Monday, 14 February 2011

காதலிக்கு எழுதிய கடிதங்கள் உங்கள் பார்வைக்கு...

அனைத்து நண்பர்களுக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்.


முன்னர் பதிவிட்ட விடயங்கள் சில மீண்டும் காதலர் தினத்தில்.

காதல்
காதலில்லாமல் உலகமில்லை.


 காதல் என்பது அன்பு .
ஒருவர் தன் தாய் மீது வைக்கின்ற அன்பும் காதலே.
காதலிமீது வைக்கின்ற அன்பும் காதலே.
காதலால் சரித்திரம் படைத்தவர்க்களுமுண்டு.
காதலால் காணாமல் போனவர்களுமுண்டு.
காதல் புனிதமானது -  இன்று
காதலின் புனிததைக் கெடுப்போருமுண்டு. 
காதலை வாழவைப்போருமுண்டு.

காதல் புனிதமானவைதான் கல்லறைவரை செல்லாதவரை. 

என்னை மிகவும் கவர்ந்த பாடல். 


பிரபலங்களின் காதல் கடிதங்கள்
காதலர்கள் தங்களுக்குள்ளே கடிதங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கடிதம் எழுதுவார்கள் ஆனால் எனக்கு அனுபவம் இல்லை.

சில பிரபலங்கள் தங்கள் காதலிகளுக்கு அனுப்பிய கடிதங்களை தருகிறேன். காதலர்களே நீங்களும் இப்படி கடிதம் எழுதலாம்.

01. காதலி பானி பிரானுக்கு ஆங்கிலக் கவிஞர் ஐர்ன்கீட்ஸின் கடிதம்

என் இனிய காதலியே!

உலகத்தில் எந்தப் பொருளுக்கும் உனது காதல் கடித்ததுக்கு உள்ள சக்தி கிடையாது என்றே நினைக்கிறேன். எனது நெஞ்சிலே உனது வடிவம்தான் நிரம்பி நிற்கிறது உனது அதரங்களிலே நான் சுவைப்பது காதல்.உனது நடையழகிலே நான் சொக்கி நிற்கிறேன்.

உன் காதல் கடித்தில் மின்னுகின்ற உன் அழகிய கையெழுத்தையே ஆர்வத்துடன் முத்தமிட்டேன்,இன்புற்றேன்.அதை தேனாகவே கருதிச் சுவைத்தேன். நாம் தனியாக ஒரு நாளை இனிய இன்ப அதிர்ச்சியில் செலவழிப்போம்.

நீ எனக்கு ஓராயிரம் முத்தம் வழங்கி இருக்கின்றாய்,இன்னும் ஒரு முத்தம் தரமாட்டாயா? நீ உனது காதல் கரங்களில் என்னை அணைத்துக் கொள்ளாவிட்டால்,என் தலையில் இடி விழுந்து நான் சிதறிப்போவதே நலம்!

02...மனைவி யென்னிக்கு கார்ல் மார்க்ஸின் கடிதம்;

இவ்வுலகில் பல பெண்கள் உள்ளனர் என்பதும்,அதில் சிலர் அழகாக உள்ளனர் என்பதும் அனைவரும் அறிந்த்தே! ஆனால் முகத்தில் உள்ள ஒவ்வொரு சுருக்கமும்,ஒவ்வொரு மணித்துள்ளியும் என் உள்ளத்தே ஆற்றல் மிக்க இனிய நினைவுகளை எழுப்பக் கூடியனவே,தவிர வேறில்லை.

வேதங்களோ கிறிஸ்துவர்களின் புனர்வாழ்வுத் தத்துவமோ எனக்குத் தேவையில்லை. என் அன்பே! உனக்கும் குழந்தைகளுக்கும் ஆயிரம்,ஆயிரம் முத்தங்கள்.

03....ருசியக் கதாசிரியர் டால்ஸ்டாப் தன் காதலிக்கு........

சோன்யா!

கடந்ந மூன்று வாரங்களாக ஒவ்வொரு நாளும் நான் பேசிவிட வேண்டும் என்று தீர்மானிக்கின்றேன்,நான் ஏன் அதைப் பேசவில்லை; என்ன பேசுவது,எப்படிப் பேசுவது என்பவற்றையெல்லாம் சிந்திக்கின்றேன்.

இந்தக் கடிதத்தை என்னிடமே வைத்துக்கொண்டு,மறு முறையும் எனக்கு பேசத் துணிவில்லை எனில் இதைக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணுகின்றேன். உண்மையாக்க கூறு நீ எனது மனைவியாக விரும்புகிறாயா? உனது பதில் நெஞ்சின் ஆழத்திலிருந்து வரவேண்டும். தீர்க்கமாக சிந்தித்து விடை கொடு.உன்னை நான் நேசிக்கும் அளவுக்கு நான் கணவன் என்ற முறையில் உன்னால் நேசிக்கப்படாவிட்டால்,அது மிகவும் கொடியது.

04.........நெப்போலியன் தன் காதலி யோசபினுக்கு எழுதிய காதல் கடிதம்

அன்பே!

நேற்று போர்களத்தில் கடுமையான வேலை,கொஞ்சம் கூட ஓய்வில்லை.உணவோ,உறக்கமோ இன்றி ஓரு வாரமாக இருந்தும், நான் சுறுசுறுப்பாக வேலை செய்வது கண்டு எங்கள் குழுவினர் அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.

அது என்னால் எப்படி சாத்தியப்படுகிறது என்று எல்லோரும் திகைத்தனர். என்ன?.....உனக்கு ஏதாவது புரிகிறதா? நீ எழுதும் கடிதங்கள் என் சட்டைப்
 பையிலேயே இருப்பது வழக்கம் சோர்வு ஏற்படும் போது நான் உன் கடிதங்களை எடுத்துப் படிப்பேன்.

அவ்வளவுதான் சோர்வு பறந்துவிடும் புத்துணர்ச்சி உடலெல்லாம் பரவும்
அப்புறம் பசியாவது தாகமாவது! ஒரு விஷயம் என் துயரங்களைக் கண்டு நீ மனதை அலட்டிக் கொள்ளக்கூடாது.

துன்பம் என் நண்பன் அதை நான் வெறுக்கமாட்டேன்.உலகத்தில் அபார சாதனைகளைச் சாதிப்பதற்காகவே பிறந்த எனக்குத் துன்பந்தான் தூய நண்பன். இன்பம் என் விரோதி.அது என்னைச் சோம்பேறியாக்கி விடும் அதை நான் வெறுக்கின்றேன் இரவில் அதிக நேரம் கண் விழிக்காதே,உடம்பை ஐர்க்கிரதையாக்க கவனித்துக்கொள்.

அன்புள்ள

நெப்போலியன்


05..........கால் மார்க்ஸ் எழுதிய காதல் கடிதம்

கெஐட் பத்திரிகையின் ஆசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.இப்படி ஒரு பதவியில் அமர்ந்து நிர்வாகம் செய்வதே எனக்குப் பிடிக்காத விஷயம்.இப்படி ஒரு பிடிக்காத விஷயத்தில் நான் ஈடுபட்டதற்குக் காரணம் நீ தான்.என் பிரிவு உன்னை எவ்வளவு தூரம் வாட்டுடுகிறதென்று எனக்குத் தெரியும்.

வாழ்கை நடத்துவதற்கு ஏற்ற பொருளாதாரச் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்ட பிறகுதான் உன்னை மணப்பதென்பது என் தீர்மானம்.என்பது உனக்குத் தெரியும். உன்னை மணக்க வேண்டும் என்ற நினைவு பலமாக உந்தியதால் தான் கெஐட் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். என் பொருட்டு பல இன்னல்களை அனுபவிக்கின்றாய் எனக் கேள்விப் பட்டேன்.வருத்தப்படவில்லை,மகிழ்ச்சி அடைந்தேன்.இதுதான் உண்மை வாழ்க்கை.பிறர் பரிகாசம் செய்கிறார்களே என்று அஞ்சாதே,உன் மனதை உறுதிப்படுத்திக் கொள்.

உன் நினைவில் இருக்கும்

காரல் மார்க்ஸ்

06.........மாக்ஸிம் கார்க்கியின் காதல் கடிதம்

அன்புள்ள ஓல்கா!

உனக்கு கடிதம் எழுதவேண்டும் என்ற ஆசை என் மனத்தில் எழும்போது கூடவே கொஞ்சம் வேதனையும் எழுகிறது,உனக்குப் படிக்கத் தெரியாது. என் அன்புக் கடிதத்தைப்புரிந்து கொள்ள நீ வேறுயாருடைய உதவியாவது நாடவேண்டும் இந்தத் தடங்கலின் காரணமாக என் இதய உணர்ச்சிகளை அடக்கிக் கடிதம் எழுதவேண்டியிருக்கிறது உனக்கு இயற்கையாகவே அமைந்துள்ள அழகுமாதிரி கல்வியும் இருக்கக்கூடாதா,என்று என் மனம் ஏங்குகிறது.ஆனால் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என்னிடம் கல்வி இருக்கிறது,உன்னிடம் அழகு இருக்கிறது இரண்டும் ஒன்று சேர்ந்தால் அதுவே ஓர் ஒப்பற்ற சக்தியாகத் திகழும்.உன் நீலநிறக் கண்களில் வீசும் இன்ப ஒளி கல்வியை விட உயர்ந்த்து என்பது என் கருத்து.

அன்புள்ள

கார்க்கி

07.........மார்சல் டிலெக்லூர் எழுதிய காதல் கடிதம்

ஆண் ஆனாலும் சரி பெண் ஆனாலும் சரி காதல் கடிதம் எழுதுவது சாதாரண விஷயம் ஆனால் உலகிலுள்ள எந்தக் காதல் கடிதமும் மார்ஷல் டிலக்லூர் என்பவர் தமது காதலிக்குஎழுதிய கடிதத்துக்கு இணையாகாது. மார்ஷல்டிலெக்லூர் ஒரு பெர்ஷிய ஓவியர்.1875ம் ஆண்டில் இவர் உலகிலேயே மிகப் பெரிய காதல் கடிதத்தை எழுதினார்.

அந்தக் கடிதத்தை நீங்கள் படித்துமுடிக்க வெகு காலமாகும். அவ்வளவு பெரிய அந்தக் கடிதத்தில் இருக்கும் மொத்த வார்த்தைகள் எவ்வளவு தெரியுமா?56,25,000 அதாவது இவ்வளவு வார்த்தைகளில்70 நாவல்கள் எழுதிமுடித்து விடலாம்.

இந்தக் கடிதத்தை எழுத ஒரு குமஸ்தாவை சம்பளம் கொடுத்து வைத்திருந்தார். மாலிக்டி வில்லடோ என்ற மங்கைக்காகத்தான் இந்தக் காதல் கடிதம் எழுதப்பட்டது. நான் உன்னைக் காதலிக்கிறேன் என்ற மூன்று வார்த்தையை மட்டும் 18,75,000 இடங்களில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் வேடிக்கையான காதல் கடிதம்தான்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

8 comments: on "காதலிக்கு எழுதிய கடிதங்கள் உங்கள் பார்வைக்கு..."

Anonymous said...

உங்க காதல் கடிதம் எப்படி

Anonymous said...

nice collections..

Unknown said...

where did you find these letters?

Admin said...

// பெயரில்லா கூறியது...
உங்க காதல் கடிதம் எப்படி//

அது என் காதலிக்கு மட்டுமே தெரியும்.

Admin said...

//தமிழரசி கூறியது...
nice collections..//

வருகைக்கு நன்றிகள்

Admin said...

// அஸ்பர்-இ-சீக் கூறியது...
where did you find these letters?//

வருகைக்கு நன்றிகள்

Riyas said...

எல்லாரும் நல்லாத்தான் எழுதியிருக்காங்க.. நல்ல தொகுப்பு உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

Unknown said...

அருமையான பதிவு...வித்தியாசமான தெரிவுகள்...
நம்ம கடைப்பக்கமும் வாங்க பாஸ்..
http://kaviyulagam.blogspot.com/

Post a Comment