இது மூட நம்பிக்கையா?
இன்று ஒரு வீட்டுக்கு சென்றேன் எல்லோரும் சற்று பதட்டத்துடன் இருந்தார்கள். என்ன என்று கேட்டேன் வீட்டு சாமி அறையில் இருந்த பிள்ளையார் படம் விழுந்து நொறுங்கிவிட்டது ஏதோ கெட்ட காரியம் நடக்கப்போவதாக பலர் சொன்னதாக சொன்னார்கள் எனக்கு சிரிப்பு வந்தது.
நான் மூட நம்பிக்கைகளை வெறுப்பவன் எமது மக்களிடம் பல மூட நம்பிக்கை இருக்கின்றது.
சாமி படம் விழுந்து உடைந்தால் கெட்டகாரியம் நடக்கும் என்பது உண்மையா? மூட நம்பிக்கையா?
கிழக்கு மாகாண சபையின் அவசர வெள்ள நிவாரணக்குழு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் அதிகளவான மழை வீழ்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதனால் நாட்டில் பல பாகங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. விசேடமாக கிழக்கு மாகாணமே அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. இன்று (02.02.2011) கிழக்கு மாகாண சபையின் அமர்வின்போது கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம் பெற்றது. இதன்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான வெள்ள நிவாரணக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ் வெள்ள நிவாரணக்குழுவானது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தவிசாளர் எச்.எம் பாயிஸ் அமைச்சர்களான எம்.எஸ் உதுமாலெப்பை, துரையப்பா நவரெட்ணராஜா, டபுள்யு.எ.விமலவீர திசாநாயக்க, எம்.எஸ். சுபைர், எதிர்கட்சி தலைவர் தயாகமகே, மாகாண சபை உறுப்பினர்களான எ.எஸ். ஜவாகிர் ஸாலி அப்துல் மஜீத், எ.சசிதரன், கே.யே.விமல் பியதிஸ்ஸ, எம்.எ.எம். மக்ரூப், இரா துரைரெட்ணம் ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள்.
4 comments: on "உண்மையா? மூட நம்பிக்கையா?"
பிள்ளையார் படம்னு இல்ல, எந்த படம் உடைஞ்சாலும் அதிலிருந்து கண்ணாடி சில்லுகள் சிதறும், கவனிக்காம விட்டா காலை கிழிக்கும், அதான் கெட்ட காரியம்!
அதுக்கு பிள்ளையாரும் தெரியாது, பிபாஷாபாசுவும் தெரியாது!
நல்லவேளை உண்மையா மூடநம்பிக்கையான்னு கேட்டீங்க... உண்மைன்னு எழுதியிருந்தா மைனஸ் ஓட்டு தான் போட்டிருப்பேன்...
// வால்பையன் கூறியது...
பிள்ளையார் படம்னு இல்ல, எந்த படம் உடைஞ்சாலும் அதிலிருந்து கண்ணாடி சில்லுகள் சிதறும், கவனிக்காம விட்டா காலை கிழிக்கும், அதான் கெட்ட காரியம்!
அதுக்கு பிள்ளையாரும் தெரியாது, பிபாஷாபாசுவும் தெரியாது!//
வாங்க தல… நானும் உங்க பக்கம்தான் நானும் மூட நம்பிக்கைகளை வெறுப்பவன். உங்கள் கருத்துத்தான் என் கருத்தும்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
// Philosophy Prabhakaran கூறியது...
நல்லவேளை உண்மையா மூடநம்பிக்கையான்னு கேட்டீங்க... உண்மைன்னு எழுதியிருந்தா மைனஸ் ஓட்டு தான் போட்டிருப்பேன்..//
நானும் உங்க பக்கம்தான்…
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
Post a Comment