Friday, 7 August 2009

மறைந்துவரும் தமிழர் சம்பிரதாயங்கள்.

தமிழர்களுக்கென்று சில கலை, கலாச்சார பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை இன்று மறைந்து வருவதைக் காண முடிகின்றது. ஆனாலும் இவற்றைப் பற்றி எல்லாம் அறிவதிலே எனக்கு ஆர்வம் அதிகமே.


அன்று தமிழர்களிடையே பல சமயம் சார்ந்த சம்பிரதாய நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன. மந்திர, தந்திர, மாய வித்தைகள் ஒரு புறமிருக்க சமயம் சார்ந்த பல நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் அதன் எச்சங்களைகூட இன்று காண முடியவில்லை.


தமிழ் மக்களைப் பொறுத்தவரை சமய சம்பிரதாயங்கலிலே அதிக நம்பிக்கை கொண்டவர்களே. நான் நான் பலரிடம் கேட்டு அறிந்து கொண்டவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.


நான் பிறந்து வளர்ந்தது ஒரு விவசாயக் கிராமம் எனது கிராமத்திலே அன்று நடை பெற்ற ஆனால் இன்று அதன் எச்சங்களே இல்லாத சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.


எனது ஊரிலே பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்று இருக்கிறது. (மட்டக்களப்பு, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம்) கிராம மக்களின் வயட்காணிகள் நிறைந்திருக்கும் பகுதியிலே ஆலயம் அமைந்திருக்கின்றது. ஆலயத்துக்கும் வயற்காணிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

வேளாண்மைக்கு பூச்சி புழுக்களின் தாக்கம் ஏற்படும்போது கோவில் மடைப்பள்ளி சாம்பலை எடுத்துவயலுக்கு தூவினர். அதற்குக் கட்டுப்படாதவிடத்து பிள்ளையாரை அபிசேகம் பண்ணிய நீரை எடுத்து தெளித்தனர்


சமய ஆசாரத்துடன் பட்டினியாக இருந்த போடியார் ஒருவர் ஒரு பிடி மிளகை வாயினுள் அடக்கி தீர்த்தக் குடத்தை தொழிலோ, தலையிலோ சுமக்க ஏனைய போடிமார் அவருக்கு வெள்ளை மேற்கட்டி பிடிக்க, மணி ஓசையுடன் ஐயர் சங்கு ஊத, பறைமேளம் ஒலிக்க, வடக்கிலிருந்து தெக்கு நோக்கி நீர் பாச்சும் ஒவ்வொரு வாய்க்காலிலும் மிளகு கொஞ்சத்தை சப்பித் துப்பி தீர்த்த நிறையும் கொஞ்சம் ஊ.ற்றுவர். இதுவே தீர்த்தமெடுத்தல் என்பதாகும்.

வயல் அறுவடைக்குத் தயாரானபோது குருக்கள், ஐயர், காவலாளிகள் சகிதம் சென்று வயத் போடிமாருக்கு பொங்கத் பிரசாதம் வழங்குவதுசம்பிரதாயமாகும். சிறுபோக நெல் விளைவுற்ற பருவத்தில் பன்றிக் காவலுக்கு இரவில் தகரம் கொண்டு செல்வதும் கடமையில் தவறியோருக்கு தண்டனை வழங்குவதும் இறுக்கமான கட்டுப்பாடாக இருந்திருக்கின்றது.


அறுவடையின் பின் ஆண்டுதோறும் பிள்ளையார் கோவிலடியில் வட்டை அமுது என்ற மாபெரும் அன்னதானம் நடைபெறும். போடிமார் தமது வயல் பரப்புக்கேற்ற அரிசி, தேங்காய், தயிர், மரக்கறி வகைகள், காசு என்பவற்றை எல்லாம் சேர்ப்பர்.

கோவில் குருக்கள் குளக்கட்டில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார். போடிமார் குடை, மேளதாளம், மணியோசை, சங்கொலி என்பவற்றுடன் சென்று கோவித்த பாவனையில் இருக்கும் குருக்களை சமாதானப் படுத்தி திருவமுதுக்கு எழுந்தருளப் பண்ணுவார். திருவிழா ஊர்வலம் போல் நடைபெறும் இவ விழாவில் பொதுமக்களும் பங்குபற்றி மகிழ்வர்.


சிவபெருமான் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக் கறியமுது கேட்ட சம்பவத்தை நினைவூட்டுவதாக இன் நிகழ்வு இடம் பெற்றிருக்கின்றது.

சிவபெருமான் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக் கறியமுது கேட்ட சம்பவத்தை நினைவூட்டுவதாக இன் நிகழ்வு இடம் பெற்றிருக்கின்றது.மறைந்து வரும் தமிழர் நம் சம்பிரதாயங்கள் இன்னும் பல அவ்வப்போது உங்களை வந்து சேரும்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

32 comments: on "மறைந்துவரும் தமிழர் சம்பிரதாயங்கள்."

ELIYAVAN said...

It is okey. Such traditional treatment to protect the crop from the pest is a wholly shit. Let such tradition disappear

ஹேமா said...

சந்ரு,நானும் அறிந்திருக்கவில்லை.
பகிர்வுக்கு நன்றி.
இன்னும் இருந்தால் எழுதுங்கோ.

நட்புடன் ஜமால் said...

தொடரட்டும் தங்கள் தமிழ் பணி.

சந்ரு said...

ELIYAVAN கூறியது...
It is okey. Such traditional treatment to protect the crop from the pest is a wholly shit. Let such tradition disappear


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்...

சந்ரு said...

//ஹேமா கூறியது...
சந்ரு,நானும் அறிந்திருக்கவில்லை.
பகிர்வுக்கு நன்றி.
இன்னும் இருந்தால் எழுதுங்கோ.//


இனனும் நிறைய விடயங்கள் உங்களை வந்து சேரும் காத்திருங்கள்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் ஹேமா

குறை ஒன்றும் இல்லை !!! said...

தொடரட்டும் தங்கள் தமிழ் பணி.

சந்ரு said...

//நட்புடன் ஜமால் கூறியது...
தொடரட்டும் தங்கள் தமிழ் பணி.//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா

சந்ரு said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
தொடரட்டும் தங்கள் தமிழ் பணி.//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா

ஸ்ரீராம். said...

சம்ப்ரதாயங்களும் பழக்க வழக்கங்களும் காரண காரியத்தோடு ஏற்படுத்தப் பட்டவை. தம்பதிகளை ஆடியில் பிரித்தால் சித்திரையில் அதாவது கத்திரி வெயிலில் பிள்ளை பெறுவதைத் தவிர்க்கலாம். இப்போது அது தேவை இல்லை. ஏனென்றால், கத்திரியை சமாளித்து பிள்ளைப் பேறு வைத்துக் கொள்ள குளிர் சாதனங்கள் வந்து விட்ட நிலையில் பிரித்தல் தேவை இல்லாது போகிறது!
கோவிலில் குளம் அமைப்பது அந்தக் காலத்து மழை நீர் சேகரிப்பு. திருவிழாக்கள் ஒரு வகை சுயம்வரங்கள். பூச்சிகளை அழிக்க பல்வகை உரங்கள் வந்துவிட்ட நிலையில் இவை வழக்கொழிந்து போய் இருக்கலாம். ஆனாலும் இயற்கை உரத்துக்கு ஈடேது?

வால்பையன் said...

தமிழர் சம்பிரதாயத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை!

தமிழ் கல் தோன்றி மண் தோண்றா கால்த்திலிருந்து இருக்கிறது!

கடவுள் நேற்று முளைத்த காளான்!

சந்ரு said...

//ஸ்ரீராம். கூறியது...
சம்ப்ரதாயங்களும் பழக்க வழக்கங்களும் காரண காரியத்தோடு ஏற்படுத்தப் பட்டவை. தம்பதிகளை ஆடியில் பிரித்தால் சித்திரையில் அதாவது கத்திரி வெயிலில் பிள்ளை பெறுவதைத் தவிர்க்கலாம். இப்போது அது தேவை இல்லை. ஏனென்றால், கத்திரியை சமாளித்து பிள்ளைப் பேறு வைத்துக் கொள்ள குளிர் சாதனங்கள் வந்து விட்ட நிலையில் பிரித்தல் தேவை இல்லாது போகிறது!
கோவிலில் குளம் அமைப்பது அந்தக் காலத்து மழை நீர் சேகரிப்பு. திருவிழாக்கள் ஒரு வகை சுயம்வரங்கள். பூச்சிகளை அழிக்க பல்வகை உரங்கள் வந்துவிட்ட நிலையில் இவை வழக்கொழிந்து போய் இருக்கலாம். ஆனாலும் இயற்கை உரத்துக்கு ஈடேது?//

உண்மைதான் நண்பரே.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
தமிழர் சம்பிரதாயத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை!//


தமிழர் சம்பிரதாயங்களுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது நண்பரே.

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
தமிழ் கல் தோன்றி மண் தோண்றா கால்த்திலிருந்து இருக்கிறது!

கடவுள் நேற்று முளைத்த காளான்!//


தமிழ் கல் தோன்றி மண் தோண்றா கால்த்திலிருந்து இருக்கிறது என்பது உண்மைதான் நண்பரே. ஆனாலும் இந்து மதம் ஆதியும் அந்தமும் இல்லாதது கடவுள் நேற்று முளைத்த காளான் அல்ல. இந்துக்களின் ஒவ்வொரு சமய சம்பிரதாயங்களுக்கும் காரணங்களும் இறை நம்பிக்கையும் இருக்கின்றன.

மேலதிக விளக்கங்கள் கூட என்னால் தரமுடியும்..

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே...

வால்பையன் said...

//மேலதிக விளக்கங்கள் கூட என்னால் தரமுடியும்.. //

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
//மேலதிக விளக்கங்கள் கூட என்னால் தரமுடியும்.. //

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!//ஆஹா.... தமிழோடு விளையாடிக்கொண்டு இருக்கிறேன். வேறு பக்கம் போக விடுவதாக இல்லை கேள்விமேல் கேள்வி விளக்கம் கொடுக்கவேண்டி இருக்கிறது. அதற்கும் சமயத்தோடு விளையாடவா.... விளையாடித்தான் பார்ப்போமே....


சமயமும் சம்பிரதாயங்களும் பற்றி நிறையவே பேசலாம். விரைவில் எதிர்பாருங்கள் அதற்கென ஒரு தனி இடுகை இடுகின்றேன்.

sakthi said...

வித்தியாசமான பதிவு

வாழ்த்துக்கள்

புல்லட் said...

அற்புதமான பதிவு சந்துரு...வரவர உங்கள் மேல் மரியாதை கூடிக்கொண்டே செல்கிறது... நானும் ஒரு கலாச்சார ரசிகள்... சிலவேளைகளில் அவை மடத்தனமாக இருப்பினும் அவற்றை ரசிப்பவன்.. உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது..

சந்ரு said...

//sakthi கூறியது...
வித்தியாசமான பதிவு

வாழ்த்துக்கள்//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் sakthi

சந்ரு said...

//புல்லட் கூறியது...
அற்புதமான பதிவு சந்துரு...வரவர உங்கள் மேல் மரியாதை கூடிக்கொண்டே செல்கிறது... நானும் ஒரு கலாச்சார ரசிகள்... சிலவேளைகளில் அவை மடத்தனமாக இருப்பினும் அவற்றை ரசிப்பவன்.. உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது..


நான் ஒரு தமிழ் மற்றும் கலைத்துறைகளில் ஆர்வமுள்ளவன் அவ்வளவுதான். என்னால் முடிந்தவரை தமிழுக்கும் நம் கலை வளர்ச்சிக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்றொரு நோக்கம்தான்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..

Kala said...

நேற்று முளைத்த காளான்
‘வாலு’ சரியான பெயர்தான்
இறைவனல்ல.
சந்துரு நிட்சயமாகத் தொடர்புண்டு
என் பாட்டி சொன்னவைகள்
அப்பப்பா....அதிசயமான
நிகழ்வுகள். தொடருங்கள்.

தமிழரசி said...

புதுசா இருந்தது இந்த சமிபிரதாயங்கள்..ஆம் இவையெல்லாம் காலப்போக்கில் மறைந்துவருவது வருத்தப்படவேண்டியதே..

ஆ.ஞானசேகரன் said...

//மறைந்து வரும் தமிழர் நம் சம்பிரதாயங்கள் இன்னும் பல அவ்வப்போது உங்களை வந்து சேரும்.//

மிக்க நன்றி நல்ல பகிர்வு..
வளர்ந்து வரும் நாகரிகம் மற்றும் பகுத்தறிவு காரணமாக சில சம்பிரதாய நிகழ்வுகள் மறைந்து வருவதும் இயற்கையே... எப்படியானாலும் மானுடம் காக்க வேண்டும் என்பது மட்டும் உண்மை

S.A. நவாஸுதீன் said...

உங்கள் தமிழ்ப் பணி தொடரட்டும் சந்ரு

சந்ரு said...

//Kala கூறியது...
நேற்று முளைத்த காளான்
‘வாலு’ சரியான பெயர்தான்
இறைவனல்ல.
சந்துரு நிட்சயமாகத் தொடர்புண்டு
என் பாட்டி சொன்னவைகள்
அப்பப்பா....அதிசயமான
நிகழ்வுகள். தொடருங்கள்.//

விரைவில் இன்னும்பல விடயங்கள் உங்களை வந்து சேரும் காத்திருங்கள்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் கலா

சந்ரு said...

//தமிழரசி கூறியது...
புதுசா இருந்தது இந்த சமிபிரதாயங்கள்..ஆம் இவையெல்லாம் காலப்போக்கில் மறைந்துவருவது வருத்தப்படவேண்டியதே..//

உண்மைதான்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் தமிழரசி

சந்ரு said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
//மறைந்து வரும் தமிழர் நம் சம்பிரதாயங்கள் இன்னும் பல அவ்வப்போது உங்களை வந்து சேரும்.//

மிக்க நன்றி நல்ல பகிர்வு..
வளர்ந்து வரும் நாகரிகம் மற்றும் பகுத்தறிவு காரணமாக சில சம்பிரதாய நிகழ்வுகள் மறைந்து வருவதும் இயற்கையே... எப்படியானாலும் மானுடம் காக்க வேண்டும் என்பது மட்டும் உண்மை//


இப்படி எல்லாம் இருந்தது என்று எமது எதிர்கால் சந்ததிக்கு சொல்வதற்கே ஆதாரம்கூட இல்லாமல் போய்விடும்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா..

சந்ரு said...

S.A. நவாஸுதீன் கூறியது...
உங்கள் தமிழ்ப் பணி தொடரட்டும் சந்ரு


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா..

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

வர்மா said...

வித்தியாசமான ஆங்கிலப்படங்களை அறிமுகப்படுத்தும் உங்களை எப்படிப்பாராட்டுவது.
அன்புடன்
வர்மா

சந்ரு said...

//வர்மா கூறியது...
வித்தியாசமான ஆங்கிலப்படங்களை அறிமுகப்படுத்தும் உங்களை எப்படிப்பாராட்டுவது.
அன்புடன்
வர்மா//ஆஹா நக்கலா..... வருகைக்கு நன்றி....

குட்டி பிரபு said...

என்னுடைய முதல் பின்னோட்டம்.. நல்ல பகிர்வு! மேலும் பல தகவல்களுக்காக காத்திருக்கிறேன்! நன்றி!

சந்ரு said...

குட்டி பிரபு கூறியது...
என்னுடைய முதல் பின்னோட்டம்.. நல்ல பகிர்வு! மேலும் பல தகவல்களுக்காக காத்திருக்கிறேன்! நன்றி!விரைவில் பல தகவல்கள் உங்களை நாடிவரும். காத்திருங்கள் நண்பரே...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....

Post a Comment