Thursday, 13 August 2009

நடையில், உடையில் நாகரீகம் சொல்லும் பெண்...


(சும்மா கிறுக்கல்... )
நான் வேலையில்லாதவனென்று
தரகரிடம் சிக்கனமான
பெண் பார்க்கச் சொன்னேன்.
பார்த்துவிட்டார் அதிகம்
சிக்கனமான பெண்ணை
சிக்கனம் உடையில் மட்டுமே...

படித்ததில் பிடித்தது...

கட்டைப் பாவாடை
அணிந்து செல்லும்
குட்டைப் பெண்ணே - நீ
வெட்டை வெளியில்
செல்லும்போது - ஒரு
வெடிப்புச் சத்தம்
கேட்குமென்றால் - உன்
நிலையை என்னிப்பார்
மானம் கெட்டவள் என்று
பிறர் தூற்ற ....
வேணாமடி- இந்த
வெளிநாட்டு மோகம்
வேரோடு சாய்க்கும்
உன் குடும்பத்தையும்......


லொள்ளு....


எனக்கு தரகர் பார்த்த பெண்ணை முதலில் நான் தூரத்தில் நின்றுதான் பார்த்தேன்.

அவளோ என்னைவிட உயரமாக இருந்தாள். நான் அவள் என்னைவிட உயரம் எனக்கு வேண்டாம் என்றேன். தரகர் சொன்னார் அவளின் உயரத்தைக் குறைக்கலாம். அவளின் காலணியை கழட்டி விட்டால் போதும் என்றார்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

77 comments: on "நடையில், உடையில் நாகரீகம் சொல்லும் பெண்..."

Prapa said...

ரொம்ப முக்கியம் ராசா !!!! என்ன பண்ண ....ஒண்ணுமே புரியல உலகத்திலே <<<<<

யோ வொய்ஸ் (யோகா) said...

நல்லா தான் எழுதுறீங்க.. ஏதோ நாங்க பார்க்கிறத ஆப்பு வச்சிடுவீன்களோ?

Admin said...

//பிரபா கூறியது...
ரொம்ப முக்கியம் ராசா !!!! என்ன பண்ண ....ஒண்ணுமே புரியல உலகத்திலே//


ஏதோ ஒன்னு புரிஞ்சிருக்கணுமே...

Admin said...

//யோ (Yoga) கூறியது...
நல்லா தான் எழுதுறீங்க.. ஏதோ நாங்க பார்க்கிறத ஆப்பு வச்சிடுவீன்களோ?//



அடப்பாவி அவனா நீ... (எங்ககிட்ட நீங்க சும்மாவா என்றுமட்டும் கேட்டிடாதிங்க... )

வருகைக்கு நன்றி நண்பா..

S.A. நவாஸுதீன் said...

நான் வேலையில்லாதவனென்று
தரகரிடம் சிக்கனமான
பெண் பார்க்கச் சொன்னேன்.
பார்த்துவிட்டார் அதிகம்
சிக்கனமான பெண்ணை
சிக்கனம் உடையில் மட்டுமே...

நல்ல வேலை நண்பா. அடக்கமான பொண்ணு வேணும்னு சொல்லல நீங்க

Saravanan Trichy said...

சந்ரு...
பொண்ணு சூப்பர்..

நட்புடன் ஜமால் said...

காலணி இல்லாமல் எப்படி வெளியே கூட்டிட்டு போவீங்க

;)

Admin said...

//S.A. நவாஸுதீன் கூறியது...
நான் வேலையில்லாதவனென்று
தரகரிடம் சிக்கனமான
பெண் பார்க்கச் சொன்னேன்.
பார்த்துவிட்டார் அதிகம்
சிக்கனமான பெண்ணை
சிக்கனம் உடையில் மட்டுமே...

நல்ல வேலை நண்பா. அடக்கமான பொண்ணு வேணும்னு சொல்லல நீங்க//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//குட்டி பிரபு கூறியது...
சந்ரு...
பொண்ணு சூப்பர்..//



அடப்பாவி.... நல்ல இரசிகனப்பா நீ.... ஆமா இப்பதான் பார்த்தேன் பொண்ணு ரொம்ப அழகுதான் இல்ல இல்ல அழகா "இருக்கா"

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//நட்புடன் ஜமால் கூறியது...
காலணி இல்லாமல் எப்படி வெளியே கூட்டிட்டு போவீங்க//



ஆஹா நான் அத யோசிக்கலையே... சரி சரி வெளியில கூட்டிக்குப்போக வேற ஒன்ன பார்க்கச் சொல்லுவோமோ (லொள்ளு)

நேசமித்ரன் said...

லொள்ளு நல்லா இருக்குங்க
கவிதையும் ..
:)

சுசி said...

எப்போ சந்ரு கல்யாணம்???

நிலாமதி said...

இது ஷோ கேஸ் இல வைக்க தான் லாயக்கு .குடும்பம் நடத்த உதவாது மகனே காத்திருந்தால் நல்லது கிடைக்குமாம் .நல்லது கிடைக்க வாழ்த்துக்கள்.

Kala said...

கவர்ச்சி பா{வை}ர்வையை மூடி சிலையில் கலையென
நினைத்தால்....கனக்காது மனசு. {இப்படிப் வடிவம் கொடுத்து
புகைப்படம் எடுப்பது அவரவர் சொந்த விருப்பம்}நாம் ஒன்றும்
கூற முடியாது.சந்ரு

kuma36 said...

அந்த பொண்னு படத்தை நான் பாகவே இல்லையே!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னங்க ஆச்சு? கல்யாணம் எப்போ?

யாழினி said...

கவிதையும் கருத்தும் என்னவோ நல்லாத் தான் இருக்கிறது. ஆனால் சந்ருவின் Blog ல் இப் படத்தை காணத் தான் கவலையாக இருக்கிறது. படம் சகிக்கல!

Admin said...

//நேசமித்ரன் கூறியது...
லொள்ளு நல்லா இருக்குங்க
கவிதையும் ..
:)//



வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

Admin said...

//சுசி கூறியது...
எப்போ சந்ரு கல்யாணம்???//


அட அப்படி ஒன்று இருக்கிறதே நான் யோசிக்கவே இல்ல...
யார் அந்த அதிரக் காரியோ...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சுசி...

Admin said...

//நிலாமதி கூறியது...
இது ஷோ கேஸ் இல வைக்க தான் லாயக்கு .குடும்பம் நடத்த உதவாது மகனே காத்திருந்தால் நல்லது கிடைக்குமாம் .நல்லது கிடைக்க வாழ்த்துக்கள்.//



அட கருமமே இத எல்லாம் ஷோ கேஸ் இல வைக்கிறதா....

எத்தன காலம்தான் இருப்பது இப்படியே இருக்கிறது

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

Admin said...

// Kala கூறியது...
கவர்ச்சி பா{வை}ர்வையை மூடி சிலையில் கலையென
நினைத்தால்....கனக்காது மனசு. {இப்படிப் வடிவம் கொடுத்து
புகைப்படம் எடுப்பது அவரவர் சொந்த விருப்பம்}நாம் ஒன்றும்
கூற முடியாது.சந்ரு//


அப்படி என்று சொல்றிங்க....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் Kala

Admin said...

//கலை - இராகலை கூறியது...
அந்த பொண்னு படத்தை நான் பாகவே இல்லையே!!!//



பொண்ணு படம் எங்கே இருக்கிறது....

நம்பித்தமில்ல...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சுப.நற்குணன்,மலேசியா. said...

நல்ல கவிதை..
நல்ல செய்தி..

ஆனா.. அந்தப் படத்தை தவிர்த்திருக்கலாமே..!

இப்படியெல்லாம் படம் போட வேண்டிய தேவை உங்களுக்குக் கண்டிப்பாக இல்லை..!

உங்கள் பதிவுக்கு பலம் உங்கள் எழுத்தும் சிந்தனையும்தான். சந்ருவின் அருமைப் பதிவுகளைப் படிக்கவே பலரும் இருக்கின்றோம்.

இப்படி கொசுறெல்லாம் வேண்டாமே அன்பரே..!

இதுவோர் அன்பான வேண்டுகை மட்டுமே.

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
என்னங்க ஆச்சு? கல்யாணம் எப்போ?//



ஏதோ ஆச்சு...

கல்யாணமா... இப்பதான் நான் சின்னப்பையன் இப்படி எல்லாம் சொல்லக்கூடாது...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

sakthi said...

தரகர் சொன்னார் அவளின் உயரத்தைக் குறைக்கலாம். அவளின் காலணியை கழட்டி விட்டால் போதும் என்றார்.

அது சரி

நன்று

Admin said...

//யாழினி கூறியது...
கவிதையும் கருத்தும் என்னவோ நல்லாத் தான் இருக்கிறது. ஆனால் சந்ருவின் Blog ல் இப் படத்தை காணத் தான் கவலையாக இருக்கிறது. படம் சகிக்கல!//


எனக்கும் சகிக்க முடியல்லதான் கவிதைக்கு பொருத்தமா இருக்கட்டுமே என்றுதான் போட்டேன். இனிமேல் நல்ல பிள்ளையாகவே இருக்கிறேன்.

படத்தினை அகற்றி விடுகிறேன்...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் யாழினி

Admin said...

//சுப.நற்குணன் கூறியது...
நல்ல கவிதை..
நல்ல செய்தி..

ஆனா.. அந்தப் படத்தை தவிர்த்திருக்கலாமே..!

இப்படியெல்லாம் படம் போட வேண்டிய தேவை உங்களுக்குக் கண்டிப்பாக இல்லை..!

உங்கள் பதிவுக்கு பலம் உங்கள் எழுத்தும் சிந்தனையும்தான். சந்ருவின் அருமைப் பதிவுகளைப் படிக்கவே பலரும் இருக்கின்றோம்.

இப்படி கொசுறெல்லாம் வேண்டாமே அன்பரே..!

இதுவோர் அன்பான வேண்டுகை மட்டுமே.//


கவிதைக்கு பொருத்தமாக ஒரு படம் போடலாமே என்றுதான் போட்டேன். என்னாலும் சகிக்க முடியவில்லை. நான் எழுதுவதே உங்களைப்போன்றவர்களின் ஊக்கமும் ஆதரவும், அதெபோல் எனக்கு வருகின்ற மின்னஞ்சல்களுமே ...

இப்போதே ப்படத்தினை அகற்றி விடுகின்றேன். உங்கள் ஆதரவுக்கும் உச்சாகப்படுத்தல்களுக்கும் நன்றிகள்..

Admin said...

//sakthi கூறியது...
தரகர் சொன்னார் அவளின் உயரத்தைக் குறைக்கலாம். அவளின் காலணியை கழட்டி விட்டால் போதும் என்றார்.

அது சரி

நன்று//



வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் சக்தி...

வால்பையன் said...

ஆம்பளைங்க மட்டும் சார்ட்ஸும், டைட்டான ஜீன்ஸும் போட்டு திரியலாமா!?

ஏன் முட்டிக்கு மேல லுங்கி கட்டிட்டு திரியுறானுங்க!?

Admin said...

//வால்பையன் கூறியது...
ஆம்பளைங்க மட்டும் சார்ட்ஸும், டைட்டான ஜீன்ஸும் போட்டு திரியலாமா!?

ஏன் முட்டிக்கு மேல லுங்கி கட்டிட்டு திரியுறானுங்க!?//

அதுசரி... அப்படி என்று சொல்றிங்க....

என்னால தாங்க முடியல்ல....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

வால்பையன் said...

அது அது அவரவர்கள் விருப்பம்!
மேல் நாடுகளில் குறைந்த உடை பெண்கள் உடுத்தியுள்ளதற்காக உலகம் ஒன்றும் அழிந்துவிடவில்லை!

Admin said...

//வால்பையன் கூறியது...
அது அது அவரவர்கள் விருப்பம்!
மேல் நாடுகளில் குறைந்த உடை பெண்கள் உடுத்தியுள்ளதற்காக உலகம் ஒன்றும் அழிந்துவிடவில்லை!//


அப்போ ஆடையின்றி திரியலாமே. அல்லது இலை குழைகளை உடுத்திக்கொண்டு திரியலாமே.

சரி எதற்காக ஆடை அணிகின்றார்கள் என்று சொல்லுங்கள்....

வால்பையன் said...

அதான் அவரவர் விருப்பம் என்று சொல்லிவிட்டேனே!
பிடித்திருக்கிறது அணிகிறார்கள்!
பிடிக்கவில்லையென்றால் கழட்டிவிடுவார்கள்!

Admin said...

//வால்பையன் கூறியது...
அதான் அவரவர் விருப்பம் என்று சொல்லிவிட்டேனே!
பிடித்திருக்கிறது அணிகிறார்கள்!
பிடிக்கவில்லையென்றால் கழட்டிவிடுவார்கள்!//


சரி அவர்கள் விருப்பமாக இருந்தாலும். சமூகத்தோடு ஒன்றி சமுகத்துக்கு சேர்ந்து வாழ வேண்டுமல்லவா . சமூகத்தோடு ஒத்து வாழ வேண்டும். ஒவ்வொரு சமூகத்துக்கும் சில கடப்பாடுகள் இருக்கின்றன. எண்கள் சுதந்திரம் என்று நாங்கள் ஆடையின்றி திரியலாமோ...

வால்பையன் said...

சமூகம் தனக்கு தேவையான மாதிரி சட்டம் வைத்து கொண்டதால் தான் பல சிந்தனையாளர்கள் கல்லால் அடித்து கொள்ளப்பட்டார்கள்!

சமூகம் என்பது மனிதர்கள் சேர்ந்தது தான்! உங்களுக்கு விருப்பமாக கூட இருக்கலாம், ஆனால் நாலு பேர் என்ன சொல்வாங்கன்னு நினைச்சு உங்கள் விருப்பத்தை மறைத்து விடுவீர்கள்!
அப்படிபட்டவர்களுக்கு இம்மாதிரி சுதந்திர ஜனங்களை கண்டால் கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கும்!

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
சமூகம் தனக்கு தேவையான மாதிரி சட்டம் வைத்து கொண்டதால் தான் பல சிந்தனையாளர்கள் கல்லால் அடித்து கொள்ளப்பட்டார்கள்!

சமூகம் என்பது மனிதர்கள் சேர்ந்தது தான்! உங்களுக்கு விருப்பமாக கூட இருக்கலாம், ஆனால் நாலு பேர் என்ன சொல்வாங்கன்னு நினைச்சு உங்கள் விருப்பத்தை மறைத்து விடுவீர்கள்!
அப்படிபட்டவர்களுக்கு இம்மாதிரி சுதந்திர ஜனங்களை கண்டால் கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கும்!//



சுதந்திரம் என்று ஒன்று இருக்கின்றது இருந்தாலும் சில சமுக கடப்பாடுகள் இருக்கின்றன. ஒரு சமுகம் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த சமுகத்துக்கென சில வரையறைகள் சட்டங்கள் இருக்கத்தான் வேண்டும் இல்லை என்றால் பகுத்தறிவு படைத்த மனிதனாக அன்றி விலங்குகள் போல்தான் கட்டுப்பாடு இன்றித்திரிய வேண்டி வரும்.

வால்பையன் said...

விலங்களிலிருந்து வித்திசாயப்படுகிறேன் என்ற பெயிரில், விலங்குகளை அழிப்பதை தவிர நாம் ஒன்றும் செய்ததாக தெரியவில்லை!

உடை என்பது அவரவர் விருப்பம், அதில் சமூகம் தலையிடுமேயானால் அது தனி மனித சுதந்திரத்தை பாதிப்பதாகும்! நான் என்ன செய்ய வேண்டும் என நான் தான் தீர்மானிக்க வேண்டும்! சமூகமல்ல!

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
விலங்களிலிருந்து வித்திசாயப்படுகிறேன் என்ற பெயிரில், விலங்குகளை அழிப்பதை தவிர நாம் ஒன்றும் செய்ததாக தெரியவில்லை!

உடை என்பது அவரவர் விருப்பம், அதில் சமூகம் தலையிடுமேயானால் அது தனி மனித சுதந்திரத்தை பாதிப்பதாகும்! நான் என்ன செய்ய வேண்டும் என நான் தான் தீர்மானிக்க வேண்டும்! சமூகமல்ல!//


மனிதன் எவ்வளவோ வேலை செய்கிறான். ஏன் எந்த வேலையும் செய்கிறான் இல்லை என்று சொல்லாதிங்க நாங்கள் வலைப்பதிவு வைத்து விவாதிக்கிறோம் என்றால் அதுவும் மனிதனால்தான் கண்டு பிடிக்கப்பட்டது. எத்தனை கண்டுபிடிப்புக்களை செய்து கொண்டு இருக்கிறான்.

எங்களுக்கு உடையில் தெரிவு இருக்கலாம் சுதந்திரம் இருக்கலாம் ஆனால் தமிழருக்கென்று சில கலாசாரங்கள் இருக்கின்றன அவற்றை கடைப்பிடிக்க வேண்டும். என் சுதந்திரம் என்று நான் உடை இன்றி வீதியால் போகலாமா

வால்பையன் said...

//தமிழருக்கென்று சில கலாசாரங்கள் இருக்கின்றன அவற்றை கடைப்பிடிக்க வேண்டும். என் சுதந்திரம் என்று நான் உடை இன்றி வீதியால் போகலாமா //

கலாச்சாரத்தை நீங்க கட்டி காப்பாத்துங்க! சுதந்திரமா போறவங்களை அசிங்கப்படுத்தாதிங்க! உங்களை பிடிக்கலைன்னா ஏன் பார்க்குறிங்க!

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
//தமிழருக்கென்று சில கலாசாரங்கள் இருக்கின்றன அவற்றை கடைப்பிடிக்க வேண்டும். என் சுதந்திரம் என்று நான் உடை இன்றி வீதியால் போகலாமா //

கலாச்சாரத்தை நீங்க கட்டி காப்பாத்துங்க! சுதந்திரமா போறவங்களை அசிங்கப்படுத்தாதிங்க! உங்களை பிடிக்கலைன்னா ஏன் பார்க்குறிங்க!//


தமிழருக்கு மட்டுமல்ல எல்லா இன மத மொழி சார்ந்தவர்களுக்கும் தனித்தனிக் கலாசாரம் இருக்கிறது அதனை கட்டிக்காக்க வேண்டியது அவங்க அவங்க பொறுப்பு.

சரி உங்க சுதந்திரம் என்று நீங்க வீதியில உடை இல்லாம போவிங்களா. எதற்காக உடை அணியிறிங்க உடை இல்லாமல் திரியலாமே. ஆதிகாலத்தில உடை இல்லாமல்தான் இருந்தார்கள் அதுதான் நானும் திரிகிறேன் என்று சொல்லலாமே. அப்போ ஏன் உடை உடுத்துறிங்க...

Saravanan Trichy said...

தல..என்ன இது? காலைல தானே பொண்ணு சூப்பர்-நு சொன்னேன்! அதுக்குள்ள மாத்திடிங்க! அந்த பொண்ணாவது கொஞ்சம் துணி போட்டு இருந்துச்சு...இந்த பட்டாம்பூச்சி ஒட்டு துணி கூட இல்லாம நிக்குதே !
நான் சொன்னேங்குரதுக்காக இந்த போட்டோவையும் தூக்கிராதிங்க !

வால்பையன் said...

//ஏன் உடை உடுத்துறிங்க... //

என்ன ஒரு ஆதிக்க சிந்தனை!
முதலில் தாம் செய்வது தான் சரி என்ற ஆதிக்க சிந்தனையை களையுங்கள்!

கலாச்சாரம் ஒரு அடையாளம் மட்டுமே! அதை கட்டி காப்பாற்றிய தமிழ்க கலைஞர்கள் இன்னைக்கு சோத்துக்கு வழியில்லாம திரியுறாங்க!

பழையன கழிதலும், புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம், கலாச்சாரம் என்ப்தற்காக யாரும் இன்று காளையை அடக்கி பெண் கட்டுவதில்லை!

துணியில்லாமல் நான் போவேன்! ஆனா யாரும் உயிரோட இருக்கமாட்டாங்க அதான் பாவம்னு விட்டு வைக்கிறேன்!

:)

சுப.நற்குணன்,மலேசியா. said...

//உடை என்பது அவரவர் விருப்பம், அதில் சமூகம் தலையிடுமேயானால் அது தனி மனித சுதந்திரத்தை பாதிப்பதாகும்!//

அவரவர் விருப்பம் என்பது சரிதான். ஆனால், எங்கு - எப்போது - எதற்கு - எந்த உடை என்று ஒரு நாகரிகத்தையே, ஆடையின்றி அலைய விரும்பும் அதே மேலையன்தான் கற்றுக்கொடுத்துள்ளான்.

//நான் என்ன செய்ய வேண்டும் என நான் தான் தீர்மானிக்க வேண்டும்! சமூகமல்ல!//

மிக்க சரி. அப்படி தீர்மானிப்பது சமூகத்தைப் பாதிப்பதாக - குலைப்பதாக இருந்தால் எப்படி?

சாலையில் எதிர்திசையில் செல்ல என் விருப்பப்படி நான் தீர்மானிக்கலாம். ஆனால் விபத்து நடந்தால் சாகப் போவது நான் மட்டுமாக இருந்தால் தாழ்வில்லை. என்னால் மோதூண்டவன் கதி...???

சந்ரு said...

//குட்டி பிரபு கூறியது...
தல..என்ன இது? காலைல தானே பொண்ணு சூப்பர்-நு சொன்னேன்! அதுக்குள்ள மாத்திடிங்க! அந்த பொண்ணாவது கொஞ்சம் துணி போட்டு இருந்துச்சு...இந்த பட்டாம்பூச்சி ஒட்டு துணி கூட இல்லாம நிக்குதே !
நான் சொன்னேங்குரதுக்காக இந்த போட்டோவையும் தூக்கிராதிங்க !//


ஒருத்தன் சந்தோசமா இருக்கிறது மனுசங்களுக்கு பிடிக்காதே... நீங்க அந்த படத்த பார்த்து சந்தொசப்படுறத பார்த்தா எனக்கு பொறாமை வந்துடிச்சு...

வால்பையன் said...

சினிமாவில் அரைநிர்வாணமாக வருவதை ரசிக்கும் அதே ஆண்கள் தான் வெளியில் கலாச்சாரத்தை பற்றி பெரிதும் வருத்தப்படுகிறார்கள்!

நம் வாழ்க்கை தான் நாம் வாழ்வதற்கு!, அடுத்தவர் எப்படி வாழ வேண்டுமென்று சொல்ல நாம் யார்!?

வால்பையன் said...

/எந்த உடை என்று ஒரு நாகரிகத்தையே, ஆடையின்றி அலைய விரும்பும் அதே மேலையன்தான் கற்றுக்கொடுத்துள்ளான்.//

மேலையனும் கிடையாது கீழையனும் கிடையாது! தமிழக்த்திலேயே மேல் ஆடை இல்லாமல் வாழ்ந்த மக்கலீன் சரித்திரம் இருக்கிறது, ஆனால் பாருங்கள் அப்போதெல்லாம் பெண்களுக்கு எதிரான வன் கொடுமை இல்லை! ஆனால் இப்போது!

தனிமனித சுதந்திரம் என்பது நம் வரையில் தான். அது அடுத்தவ்ரை பாதிக்குமானால் அவரது சுதந்திரத்தை பாதிப்பதாகும்! ஆனால் உடை ஒரு மனிதரின் சுதந்திரத்தை பாதிக்கும் என்பது நம் மன வக்கிரங்களை பொறுத்தது!

சிலையை கண்டால் கூட தான் சிலருக்கு சிலிர்த்துக்குது!

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
//ஏன் உடை உடுத்துறிங்க... //

என்ன ஒரு ஆதிக்க சிந்தனை!
முதலில் தாம் செய்வது தான் சரி என்ற ஆதிக்க சிந்தனையை களையுங்கள்!

கலாச்சாரம் ஒரு அடையாளம் மட்டுமே! அதை கட்டி காப்பாற்றிய தமிழ்க கலைஞர்கள் இன்னைக்கு சோத்துக்கு வழியில்லாம திரியுறாங்க!

பழையன கழிதலும், புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம், கலாச்சாரம் என்ப்தற்காக யாரும் இன்று காளையை அடக்கி பெண் கட்டுவதில்லை!

துணியில்லாமல் நான் போவேன்! ஆனா யாரும் உயிரோட இருக்கமாட்டாங்க அதான் பாவம்னு விட்டு வைக்கிறேன்!//



இது ஆதிக்க சிந்தனை அல்ல ஒரு இனத்தின் கலாசார விளுமயங்கள். கலாசாரங்கள் கட்டிக்காக்கப்படாத்தனால்தான் இன்று அரைகுறை ஆடையோடு அலைகின்றனர். யாரால் இன்று இந்த நிலை சமுக சீர் கேடுகள் அந்தந்த சமுகங்களுக்குரிய கலாசார விளுமயங்களை கடைப்பிடிக்காத ஒரு சிலராலேயே.

கலாசாரம் ஒரு சமுகத்தின் அடையாளம் அதனைக் கட்டிக்காக்க வேண்டியது பகுத்தறிவுள்ள ஒரு மனிதனின் பொறுப்பு.

நந்தா said...

சந்ரு, கொஞ்சம் விட்டால் கலாச்சாரக் காவலர் ஆகி விடக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றது. சரி உடை மேட்டரை விடுங்க. ஒரு பொண்ணு ஹை ஹீல்ஸ் போட்டா உங்களுக்கு என்ன வந்துடுது. அது என்ன அவ்வளாவு பெரிய்ய குற்றமா? ஆண்களுக்கான "வுட்லாண்ட்ஸ்" ஷூக்கள் பலவற்றை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? நம்மில் எவரேனும் அத்தகைய ஷூக்களை விரும்பும் போதோ, அணியும் போதோ கொஞ்சமேனும் கலாச்சாரம் என்றோ, இது தப்புன்னோ நினைச்சிருப்போமா? அது என்ன பெண்கள்னா மட்டும் கலாச்சாரம் வந்து நிக்குது?

சரி கல்யாணம் செய்யும் போது ஆண்தான் உயரமானவனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாய எதிர்பார்ப்பு எதற்கு? எந்த ஒரு விஷயத்திலும் பெண் ஆணிற்கு தாழ்ந்துதான் போக வேண்டும் என்ற கருத்தாக்கமா?

வால்பையன் said...

நந்தாவுக்கு நன்றி!
கொஞ்ச நேரம் மல்லுகட்டுங்க!
நான் இன்னும் சில நண்பர்களுக்கு பின்னூட்டம் போட்டுட்டு வர்றேன்!

சுப.நற்குணன்,மலேசியா. said...

//சிலையை கண்டால் கூட தான் சிலருக்கு சிலிர்த்துக்குது!//
இப்படி கேட்டவர்..

//முதலில் தாம் செய்வது தான் சரி என்ற ஆதிக்க சிந்தனையை களையுங்கள்!//
இப்படி பதில் சொல்லிவிட்டார்!

அப்புறம் இப்படி கேட்டார்..
////உடை என்பது அவரவர் விருப்பம், அதில் சமூகம் தலையிடுமேயானால் அது தனி மனித சுதந்திரத்தை பாதிப்பதாகும்!//

இப்படி பதில் சொல்கிறார்..
//தனிமனித சுதந்திரம் என்பது நம் வரையில் தான். அது அடுத்தவ்ரை பாதிக்குமானால் அவரது சுதந்திரத்தை பாதிப்பதாகும்! //

இப்படி ஒரு ஆட்டத்துக்கு நான் வரலேங்கோ..!!

சந்ரு said...

நான் பெண்களை அடிமைபடுத்த சொல்லவில்லையே... நான் மேல் நாட்டுக் கலாச்சாரம் பற்றித்தான் சொல்கிறேன். இப்படி எல்லோரும் சொல்வதனால்தான் தமிழர் கலாச்சாரம் மறைந்து விட்டது. என் கலாசாரத்தை பாது காக்கவேண்டியது என் பொறுப்பு.

என் கலாசாரத்தை பாது காக்க நான் கலாசார காவலனாய் மாறுவதில் என்ன தப்பு இருக்கிறது...

வால்பையன் said...

சற்குணம் அண்ணே!
எல்லாம் நான் சொன்னது தான், என்ன முரண்பாடு கண்டீர்கள்னு விளக்கமா சொல்லுங்க!

சந்ரு said...

////சுப.நற்குணன் கூறியது...
//சிலையை கண்டால் கூட தான் சிலருக்கு சிலிர்த்துக்குது!//
இப்படி கேட்டவர்..

//முதலில் தாம் செய்வது தான் சரி என்ற ஆதிக்க சிந்தனையை களையுங்கள்!//
இப்படி பதில் சொல்லிவிட்டார்!

அப்புறம் இப்படி கேட்டார்..
////உடை என்பது அவரவர் விருப்பம், அதில் சமூகம் தலையிடுமேயானால் அது தனி மனித சுதந்திரத்தை பாதிப்பதாகும்!//

இப்படி பதில் சொல்கிறார்..
//தனிமனித சுதந்திரம் என்பது நம் வரையில் தான். அது அடுத்தவ்ரை பாதிக்குமானால் அவரது சுதந்திரத்தை பாதிப்பதாகும்! //

இப்படி ஒரு ஆட்டத்துக்கு நான் வரலேங்கோ..!!///


உண்மைதான் நண்பரே இது ஒரு வேண்டப்படாத வாதமாகவே இருக்கிறது... இந்த இடத்தில் இது போருந்தக்கூடிய வாதமல்ல வேண்டுமானால் தனியாக இதனை ஒரு தலைப்பாக எடுத்து தனி ஒரு இடுகையிலே விவாதிக்கலாம்.

வால்பையன் said...

ஒகே சந்ரு,
ட்ரெஸ்சோட ஏன் விட்டுடிங்க!

இன்னும் அதை செய்யகூடாது, இதைசெய்யகூடாதுன்னு கூட்டமா போய் மிரட்டுங்க!

தப்பி தவறி எந்த ஆணையும் கேள்வி கேட்றாதிங்க! திருப்பி அடிச்சிபுடுவான்!
பெண் தானே நாட்டில் என்றும் ஏமாளி!

சந்ரு said...

அட பாவிங்களா... நான் எல்லா பெண்ணையும் சொல்லவில்லை... நாகரீக மோகம் பிடித்து நாயாய் அலையும் பெண்களைத்தான் சொன்னேன்.

வால்பையன் said...

//நாகரீக மோகம் பிடித்து நாயாய் அலையும் பெண்களைத்தான் சொன்னேன். //

அது என்ன நாயாய்!

நீங்க இப்போ பேண்ட் சர்ட் போட்ருங்கிங்களா?
அது தமிழர் உடையா!? அபோ நீங்க!?

ஏனய்யா ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுங்க ஒரு சட்டம்!

சுப.நற்குணன்,மலேசியா. said...

//சிலையை கண்டால் கூட தான் சிலருக்கு சிலிர்த்துக்குது!//

இதை உங்கள் ஆதிக்க சிந்தனை எனச் சொல்லலாமா?

சமூகம் தலையிட்டால் தனிமனிதசுதந்திரத்தைப் பாதிக்கும் என்று முதலில் சமூகத்தைக் குறை சொல்லிவிட்டு.. பிறகு

////தனிமனித சுதந்திரம் என்பது நம் வரையில் தான். அது அடுத்தவ்ரை பாதிக்குமானால் அவரது சுதந்திரத்தை பாதிப்பதாகும்! //

என்று தனிமனிதனையும் குறை சொல்கீறீர்களே.. அதைத்தான் சொன்னேன் தம்பீ...!

வால்பையன் said...

////சிலையை கண்டால் கூட தான் சிலருக்கு சிலிர்த்துக்குது!//

இதை உங்கள் ஆதிக்க சிந்தனை எனச் சொல்லலாமா?//

அதற்காக சிலைக்கும் துணி போட சொல்விங்களா என்ற கேள்வியை பின் வைத்திருக்கிறேன்! புரிதலில் வரும் அது!



//சமூகம் தலையிட்டால் தனிமனிதசுதந்திரத்தைப் பாதிக்கும் என்று முதலில் சமூகத்தைக் குறை சொல்லிவிட்டு.. பிறகு

////தனிமனித சுதந்திரம் என்பது நம் வரையில் தான். அது அடுத்தவ்ரை பாதிக்குமானால் அவரது சுதந்திரத்தை பாதிப்பதாகும்! //

என்று தனிமனிதனையும் குறை சொல்கீறீர்களே.. அதைத்தான் சொன்னேன் தம்பீ...! //


உடை என்பது எந்த வகையில் தனிமனித சுதந்திரத்தை பாதிக்குனு தெரியல!
ஒருத்தன் என் சுதந்திரங்குற பேர்ல சுருட்டை வாய்ல வச்சிகிட்டு ஊதுறது தப்பு, ஏன்னா அதனால் இன்னொருத்தன் பாதிப்படையிறான், ஆனால் உடை என்ன பண்ணுச்சு!

சுதந்திரம்னா நீங்க இப்படி தான் யோசிப்பிங்களா?

சந்ரு நிர்வாணமா போன்னு சொன்ன மாதிரி!
எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிங்க!நல்லது!

சந்ரு said...

அதைத்தான் கேட்கிறேன் உங்களின் சுதந்திரம் என்று நீங்கள் உடை இன்றி போகலாம்தானே. ஏன் போக மறுக்கின்றீர்கள் காரணத்தை சொல்லுங்கள்...

Saravanan Trichy said...

சந்ரு.. தமிழ் கலாச்சாரப்படி பொண்ணுங்க ரவிக்கை போடக்கூடாதாமே !
உண்மையா?

Anonymous said...

இந்த மொக்கைக்கு இத்தனை பின்னூட்டமா ?

நாட்டில் ரொம்பப் பேருக்கு வேலை வெட்டியில்லை ன்னு தோனுது

சந்ரு said...

//பெயரில்லா கூறியது...
இந்த மொக்கைக்கு இத்தனை பின்னூட்டமா ?

நாட்டில் ரொம்பப் பேருக்கு வேலை வெட்டியில்லை ன்னு தோனுது//


மொக்கையாக இருந்தாலும் பின்னூட்டத்திலே என்ன பேசப்படுகிறது என்பதுதான் முக்கியம்....

எவரும் வேலை வட்டி இல்லாதவங்க இல்லை.....

முதல்ல உங்களுக்கு ஒரு பெயர் வையுங்க... உங்கள யார் என்று அடையாளப்படுத்துங்க. நல்ல விடயங்களா பேசுற எவரும் தன்னை யாரெண்டு அடையாளப்படுத்தாம விடமாட்டான்.

முதல்ல நீங்க ஒரு மனோதத்துவ வைத்தியரை நாடுவது நல்லது...

வால்பையன் said...

//உங்களின் சுதந்திரம் என்று நீங்கள் உடை இன்றி போகலாம்தானே.//

போலாம் தானே, வரலாம் தானேன்னு நீங்கள் ஆர்டர் போடக்கூடாது!
அது அது அவனவன் இஷ்டம்!
கலாச்சார போலிஸாய் ஜல்லியடிப்பது உங்கள் இஷ்டம்!
அவரவர் விருப்பதுக்கு மதிப்பளிப்பது என் இஷ்டம்!

வால்பையன் said...

//முதல்ல உங்களுக்கு ஒரு பெயர் வையுங்க... உங்கள யார் என்று அடையாளப்படுத்துங்க. நல்ல விடயங்களா பேசுற எவரும் தன்னை யாரெண்டு அடையாளப்படுத்தாம விடமாட்டான்.

முதல்ல நீங்க ஒரு மனோதத்துவ வைத்தியரை நாடுவது நல்லது... //


அனானியாக் வந்திருந்தாலும் அவர் ஒன்றும் பெரிதாக யாரையும் காயப்படுத்தவில்லையே! ஏன் உங்களுக்கு இம்புட்டு டென்ஷன்!

ஐடியோடு வந்து தவறாக பேசினால் ஏத்துகுவிங்களா!?

உங்களுக்கு என்ன பிரச்சனை சந்ரு!?

சந்ரு said...

//வால்பையன் கூறியது...

அனானியாக் வந்திருந்தாலும் அவர் ஒன்றும் பெரிதாக யாரையும் காயப்படுத்தவில்லையே! ஏன் உங்களுக்கு இம்புட்டு டென்ஷன்!

ஐடியோடு வந்து தவறாக பேசினால் ஏத்துகுவிங்களா!?

உங்களுக்கு என்ன பிரச்சனை சந்ரு!?//


இவர் அனானியாக வருவதுதான் பிரட்சனையே... எனது பழைய இடுகைகளுக்கு அனானியால் வழங்கப் பட்டிருக்கும் பினூட்டந்கலைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்....

இதுவும் அனானியின் கருத்துரைதான்

//பெயரில்லா கூறியது...
இதெல்லாம் ஒரு பகிடி என்று நினைக்கிறீர்களோ? வன்னிக்காம்பிலே இருக்கிற சனத்திட்டை இதைப் பகிடி என்று சொல்லிப் பாரும். மனச்சாட்சி இருக்குதா உமக்கெல்லாம்? உங்களை எல்லாம் வெள்ளைவானிலை உண்மையிலையே கடத்திக்கொண்டு போய்வச்சால் மட்டுமே நக்கலும் நளினமும் வெளிக்கும்.

கேட்டால் கொழும்பிலையிருந்து கூவுறம் என்று பாதுகாப்புமட்டும் பேசுவியள். குறைஞ்சது மனுசத்தன்மையோட இப்பிடியான குரங்காட்டங்களை மொக்கை மொன்னை என்று போடாமல் இருந்தாலே பெரிசு.///

ஒருத்தர் ஒரு மொக்கைப் பதிவிட்டால் அதை வைத்து அவரை மதிப்பிட முடியாது அவரது ஏனைய பதிவுகளையும் பார்க்க வேண்டும்.

மொத்தத்தில் தொல்லையே இந்த அனாநியால்தான். நல்ல கருத்துக்களை சொல்பவராக இருந்தால் தனது பெயரைக் குறிப்பிடலாம்தானே.

வால்பையன் said...

நேரா ப்ளாக்கர் டாஷ்போர்டு போங்க!
செட்டிங்ஸ்ல போனா கீழே கமெண்ட்ஸ்னு ஒரு ஆப்சன் இருக்கும், அதை கிளிக் பண்ணுங்க,

Anyone - includes Anonymous Users
Registered Users - includes OpenID
Users with Google Accounts
Only members of this blog

இந்த நாலு ஆப்சன்ல மூணாவதாஇருக்குறதை கிளிக் பண்ணா யாரும் உங்களுக்கு அனானி கமெண்ட் போடமுடியாது!

விருப்பமிருந்தால் மாற்றி கொள்ளலாம்!

நந்தா said...

சந்ரு நான் கேட்ட மற்ற ஓர் கேள்விக்கு பதில் இல்லை. அதற்கும் பதிலை எதிர் பார்க்கிறேன்.

சரி ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அறிவுரை கொடுக்க உங்களுக்கு யார் உரிமைகளை கொடுத்தது? இப்படியே தமிழ் கலாச்சாரம்தான் என்று சொல்லி அரதக் கிராமத்திலிருக்கும் ஒரு பெண் வேறு சில கட்டளைகளை இடும் போது நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா?

சரி இதுதான் தமிழ் கலாச்சாரம் என்று சொல்லி காலத்திற்கும் அழியாத ஒரு சில வழமைகளை பட்டியலிடுங்களேன் பார்க்கலாம். நாம் இருக்கும் காலத்திலிருந்து 50 வருடங்கள் கூட இல்லாமல் பெண்கள் தோள்: சீலை போடக்கூடாது என்பதுதான் ஆதிக்க வாதிகளின் தமிழ் கலாச்சாரமாய் இருந்து வந்தது. தேவதாசிகள் முறை என்பது கூட அப்படிப்பட்ட ஓர் கலாச்சாரக் குறியீடாய்தான் இருந்திருக்கின்றது.

சரி அதை விடுங்கள் உங்களாது கலாச்சாரத்தை காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் நீங்கள் அதற்காய் கலாச்சாரக் காவலர் கூட ஆவேன் என்று அறவே குற்ற உணர்வை அடையாத நீங்கள் டீ-ஷர்ட், ஜீன்ஸ், ஏன் சாதாரண பேண்டு வகைகளை தவிர்த்து விட்டு வெறுமனே வேட்டி சட்டையுடன் மட்டுமே இனிமே இருப்பேன் என்று உறுதி கொள்கிறீர்களா?

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
நேரா ப்ளாக்கர் டாஷ்போர்டு போங்க!
செட்டிங்ஸ்ல போனா கீழே கமெண்ட்ஸ்னு ஒரு ஆப்சன் இருக்கும், அதை கிளிக் பண்ணுங்க,

Anyone - includes Anonymous Users
Registered Users - includes OpenID
Users with Google Accounts
Only members of this blog

இந்த நாலு ஆப்சன்ல மூணாவதாஇருக்குறதை கிளிக் பண்ணா யாரும் உங்களுக்கு அனானி கமெண்ட் போடமுடியாது!

விருப்பமிருந்தால் மாற்றி கொள்ளலாம்!//


தெரியும் தல ஆனாலும் பலர் ஐடி இல்லாமல் வந்து தங்களில் பெயரைச் போட்டு நல்ல கருத்துக்களும் சொல்பவர்களும் இருக்கிறார்களே. எனது எல்லா இடுகைகளுக்கும் ஐடி இல்லாமல் தனது பெயரைப் போட்டு பினூட்டமிடுபவர்களைப் பற்றி யோசிக்க வேண்டும்.

நாகரிகமற்ற பெயரில்லாத ஒருவர் எனக்கு பின்னூட்டமிட்டு என்னை தொல்லைப்படுத்துவதட்கென்றே இருக்கின்றார்

நந்தா said...

சரி அதை விடுங்கள் உங்களாது கலாச்சாரத்தை காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் நீங்கள் அதற்காய் கலாச்சாரக் காவலர் கூட ஆவேன் என்று அறவே குற்ற உணர்வை அடையாத நீங்கள் டீ-ஷர்ட், ஜீன்ஸ், ஏன் சாதாரண பேண்டு வகைகளை தவிர்த்து விட்டு வெறுமனே வேட்டி சட்டையுடன் மட்டுமே இனிமே இருப்பேன் என்று உறுதி கொள்கிறீர்களா?

அதைவிட முக்கியமாய் ஆண்கள் இப்ப்டைத்தான் இருக்கணும்னு பொதுவில வையுங்களேன். பிரிச்சு மேய்ஞ்சுடுவானுங்க. ஆனா பொம்பளை புள்ளைங்களாஇ கட்டாயப்படுத்தும் போது அதே கூட்டத்திற்கு கொஞ்சம் கூட குற்ற உணர்வே ஏற்படுவதில்லை.

வால்பையன் said...

நல்ல கருத்து சொல்றவங்களும் இருக்காங்கன்னு உங்களுக்கே தெரியுது! ஆனா பழைய போஸ்ட்ல கமெண்ட் போட்ட அனானியும், இந்த அனானியும் வேறு வேறுன்னு ஏன் பார்க்க முடியல!

மருத்துவரை பார்க்க சொன்னது கொஞ்சம் ஓவர் தானே!

சந்ரு said...

// நந்தா கூறியது...
சந்ரு நான் கேட்ட மற்ற ஓர் கேள்விக்கு பதில் இல்லை. அதற்கும் பதிலை எதிர் பார்க்கிறேன்.

சரி ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அறிவுரை கொடுக்க உங்களுக்கு யார் உரிமைகளை கொடுத்தது? இப்படியே தமிழ் கலாச்சாரம்தான் என்று சொல்லி அரதக் கிராமத்திலிருக்கும் ஒரு பெண் வேறு சில கட்டளைகளை இடும் போது நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா?

சரி இதுதான் தமிழ் கலாச்சாரம் என்று சொல்லி காலத்திற்கும் அழியாத ஒரு சில வழமைகளை பட்டியலிடுங்களேன் பார்க்கலாம். நாம் இருக்கும் காலத்திலிருந்து 50 வருடங்கள் கூட இல்லாமல் பெண்கள் தோள்: சீலை போடக்கூடாது என்பதுதான் ஆதிக்க வாதிகளின் தமிழ் கலாச்சாரமாய் இருந்து வந்தது. தேவதாசிகள் முறை என்பது கூட அப்படிப்பட்ட ஓர் கலாச்சாரக் குறியீடாய்தான் இருந்திருக்கின்றது.

சரி அதை விடுங்கள் உங்களாது கலாச்சாரத்தை காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் நீங்கள் அதற்காய் கலாச்சாரக் காவலர் கூட ஆவேன் என்று அறவே குற்ற உணர்வை அடையாத நீங்கள் டீ-ஷர்ட், ஜீன்ஸ், ஏன் சாதாரண பேண்டு வகைகளை தவிர்த்து விட்டு வெறுமனே வேட்டி சட்டையுடன் மட்டுமே இனிமே இருப்பேன் என்று உறுதி கொள்கிறீர்களா?//


நான் முற்று முழுதாக மேல் நாட்டு நாகரீகங்களை எதிர்க்கவில்லையே. எங்கே எதிர்க்கும்படி சொல்லி இருக்கிறேன். நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்பதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள்... உங்களுக்குரிய விளக்கங்கள் எனது அடுத்த பதிவிலே காத்திருக்கின்றது...

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
நல்ல கருத்து சொல்றவங்களும் இருக்காங்கன்னு உங்களுக்கே தெரியுது! ஆனா பழைய போஸ்ட்ல கமெண்ட் போட்ட அனானியும், இந்த அனானியும் வேறு வேறுன்னு ஏன் பார்க்க முடியல!

மருத்துவரை பார்க்க சொன்னது கொஞ்சம் ஓவர் தானே!//


அவர் இங்கே சொல்லி இருப்பது என்ன...


//பெயரில்லா கூறியது...
இந்த மொக்கைக்கு இத்தனை பின்னூட்டமா ?

நாட்டில் ரொம்பப் பேருக்கு வேலை வெட்டியில்லை ன்னு தோனுது//

இங்கே நாம் வேலை வெட்டியில்லாமலா இருக்கின்றோம். அப்பபோ எனது இந்த இடுகைக்கு பின்னூட்டமிட்டவர்கள் எல்லோரும் வேலை வெட்டி இல்லாதவங்க என்று நீங்கள் சொல்றிங்களா.

அவர் சொல்லவேண்டிய விதத்திலே சொல்லி இருக்க வேண்டும்...

வால்பையன் said...

அதை நகைச்சுவை உணர்வுடன் பார்க்க முடியவில்லையென்றால் உங்கள் பார்வையில் தான் எதோ கோளாறுன்னு அர்த்தம்!

நானெல்லாம் அதை விட பயங்கர கலாச்சிருக்கேன்!

உதாரணத்துக்கு ஒருவர் “இங்கே வந்து மொக்கை போட வேணாம்” என்றதற்கு,

நான் போடுவது மொக்கை என்றால் நீங்கள் போடுவது புழுக்கையா என்றேன்!

காமெடியை ரசியுங்கள், எப்போதும் டென்ஷனாவே இருக்காதிங்க!

Admin said...

இல்லை தல நானும் நகைசுவையாகத்தான் ஆரம்பத்தில் பதிலளித்தேன். ஆனால் அவரது அட்டகாசங்கள் தாங்க முடியவில்லை. நான் வேறு ஒரு வலைப்பதிவுக்கு பின்னூட்டமிட்டால் அவர் என் பின்னூட்டத்துக்கு கீழே என்னைப் பற்றி தேவை இல்லாத விடயங்களை பின்னூட்டமாகப் போட்டு விடுவார்.

அவரின் அட்டகாசம் என் வலைப்பதிவில் மட்டும் இருந்தால் பரவாயில்லை நான் பின்னூட்டமிடும் வலைப்பதிவுகளுக்கும் வருவதென்றால் என்ன செய்வது...

Nathanjagk said...

வந்ததுக்கு ஒரு சிரிப்பான போட்டு ​போலாம்னு பாத்தா, இங்க பெரிய ​​வெடிப்பானே ​வெடிச்சுக் கிடக்கு..! ம்ம்ம்.. நல்லா என்ஜாய் பண்ணுங்க!

Menaga Sathia said...

//எனக்கு தரகர் பார்த்த பெண்ணை முதலில் நான் தூரத்தில் நின்றுதான் பார்த்தேன்.

அவளோ என்னைவிட உயரமாக இருந்தாள். நான் அவள் என்னைவிட உயரம் எனக்கு வேண்டாம் என்றேன். தரகர் சொன்னார் அவளின் உயரத்தைக் குறைக்கலாம். அவளின் காலணியை கழட்டி விட்டால் போதும் என்றார். //

இந்த லொள்ளு சூப்பர் சந்ரு!!

Post a Comment