மதங்கள் மக்களை நல்வழிப் படுத்திக்கொண்டு இருக்கின்றன. மதங்களுக்கென சில கட்டுப்பாடுகள், நடைமுறைகள், சம்பிரதாயங்கள் என்று இருக்கின்றன. அவற்றை மனிதன் கடைப்பிடிப்பதன் மூலம் நல்வழிப் படுத்தப் படுகிறான்.
தாங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தமக்கு தெரிந்த மந்திரம், தந்திரம், மாயாஜாலம், பொய்ப் பிரச்சாரங்களை எல்லாம் செய்து கொண்டு இருக்கின்றனர். இதனால் இன்று மக்களிடம் இருந்த சமய தத்துவங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவதற்கான காரணங்களாகும்.
அன்று முதல் இன்று வரை மதம் சார்ந்த பல மூட நம்பிக்கைகள் மக்கள் மீது விதைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மூட நம்பிக்கைகள் எதற்காக வந்தது என்பதனை அறியாத பலரும் அதனைப் பின்பற்றி வருவதோடு அதனை எதிர்ப்போரை ஒரு மதத்துக்கு எதிரானவன் என்று சொல்லும் அளவுக்கு சில மூட நம்பிக்கைகளில் மக்கள் நம்பிக்கை வைத்து இருக்கின்றனர்.
கடவுள் இருக்கின்றானா என்ற விவாதத்திலே கருத்துக்களைச் சொன்ன வால்பையன் போன்றோரின் மூட நம்பிக்கை தொடர்பிலான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது. (உடன் கட்டை ஏறுதல் போன்றவை) நானும் ஆரம்பத்தில் சில மூட நம்பிக்கைகளைப் பார்த்தபோது. மதத்தின் மீதுதான் வெறுப்பு வந்தது.
பின்னர் இந்து சமய தத்துவங்களையும், மூட நம்பிக்கைகள் எப்படி தோற்றம் பெற்றன என்று அறிந்தபோதுதான். இந்து மத தத்துவங்களின் ஆழ்ந்த கருத்துக்களை அறிந்து கொண்டேன். இந்து மத தத்துவங்கள் மீதான நம்பிக்கையும் அதிகரித்தது.
உடன் கட்டை ஏறுதல் என்பதனை சிலர் இந்து சமயம் சார்ந்ததாக பார்க்கின்றனர். ஆனால் ஒரு சிலரால் ஆரம்ப காலங்களிலே பரப்பப்பட்ட மூட நம்பிக்கைதான். எல்லோரையும் ஒரு விடயத்தினைப் பின்பற்ற வைக்க வேண்டுமாக இருந்தால் கடவுளைச் சொன்னால் எல்லோரும் கடவுளின் பயத்திலே பின்பற்றி விடுவார்கள். அவ்வாறுதான் மதத்தின் மீது பழியினைப் போட்டு பரப்பப்பட்டவையே இந்த உடன் கட்டை ஏறுதல். இந்து மதத்திலே உடன் கட்டை ஏற வேண்டும் என்று எங்கேயும் சொல்லப்பட்டதாக நான் அறியவில்லை.
இன்று மூட நம்பிக்கை என்று எல்லோரும் அதனை விட்டு விட்டோம். பெண்கள் மட்டும் ஏன் உடன் கட்டை ஏற வேண்டும் என்று சொன்னார்கள் ஆண்களும் உடன் கட்டை ஏறி இருக்கலாம் தானே. இதுதான் அன்று அன்று இருந்த பெண் அடிமையும் ஆண் ஆதிக்கமும்.
அடுத்து ஒரு கழுதைக்கும் மனிதனுக்கும், தவளைக்கும் மனிதனுக்கும் திருமணம் செய்து வைத்தால் நினைத்தவை நடை பெரும் எனறு இந்து மதத்திலே எங்கேயும் சொல்லப்படவில்லை இதுவும் மூட நம்பிக்கை மதங்களின் மீது பழிபோடப்பட்டவையே.
உயிர்களைப் பலிகொடுத்தல் என்பதும் மதத்தின், கடவுளின் மீது பழியைப் போட்டு பரப்பப்பட்ட ஒரு மூட நம்பிக்கைதான் இன்று இது எல்லாம் மூட நம்பிக்கை எனறு தூக்கி எறிந்து விட்டோம்.ஆனால் இன்று சில இடங்களில் பயன் படுத்தப் படுவது வருத்தப் பட வேண்டியதே. இது போன்று பல மூட நம்பிக்கைகளை சொல்லலாம்.
இந்து மதத்தினைத் தவிர ஏனைய மதங்களிலே ஒரு மத போதகராக, ஆசானாக வர வேண்டுமாக இருந்தால் அந்தந்த மதம் சார்பாக படித்து தகுதியானவராக இருக்க வேண்டும். ஆனால் இந்து மதத்தைப் பொறுத்தவரை அப்படி இல்லை இன்று மணியினைக் கையில் எடுத்த எல்லோருமே பூசாரிகளாகவும், குருக்களாகவும் தம்மை மகுடம் சுட்டிக் கொள்கின்றனர். இந்து மதத்தைக் கொல்கின்றனர்.
தேவாரம் என்றால் என்ன என்று தெரியாதோர் கூட இன்று பூசாரிகளாக இருக்கின்றனர். இவர்களாலேயே இந்து மத தத்துவங்களை தவறான முறையிலே மக்களுக்கு பரப்புகின்றனர். இவர்களால் இந்து மதம் மட்டுமல்ல இந்து மதம் தொடர்பாகவும் குருமாருக்கான படிப்புக்களையும் படித்து வந்தவர்களின் பெயரும் பாதிக்கப் படுகின்றது.
இன்று தாங்கள் சுக போக வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக பல ஆசாமிகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் மக்களை பொய்ப் பிரச்சாரங்களின் மூலம் மக்களை தீய வழிகளுக்கு திசை திருப்பிக் கொண்டு இருக்கின்றனர். இவர்களாலும் இந்து சமய தத்துவங்கள் திரிவு படுத்தப் படுகின்றன. கடவுள் அப்படிச் செய்கிறார் இப்படிச் செய்கிறார் என்று தமது மாய, மந்திர, தந்திரங்களால் மக்களை தம் பக்கம் இழுக்கின்றனர். அவர்களது மாய விளையாட்டுக்களும் கடவுள் மீதான அளவுக்கு அதிகமான பிரச்சாரங்களும் பலருக்கு மதத்தின் மீது சந்தேகம் வர ஆரம் பிக்கின்றது. அது மதத்தின், கடவுளின் மீதான நம்பிக்கையை குறைக்கின்றது.
இன்று சமயம் சார்ந்ததாக சொல்லப்படுகின்ற பல நம்பிக்கைகள் சிலரால் மக்கள் மீது திணிக்கப்பட்டு மதத்தின் மீது பழியைப் போடுபவைகளாகவே இருக்கின்றன. ஆனால் உண்மையான இந்து மத தத்துவங்களுக்கு, சம்பிரதாயங்களுக்கு உண்மையான காரணங்கள் இருக்கின்றன. அவை மக்களை நல்வழிப் படுத்துகின்றன.
உங்கள் பிரதேசங்களிலே இருக்கின்ற மூட நம்பிக்கைகள் பற்றியும் பின்னூட்டமிடுங்கள். அவற்றை மற்றவர்களும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
18 comments: on "கடவுளின் பெயரால் கொடுமைகள்."
பொதுவாக எல்லா மதமும் மூட நம்பிக்கையை எதிர்க்கிறது சந்ரு. இப்போதைய தலை முறையில் இன்னும் மூட நம்பிக்கை வளர்கிறது என்றால் அதற்கு வீட்டிலுள்ள மூதாதையர்கள் தான் காரணம்.
http://www.ndtv.com/news/india/doctors_work_together_but_eat_by_caste.பதப்
இதுக்கு என்ன சொல்லப் போறீங்கப்பா??
எதுவும் முடிவுக்கு வரும் என்றே தோனலையே??
-வித்யா
http://www.ndtv.com/news/india/doctors_work_together_but_eat_by_caste.php
அந்த link தவறாக வந்து விட்டது.
:)
march ahead chandru
வணக்கம் சந்திரகுமார்
இந்த மூடநம்பிக்கை எனும் விடயம் எல்லாம் தெளிவாக யோசித்தாலே போதும் இவற்றை உடைக்கமுடியும்.
ஆனால் பெரும்பாலானவர்கள் சிந்திக்க மறந்து யாராவது சொல்வதையே பின்பற்றி பழகிவிட்டோம்
இராஜராஜன்
நெறைய மூடநம்பிக்கை இருக்குங்க. நாத்திகனுக்கு ஆத்திகன் செய்யுற அத்தனை விஷயமுமே மூடநம்பிக்கையா தான் தெரியும். கடவுள வழிபடுரவங்களுக்கு அவங்க அவங்க சிந்தனை அடிப்படையில் மாறுபடும். உடல வருத்திக்காம வழிபட்டா சரி. நேத்து ஒரு செய்தி பார்த்தேன் சாமிக்காக மிளகாய் பொடி குளியல். பாத்தப்ப எரிச்சலுக்கு பதிலா சிரிப்புதான் வந்துச்சு.
சந்ரு எனக்கு இப்ப உடனே ஞாபகம் வாறது...என் அண்ணா வீடு போயிருந்தபோது எல்லோரும் சாபிட்டுக்கொண்டிருந்தோம்.அண்ணாவின் சாப்பாட்டுக்குள் ஒரு நீண்ட தலைமுடி.அண்ணி உடனே அதை அண்ணாவிடவிடமிருந்து வாங்கி மூன்று தரம் எச்சில் துப்பி அண்ணாவின் தலையைச் சுற்றி(தலைமுடியை)எறிந்தா.ஏன் அண்ணி என்று கேட்டேன்.எங்கள் வீட்டில் அம்மா இப்பிடித்தான் செய்வா என்றா.
எல்லோருமே சிரித்துவிட்டோம்.
<<
ஹேமா சொன்னது…
சந்ரு எனக்கு இப்ப உடனே ஞாபகம் வாறது...என் அண்ணா வீடு போயிருந்தபோது எல்லோரும் சாபிட்டுக்கொண்டிருந்தோம்.அண்ணாவின் சாப்பாட்டுக்குள் ஒரு நீண்ட தலைமுடி.அண்ணி உடனே அதை அண்ணாவிடவிடமிருந்து வாங்கி மூன்று தரம் எச்சில் துப்பி அண்ணாவின் தலையைச் சுற்றி(தலைமுடியை)எறிந்தா.ஏன் அண்ணி என்று கேட்டேன்.எங்கள் வீட்டில் அம்மா இப்பிடித்தான் செய்வா என்றா.
எல்லோருமே சிரித்துவிட்டோம்.
>>
ஹிஹி... :)
நல்ல பதிவு சந்ரு. தவறுகள் செய்ய ஆரம்பித்து அதை கடவுளின் பெயரால் நாம்தான் ஆக்கி கொண்டோம். அனைவரும் அன்புடன் இருக்கவும், சரியான வழியில் செல்லவும் மதங்கள் அறிவுருத்துகின்றன... சில பேர் செய்யும் தவறுகளால் கடவுள் குற்றம் சாற்றப்படுகிறார்.
நன்றி.
அருமையான பதிவுங்க
மதங்கள் மக்களை நல்வழிப்படுத்துகிறதோ இல்லையோ, ஆனால், கடவுள் என்ற பெயரா இயற்கை ஒன்றுண்டு என நம்பும் 'ஆன்மிகத்தால்' கண்டிப்பாக மக்களுக்கு நம்பிக்கை உண்டு.
ஆனால், என்ன செய்ய..? மக்களுக்கு மதத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை 'ஆன்மிகம்' மேல் பெரும்பாலும் இருப்பதில்லை..!
//உங்கள் பிரதேசங்களிலே இருக்கின்ற மூட நம்பிக்கைகள் பற்றியும் பின்னூட்டமிடுங்கள். அவற்றை மற்றவர்களும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். //
எங்கள் நாட்டில் மூட நம்பிக்கைக் கொட்டிக் கிடக்கிறது. தனிப் பதிவே எழுதலாம்...! ஆனால், இங்கே உடனே போராட்டம்.. புகார்.. வழக்கு.. என்று கிளம்பிவிடுவார்கள் மதவாதிகள்..!!!
மதங்களில் மூடநம்பிக்கை இல்லைன்னு சொல்றிங்க!
ஆனா மதத்தில் இருப்பதை பற்றி ஒன்றும் சொல்லல!
எதை நீங்க நம்புறிங்களோ அதெல்லாம் உங்களுக்கு நல்ல நம்பிக்கை, எதெல்லாம் பெருவாரியான மக்கள் எதிர்க்கிறாங்களோ அதெல்லாம் மூடநம்பிக்கை! இது தான் மதவாதிகளின் இன்றைய நிலை!
இந்துமதம் ஏன் இந்தியாவில் தோன்ற வேண்டும், ஏன் சீனாவில் தோன்றவில்லை!
இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க அடுத்தடுத்த உரையாடல்களை தொடருவோம்!
//வால்பையன் கூறியது...
மதங்களில் மூடநம்பிக்கை இல்லைன்னு சொல்றிங்க!
ஆனா மதத்தில் இருப்பதை பற்றி ஒன்றும் சொல்லல!//
இந்து மதத்தில் நிறையவே இருக்கின்றன எதனை விடுவது எதனை எடுப்பது என்பதுதான் பிரட்சனை. அத்தனையும் நல்ல கருத்துக்களைச் சொல்கின்றன.
//எதை நீங்க நம்புறிங்களோ அதெல்லாம் உங்களுக்கு நல்ல நம்பிக்கை, எதெல்லாம் பெருவாரியான மக்கள் எதிர்க்கிறாங்களோ அதெல்லாம் மூடநம்பிக்கை! இது தான் மதவாதிகளின் இன்றைய நிலை!//
நாங்கள் எதனை நம்புகின்றோம் அதனால் என்ன நல்ல விடயங்கள் இருக்கின்றது என்று பார்க்கவேண்டும். இன்று அதனை பார்க்காமல் பலர் எல்லாவற்றையும் நம்புவதே மூட நம்பிக்கை
இன்று அதிகமானவர்களால் நம்பப்படுகின்ற பல விடயங்களையும் நான் எதிர்க்கின்றேன். உதாரணமாக ஒரு ஆலயத்துள் செல்லும் பொது ஆண்கள் மேலங்கி கழட்ட வேண்டும்.
//இந்துமதம் ஏன் இந்தியாவில் தோன்ற வேண்டும், ஏன் சீனாவில் தோன்றவில்லை!
இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க அடுத்தடுத்த உரையாடல்களை தொடருவோம்!//
கிறிஸ்தவ மதம் ஏன் இந்தியாவில் தோன்றவில்லை என்று சொல்லுங்கள் அதற்கு நிங்கள் தரும் பதில் உங்களுக்கு நான் தரும் பதிலாக அமையும்.
சில நல்ல விடங்களை நம்புவதற்காக மதத்தின் பெயரால் சொல்லப்பட்டது என்றால் மதமும் அப்படிதானெ,.. இன்றைய சூழலுக்கு மாற்றம் வேண்டும் என்றால் மாற்றிகொண்டால் நல்லதுதானே
நல்ல கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இடுகை வேறு எதுவும் கூறவிருப்பமில்லை வாழ்த்துக்கள் சந்ரு
//நல்ல கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இடுகை வேறு எதுவும் கூறவிருப்பமில்லை வாழ்த்துக்கள் சந்ரு//
வசந்தை நான் வழி மொழிகிறேன்..
உங்கள் கருத்துக்கள் பெரும்பாலானவற்றுடன் நானும் உடன்படுகின்றேன்....
மதம்பற்றி பேசினாலே மதவாதிகள் வரிந்துகட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள்... துணிந்து பேசியுள்ளீர்கள்...
வாழ்த்துக்கள் சந்ரு....
"அந்தப் பள்ளிக்கூடம் மிக மிக நல்லதொரு பள்ளிக்கூடம். கட்டுக்கோப்புக்கள் நிறைந்தது. ஒழுக்கத்திற்கு பேர் பெற்றது.
ஆனால் அந்தப்பள்ளிக்கூடத்தில படிக்கிற மாணவர்களெல்லாம் கேவலங்கெட்டவர்கள், நாதாரிகள்."
பள்ளிக்கூடம் என்பது கட்டடமா...மாணவர்களா சந்ரு?
எங்க வால்பையன் ரொம்ப சாமர்த்தியமாக் கேட்டது:
/இந்துமதம் ஏன் இந்தியாவில் தோன்ற வேண்டும், ஏன் சீனாவில் தோன்றவில்லை!/
நான் சொல்றேன் வால்ஸ்!
அதுக்கு முன்னால, சீனாவுல ஏன் சீனாக்காரங்கலாப் பிறக்கராங்கன்னு சொல்லிடுங்க!
Post a Comment