு கொள்ளப்படும்போதும் எல்லையற்ற சகிப்புத்தன்மையோடும் சகிக்கமுடியாத பொறுமையோடும் வேடிக்கை பார்த்து வருகிறோம். இதனால் இன உணர்வு சிறிதுமற்ற ஈனர்களின் கூட்டமென்ற அவப்பெயரையும் தாங்கி வருகிறோம்.//

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
எனக்குள் இருக்கும் கெள்விகளில் இதுவும் ஒன்று.... இருக்கட்டும் தமிழன் என்பதை விட மனிதனாக முதலில் இருக்க கற்றுக்கொள்வோம் என்பது என் ஆசைகள்//


வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//வால்பையன் கூறியது...
//எல்லையற்ற சகிப்புத்தன்மையோடும் சகிக்கமுடியாத பொறுமையோடும் வேடிக்கை பார்த்து வருகிறோம். இதனால் இன உணர்வு சிறிதுமற்ற ஈனர்களின் கூட்டமென்ற அவப்பெயரையும் தாங்கி வருகிறோம்.//

சதிரியனா இருக்குறதை விட சாணாக்கியன இருன்னு தான் அரசியல்பாடம் சொல்லுது!, இதை ஆரம்பத்திலேயே நாம் உலகநாடுகளுக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும், ஆனால் இந்தியாவை நம்பி ஏமாந்தது தமிழ் ஈழம்!, இனியும் நம்பி கொண்டிருப்பது என்ன நியாயம்!//

இரக்கமற்ற நடை பிணங்களாக சில இந்திய தமிழ் அரசியல் வாதிகள். நம் உறவுகள் படும் வேதனைகளையும் துயரங்களையும் அறியாதவர்கள் போல். தம் இனத்துக்காக குரல் கொடுக்காத தன இனத்தின் மரண ஓலங்களை அறியாதவர்களாக இருக்கும் இந்திய தமிழ் அரசியல் வாதிகள் தமிழர்களா. தன இனத்துக்காக குரல் கொடுக்காத இவர்கள் மக்கள் தலைவர்களா.

இனியும் எந்த ஒரு தமிழனும் நம்பப் போவதுமில்லை

Admin said...

//அஹோரி கூறியது...
'இந்நாள்' தமிழன் = நூறு ரூவா பிரியாணி + கருணாநிதிக்கு சப்பை கட்டு கட்டுறவன்.//


வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//கார்த்திக் கூறியது...
அருமையான பதிவு தமிழனே..//



வருகைக்கு நன்றிகள்.

Nathanjagk said...

தமிழர்கள் என்பவர்களின் அடையாளம்..
1 - பழைய பாலிதீன் பைகள், மினரல் வாட்டர் பாட்டில்களைத் தூக்கி வீசாமல் பல வருடங்களுக்கு பயன்படுத்தும் விஞ்ஞானிகள்
2 - வீட்டு வாங்கிய புது ​பொருட்களின் மேலுள்ள பாலிதீன் உறைகளை வருடங்களுக்கு எடுக்காமலேயே பக்குவமாக பயன்படுத்தத் தெரிந்தவர்கள்
3 - ஒவ்வொரு வாக்கியத்திலும், ஆங்கிலச் சொல் இருப்பதற்கு ப்ரத்யேக கவனம் எடுத்துக் கொள்பவர்கள்
4 - அயல்நாடுகளுக்கோ (அல்லது உதைக்கும் பக்கத்து மாநிலங்களுக்கோ)​சென்றால் மட்டும் பாசத்தோடு தமிழை தடவிக் கொடுப்பவர்கள்
5 - திருக்குறள், கம்பராமாயணம் இதற்கப்புறம் இலக்கியத்தை தாண்டாதவர்களும்; சுஜாதா, பாலகுமாரன் படித்து விட்டு மரபு இலக்கிய அறிவு இல்லாதவர்களும் சந்தித்துக் கொண்டால்.. தமிழ் சினிமாதான் சமூகத்தையே சீரழித்து விட்டது என்று கோபமாக பேசிக்​கொள்ளும் முற்போக்கு சமுதாயம்
6 - எப்படி 30 ஆண்டுகளே இரண்டே இரண்டு கட்சிகள் மாறிமாறி அரிய​ணையைப் பிடிக்க​வைக்கிறார்கள் என்று​மொத்த உலகமும் சிண்டை பிய்த்துக்​கொள்ளும் அசத்தல் வாக்கு வங்கிகள் + வாக்குக்கு காசு வாங்கிகள்!!
7 - இப்படி பாயிண்ட் பாயிண்டாக தாமே தன் இனத்தை கிண்டலடிக்கும் ​​சுயவிமர்சன / சுயஆய்வு ஸ்மரணை கொண்ட தனியின மக்கள்
8 - எவன்டா இந்த மாதிரி நம்மள.. நம்ம.. நம்ம.. நம்மளோட.. நம் தமிழ் இனத்தைக் கிண்டல் பண்ணுனது என்று வீராவேசமா முறுக்கிக் கொண்டு சண்டைக்கு வரும் ரத்தக்​கொதிப்புக்காரர்கள்!
9 - ஒரு விவாதத்தில் ஈடுபடும் ​போது எதிர் வாதம் புரிபவரோடு மற்றவர் கூட்டு​சேர்வதைக் கண்டால் தடாலடியா கட்சி மாறுவது - அல்லது "கவலை தோய்ந்த உங்கள் முகங்கள் முன்னாலிருந்தாலும்... கட்சி பணிகள் பின்னால் அழைப்பதால்..." என்று எஸ்கேப் ஆவது
10 - பத்து பாயிண்டையும் முழுசா படிச்சிட்டு, இவன் ஏன் இதை தன் பதிவுல இடுகையா போடாம, பின்னூட்டமா​போடுறான்னு நக்கலாக சிரிப்பது - இது பதிவர் தமிழர்களின் பண்பு + சிறப்பு!
டிஸ்கி:
டிஸ்கி என்றால் disclaimer
Disclaimer:
டிஸ்கிளேம(ர்) என்றால் தமிழில் பின்குறிப்பு என்று பொருள்.. ஸோ..
பின்குறிப்பு:
- தயவுசெய்து 10 பாயிண்டையும் படிச்சிட்டு என் கூட சண்டைக்கு வராதீங்க. எனக்கு நிறைய மொக்கை எழுதற கனமான பொறுப்பு இருக்கு. இதை மைனர்குஞ்சுகள் அறக்கட்டளை சார்பா அன்புடன் கேட்டுக்​கொள்கிறேன்!
- ​எதையுமே சீரியஸாவே எடுத்துக்க முடியாது.. அதேமாதிரி எல்லாதையுமே காமடியாவும் எடுத்துக்க முடியாது.. சீரியஸ் காமடியாகிறதும்.. காமடி சீரியஸ் ஆகறதும் இருக்கே.... அதுவே ஒரு ​பெரிய காமடி!
- அன்பு நண்பன் சந்ருவிடம் ​கொண்ட உரிமையில்தான் இந்த மாதிரி அவர் இடுகையில் லந்து பண்ணுகிறேன். சந்ரு இதை பெருசு படுத்தமாட்டார் என்று நம்புகிறேன்.

கிருஷ்ண மூர்த்தி S said...

அட, இங்க ஜெகநாதன் இங்கேபத்து பாயிண்ட் ப்ளஸ் திஸ்கியில எல்லாத்தையும் புட்டுப்புட்டு வச்சு நான் தான் தமிழர், நான் தனித்தமிழர், நானே சூபர் தமிழர் ரேஞ்சுக்குத் தனிச்சு, ஒசரமா நிக்கறார்!

எந்த ஒரு இனத்தையும் குறிப்பிட, அதன் மொழி மொழி சார்ந்த கலாசாரம் தான் அளவீடாக எடுத்துக் கொள்ளப்படுகிறது சந்ரு!மாறிவரும் சூழ்நிலைகளில், இந்தப் பழைய அளவீடு சற்று கேள்விக்குள்ளாயிருக்கிறது, அவ்வளவுதான்!

Post a Comment