Monday 7 February 2011

சமூகங்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கும் பதிவர்கள்.

பதிவர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம். இருப்பினும் சமூகங்களை அல்லது பதிவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கும் ஒருசில பதிவர்களும்??????? இல்லாமல் இல்லை. இவர்களின் வலையில் நானும் சிக்கித் தவித்ததுண்டு.

இலங்கையைச் சேர்ந்த ஒரு பதிவர் என்னையும் வடபகுதி பதிவர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்த சம்பவங்கள் பல.. நான் மட்டக்களப்பு என்பதனால்.

அண்மைக்காலமாக தமிழக இலங்கை மீனவர்கள் பற்றிப்பேசப்படுகின்றது. பல பதிவர்கள் தங்கள் சார்பான கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பரவலாக எதிர்ப்பலைகள் வந்தநேரத்தில். சில இலங்கைப்பதிவர்கள் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களினால் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பதனை சுட்டிக்காட்டினர்.

அவர்களின் எண்ணம் தமிழக மீனவர்களை குற்றம் சொல்வதாகவோ தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு எதிரான பிரச்சாரத்தை வலுக்குன்ற செய்வதற்கான ஒரு முயற்சியாகவோ அமையவில்லை.

மாறாக தமிழக மீனவர்களின் படுகொலைக்கு எதிராக பரவலாக எதிர்ப்பலைகள் வருகின்றபோது அலங்கை குறிப்பாக வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசுகின்றபோது இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளையும் இந்தியா உட்பட உலகறியச் செய்யலாம் என்பதே அப்பதிவர்களின் எண்ணமாக இருந்தது. காரணம் தமிழக மீனவர்களினால் இலங்கை மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கின்றனர் என்பது பலருக்கு தெரியாது.

தமிழக மீனவர்களினால் இலங்கை மீனவர்கள் பாதிக்கின்றனர். நானும் முற்று முழுதாக ஏற்றுக்கொண்டதோடு இலங்கை மீனவர்கள் தொடர்பாக பேசப்படவேண்டிய நேரம் இதுவல்ல என்பதனையும் சுட்டிக்காட்டி இருந்தேன்.

இலங்கை மீனவர்கள் தொடர்பாக இலங்கைப் பதிவர்கள் எழுதியதை இலங்கை இந்திய பதிவர்கள் சண்டையாகவும் தமிழக தமிழர்களினதும் இலங்கை தமிழர்களினதும் சண்டையாக ஒரு சிலர் திசை திருப்ப நினைத்துவிட்டனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கைத் தமிழர்கள் பல்வேறு அவலங்களை கடந்தகாலங்களிலே சந்தித்திருக்கின்றனர். இலங்கையிலே இடம்பெற்ற இறுதி யுத்தத்திலே தமிழர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தனர்




தமிழர்கள் எத்தனையோ அவலங்களை சந்தித்தபோது அவர்கள் பற்றி அக்கறைப்படாதவர்கள் வடபகுதி தமிழர்களுக்காக இப்போது குரல்கொடுக்க வந்திருக்கின்றனர். சில நண்பர்கள் மன்னிக்கவேண்டும்.

ஒவ்வொரு தமிழன் மனதையும் விட்டு அகலாத விடயம் யாழ் Áலகம் எரிப்பு. தமிழர்களின் அரிய பொக்கிசமாக இருந்த யாழ் Áலகம் எரிப்பு தொடர்பாக எழுதும்போது யாழ் Áலகத்திலே என்ன பொக்கிசம் இருந்தது என்று யாழ் Áலகத்தை தரக்குறைவாக எழுதியவர்கள் இன்று வடபகுதி மக்களுக்காக குரல் கொடுக்க முன்வந்ததன் நோக்கம் என்ன?

இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக எழுதிய இலங்கைப் பதிவர்கள் பலர் புரிந்துணர்வோடு தமிழக மீனவர்கள் சார்ந்து இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்தனர்.

ஆனால் மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்தவர்கள் பல்வேறு இடங்களிலே பதிவர்களை Àண்டிவிட நினைத்தனர். இலங்கை வலைப்பதிவர் குழுமத்திலும் இப்பிரச்சினை தொடர்பாக விவாதம் இடம் பெற்றது. அங்கேயும் ஒருவரின் கருத்து தொடர்பாக நான் சில கேள்விகள் கேட்டும் பதில் இல்லை வெறுமனே பதிவர்களை Àண்டிவிடுவதாகவே இருந்தது.


இவ்வாறான பதிவர்களிடம் சொல்கின்றேன். பதிவெழுத எதுவுமில்லையா. பதிவுகளை திருடியாவது எழுதுங்கள் பதிவர்களையும் சமூகங்களையும்  மோதவிட்டு வேடிக்கை பார்க்காதீர்கள்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

11 comments: on "சமூகங்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கும் பதிவர்கள்."

Anonymous said...

உங்களுடைய இலங்கை தமிழன் என்றால் உசிரு இந்திய தமிழன் என்றால் மசிரு என்ற பதிவின் மூலம் இலங்கை வட பகுதி மக்கள் நலன்களுக்கு எதிரானது உங்கள் கருத்துக்கள் என்பதை விளங்கி கொள்ள முடிந்தது.
இன்னொரு இடத்தில் நானும் உங்கள் கருத்தைத்தான் சொல்கின்றேன் என்று கூறியள்ளீர்கள் உங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த கருத்துக்கள்.
//எம் எல்லோருக்கும் பொது எதிரி சிங்களவன்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிங்கள வெறி நாய்களின் கொலை வெறியை கண்டிக்க கடமைப்பட்டள்ளோம்.//

EKSAAR said...

இலங்கையின் நீர்வளம் அபகரிக்கப்படுவது தொடர்பாக பேசப்போனால் நீங்கள் வேறேதோ பேசுகிறீர்கள். உங்கள் கருத்தைப்பார்த்தால் வடபகுதியில் தமிழர்கள் மட்டும்தான் இருப்பதுபோல் உள்ளதே..

அதேவேளை குழுமத்தில் நடந்த விவாதத்தில் லோஷனின் கருத்தோடும் கிரிஷ் இன் கருத்தோடும் இணங்கிப்போவதால் (அவை நியாயமாக இருப்பதால்) நான் இன்னும் ஏதும் எழுதவில்லை.

ஒருவரின் ஒரு செயலோடு இன்னொரு செயலை முடுச்சுப்போடும் உங்களிடம் ஒரு கேள்வி. இதே தத்துவத்தை பிள்ளையான் விடயத்தில் நீங்கள் ஏன் பிரயோகிக்கவில்லை?

மேலதிக தகவல்
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை பற்றி எழுதும்போதும் "தமிழன்" என்ற சொல் உங்களுக்கு அவசியமாகியிருக்கிறது. என்னே மனப்பான்மை...
என்ற என் பின்னூட்ததின் எதிரொலியாக இப்பதிவு இருக்கிறது.

Admin said...

//பெயரில்லா கூறியது...
உங்களுடைய இலங்கை தமிழன் என்றால் உசிரு இந்திய தமிழன் என்றால் மசிரு என்ற பதிவின் மூலம் இலங்கை வட பகுதி மக்கள் நலன்களுக்கு எதிரானது உங்கள் கருத்துக்கள் என்பதை விளங்கி கொள்ள முடிந்தது.
இன்னொரு இடத்தில் நானும் உங்கள் கருத்தைத்தான் சொல்கின்றேன் என்று கூறியள்ளீர்கள் உங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த கருத்துக்கள்.
//எம் எல்லோருக்கும் பொது எதிரி சிங்களவன்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிங்கள வெறி நாய்களின் கொலை வெறியை கண்டிக்க கடமைப்பட்டள்ளோம்.////


வடபகுதி மக்களுக்கு எதிராக அங்கே நான் எதனையும் சொல்லவில்லை. கண்ணை மூடிக்கொண்டு கருத்துரையிடுவதைவிட என்ன சொல்லி இருக்கின்றேன் என்பதனை பதிவில் பாருங்கள்.

அப்பதிவிலே இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளையும் நியாயப்படுத்தி இருக்கின்றேன். இலங்கை மீனவர்களின் பிரச்சினை பற்றி பேசவேண்டிய நேரம் இதுவல்ல என்றே குறிப்பிட்டிருக்கின்றேன்.

மீண்டும் வடபகுதி பதிவர்களையும் என்னையும் சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கின்றீர்கள்.

Admin said...

இலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு

பதிவின் சுட்டி

http://shanthru.blogspot.com/2011/02/blog-post.html

Admin said...

// EKSAAR கூறியது...
இலங்கையின் நீர்வளம் அபகரிக்கப்படுவது தொடர்பாக பேசப்போனால் நீங்கள் வேறேதோ பேசுகிறீர்கள். உங்கள் கருத்தைப்பார்த்தால் வடபகுதியில் தமிழர்கள் மட்டும்தான் இருப்பதுபோல் உள்ளதே..

அதேவேளை குழுமத்தில் நடந்த விவாதத்தில் லோஷனின் கருத்தோடும் கிரிஷ் இன் கருத்தோடும் இணங்கிப்போவதால் (அவை நியாயமாக இருப்பதால்) நான் இன்னும் ஏதும் எழுதவில்லை.

ஒருவரின் ஒரு செயலோடு இன்னொரு செயலை முடுச்சுப்போடும் உங்களிடம் ஒரு கேள்வி. இதே தத்துவத்தை பிள்ளையான் விடயத்தில் நீங்கள் ஏன் பிரயோகிக்கவில்லை?

மேலதிக தகவல்
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை பற்றி எழுதும்போதும் "தமிழன்" என்ற சொல் உங்களுக்கு அவசியமாகியிருக்கிறது. என்னே மனப்பான்மை...
என்ற என் பின்னூட்ததின் எதிரொலியாக இப்பதிவு //


முடிச்சுப்போட வேண்டிய இடத்தில் முடிச்சுப் போடத்தான் வேண்டும்.

நீங்கள் முதலில் என் பதிவுகளை நன்றாக வாசியுங்கள் அங்கே நான் தமிழன் என்று குறிப்பிட்டதன் காரணம் புரியும்.

அப்பதிவிலே உங்கள் கருத்துரைக்கு நான் வழங்கிய பதிலையே இங்கும் தருகிறேன்.

இந்தப் பதிவிலே என்ன தவறிருக்கின்றது என்று தெரியவில்லை என்னைப் பொறுத்தவரை நான் இங்கே தமிழன் என்று குறிப்பிட்டிருப்பதில் என்ன தவறிருக்கின்றது.

மழை வெள்ளம் தொடர்பாக தொடர்ந்து நான் எழுதி வருகின்றேன். இப்பதிவிலே ஒரு குறிப்பிட்ட இடத்திலே ஒரு தமிழ் கிராமத்திலே இடம் பெற்ற இடம் பெற்ற பிரச்சினை தொடர்பாகவே எழுதி இருக்கின்றேன்.

இந்தப் பதிவிலே ஒரு தமிழ் கிராமம் பாதிக்கப்பட்டதை சொல்லும்போது சிங்களவன் படும்பாடு என்றா தலைப்பு போடுவது. வேறு சமூகம் சார்ந்த பிரச்சினையை நான் குறிப்பிடவில்லையே. ஓரு தமிழ் கிராமத்தின் பிரச்சினை பற்றியே குறிப்பிட்டிருக்கின்றேன்.


தமிழன் படும்பாடு பதிவின் சுட்டி

http://shanthru.blogspot.com/2011/02/blog-post_05.html

Anonymous said...

இப்போ எதை சொல்ல வருகிறாய்

Anonymous said...

நீ வடக்கு மக்களுக்கு எதிரானவன் என்பது நீ தமிழனின் வரலாறு என்று பொய்களை யாழ்ப்பான மக்களை தரக்குறைவாக எழுதியபோதே தெரியும்.

Admin said...

// பெயரில்லா கூறியது...
இப்போ எதை சொல்ல வருகிறாய்//


சொல்ல வநடததை பதிவிலேயே சொல்லி இருக்கிறேன் பதிவை மீண்டுமு; பாருங்கள்

Admin said...

//பெயரில்லா கூறியது...
நீ வடக்கு மக்களுக்கு எதிரானவன் என்பது நீ தமிழனின் வரலாறு என்று பொய்களை யாழ்ப்பான மக்களை தரக்குறைவாக எழுதியபோதே தெரியும்.//


நான் தமிழர்களின் வரலாறு என்று பொய்களை எழுதவில்லை எங்கே பொய் என்பதனை சுட்டிக் காட்டுங்கள்

Anonymous said...

உங்களுடைய பதிவுக்கு கருத்து மட்டுமே கூறினேன். உங்கள் கருத்து வட பகுதி இலங்கையர்களின் நலனுக்கு எதிராக உள்ளது என்பது உங்களுக்கு தெரியவில்லையா? உங்கள் பதிவு சிலவற்றை ஆர்வத்துடன் நேரம் கிடைக்கும் போது படித்து வந்தேன்.
/இலங்கை தமிழன் என்றால் உசிரு இந்திய தமிழன் என்றால் மசிரு/ என்ற பதிவின் மூலம் உங்கள் உண்மையான நிலைபாட்டை தெளிவுபடுத்தியுள்ளீர்கள். மற்றும் உங்கள் கருத்து எம் (இலங்கை தமிழர்கள்)எல்லோருக்கும்பொது எதிரி சிங்களவன். இது எனக்கு ஏமாற்றத்தை தந்தது..
நான் இனிமேல் உங்கள் பக்கம் தவறி வர மாட்டேன்.

Sayanolipavan said...

நான் அந்த நாளிலிருந்து உங்களது வலைப்பதிவை பார்த்து வருகிறேன் .. எனது பாராட்டுக்கள் ..
இவர்கள் இன்னும் இந்த பிரச்சனையை விடவில்லையா?

முன்பு ஒருதரம் உங்களுடைய பதிவில் விளக்கம் கொடுத்து இருந்தேன் .. ஒரு வருடம் இருக்கும் என நினைக்கிறன் ..


நீங்கள் உங்களது கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள் ...

எனக்கு நன்றாக தெரியும் எந்த பிரதேச மக்கள் எப்படி என ..

பிரபலமாக சிலர் இருந்தால் அவர் பின்னால் செல்பவர்களும் இருக்கிறார்கள் , ஆனால் உண்மையாக நடப்பவை எமக்கு நன்றாக தெரியும் ..

ஊடக துறையில் இருக்கும் எனது நண்பர் ஒருவர் அங்கு வேலை செய்யும் போது என்னிடம் அடிகடி கதைப்பார் .. அவர் ஒரே சொல்லும் விடயம் எப்ப பார்த்தாலும் மட்டக்களப்பு என்று பிரித்துதான் பார்ப்பாராம் ... வெளியிலே கேட்டால் சொல்வது நாங்கள் அப்படி இல்லை என்பது .. ஆனால் உண்மை விடயம் எல்லோருக்கும் தெரியும் ..

நானும் இங்கு இவர்களுடன் ஆறு வருடங்களாக பழகி வருகிறேன் எனக்கு நன்றாக தெரியும் இவர்களை பற்றி ..
சொல்ல போனால் ஒன்று சொல்லலாம் ..
இவர்களின் அந்த காலம் இருந்து சாதி பார்ப்பது வந்தது .. அதுதான் இப்பவும் இவர்கள் இப்படி உள்ளார்கள் ..
எல்லோரும் அப்படி இல்லை .. ஒரு சிலர் தான் ..

தரமானா கருத்துக்களை வலைப்பதிவில் தெரிவிக்கும் சந்ரு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ..

Post a Comment