Friday 4 February 2011

சில அரச அதிகாரிகளின் அடாவடிகள். பாதிக்கப்படும் மக்களின் அவலம்

கிழக்கு மாகாணத்திலே தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன.

இதனால் பல மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு காப்பாற்றலாம். அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்று பலரும் ஈடுபட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற வேண்டிய உயரதிகாரிகளே மக்கள் நலனில் அக்கறையின்றி செயற்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

நேற்று முன்தினம் எனது கிராமத்திலே பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலை ஒன்றில் தங்குவதற்காக வந்திருந்தனர். உடனடியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் அருள்ராஜா அவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலையில் தங்குவதற்கு வந்திருக்கின்றனர் என்று அறிவித்தோம்.

அவரால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பதில் பாடசாலையில் தங்க வேண்டாம். உறவினர் வீடுகளுக்கு போக சொல்லுங்கள். மக்கள் செய்வதறியாது அவ்விடத்தைவிட்டு சென்றுவிட்டனர்.

இங்கு மட்டுமல்ல மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களை உறவினர் வீடுகளுக்கு செல்லுங்கள் பாடசாலைகளிலோ அரச கட்டிடங்களிலோ தங்கவேண்டாம் என்று சொல்லி இருக்கின்றார்.

பரவலாக எல்லா இடங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் உறவினர் வீடுகளைத்தேடி மக்கள் எங்கே செல்வது.

இன்று அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இந்த பிரதேச செயலாளர் ஏன் இப்படி நடந்து கொள்கின்றார்.

முன்னர் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு இன்னும் நிவாரணங்கள் வழங்கப்படாத பிரதேச செயலகப் பிரிவும் இதுவாகும்.
இப்பிரதேச செயலாளரின் இந்த நடவடிக்கையால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரதேச செயலாளரின் இந்த நடவடிக்கை தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "சில அரச அதிகாரிகளின் அடாவடிகள். பாதிக்கப்படும் மக்களின் அவலம்"

அன்புடன் மலிக்கா said...

தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html

Post a Comment